அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில், பலருக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காததால், வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர், காலி பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், நேற்று முன் தினம் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு, 48 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; 45 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர்.
நேற்று முன் தினம் நடைபெற்ற தேர்வில், 16 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. பல விண்ணப்பதாரர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து, ஹால் டிக்கெட் அனுப்பாததே காரணம் என, தெரிய வந்துள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.