யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/10/16

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை விரைவாக இணைக்கவும்.

ஆசிரியர்கள் நவ.4 முதல் மூன்று கட்ட போராட்டம்.

Jio Network : வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாரணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.


இதையடுத்து, அவற்றின் நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளின் மேயர்கள்-மாமன்ற உறுப்பினர்கள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12, 524 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள்- உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் (அக்டோபர் 24) முடிவடைகிறது.

இதையடுத்து, தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சித் துறை பிறப்பித்துள்ளது.

அவசரச் சட்டம்: முன்னதாக, அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால், பழங்குடியினருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. மேலும், புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார்.

இதன்படி, புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் நாள் அல்லது டிசம்பர் 31-ஆம் தேதி ஆகிய இந்த இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை தனி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் இருப்பார்கள் என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு (25.10.2016) விசாரணை!

28.10.2016 வெள்ளிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்.


24/10/16

ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்

மடிக்கணினிஎல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக்கணினி கொடுத்த அரசு கணினிவழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களைநியமிக்காமல் இருப்பது
ஏன்? இதனால், கணினிவழிகல்விபோதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின்வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள்கணினி வழிக் கல்வி ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்கு நிகராகஅரசுப்பள்ளி மாணவர்களும் உயர வேண்டும் என்றுசமச்சீர் கல்வி முறையை 2011ஆம்ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு. அதில்,ஒன்றாம்வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் புத்தகங்கள்கொடுக்கப்பட்டிருக்கிறது. 

முதல் இரண்டு வருடம்மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறுவருடங்களாக கணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை பணிநியமனம்செய்யவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக கணினி அறிவியல் பட்டதாரிகள்பலர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல்வேலையில்லாபட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தேகம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா, டெக்ஸ்டைல்லவேலை பாத்துட்டு இருக்கேன். 

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019 கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் வேலைஇல்லாமஇருக்காங்க.ஒரு படிப்புனு இருந்தாஅதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷாவருஷம் ஆயிரக்கணக்கான பேர் படிச்சுட்டு வெளியேவராங்க. ஆனா,ஏற்கெனவே படிச்சுவேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்திருக்கிறயாருக்குமே வேலை இல்லை. 

பின்ன ஏன் இந்தப்படிப்ப இன்னும்வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்.கம்ப்யூட்டர்சயின்ஸ்ல பி.எட். படிச்சநாங்க பலவகையில நசுக்கப்பட்டவங்க. மற்ற ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள்  கலந்துகொள்ளும்  டெட், டிஆர்பி எக்ஸாம் போன்றவற்றில் கூடகலந்துகொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது" என்றுவிரக்தியுடன் பேசுகிறார்கள் கணிப்பொறி ஆசிரியர்கள்.2006-ஆம் ஆண்டுக்குப் பிறகுதரம்உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள் எதிலும்கணிப்பொறி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.கடந்த வருடத்தில் கூட407 பள்ளிகள்தரம் உயர்த்தப்பட்டதாக எம்.எல்.ஏபெஞ்சமின் கூறியிருக்கிறார்.ஆனால் அந்தப் பள்ளிகள்எதிலும் கணிப்பொறி வழிக் கல்வி கிடையாது.கம்யூட்டர் சயின்ஸ் டீச்சர் இல்லாமல்தான்பல பள்ளி மாணவர்கள் தானாகவேகற்றுக்கொள்கிறார்கள்.

2011 இல்சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள்அதில் கணினி அறிவியல் பாடத்திட்டம்இருந்தது.ஆனால்,அந்த
புத்தகங்களும்அரசு அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலை வழங்கவில்லை.வருடந்தோறும்மத்திய அரசு கோடி கணக்கில்நிதி ஒதுக்கி வருகிறது.வருடத்திற்க்கு250 கோடி ரூபாய் வருகிறது.2011-இல்முதல்கட்டமாக 43கோடி ரூபாய் கொடுத்தார்கள்.ஆனால் எதையும் செயல்படுத்தாமல்வீணாக்குகிறார்கள்"என்று மாநில செயலாளர்குமரேசன் வருத்தத்துடன் பேசுகிறார்.

தமிழ்நாட்டில்27 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தியிருக்கிறோம்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிர்அலுவலகத்திலும் கருணை மனு கொடுத்திருக்கிறோம்.
47முறைசென்னைக்கு வந்து மனு செய்திருக்கிறோம்.
அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் பலரையும்சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம்.
எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தது போல்அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுஎன்ற பதில்தான் வருகின்றது.

தனியார்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதலேகணினி வழிக்கல்வி இருக்கிறது.அதை இன்னும் மேம்படுத்தஅரசும் ஊக்குவிக்கிறது.ஆனால் அரசுப் பள்ளிகளில்ப்ளஸ் ஒன்,ப்ளஸ் டூக்குமட்டுமே அதுவும் பாதி பள்ளியில்ஆசிரியர்கள் இல்லாமல் படிக்கிறார்கள்" என்கிறார் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர்வேல்முருகன்.

****
படித்ததுகணினி அறிவியல் பிடிப்பது கசாப்புக் கத்தி!

"2010இல்பி.எட் முடிச்சேன். அப்ப்கூட வாரத்துல ஒருநாள் மட்டன் கடையில்வேலை பாக்குறேன்.எனக்கு கல்யாணமாகி ஒருகுழந்தை இருக்கு.இப்ப வரைக்கும்எவ்வளவோ போராட்டம் பண்ணிருக்கோம்.எத்தனையே இடத்துல மனு கொடுத்தும்ஒண்ணும் நட்க்கல.நாங்க நாற்தாயிரம்ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறோம் .அங்கு பள்ளிகளில் பிள்ளைகளுக்குஆசிரியர்கள் இல்லை.ஸ்கூலுக்கு ஒருடீச்சருக்கு வேலை கிடைச்சிருந்தாலும் படிச்சவங்கபாதிபேரு வேலைக்குப் போயிருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார் தமிழ்நாடுபி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் கார்த்திக்.

*ரங்கநாயகி, அந்தியூர்*

பி.எட் முடிச்சிட்டு ஒருபனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டிருக்கேன் சூப்பர்வைசரா இருந்தாலும் எல்லா வேலையும் பாக்காணும்.படிச்ச படிப்புக்கேத்த வேலையில்லாம,குறைஞ்ச கூலிக்கு கிடைத்தவேலையைச் செஞ்சிட்டிருக்கேன். பொண்ணுப்பாக்க வர்றவங்க பி.எட் கம்ப்யூட்டர்சயின்ஸ்னா வேலை கிடைக்கிறது கஷ்டம்னுசொல்லிட்டு போய்டுறாங்க.

*ஆரிஃபா, ஈரோடு*

எங்க வீட்ல அஞ்சு பொண்ணுங்க.பி.எட் முடிச்சிட்டுஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டு இருக்கேன்.எங்கப்பாவால வேலை செய்யமுடியாது.நாங்கவேலை செஞ்சுதான் குடும்பத்தக் காப்பாத்தானும்.வேலை கிடைக்காததால கல்யாணம்தள்ளிப்போய்ட்டு இருக்கு.

*லலிதா, கொள்ளிமலை*

அம்மாவோடகூலி வேலைக்குப் போய்டுருக்கேன்.வீட்டில இருக்கிற ஆடுமாடு அப்பா பாத்துக்கிறாங்க.இவ்ளோதூரம் படிச்சிட்டு கூலி வேலைக்குப் போறதுரொம்ப கஷ்டம இருக்கு.பி.எட் படிச்சிருந்த வேலைவாங்கித் தந்துடுவோம்னு சொல்லி பொண்ணு பாக்கவந்தாங்க .கம்ப்யூட்டர் சயின்ஸ்னு தெரிஞ்சதும் அதுக்கு எப்போ கிடைக்கிறதுனுரிஜெக்ட் பண்ணிட்டாங்க....

*கிருத்திகா, கோவை*

எனக்குகுடும்பத்தில பல சிக்கல்.அரசுவேலைதான் என்னை மீட்டெடுக்காணும் என்னுடையரெண்டு பெண் குழந்தைகளோட  எதிர்காலம் பத்தி ரெம்பக் கவலையாஇருக்கு.வாழ்க்கைய நகர்த்துறதுறதே பெரிய போராட்டம இருக்கு...
****
*சாய்  ஜானு, கரூர்*

நான் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவேலை செய்கிறேன்.
என்க்குசில கேள்விகள் இருக்கு.

--->
வேலைகேட்டுபோராடும்போது அரசுக் கொள்கை முடிவுக்குஉட்பட்டதுன்னு சொல்றாங்க.அப்படினா அரசு கொள்கை பி.எட் முடிச்சவங்களுக்கு வேலைதரக்கூடாது என்பதா?

--->
அரசு வேலைக்கு எடுக்க முடியாத நிலையில்ஏன் இந்தப் படிப்ப நீக்காமவைச்சிருக்கங்கா?

--->
சபீதா மேடம் மத்திய அரசுகம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டுத்துக்காக கொடுத்த பணத்தைஏன் திருப்பிக் கொடுத்தார்கள்?

இதுக்கெல்லாம்என்ன பதில் வைத்திருக்கிறது அரசு?
என கேள்விகளை அடுக்குகிறார் சாய்ஜானு.

சுமார்40,000 வேலையில்லா பட்டதாரிகள் 27,000 பேர் பெண்கள் .இவர்களின்வாழ்க்கைக் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.தாயுள்ளம் கொண்ட தமிழக இவர்களின்மீது கருணை கண் காட்டுமா??

திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடுபி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014

உள்ளாட்சி 21: குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!

தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு. வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள். எங்கும் பசுமை. நெற்பயிர்கள் முளைவிட்டிருக்கின்றன. பெருகுமோ, கருகுமோ தெரியவில்லை. காவிரித் தாயை நம்பிக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். படிப்படியாகக் குறைகிறது பசுமை. வயல்களில் முளைத்திருக்கின்றன திடீர் கட்டிடங்கள்.
குளங்கள் காய்ந்துக்கிடக்கின்றன. குளம் ஒன்றில் கழிவு நீர் பாய்கிறது. குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன. பன்றிகள் மேய்கின்றன. பரபரப்பாக இயங்குகிறது பட்டுக்கோட்டை நகரம். இங்கிருந்து அரைமணி நேரப் பயணம். தென்னை மரங்கள் சூழ வரவேற்கிறது வேப்பங்குளம் பஞ்சாயத்து!

“வாங்க மைடியர், வாங்க...” ஓடி வந்து கட்டியணைத்து வரவேற்கிறார் சிங்கதுரை. வேப்பங்குளம் பஞ்சாயத்துத் தலைவர். உடல்மொழியில் ஊற்றெடுக்கிறது உற்சாகம். துள்ளல் நடை. வழியில் பெண்மணி ஒருவர் வேனில் அரசுப் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்த காட்சி வித்தியாசமாக இருக்கிறது. குழந்தையாக மாறிய சிங்கதுரை, ‘ஹாய் மைடியர்ஸ்... ஹாய் மைடியர்ஸ்...’ என்று குழந்தைகளின் கன்னம் வருடி அனுப்புகிறார். “நம்ம கிராமப் பஞ்சாயத்தைப் பத்தி நான் சொல்ல மாட்டேன் மைடியர். நிறையோ, குறையோ மத்தவங்கதான் சொல்லணும். நீங்க பத்திரிகையாளர்தானே, உங்கக் கடமையை நீங்க செய்யுங்க. ஊருக்குள்ள நீங்களே விசாரிச்சி தெரிஞ்சிக்கோங்க... என்ன சொல்றாங்களோ அதை எழுதுங்க” என்கிறார்.

ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிறது வேப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. காலை மணியடிக்கிறது. உற்சாகமாக ஓடுகிறார்கள் குழந்தைகள். தனது குழந்தையை அழைத்து வந்திருந்தார் வடிவழகி. அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். “எனக்கு மூணு குழந்தைங்க. மூணு பேரும் தனியார் பள்ளியில்தான் படிச்சாங்க. இவளும் அங்கேதான் படிச்சா. சிங்கதுரை அய்யாதான் எங்கள்ட்ட பேசி அங்கிருந்து இவளை இந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார். கூடவே, குழந்தை பேருல அஞ்சாயிரம் ரூபாய் டெபாசிட் பண்ணியிருக்காரு...” என்கிறார். ஆச்சர்யமாக இருந்தது. பள்ளிக்குள் நுழைகிறோம்.

தனது குழந்தை ஹாசினியுடன் வடிவழகி

என்ன இல்லை எங்கள் பள்ளியில்?

“1944-ம் வருஷம் தொடங்குன பாரம்பரியம் மிக்க பள்ளிக்கூடம்ங்க இது. ஒருகாலத்துல இங்கிட்டு ஆயிரம் பேரு படிச்சாங்க. அப்ப எல்லாம் தனியார் பள்ளிகள் கெடையாது. எல்லாரும் இங்கிட்டுதான் படிக்கணும். சுத்து வட்டாரத்துலேயே பிரபலமாக இருந்துச்சு இந்தப் பள்ளிக்கூடம். 2000-களின் தொடக் கத்துலதான் பள்ளிக்கு ஆபத்து முளைச்சது. சுத்துவட்டாரத்துல அங்கிட்டும் இங்கிட்டுமா தனியார் பள்ளிகளைத் தொடங்குனாங்க.

ஊரெல்லாம் ‘இங்கிலீஷ் மீடியம்’னு போஸ்டர் ஒட்டுனாங்க. எங்க பள்ளியில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்குனது. இப்போ சுத்துவட்டாரத்துல சுமார் 20 தனியார் பள்ளிகள் இருக்குது. பத்து வருஷத்துக்கு முன்னாடி 600 பேரு படிச்ச இந்த பள்ளியில் கடந்த வருஷம் மாணவர் எண்ணிக்கை 40-க்கும் கீழே போயிருச்சு. நெருக்கியடிச்சு உட்கார்ந்த வகுப்பறைகள் எல்லாம் வெறிச்சோடியிருச்சு.

நாங்க பல வருஷமா அர்ப்பணிப்பு உணர்வோடு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்போம். செயல்வழி கற்றலில் ஆடிப் பாடி சொல்லித் தந்திருக்கோம். ஆனால், ஒவ்வொரு முறையும் பெற்றோர் டி.சி-யைக் கேட்டு வரும்போதெல்லாம் எங்களுக்கு அழுகை வந்திடும். ஏதோ சொந்தக் குழந்தையைப் பிடுங்கிட்டு போற மாதிரி இருக்கும். நாங்க பெற்றோர்கிட்ட கெஞ்சுவோம். வாதாடுவோம்.

ஆனா, ஆங்கில மோகத்துக்கு முன்னாடி எதுவும் எடுபடலை. இத்தனைக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் செயல்படுகிற பள்ளிக்கூடம்ங்க இது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் வீதம் ஆறு ஆசிரியர்கள் இருக்காங்க. அதுல நாலு பேரு முதுநிலை பட்டதாரிகள். சுத்துவட்டாரத்திலேயே பெரிய வளாகம் எங்க பள்ளிக்கூடம்தான்.

கடந்த மூணு வருஷமா அறிவியல் கண்காட்சியில் தொடர்ந்து ‘இன்ஸ்பையர்’ விருது வாங்கிட்டு வர்றோம். தரமான கட்டி டங்கள் இருக்கு. தனித்தனி வகுப்பறைகள் இருக்கு. நூலகம் இருக்குது. சத்துணவுக் கூடம் இருக்கு. அதுக்கு காஸ் இணைப்பு இருக்கு. விதவிதமாக மதிய உணவு கொடுக் கிறோம். பஞ்சாயத்து சார்பில் கழிப்பறை சுத்தமாக பராமரிக்கிறாங்க. ஓடியாட மைதானம் இருக்கு. என்னங்க எங்க பள்ளிக்கு குறைச்சல்? ஆனா, தீப்பெட்டியாட்டம் இருக்குற தனியார் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுறாங்க.

அரசுப் பள்ளியை சூழ்ந்த ஆபத்து!

இந்த சூழல்லதான் போன ஜூன் மாசம் திடீர் ஒரு தகவல் இடி மாதிரி வந்து இறங்குது. போதுமான எண்ணிக்கையில மாண வர்கள் இல்லாததால் எங்க பள்ளியை தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்க போறதா தகவல் வந்துச்சு. ஆசிரியர்களை யும் குறைச்சிடுவாங்களாம். என்ன செய்யற துன்னு தெரியாம தவிச்சு நின்னோம். இந்தத் தகவல் பஞ்சாயத்துத் தலைவர் சிங்கதுரைக் கிட்ட போனது. நேரடியா பள்ளிக்கூடத் துக்கே வந்தவர், எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கிட்டார். ‘கவலைப்படாதீங்க. பள்ளிக்கூடத்துக்கு நான் குழந்தைகளைக் கூட்டியாறேன். என்னை நம்புங்கன்னார். மறுநாளே தனியார் பள்ளிக்கூடத்து சீருடை யோட ரெண்டு குழந்தைகளைக் கூட்டியாந்தார். ரெண்டு மாசத்துல 10 பேரை சேர்த்துட்டார். தேவையான அளவு எண்ணிக்கையும் கூடுச்சு. தரம் குறைக்கறதுல இருந்து எங்க பள்ளிக் கூடம் தப்பிடுச்சு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

உயர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை!

அரசுப் பள்ளிக்கு வரவழைக்க அப்படி என்ன செய்தார் சிங்கதுரை? கிராம சபைக் கூட்டத்தை கூட்டினார். மக்களை வரவழைத்தார். நமது குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எடுத்துச் சொன்னார். குழந்தைகள் தாய்மொழியில் கற்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். குழந்தைகள் சுமையில்லாமல் சுதந்திரமாக படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும், மக்கள் மனம் மாறவில்லை. இதனால் அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தார்.

அரசுப் பள்ளியில் தங்களது குழந்தையைச் சேர்ப்பவர்களுக்கு அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்றார். இரண்டே மாதங்களில் 10 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார்கள். சொன்னபடியே பணத்தை குழந்தைகள் பெயரில் முதலீடு செய்தார். படிப்படியாக அரசுப் பள்ளியில் குழந்தைகள் சேரத் தொடங்கினார்கள். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்திருக்கிறது. தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்கும் ஆபத்தும் நீங்கியது.

வரும் கல்வியாண்டில் பள்ளிக் கூடத்தின் மாணவர்கள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவதாக உறுதியளித் திருக்கிறார் சிங்கதுரை. இவ்வாறு சேர்க் கப்படும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி, இலவசம். தனியார் பள்ளிகள் வேன்கள் மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை கவனித்தவர், அரசுப் பள்ளிக்கும் வாடகை வேனை அமர்த்தியிருக் கிறார். வேனில் குழந்தைகளைப் பொறுப்புடன் ஏற்றி அழைத்துச் செல்ல பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காலையும் மாலையும் குழந்தைகளின் வீடு தேடி வருகிறது அரசுப் பள்ளி வேன். மகிழ்ச்சியோடு வருகிறார்கள் குழந்தைகள். இது மட்டுமா?

- பயணம் தொடரும்..

மீண்டும் முத்திரை பதித்த மூலத்துறை பள்ளி...


மேதகு வேண்டாம்; மாண்புமிகு போதும்'

சென்னை:'மேதகு என்பதற்கு பதிலாக, மாண்புமிகு என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே போதும்' என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை, அவர்களது பெயருக்கு முன், மாண்புமிகு எனக்கூறி கவுரவப்படுத்துவர். அதே நேரத்தில், கவர்னரை அழைக்கும் போது, 'மேதகு ஆளுனர்' என, கவுரவமாக அழைப்பர்.

இந்நிலையில், தமிழக கவர்னரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நேற்று வெளியிட்ட அறிவிப்பு:அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், தமிழக கவர்னரை இதுவரை, 'மேதகு ஆளுனர்' என, குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இனி, 'மாண்புமிகு ஆளுனர்' என அழைத்தால் போதும் என்று, கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். அதே நேரம், கவர்னரை, வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்திக்கும் போது, மேதகு ஆளுனர் என்றழைப்பது கடைபிடிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரில் வந்தால் உடனே வேலை:டாக்டர்களுக்கு அரசு சிவப்பு கம்பளம்

நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' என, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது; 414 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில், எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டாலும், எம்.எஸ்., - எம்.டி., என்ற முதுநிலை பட்டம் பெற்ற, அறுவை சிகிச்சை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை. அதனால், சிறப்பு பிரிவு டாக்டர்களை, கூடுதலாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மயக்கவியல் - 91; பொது மருத்துவர் - 30; மகப்பேறு மருத்துவர் - 130, ரேடியாலஜி - 22 பேர் உட்பட, 414 சிறப்பு பிரிவு, உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை தற்காலிக பணியில் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. எம்.ஆர்.பி., எனப்படும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.'போட்டி தேர்வுகள் இல்லை; நேரில் வந்தால் போதும், வேலையில் சேரலாம். இதற்கு, நவ., 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. 
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:உயர் சிறப்பு மருத்துவம் படித்தோருக்கு, தனியார் மருத்துவமனைகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எதிர்பார்த்ததை விட சம்பளமும் கிடைக்கிறது; இதனால், அரசு பணியில் ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளது. எனவே, நிலைமையை உணர்ந்த அரசு, நேரில் வந்தால் வேலை என, சிவப்புக் கம்பளம் விரிந்துள்ளது. இதற்கு உரிய பலன் கிடைக்குமா என, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதுதவிர, முதுநிலை மருத்துவம் படித்து, அரசு மருத்துவமனைகளில் நிபந்தனை அடிப்படையில் பணியாற்றி வரும், 1,800 டாக்டர்களையும், அரசு பணி வரன்முறை செய்யஉள்ளது.

புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன?

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டம் குறித்து, தமிழக அரசின் நிலையை, பள்ளிக் கல்வி அமைச்சர், டில்லியில் நாளை அறிவிக்கிறார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில் வெளியானது. அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியது. கருத்துக் கேட்பு, செப்., 30ல் முடிந்தது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில கல்வி அமைச்சர்களுடன், கல்விக்கான மத்திய அரசு குழு, நாளை ஆலோசனை நடத்துகிறது. எட்டாம் வகுப்பு வரை அமலில் உள்ள, 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது, 10ம் வகுப்பில், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத் திட்டத்திலும், கட்டாய பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.இதில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபீதா உள்ளிட்டோர் பங்கேற்று, புதிய கல்விக் கொள்கை குறித்து, தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உள்ளனர்.

'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'

பேராசிரியர் பணி தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.நாடு முழுவதும், பல்கலை மற்றும் கல்லுாரி களில் பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மட்டும் பேராசிரியராக, தமிழக அரசு நடத்தும் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழகத்தில், தெரசா பல்கலை, பிப்ரவரியில் இத்தேர்வை நடத்தியது. எட்டு மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. 

உயர் கல்வி துறை:செட் தேர்வுக்கு பின், ஜூலையில் ஒரு நெட் தேர்வு முடிந்து, அடுத்த தேர்வு, ஜனவரியில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு, அக்., 17ல் துவங்கியது. 'செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர், நெட் தேர்வு எழுதுவர். எனவே, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும்' என, நெட், செட் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்; நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில், '10 நாட்களுக்குள், செட் தேர்வு முடிவை வெளியிட, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது' என, நமது நாளிதழில், அக்., 20ல், செய்தி வெளியானது. 
தெரசா பல்கலை :இதைத் தொடர்ந்து, இன்று காலை, 10:00 மணிக்கு, செட் தேர்வு முடிவு வெளியாகும் என, தெரசா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வு முடிவை, http://www.motherteresawomenuniv.ac.in, www.setresult2016.in என்ற இணையதளங்களில் - நமது நிருபர் -அறியலாம்

சித்தா கலந்தாய்வு நடக்குமா?வரும் 31ல் முடியுது அவகாசம்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து, நான்கு மாதங்களாக தவம் கிடக்கின்றனர். ஒரு வாரத்தில், சேர்க்கை அவகாசம் முடிவதால், கலந்தாய்வு நடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதிக் கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன; இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

விண்ணப்பித்து, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், தர வரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. வழக்கமாக, அக்., இறுதிக்குள் கலந்தாய்வு முடிந்து, கல்லுாரிகள் துவங்க வேண்டும்; இதுதான் விதிமுறை. இதன்படி, அவகாசம் ஒரு வாரத்தில் முடிகிறது. அதனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்குமா என, விண்ணப்பித்தோர் புலம்புகின்றனர். தனியார் கல்லுாரிகளில் இடங்கள் நிரம்ப வசதியாக, இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள், காலம் தாழ்த்துகின்றனரோ என்றும் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:கல்லுாரிகளில் ஆய்வு நடத்தி, மாணவர் சேர்க்கைக்கு, 'ஆயுஷ்' கவுன்சில், அனுமதி அளிக்கும். ஆய்வுகள் முடிவடையாததால், மாணவர் சேர்க்கை அனுமதி இன்னும் கிடைக்கவில்லை; அதனால், கலந்தாய்வு நடத்த முடியவில்லை. மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, இம்மாதம் வரை அவகாசம் உள்ளது. அதற்குள் அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. முறையான அனுமதி கிடைக்காத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்படும். அடுத்த மாதம் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Atm Card இல் பின் நம்பர் மாற்றப் படவேண்டியவர்கள் விவரம் வெளியீடு இதில் உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் யார் a/c என்பதை நீங்கள் search இல் உங்களது district விவரம் தந்தால் போதும் உங்களது district இல் உள்ளவர்கள் விவரம் தோன்றும் அல்லது mobile no கொடுத்து search செய்து கொள்ளவும் இவர்கள் உடனடியாக தங்களது a/c pin no change செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் atm card pin no திருடப்பட்டவர்கள்  விவரம் வெளியீடு ...
இதில் நீங்கள் அல்லது உங்களது குடுமப்த்தில் உள்ளவர்களது a/c  atm card pin no கூட திருடப்பட்டிருக்கலாம் 
Atm Card இல் பின் நம்பர் மாற்றப் படவேண்டியவர்கள் விவரம் வெளியீடு இதில் உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் யார் a/c என்பதை நீங்கள் search இல் உங்களது district விவரம் தந்தால் போதும் உங்களது district இல் உள்ளவர்கள் விவரம் தோன்றும் அவர்களது atm pin no   உடனடியாக மாற்ற படவேண்டும்.
அல்லது உங்களது வங்கியில் கொடுத்த mobile பதிவு செய்து உங்களது a/c திருடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்....

23/10/16

கல்வி கொள்கை கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க முடிவு

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கையின் படி, மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. 
அதன் முக்கிய அம்சங்களை, மூன்று மாதங்களுக்கு முன், மத்திய அரசு வெளியிட்டது;
அதற்கு, எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், கல்விக் கொள்கை குறித்த முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில், வரும், 25ல் நடக்கிறது. இதில், அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

*2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை*

TNGTF பொதுச்செயலாளர் செய்தி;

*2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை*

2011-12 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2000 கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்ய பட்டனர்.இவர்கள் 5 ஆண்டிற்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனையுடன் பணியில் சேர அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 2000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2011-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி
2011-இல் பணி நியமனம் செய்யப்பட்ட இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆசிரியர்களின் 5 ஆண்டு பணிக் காலம் அரசு உத்தரவுப்படி இந்த ஆண்டு, நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 2000கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் உத்தரவில் இதுகுறித்து தெளிவான விளக்கம் இல்லாததால், அந்தப் பள்ளிகளில் பணி யாற்றுவோரும் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து அரசு எதுவும் தெளிவான அறிவிப்பு வெளியிடாத நிலையில் சில மாவட்ட அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் இம்மாதம் வழங்க வேண்டிய ஆண்டு ஊதிய உய்ர்வை தன்னிச்சை யாக நிறுத்தி வைத்துள்ளனர்.இது ஆசிரியர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்வே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு *தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும*் என கேட்டுக்கொள்கிறோம்.
*பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்*
_பொதுச்செயலாளர_
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

சி.பி.எஸ்.இ., 10 ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு

கிராமமா, நகரமா? கல்வி அதிகாரிகள் குழப்பம்

அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு