யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/9/16

TMC என்பது தண்ணீரின் அளவையலகு என்பது தெரிகிறது. தண்ணீர் எவ்விதம் அளக்கப்படுகிறது?



 உதாரணமாக கர்நாடகா 10 TMC தண்ணீர் திறந்துவிட்டது என்பதை எப்படிச் சோதித்தறிவது?

TMC என்பது Thousand Million Cubic feet என்பதன் சுருக்கம். இது ஒரு நீர்மத்தின் பெரும் கொள்ளளவை அலகு ஆகும்.

1 அடி நீளம், 1 அடி அகலம், 1 அடி உயரம் கொண்ட பாத்திரத்தில் ஏறத்தாழ 28.3168 லிட்டர் அளவிலான நீர் கொள்ளும். அப்படி என்றால், 1 TMC என்பது,

28.3168 x 1,000,000,000 = 28,316,800,000 லிட்டர் (ஏறத்தாழ இருபத்தெட்டு  பில்லியன் லிட்டர்)

திறந்து விடப்படும் வழித்துளையின் விட்டம், நீர்மட்டம் (அல்லது அழுத்தம்) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு மணிக்கு இத்தனை அளவு நீர் வெளியேறும் என்று கணக்கிடப்படும். அதனடிப்படையில், இத்தனை நேரம் திறந்து வைத்திருந்தால் 10 TMC தண்ணீர் வெளியேறும் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.

ஆசிரியர்குரல் சிறப்பு பதிவு!பகிர்வு(விகடன்)



அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில் யாருக்கு அதிகப் பங்கு இருக்கிறது? 

கற்க கசடற விற்க அதற்குத் தக!
பாரதி தம்பி, படம்: க.பாலாஜி

அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில் யாருக்கு அதிகப் பங்கு இருக்கிறது? நம் எல்லோருக்குமே இருக்கிறது என்றாலும், கூடுதல் பங்கு அரசு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. எந்த அரசுப் பள்ளியில் படித்து அந்த வேலையைப் பெற்றார்களோ, எந்த அரசுப் பள்ளியில் பணிபுரிந்து பல்லாயிரம் ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார்களோ... அந்த அரசுப் பள்ளியின்மீது ஆசிரியர்களுக்கு கொஞ்சம்கூட மரியாதை இல்லை. ஒவ்வொரு நாளும் கடமைக்காக பள்ளிக்குச் சென்று வருபவர்கள்தான் அதிகம்.
ஒரு கிராமத்துப் பள்ளியில் 15 ஆண்டுகள் ஓர் ஆசிரியர் பணிபுரிந்து, அவர் தன் வேலையை ஒழுங்காகச் செய்யாதவராக இருப்பாராயின், ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சி முடமாக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது ஏதோ எதுகை - மோனை வசனம் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்தி, செதுக்குவதில் ஆசிரியர் முதன்மையான பாத்திரம் வகிக்கிறார். ஆனால், இதை உணர்ந்திருக்கும் ஆசிரியர்கள், படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றனர். ஆசிரியர் பணியின்மீது சிறு மதிப்பும் இல்லாமல், வேண்டாவெறுப்பாக பள்ளிக்கு வந்து, மிகுந்த அவநம்பிக்கையுடன் வகுப்பறைக்குள் நுழைகின்றனர். 'இதுங்கல்லாம் படிச்சு என்ன ஜில்லா கலெக்டர் ஆகப்போகுதுங்களா?’ என்று தன் மாணவர்களைப் பார்த்துச் சொல்லும் ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்குத் தன்மீதும் மதிப்பு இல்லை; தன் பள்ளியின்மீதும் மதிப்பு இல்லை.

ஓர் ஆசிரியர், ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவரிடம் கற்கும் மாணவர்கள், இளமையின் வேகத்துடன் இருக்கின்றனர். புதிய தொழில்நுட்பங்களை, நவீன அறிவியலை மிக எளிதாக உள்வாங்கிக்கொள்கின்றனர். பயிற்றுநர்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்களும் அந்த வேகத்தில் ஓடியாக வேண்டும். ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல... இது அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஒரு தையல்காரர், 1980-களில் தைத்த 'பெல்பாட்டம் பேன்ட்’போல இன்றும் தைத்துக்கொண்டிருக்க முடியாது. இன்று அவர் ஸ்லிம் ஃபிட் தைத்தாக வேண்டும். இல்லை என்றால் அவருக்குத் தொழில் இல்லை. 'எனக்கு கம்ப்யூட்டர் இயக்கத் தெரியாது. எழுதியே பழகிவிட்டது’ என்று ஒதுங்கி நின்றவர்களை காலம் ஒதுக்கிவிட்டது. அதைப்போலவே இது ஸ்பெஷலிஸ்ட்களின் காலம். வெறும் எம்.பி.பி.எஸ்-க்கு மதிப்பு இல்லை. எம்.டி., எம்.எஸ் என்று ஏதாவது ஒன்றில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்க வேண்டும். அதற்காக, 'ஸ்பெஷல் தோசையைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது’ என்றாலும் ஹோட்டல் நடத்த முடியாது. உங்கள் ஹோட்டலில் ஸ்பெஷல் தோசைதான் ஸ்பெஷல் என்றாலும், மற்றவையும் அங்கே கிடைக்க வேண்டும். ஏனெனில் இது மல்டிப்ளெக்ஸ்களின் காலம். ஆக, நவீன காலத்துக்கு அப்டேட் ஆவது, தன் துறையில் நிபுணத்துவம் பெறுவது, தன்னைச் சார்ந்துள்ள துறைகளை அறிந்திருப்பது, எப்போதும் புதுமைகளை உள்வாங்கத் தயாராக இருப்பது... இவை அனைத்துமே இன்று அடிப்படைத் தேவை! 

சாதாரண ஒரு வேலையைச் செய்யவே இவை அவசியம் என்னும்போது, ஒரு தலைமுறைக்கு அறிவைப் போதிக்கும் பெரும் பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு இந்தத் தகுதிகள் கூடுதலாகவே தேவை. கல்வித் துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், நம் நாட்டில் உள்ள கல்விமுறைகளின் சாதக-பாதகங்கள், உலக அளவில் முன்னேறிய நாடுகளில் எப்படி கல்வி போதிக்கப்படுகிறது, நவீனத் தொழில்நுட்பங்களை வகுப்பறையில் பயன்படுத்தும் முறை... என எப்போதும் அவர்கள் தேடுதலுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல்போனால், அதன் பாதிப்பைச் சுமப்பது மாணவர்கள்தான். ஒரு தையல்காரர் நவீன மாற்றங்களை உள்வாங்காமல் தொழில் நடத்த முடியாமல்போவது அவருடைய தனிப்பட்ட நஷ்டம். அதுவே ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கி இருந்தால் நஷ்டம், அந்த வகுப்பறையின் மாணவர்களுக்கு. வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால் 50 குடும்பங்களின் வளர்ச்சி பின்தங்கிவிடுகிறது. இத்தகைய பரந்துபட்ட புரிதல் இருக்கும்போதுதான், ஆசிரியர் பணியை ஒட்டுதலுடன் பார்க்க முடியும்.

அனைத்து பள்ளிகளுக்கும் போதுமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் கட்டித்தர முன்வராத அரசு, லேப்டாப் தருவதில் மட்டும் முனைப்புடன் இருக்கிறதே ஏன்? புதிய டாஸ்மாக் திறக்கும் அரசு, புதிய பள்ளிகளைத் திறந்துள்ளதா? இத்தகைய சிந்தனைமுறை ஆசிரியருக்கு இருக்கும்போதுதான், வகுப்பறையை முதிர்ச்சியுடன் வழிநடத்த முடியும். ஒரு மாணவருக்கு கற்றல் குறைபாடு இருக்கிறது எனில், அதன் பின்னே உள்ள சமூகக் காரணத்தை அப்போதுதான் இனம் காண முடியும். ஆனால் நடைமுறை யதார்த்தத்தை ஒப்பிடும்போது இது வெகுதூரத்தில் ஒரு கனவுக் காட்சியைப்போல் உள்ளது. பல ஆசிரியர்கள் வேலைக்குச் செல்வதையே தியாகம் செய்வதைப்போல உணர்கின்றனர். 10, 15 ஆண்டுகள் சர்வீஸ் போட்டுவிட்ட ஆசிரியர்களுக்கு நிறைய விடுமுறைகள் மிச்சம் இருக்கும். அவர்கள் அற்பக் காரணங்களுக்காக அல்லது காரணமே இல்லாமல்கூட விடுமுறை எடுக்கின்றனர். 'சும்மா அலுப்பா இருக்கு’ என்று 10 நாட்கள் விடுமுறை எடுப்பார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் தன் சொந்த மகன் அல்லது மகளுக்கு ப்ளஸ் டூ பரீட்சை வரும்போது ஒரு மாதம் மருத்துவ விடுப்பு எடுப்பார்கள். அந்த நேரத்தில், தான் பணியாற்றும் பள்ளியில், தன்னிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு யார் சொல்லித்தருவது என்பது அவர்களின் எண்ணத்திலேயே இருக்காது.

'பெரும்பாலான ஆசிரியர்கள் இப்படி இருக்காங்கதான். நான் மறுக்கலை. அதுக்காக எங்களுக்கு வேலையே இல்லைங்றதைப்போல சொல்லக் கூடாது. குறிப்பா ஆசிரியர்கள் ஒவ்வொருத்தருக்கும் கற்பித்தல் அல்லாத வேலைகள் (Non-Teaching works) மலைமாதிரி குவிஞ்சுகிடக்கு’ என்று ஓர் ஆசிரியர் சொன்னார். இதிலும் உண்மை உள்ளது!
பாடம் எடுப்பது மட்டுமே இன்றைய ஆசிரியரின் பணி அல்ல. ரெக்கார்டுகள் எழுதிக் குவிக்க வேண்டியுள்ளது. ஆசிரியரின் பெரும்பகுதி நேரம் இதற்கே செலவு ஆகிறது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கும் இலவசப் பொருட்களை நிர்வகிக்க வேண்டிய பெரும் சுமை ஆசிரியர்களிடமே இருக்கிறது. சீருடை, நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், சைக்கிள், மாணவிகளுக்கு இலவச நாப்கின், ஃபோலிக் ஆசிட் மாத்திரை, லேப்டாப், வரைபடம், வண்ண பென்சில், ஸ்கூல் பேக், செருப்பு, ஜியாமெட்ரி பாக்ஸ்... போன்ற இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒரே நாளில் தரப்படுவது இல்லை. ஆண்டு முழுவதும் வெவ்வேறு நாட்களில் இவை வந்துகொண்டே இருக்கும். ஒரு பள்ளியில் 1,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வகுப்புவாரியாகப் பிரித்து இவற்றை வழங்க வேண்டும். அவற்றுக்கான ஆவணங்களைத் தயார்செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் தேவையான நோட்டுப் புத்தகங்களும், பாடப் புத்தகங்களும் மாவட்ட, வட்டாரத் தலைநகரங்களுக்கு வரும். அதைப்போய் எடுத்துவர வேண்டும். அது ஒரே முறையில் முடிந்துவிடாது. 'அறிவியல் புக் அடுத்த வாரம்தான் வரும்’ என்பார்கள். அதற்கு ஒருமுறை மீண்டும் போக வேண்டும். ஒரு பருவத்துக்குக் குறைந்தது 5 முறை அலைய வேண்டியிருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்ய அரசுப் பள்ளிகளில் நிர்வாக ஊழியர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். எல்லா வேலைகளையும் ஆசிரியர்கள்தான் செய்தாக வேண்டியுள்ளது.
இதை மறுக்கவில்லை. ஆனால் அப்படி வேலைப்பளு இருந்தால், அதற்காக ஆசிரியர் சங்கம் மூலம் போராடி நியாயத்தைப் பெற வேண்டும். ஏனெனில், ஆசிரியர்களின் முதன்மையான நோக்கம் பயிற்றுவிப்பதுதான். அதைப் பின்னுக்குத் தள்ளி இதர வேலைகள் தங்களை ஆக்கிரமிப்பதை அனுமதிக்கக் கூடாது. அதேநேரம், 'வேலைக்கு அப்பாற்பட்ட வேலை’ பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஆசிரியர்களுக்கான பிரத்யேக சிக்கல் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  வாழ்வின் அழுத்தம் அதிகரித்துவிட்ட நவீன காலத்தில், எல்லா துறைகளிலும் இத்தகைய மதிப்புக் கூட்டு வேலைகள் (Value added works) அதிகரித்துவிட்டன. ஒரு மளிகைக் கடை அண்ணாச்சி முன்பு மாதிரி கடையில் உட்கார்ந்துகொண்டு இப்போது தொழில் நடத்த முடியாது. வீட்டுக்குத் தண்ணீர் கேன் போடுவதில் அவருக்கு ஒரு கேனுக்கு 2 ரூபாய்தான் கிடைக்கிறது என்றாலும், மூன்று மாடி ஏறியிறங்கிப் போடுகிறார். அப்போதுதான் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். 'என் வேலை இது மட்டும்தான்’ என்று யாராலும் கறாராகச் சொல்ல முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைக் கடந்து பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்தம் அனைத்து பிரிவினருக்கும் இருக்கிறது. இது சரியா, தவறா என்பது தனி விவாதம். இங்கு சொல்லவருவது, இந்தச் சிக்கல் ஆசிரியர்களுக்கு மட்டுமானது இல்லை. அரசுப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துவிட்டிருக்கும் கூலித் தொழிலாளியும் கூடுதல் வேலை செய்துதான் குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது.

புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், இத்தகைய சூழலிலும்கூட தாங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட பணியில் இருப்பதையும், நல்ல ஊதியம் பெறுவதையும்தான். இன்று மாநிலம் முழுக்க ஆசிரியர் தம்பதிகள் ஏராளமானோர் இருக்கின்றனர். கணவன் 50 ஆயிரம், மனைவி 50 ஆயிரம் என்று குறைந்தபட்சம் 1 லட்சம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் பணியாற்றும் அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் என்ன சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து யோசித்திருக்கிறார்களா? மிகமிக சாதாரணப் பின்னணியைச் சேர்ந்த ஏழைப் பெற்றோர்கள் அவர்கள். தங்கள் பிள்ளை படித்து வந்து குடும்பத்தைக் கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையின் பிடிமானத்தில் வாழ்கிறார்கள். ஏதுமற்றோரைக் கடைத்தேற்ற கல்வியைவிட்டால் வேறு நாதி ஏது? அதை வழங்கும் ஆசிரியர்களாகிய நீங்கள் பெற்றோர்களுக்கு தெய்வங்கள். படிக்காத ஒரு தொழிலாளி, ஆசிரியரைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடுகிறார் என்றால் அது வெறும் மரியாதை அல்ல. நீங்கள் பெற்றிருக்கும் கல்விமீதான பிரமிப்பு. தன் பிள்ளைக்கும் அதைத் தருகிறாரே என்ற நன்றியுணர்ச்சி. அந்த நன்றிக்கு உரியவராக ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பள்ளியில் உட்கார்ந்து ரியல் எஸ்டேட், வட்டிக்கு விடுவது போன்ற தலையாயப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு தலைமுறைக்கே செய்யும் துரோகம் என்ற குற்றவுணர்ச்சி முதலில் வர வேண்டும். பிற்காலத்தில் தன் ஆசிரியரைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, மாணவனின் மனதில் நல்லவிதமாக நீங்கள் பதிவாக வேண்டும். மாறாக 'வட்டி வாத்தியார்’ என்ற கறுப்பு அடையாளத்துடன் அல்ல!  
- பாடம் படிப்போம்...

இப்படியும் சில ஆசிரியர்கள்...

மாநிலம் முழுவதும் பரவியுள்ள தனியார் பள்ளிகள் பலவற்றில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்குதாரர்களாக இருக்கின்றனர். அரசுப் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, தன் 'பங்குதாரர்’ பள்ளியில் பாடம் நடத்துபவர்கள் பலர். அல்லது அரசுப் பள்ளியில் தன் வேலையை செய்ய 5,000 சம்பளத்துக்கு ஓர் ஆசிரியரை உள் வாடகைக்கு நியமித்துவிட்டு இவர் தனியார் பள்ளியில் பாடம் நடத்துவார். பல இடங்களில் இது நடக்கிறது. முக்கியமாக அரசுப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உயிரைக் கொடுத்துப் பாடம் நடத்தி மாணவர்களை நன்றாகப் படிக்கவைப்பார்கள். அதே பள்ளியில் இருக்கும் இந்த 'பங்குதாரர்’ ஆசிரியரோ... யார் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர் என்பதைக் 'கண்காணித்து’ அவர்களை தன்னுடைய தனியார் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆள்பிடி வேலையைச் செய்வார். ஜூன் மாத ஆரம்பத்தில்தான் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இத்தகைய 'பங்குதாரர்’ ஆசிரியர்கள் பெரும்பாலும் ஜூன் முதல் வாரத்தில் மருத்துவ விடுப்புப் போட்டுவிட்டு தனியார் பள்ளிக்கு அட்மிஷனுக்குப் போய்விடுவார்கள். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ஊத்தங்கரை, தருமபுரி பகுதிகளில் இது மிக அதிகம்.




அரசுப் பள்ளியில் பணிபுரிந்து பல்லாயிரம் ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார்களோ... அந்த அரசுப் பள்ளியின்மீது ஆசிரியர்களுக்கு கொஞ்சம்கூட மரியாதை இல்லை. ஒவ்வொரு நாளும் கடமைக்காக பள்ளிக்குச் சென்று வருபவர்கள்தான் அதிகம்" இது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
sundark

இதை அரசு பள்ளி ஆசிரியர்கள் படிப்பார்களா? படித்து ஒரு 10% ஆசிரியர்கள் மாறினாலே மிக பெரிய வெற்றி இந்த கட்டுரைக்கு..
ReachJegan

புதிய கல்விக்கொள்கை



1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.

2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.

3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள்  தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.

4. தொழிற் பயிற்சி பெற வழிகாட்டல் குழு அமைக்கப்படும்.

5. கல்வி உரிமைச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி முறை ரத்து.

6. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் பிற பள்ளிகளோடு இணைத்து கூட்டுப் பள்ளிகள் உருவாக்கப்படும்.

7. கோத்தாரி கமிசன் உருவாக்கிய அருகாமைப் பள்ளிக் கொள்கை கைவிடப்படுகிறது.

8. தேசிய அளவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம்.

9. சமூக அறிவியல் பாடத்தின் ஒருபகுதி மத்தியஅரசு வழிகாட்டுதலின் படியும் ஒருபகுதி மாநிலஅரசு வழிகாட்டுதலின் படியும் உருவாக்கப்படும்.

10. உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் அறிவியல், கணிதம்,ஆங்கிலம் ஆகியன பொதுப் பாடத்திட்டமாக கற்பிக்கப்படும்.

11. இப்பாடங்களில் பகுதி A, பகுதி B  என இரட்டைத் தேர்வுகள் நடத்தப் படும். 

12. கடினமான பகுதி A யில் வெற்றிபெற்றவர்கள் உயர்கல்வி படிப்புக்கும், இலகுவான பகுதி B  எழுதுவோர் தொழிற்கல்விக்கும் மடைமாற்றம் செய்யப்படுவர்.

13. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தகுதியைத் தரப்படுத்த தேசிய அளவில் தரத்தேர்வு நடத்தப்படும்.

14. கல்வி உதவித்தொகை சமூக நீதி முறையில் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

15. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் மெரிட் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.

16. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி வழங்கப்படும்.

17. ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஹிந்தியும், உயர்நிலையில் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்க ஊக்குவிக்கப்படும். 

18. பள்ளியில் இருந்து விடுபட்ட குழந்தைகளுக்கும் உழைக்கும் குழந்தைகளுக்கும் திறந்தவெளி கல்விமுறை வழங்கப்படும்.

19. ஆசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு மூலம் சோதிக்கப்படும்.

20. ஆசிரியர்களைக்  கண்காணிக்க ஊராட்சி அளவில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.

21. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படும்.

22. இந்தியப் பாரம்பரியம் கலாசாரம் அடிப்படையில் நன்னெறிக் கல்வி கொடுக்கப்படும்.

23. திறமையாகச் செயல்படும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நேரடியாக நியமிக்கப் படுவார்கள்.

9/9/16

7-வது சம்பள கமி‌ஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

சட்டசபையில் இன்று பொதுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.  அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,  ‘’கடந்த 25.7.16 அன்று சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடுமுறை போக 22 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடந்திருக்கிறது. இதில் ஆளும்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி இருக்கிறார்கள்.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர்தலால் முன்னதாக பேச்சு

உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், தீபாவளி போனஸ் சம்பந்தமாக, தொழிற்சங்கங்களுடன், முன்கூட்டியே பேச்சு நடத்த, அரசு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன. தமிழக அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், அதிகாரிகள் தவிர்த்து, மற்ற பிரிவுகளில், 3.75 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு, தீபாவளி பண்டிகையின் போது, தமிழக அரசு, போனஸ் வழங்கி வருகிறது. ஒவ்வொரு அரசு நிறுவனமும், போனஸ் தொகையை நிர்ணயம் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தும். தொழிற்சங்கங்களின் கோரிக்கை, அரசின் நிதித்துறை வரை செல்லும். பரிசீலனைகள் முடிந்ததும், போனஸ் குறித்து, முதல்வர் அறிவிப்பார். இந்த ஆண்டு தீபாவளி, அக்., 29ல் வருகிறது. உள்ளாட்சி தேர்தலும், அதே மாதம் நடக்க உள்ளதால், முன்கூட்டியே, போனஸ் பேச்சு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, அரசு நிறுவன ஊழியர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ்; 11.67 சதவீதம் கருணை தொகை என, மொத்தம், 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இதன்படி, 3.76 லட்சம் பேருக்கு, 242 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, போனஸ் தொகை உயர வாய்ப்பு உள்ளது. வழக்கமாக, தீபாவளிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், போனஸ் பேச்சு நடக்கும்; உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், இம்மாத இறுதியிலே பேச்சு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

NHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு.

NHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு.


'மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, பரிந்துரை செய்யும் குழுக்கள், அரசாணை வரம்பை மீறி, பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், தெரிவிக்கும் குறைகளை களைய, மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையிலும், மாநில அளவில், கருவூல கணக்கு துறை இயக்குனர் தலைமையிலும், குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை செயலர் - செலவினம் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், சுகாதாரத்துறை செயலர், 'யுனைடெட் இந்தியாஇன்சூரன்ஸ்' நிறுவன பிரதிநிதியும் இடம் பெற்றுள்ளனர்.இக்குழுவினர், அனுமதி பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதற்கும், அனுமதி அளிக்கப்படாத சிகிச்சைக்கும், பரிந்துரை செய்கின்றனர்; அதை, காப்பீட்டு நிறுவனம் ஏற்பதில்லை. இதை எதிர்த்து, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கோர்ட்டுக்கு செல்கின்றனர்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சேர்க்கப்படாத மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு உதவி செய்ய, அரசிடம் திட்டம் இல்லை.மாவட்ட, மாநில அளவிலான குழுவினர், அரசு ஆணைக்கு புறம்பாக, மருத்துவ செலவினம் வழங்க, பரிந்துரைக்க வேண்டாம்; அரசுக்கு எதிராக, வழக்கு வருவதை தவிர்க்கலாம் என, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்தஅரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளியீடு.

சென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளியீடு.

சென்னை பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது. சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., - ஐ.டி., படிப்புகளுக்கு, மே, ஜூன் மாதங்களில் தேர்வுகள் நடந்தன.
இதற்கான முடிவு, நாளை இரவு, 8:00 மணிக்கு, பல்கலை இணையதளத்தில் வெளியாகிறது.'மறுமதிப்பீடுக்கு, செப்., 22ம் தேதிக்குள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்' என, சென்னை பல்கலை, தலைமை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் தெரிவித்து உள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு*

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 14ம்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசிநாள் 16ம் தேதி எனஅறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசிநாள் எனடி.என்.பி.எஸ்.சி. அறிவிருந்தது. இந்நிலையில்ஏராளமானோர் ஆன்-லைனில்
விண்ணப்பிக்கமுயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிகப்பட்டுள்ளது.

குரூப்4 பதவியில் 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. எழுத்து தேர்வு நவம்பர் 6ம்தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியில்குரூப் 4 பதவியில் காலியாக உள்ள இளநிலைஉதவியாளர்(பிணையமற்றது)- 2345 இடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையம்)-121 இடம், வரித்தண்டலர் (கிரேடு 1)- 8 இடம், நில அளவர்- 532 இடம், வரைவாளர்-327 இடம், தட்டச்சர்-1714 இடம், சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)- 404 இடங்கள் உள்ளிட்ட 5,451 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 9ம்தேதி ெவளியிட்டது.

அறிவிப்புவெளியிட்ட அன்றே ஆன்லைன் மூலம்விண்ணப்பிக்கும் பணியும் தொடங்கியது. விண்ணப்பிக்க10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், குரூப்4 தேர்வுக்கு பட்டதாரி முதல் 10ம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்கள் வரை போட்டி போட்டுகொண்டு விண்ணப்பித்தனர். இது வரை 8 லட்சத்துக்கும்அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி: விரைந்து நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர்பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்திமாநிலங் களுக்கு மத்திய அரசுகடிதம் எழுதியுள்ளது.

மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர்
நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலி யாக உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணிபுரிகிறார். இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியமானது. ஆசிரியர்பணியிடங்களை மாநில அரசுகள்தான் நிரப்புகின்றன. எனவே, ஆசிரியர் பணியிடங்களை மிக விரைந்து நிரப்பமாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதிவருகிறேன்.

அத்துடன்அனைத்து மாநிலங் களையும் சேர்ந்தகல்வித் துறை அமைச்சர்களின் மாநாட்டைவிரை வில் நடத்த உள்ளோம். அப்போது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு வது குறித்துமுக்கியமாக விவா தித்து முடிவெடுக்கதிட்டமிட்டுள் ளோம். இவ்வாறு பிரகாஷ்ஜவடேகர் கூறினார்.


இதுகுறி்த்துமத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளி களில் உள்கட்டமைப்பு மற்றும்ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது கனவாகவே இருக்கும். இந்தப் பிரச்சினை களைத்தீர்க்க மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. அத்துடன் உயர்க் கல்வித் துறையில்காலி இடங்களை நிரப்பவும் அமைச்சகம்தீவிரமாக உள்ளது’’ என்றனர்.

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம்சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள்ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள்வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின்நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்றுவழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு
மற்றும் பேரிடர் மீட்புபணிகள் தவிர, கற்பித்தல் அல்லாதபணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாயகல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறைஇணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில்தெரிவித்துஉள்ளார் 

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு சுப்ரீம் கோர்டில் வரும் 14.9.2016 அன்று நீதிமன்ற எண் 13 வரிசை எண் 9ல் விசாரணைக்கு வருகிறது

MOVEMENT REGISTER - பராமரிப்பது சார்ந்த அறிவுரைகள்

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்

தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்விவாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில்சேர,
'நீட்' எனப்படும், தேசியபொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது.
அதற்கேற்ப, தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பாடத்திட்டம், விரைவில் மாற்றப்படும் என, தெரிகிறது. இதற்கானகமிட்டி, விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2012ல், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையே அறிவிப்பதா அல்லது, புதிய அம்சங்களைசேர்ப்பதா; புதிதாக பாடத்திட்டம் ஏற்படுத்த, கமிட்டி அமைப்பதா என, பள்ளிக்கல்வி செயலகஅதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

'மத்தியஅரசின் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக, அல்லது அதைவிட தரம் உயர்ந்தபாடத்திட்டம் கொண்டு வர, முதல்வர்விரும்புகிறார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில்எடுக்கப்படும்' என்று, பள்ளிக்கல்வித் துறைவட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கே.பி.ஓ.சுரேஷ்கூறுகையில், ''எந்த அளவுக்கு பாடத்திட்டம்தரம் உயர்த்தப்பட வேண்டும் என, அரசு பள்ளிஆசிரியர்களுக்கு முழுமையாக தெரியும். எனவே, கமிட்டியில் அவர்களைசேர்க்க வேண்டும்,'' என்றார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எஸ்

நாடு முழுவதும் சுமார் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களைப் பெறும் புதிய திட்டம் (இன்டர்நெட் டேட்டா)பிஎஸ்என்எல் வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் அறிமுகப்படுத்த உள்ளது.இதுகுறித்த விவரம்: வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது.
அவ்வகையில், நகரங்கள், கிராமங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், "அன்லிமிடெட் வயர்லைன் பிபி 249' எனும் புதிய அகண்ட அலைவரிசை திட்டத்தை செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் வரையில்லாத (அன்லிமிடெட்) ஒரு ஜிபிக்கும் அதிகமான தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதோடு, இந்தத் திட்டம் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

6 மாதத்துக்கு..: இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து மாதத்துக்கு 300 ஜிபி தகவல்களை ரூ.249-க்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, ஒரு ஜிபி-க்கான பதிவிறக்க கட்டண செலவு ரூ.1-க்கும் குறைவாகவே பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. ஆறு மாதத்துக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒரு அகண்ட அலைவரிசை திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம்.

மேலும், இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே மிகவும் குறைந்த கட்டணத்தில் ஒரு ரூபாய்க்குள் ஒரு ஜிபி தகவல் அளிக்கும் சேவையை அளிக்கஉள்ளது. மேலும், இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், அதிகரிக்கவும் வழிவகை செய்யும் என்றார் அவர்.

புதிய வாடிக்கையாளர்கள் இந்த பிபி-249 திட்டத்தை பிஎஸ்என்எல் விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 18003451500 என்ற கட்டணமில்லா இலவச எண்ணிலும் www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைப்பேசி வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம்.

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்று தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவன தலைவர்சி.பி.சர்மா தெரிவித்தார்.

திறந்தநிலை பள்ளி
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சி.பி.சர்மா, சென்னை மண்டல இயக்குனர் பி.ரவி ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காஞ்சிப்புரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள. கல்லூரியில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

திருப்பூரில் செப்.14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி கூறியுள்ளது:

திருப்பூர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி ஓணம் பண்டிகை முன்னிட்டு,  மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்திரவிடப்படுகிறது.

மேற்கூறப்பட்ட உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக செப்டம்பர் 24-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட 14-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலகம்  மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், என்று தெரிவித்துள்ளார்.

தற்காலிக பதவி உயர்வு உரிமை விடல் அடிப்படை விதிகள்!!



பணி உயர்வு பெறும்போது ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த தெளிவுரை..மற்றும் அடிப்படைவிதிகள்...


போனஸ் ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகள் குறித்து அடிப்படை விதிகள்..