யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/9/16

மத்திய அரசு பள்ளிகளில் 2,000 ஆசிரியர் இடம் காலி : தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்தியஅரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படஉள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்தவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின், மனிதவளமேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591
இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயாபள்ளிகள் செயல்படுகின்றன.
இங்கு, மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தங்கி படிக்கலாம். தமிழகத்தில், இந்தப் பள்ளிகளுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில், வடகிழக்குமாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்ட, பல பணியிடங்கள் காலியாகஉள்ளன. இவற்றை நிரப்பும் அறிவிப்பை, மத்திய அரசு அமைப்பான, நவோதயாசமிதி வெளியிட்டு உள்ளது. இப்பணியில் சேர, பட்டதாரி ஆசிரியர்கள், பட்டப்படிப்புடன், மத்திய அரசின் ஆசிரியர்தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கில மொழிப் புலமையுடன், ஹிந்திஅல்லது ஏதாவது ஒரு மாநிலமொழி தெரிந்திருக்க வேண்டும். கணினிகளை இயக்க, அடிப்படை திறன்கள்இருக்க வேண்டும். பணிக்கான எழுத்துத்தேர்வு, நவ., அல்லது டிசம்பரில்நடத்தப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.org மற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில், செப்., 10ல் துவங்கியது. அக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம்என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு புதியஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகுதியுள்ள பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

காலி இடங்கள் விபரம் : இரண்டுஉதவி கமிஷனர்கள், 40 பள்ளி முதல்வர்கள், 880 முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரி ஆசிரியர்கள், கலை, உடற்பயிற்சி போன்றமற்ற துறைகளில், 255 ஆசிரியர்கள், தமிழில் ஒரு ஆசிரியர்உட்பட, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள்என, 2,072 காலியிடங்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக