யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/10/16

TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இது தொடர்பாக ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வாகாத விண்ணப்பதாரர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவ கீர்த்திசிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, நளினி சிதம்பரம், அஜ்மல் கான் ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் 2013-இல் நடந்தது. அதன் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள் நியமன விதிகளுக்கு எதிரானது' என்று வாதிட்டனர்.ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், "அனைத்து சட்ட நடைமுறைகளின்படியே தமிழக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகளால் மனுதாரர்களுக்கு ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலர் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 5) தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னணி:

 தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ்-2, பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.

புதுச்சேரி : வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படியும், மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியல்படியும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜஹான், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, பல்வேறு துறை செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும்.  மழைக்காலத்திற்கு முன்பாக  வெள்ளத்தடுப்பு குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் குடிநீர் மற்றும் புதை சாக்கடை திட்டத்திற்காக பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் மத்திய அரசு ரூ.2400 கோடி வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

இதில் ரூ.1400 கோடியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 20 ஆண்டுகளுக்கு கடனாக பெறுவது என்றும் மத்திய உள்துறை மூலம் பெறப்படும் மீதமுள்ள ரூ.900 கோடியை மாணியமாக பெற மத்திய அரசை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு செய்வதில் மத்திய அரசு ஆசிரியர்ர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தரவரிசை பட்டியல்படியும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலும் தான் இனிமேல் தேர்வு செய்யப்படும் என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்க வேண்டி உச்சநீதி மன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும் என்றார் நாராயணசாமி.

பிளஸ்2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை அடுத்த ஆண்டு முதல் கைவிட சிபிஎஸ்இ முடிவு !

சிபிஎஸ்இ அதிகாரிகள் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் 10 பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வந்தது.  இதற்கு 1.8 சதவீத மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இதில் பயனடைவர்கள் மிகவும் குறைவு.


இதனால் விடைத்தாள் மறுமதிப்பீடு முறையை கைவிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. உண்மையான சில பேரின் குறைகளை தீர்க்க சில நடைமுறைகள் மட்டும் அமலில் இருக்கும்’’ என்றார்.

 இதுகுறித்து சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி கூறியதாவது:  ஆசிரியர் தகுதி தேர்வை(சிடிஇடி) ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளி சான்றிதழ்களை ஆன்லைன் மூலமே சரிபார்க்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்களை பெறுவர். பல பள்ளிகளின் ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றனர். அது சம்பந்தமான தகவல்களை அவர்களின் பள்ளி வெப்சைட்களில் வெளியிட கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு பாடங்கள் சம்பந்தமான ஆடியோ-வீடியோ தகவல்கள் ஆன்லைன் மூலமே கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்

எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்'

எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என்ற அடிப்படையிலான புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதில், செயல்வழி கற்றல் உள்ளிட்ட, பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில், புதிதாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்களை இணைத்து, புதிய கற்றல் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள, தலா ஒரு பள்ளி, ஒரு குழுவாக இணைக்கப்படுகிறது. கிராமப்புற பள்ளியின், எட்டாம் வகுப்பு மாணவர்கள், நகர்ப்புற பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து படிப்பர். பின், பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி பார்ப்பர். நகர்ப்புற மாணவர்களும், தங்களுடன் இணைந்த கிராமப்புற பள்ளிக்கு சென்று, கிராமத்தை சுற்றி பார்ப்பர்.
'மாணவர்களுக்குள் நட்புறவு ஏற்படுத்துதல், நகரம் மற்றும் கிராமப் புறங்கள், அங்குள்ள பள்ளிகளின் வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்' என, ஆசிரியர்கள் கூறினர். இதற்கு, 'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என, ஆசிரியர்கள் பெயர் வைத்துள்ளனர். 

பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., அறிவுரை

சென்னை: அரசு இன்ஜி., கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து, புகைப்படம் இணைக்காதோர், நாளைக்குள் புகைப்படம் இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கான விண்ணப்பங்கள், செப்.,7 வரை பெறப்பட்டன. விண்ணப்பங்களில், புகைப்படம் இணைக்காமல் தாக்கல் செய்தோரின் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இணையதளத்தில் இணைக்கப்பட்டு உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, புகைப்படம் ஒட்டி, அத்தாட்சி பெற்ற, அரசு அதிகாரியின் கையெழுத்துடன், நாளைக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

நிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தனி மனு : தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை

பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.அரசு உதவிபெறும் தனியார் மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம், அங்கீகாரம் வழங்குகிறது. புதிய பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு ஒருமுறையும், மூன்று ஆண்டுகள் கடந்த பள்ளிகளுக்கு,
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அங்கீகாரம் தரப்படும். 10 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, உள்கட்டமைப்பு வசதிகளின் படி, நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளாக, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு, ஓராண்டு அங்கீகாரம் தரப்படுகிறது; ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இது, தனியார் பள்ளிகளுக்கு, கடும் அவதியாக உள்ளதால், 10 ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் கோரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார். இந்த மனு, மெட்ரிக் இயக்குனரின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. மனுவை பெற்ற மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி, மனுதாரருக்கு பதில் அனுப்பி உள்ளார். அதில், 'நிரந்தர அங்கீகாரம் தொடர்பாக, தனியார் பள்ளிகள், தனித்தனியாக மனு செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார். அதனால், அனைத்து தனியார் பள்ளிகளும், தனியாக மனு அனுப்ப முடிவு செய்துள்ளன. 

கல்வி கட்டணம் : சி.பி.எஸ்.இ., உத்தரவு

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், கல்வி கட்டண விபரங்களை, அக்., 31க்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, அதிகமாக, சில பள்ளிகள் வசூலிப்பதாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு புகார்கள் வந்துள்ளன.
பல பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதையடுத்து, சி.பி.எஸ்.இ., புதிய தலைவர், ஆர்.கே.சதுர்வேதி உத்தரவுப்படி, துணை செயலர், ஜே.பி.சதுர்வேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'அனைத்து பள்ளிகளும், தங்களின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி கட்டண விபரங்களை, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், அக்., 31க்குள் வெளியிட வேண்டும்; தங்கள் பள்ளி இணையதளத்திலும், இந்த தகவலை வெளியிட வேண்டும்' என, குறிப்பிட்டு உள்ளார். 

வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்

தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். 

இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது. அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் துறை வழங்கி உள்ளது.வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய் செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும், இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து, புதிய அட்டை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அழகாக தெரிய வேண்டுமா? : வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள், மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன. இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம். 

சிமேட்' நுழைவுத்தேர்வு : 10 முதல் ஆன்லைன் பதிவு

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன. அதில், முதுநிலை டிப்ளமோ மேலாண் நிர்வாகம்; முதுநிலை டிப்ளமோ நிறுவன நிர்வாகம் போன்ற படிப்புகளில் சேர, 'சிமேட்' நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு, இரு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது.
நடப்பு கல்வி ஆண்டு முதல், ஒரு முறை மட்டுமே தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜன., 28, 29ம் தேதிகளில், 'ஆன்லைன்' தேர்வு நடத்தப்படும்; வரும், 10ம் தேதி முதல், ஆன்லைன் பதிவு துவங்குகிறது; டிச., 10 வரை விண்ணப்பிக்கலாம். அனைத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், இளங்கலை இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.aicte-cmat.in/college/faq.aspx என்ற இணையதளத்தில் அறியலாம்.

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் 'அப்பீல்'

சென்னை:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை யை ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையில், தி.மு.க.,தரப்பிலும், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
டிசம்பருக்குள் தேர்தல்

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உயர் நீதி மன்ற நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப் பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிப்பாணை யை வெளியிட்டு, டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் நேற்று முறை யீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. தி.மு.க., வழக்கறிஞர்களும், தேர்தல் ஆணையம் தரப்பில் முறையீடு செய்யப்படுகி றதா என்பதை கவனித்தனர். 
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் கேட்ட போது, ''மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்காக, பதிவுத் துறைக்கு வழக்கறிஞர்கள் சென்று உள்ளனர்; இன்று தாக்கல் ஆகிவிடும்,'' என்றார்.
அதன்படி, பதிவுத் துறையில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது; அதற்கு, வரிசை எண் தான்கொடுக்கப்பட்டது.
நாளை விசாரணை

பதிவுத்துறை, சில ஆவணங்களை கோரி இருப்பதால், மனுவுக்கான மேல்முறையீட்டு எண், நாளை கிடைக்கும் என, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இம்மனுவை அவசர மாக விசாரிக்க கோரி,தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் அல்லது இரண்டாவது, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நாளை முறையிட வாய்ப்புள்ளது. அதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், நாளையே மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடக்கக் கூடும்.
இதற்கிடையில், 'இந்த வழக்கில், எங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது' என, தி.மு.க., தரப்பில், 'கேவியட்' மனு தாக்கல் செய்திருப்பதாக, மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, கலெக்டர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டு உள்ளது. 'மறு உத்தரவு வரும் வரை, தேர்தல் பணிகளை தொடர வேண்டாம்' என, மாநில தேர்தல் கமிஷனர், சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார்.

60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா

ராமநாதபுரம்:அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், அறிவியல் கற்கும் ஆர்வத்தை துாண்டவும் அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் 2,000 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டத்திற்குள் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், மீன் ஆராய்ச்சி நிலையங்கள், விவசாய,
தோட்டக்கலை பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் செல்லலாம். சுற்றுலா செல்ல வாகன வசதி, உணவு இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7.42 லட்சம் ரூபாய் வீதம் அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படும் 30 மாவட்டங்களுக்கு 2 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் பணிகளை, தற்காலிமாக நிறுத்தி வைக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி பதவிகளுக்கு, வரும், 17, 19ம் தேதிகளில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு தடை போட்டு விட்டது; டிச., 31க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து,
மாநில தேர்தல் கமிஷன், மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, கலெக்டர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 'மறு உத்தரவு வரும் வரை, தேர்தல் பணிகளை தொடர வேண்டாம்' என, மாநில தேர்தல் கமிஷனர், சீதாராமன்
அறிவுறுத்தி உள்ளார்.

29/9/16

சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத சேர்க்கை நடக்க வேண்டும். 
ஏழை குடும்பங்களை சேர்ந்த, ஐந்து வயது முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை, மாநில அரசுகளின் வழியாக, மத்திய அரசு வழங்கும். அதன்படி, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், 85 ஆயிரம் குழந்தைகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்க்க முடிவதில்லை. இதுகுறித்து, கல்வி உரிமை சட்ட கண்காணிப்பு அமைப்பான, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆணைய விசாரணையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், விதிகளை மீறியது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, ஆணைய உறுப்பினர் ரேவதி கூறுகையில், ''எங்கள் விசாரணையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் பட்டியலை சேகரித்து வருகிறோம்; மேல் நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்,'' என்றார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு தேதி மாற்றம் குறித்து முதன்மை கல்வி அலுவலரின் தகவல் Posted: 28 Sep 2016 09:05 AM PDT தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். மேலும் சம்பள உச்சவரம்பை தளர்வு செய்து சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை தரப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. 

லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் அறிவித்துள்ளார். ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம். 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படு்கிறது.

27/9/16

பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு

பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

கோழிக்கோட்டிலுள்ள வேதவியாசர் வித்யாலயம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் அதிகம் பேருக்கு கல்வியை சென்று சேர்ப்பதில் குறிப்பிட்ட அளவு வெற்றி கண்டுள்ளோம். இதையடுத்து, அந்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
எனவே, பள்ளிகளின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களிடையே மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் கணிதம், மொழி, எழுத்து மற்றும் படிப்புத் திறனை அறிவதற்கான தேர்வுகளை மத்திய அரசு நடத்தும்.
அரசுப் பள்ளிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல்வேறு வகையான பள்ளிகளிலும் பயிலும் 3 சதவீத மாணவர்களிடம் இந்தத் தேர்வு நடத்தப்படும். அதன் மூலம், அந்தப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து தெளிவான விவரத்தைப் பெறலாம் என்றார் அவர்.

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் செய்முறைதேர்வுக்கு விண்ணப்பம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல்,அறிவியல் செய்முறை பயிற்சிக்குவிண்ணப்பிக்கலாம்.

அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு: 
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2017மார்ச்சில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கவிரும்பும் தனித்தேர்வர்கள், செய்முறைபயிற்சியில் பங்கேற்க, ஜூன், 30 வரைஅவகாசம் தரப்பட்டுள்ளது. அப்போது,பதிய தவறியோர், செப்., 27 முதல், அக்., 8வரை, மாவட்ட கல்வி அதிகாரிஅலுவலகத்தில், பதிவு செய்துகொள்ளலாம். 
செய்முறை பயிற்சி வகுப்பில், 80 சதவீதம்பங்கேற்றால் மட்டுமே, பொதுத்தேர்வில் பங்கேற்க முடியும். பதிவுக்கானவிண்ணப்பங்களை,http://www.dge.tn.gov.in/ என்றஇணையதளத்தில் பதிவிறக்கம்செய்யலாம்.இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

25/9/16

வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை

'வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை

அடுத்த மாதம், பொதுத் துறை வங்கிகள், ஐந்து நாட்கள் இயங்காது. வங்கிகளுக்கு,ஒவ்வொரு மாதமும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினம்.

அந்த வகையில், வரும் அக்., 8ம் தேதி, வங்கிகளுக்கு விடுமுறை; மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. 10ல்,ஆயுத பூஜை; 11ல், விஜயதசமி; 12ல், மொகரம் வருகிறது. அதனால், அக்., 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக இயங்காது.

தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டியவை செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை

செய்ய வேண்டியவை
முதலில்கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டுசீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில்டிக் அடிக்க வேண்டும் .

நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும்சின்னத்தில் படாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும்.

டிக் அடித்த துண்டு சீட்டைA என்ற இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரில்வைத்து ஒட்ட வேண்டும்.

ஸ்டேபில்பண்ணக்கூடாது.*
13A என்றுஒரு படிவம் இருக்கும். அதைசரியாக பூர்த்தி செய்து தங்களுக்கு தெரிந்தசான்றொப்பமிட தகுதி உடைய நண்பர்களிடம்அந்த படிவம் 13A ல் சான்றொப்பம் வாங்கவேண்டும்.

பின்னர்A என்ற ஒட்டிய இளஞ்சிவப்பு நிறஅலுவலக கவரையும், 13A படிவத்தையும் சேர்த்து B என்ற கவரில் போட்டுஒட்டி விட வேண்டும் .

செய்ய கூடாதவை
படிவம்13A ல் சான்றொப்பம் வாங்காமல் இருக்கக் கூடாது.

இரண்டுஅலுவலக கவரையும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

படிவம்13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரிகூட வைத்து விடக்கூடாது

மேலும்சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் ஆலோசித்துதெளிவு படுத்தி கொள்ளுங்கள் .

இந்த முறை ஒரு தபால்வாக்கு கூட செல்லாத வாக்காகஇருக்கக்கூடாது

ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையம்

அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்


சிவகங்கை: 'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்குவழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்குதெரியாது' என, ஓய்வூதிய நிதிஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.

மத்தியஅரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில்மத்திய அரசு
ஊழியர்கள், மேற்குவங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசுஊழியர்கள் இணைக்கப்பட்டனர். இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறைஊழியர்கள் உள்ளனர்.இவர்களிடம் இருந்துசந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38
ஆயிரத்து935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்தசந்தா மற்றும் அரசு பங்குத்தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில்செலுத்தவில்லை. இதனால் பணியின் போதுஇறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன்பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில்தமிழக அரசு, புதிய ஓய்வூதியதிட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிசாந்தாஷீலா நாயர் தலைமையில் குழுஅமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில்மத்திய அரசு ஊழியர்களில், பணியின்போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீதபணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீதபணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமேதரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்றஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம்கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசுஊழியர்களுக்கும் இதேநிலை தான். ஓய்வூதியநிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில்விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச்சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள்ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப்பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்திற்காகஅரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடுசெய்யப்பட்ட தொகை குறித்த விபரம்இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசுஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவுசெய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது.

மத்தியஅரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில்ஓய்வு பெற்ற மத்திய அரசுஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம்கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர்இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பிதருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட்தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தைஅதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறுசதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை

புதியஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய நடவடிக்கைஎடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசுபணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ்தெரிவித்தார்.
மதுரையில், அவர் அளித்த பேட்டி: அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு
எந்த பயனும் இல்லாத, புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்; பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

தமிழகத்தில்அனைத்து துறைகளிலும், இரண்டு லட்சம் காலிபணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருபணியாளர், மூன்று பேரின் பணிகளைசெய்யும் நிலை உள்ளது. தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில், பணி நியமனங்களை தவிர்த்து, காலமுறை சம்பளத்தில் நிரந்தர ஊழியர்களை நியமிக்கவேண்டும். இது தொடர்பாக, நடவடிக்கைஎடுக்காத பட்சத்தில், அனைத்து துறை பணியாளர்களுடன்ஆலோசித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.