யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/9/16

அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்


சிவகங்கை: 'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்குவழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்குதெரியாது' என, ஓய்வூதிய நிதிஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.

மத்தியஅரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில்மத்திய அரசு
ஊழியர்கள், மேற்குவங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசுஊழியர்கள் இணைக்கப்பட்டனர். இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறைஊழியர்கள் உள்ளனர்.இவர்களிடம் இருந்துசந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38
ஆயிரத்து935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்தசந்தா மற்றும் அரசு பங்குத்தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில்செலுத்தவில்லை. இதனால் பணியின் போதுஇறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன்பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில்தமிழக அரசு, புதிய ஓய்வூதியதிட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிசாந்தாஷீலா நாயர் தலைமையில் குழுஅமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில்மத்திய அரசு ஊழியர்களில், பணியின்போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீதபணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீதபணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமேதரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்றஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம்கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசுஊழியர்களுக்கும் இதேநிலை தான். ஓய்வூதியநிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில்விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச்சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள்ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப்பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்திற்காகஅரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடுசெய்யப்பட்ட தொகை குறித்த விபரம்இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசுஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவுசெய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது.

மத்தியஅரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில்ஓய்வு பெற்ற மத்திய அரசுஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம்கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர்இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பிதருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட்தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தைஅதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறுசதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக