யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/9/16

அரசு பள்ளிகள், கல்லூரிகளில் WIFI - முதல்வர்ஜெயலலிதா

மாணவர்களுக்கு இணைய வசதி: மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லாத இணையதள வசதி செய்து தரப்படும் என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக 50 பள்ளிகளில் ரூ.10 கோடியில் நிறுவப்படும்என்றும் இந்தச் சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி அளிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 50 இடங்களில் கம்பியில்லாத இணைய வசதி (வைஃபை) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், அரசு சேவைகளை செல்லிடப்பேசி செயலிகள் மூலம் பெறுவதற்கான புதிய திட்டத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் களில் வைஃபை எனப்படும் கம்பியில்லாத இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்று சட்டப் பேரவைத் தேர்தலின்போது, அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், 50 இடங்களில் அம்மா வைஃபை மண்டலம் ஏற்படுத்தி கட்டணமில்லாத இணைய வசதி ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.அம்மா இ-சேவை: தமிழக அரசின் சேவைகளை செல்லிடப்பேசி செயலியில் பெறும் வகையில், அம்மா இ-சேவை என்ற திட்டத்தைச் செயல்படுத்தவும், முதல் கட்டமாக 25 முக்கிய சேவைகள் அளிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

எல்கோ-சிறப்பு மண்டலம்:

 சென்னையைஅடுத்த சோழிங்கநல்லூரில் எல்கோ சிறப்புப் பொருளாதார மண்டலத்தை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிறுவியுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் ஏற்றுமதி மதிப்பு ரூ.16 ஆயிரத்து 536 கோடி ஆகும். இது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியில் 25 சதவீதமாகும்.சிறு-குறு தொழில்முனைவோர் தகவல் தொழில் நுட்பவியல்-அது சார்ந்த வணிகத்தை சென்னையில் தொடங்க வழி செய்யப்படும். அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் எல்கோ சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் ரூ.80 கோடியில் கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக