யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/16

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் தினமும் பரீட்சை: பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு

குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:  


பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் மற்றும் கணித பெட்டகம் (Science Kit, Maths Kit) வழங்கப்படும்.  மேலும், இன்றிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 1 முதல் 9ம் வகுப்பு வரையில் பயிற்சித் தாள்(Work Sheet) பள்ளிகளுக்கு தினமும் இணைய தளம் மூலம் அனுப்பப்படும்.

அதன் மூலம் அந்த மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்படும். இந்த பயிற்சித் தாளில் 10 கேள்விகள் இடம் பெறும். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 

தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி(All Pass) என்பது தொடரும். 

டெட்' தேர்வுக்கு புது வினாத்தாள் பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை. தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது.
தேர்வு எழுதியோர், உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மூன்று ஆண்டுகளாக, 'டெட்' தேர்வு நடத்தப்படவில்லை.இந்நிலையில், 'டெட்' தேர்வு வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.
தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும், 'வெயிட்டேஜ்' முறை செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் விரைவில், 'டெட்' தேர்வை, எவ்வித குழப்பமுமின்றி நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல் மற்றும் மாணவர்களுக்கு அவற்றை சரளமாக பேச சொல்லித் தருவதில் சிக்கல் உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, இந்த சிக்கல் இருக்கக் கூடாது; தனியார் பள்ளி ஆசிரியர்கள் போல் இருக்க வேண்டும் என, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய தரமான வினாத்தாள் தயாரிப்புக்காக, பி.எட்., கல்லுாரிகள் மற்றும் பல்கலை மூலம் கமிட்டி அமைக்க, கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. 

2000 ரூபாய் நோட்டை பிச்சைகாரன் கூட வாங்கமாட்டான்! பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு

2000 ரூபாய் நோட்டை பிச்சைகாரன் கூட வாங்கமாட்டான்! பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு



பிரதமர் நரேந்திர மோடி மக்களை பிச்சைகாரர்களாக ஆக்கிவிட்டார் என்றும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பிச்சைகாரன் கூட வாங்கமாட்டான் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் இரவோடு இரவாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்ததிலிருந்தே மக்கள் சில்லறைக்காக பிச்சைகாரர்கள் போல அலைந்து வருகிறார்கள்
தற்போது வெளியாகியிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் சாயம் வெளுத்து போன மாதிரி இருக்கிறது.

இந்த நோட்டை மடித்து பாக்கெட்டில் நான்கு முறை வைத்தால் கிழிந்துவிடும்
மேலும், இந்த நோட்டுகளை பிச்சைக்காரனிடம் போட்டால் கூட அதை அவன் வாங்க மாட்டான் என அவர் கூறியுள்ளார்.


இவரின் இந்த பேச்சானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது8.

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தண்ணி தொட்டு தேய்த்தால் சாயம் போகிறது பகிர் தகவல் : டி.வி. சேனலில்

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தண்ணி தொட்டு தேய்த்தால் சாயம் போகிறது பகிர் தகவல் : டி.வி. சேனலில்



பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். 
மேலும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என கூறினார்.

இதையடுத்து பொதுமக்கள் கடந்த 10–ந் தேதி முதல் வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துநின்று புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கினர்.

அவர்கள் மகிழ்ச்சியாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர்.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பல சிறப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்தநிலையில் நேற்று பிரபல தனியார் மராத்தி டி.வி. செய்தி சேனல் ஒன்றில் புதிய 2 ஆயிரம் நோட்டில் சாயம் போவதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது.

அந்த செய்தியில், ஒருவர் ஈரமான வெள்ளை துணியை வைத்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தேய்க்கிறார்.

அப்போது, அந்த நோட்டில் உள்ள ‘பிங்க்’ கலர் துணியில் படிகிறது. தனியார் டி.வி. சேனலில் வெளியான இந்த செய்தியால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்தியை பார்த்த பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் ஈரத்துணியை தொட்டு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டில் சாயம் போகிறதா? என சோதனை செய்துபார்த்தனர்.

அப்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் சாயம் போவதாக மும்பையை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தெரிவித்தார்.

கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்று முதல் செயல்படாது'

தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள், இன்று முதல், போதியநிதி வசதி அளிக்கும் வரைசெயல்படாது' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.

      நிறுத்தி வைப்பு: தமிழ்நாடு மாநிலதொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள்சங்க கவுரவ பொதுச் செயலர்குப்புசாமி, மாநில தலைவர் மேசப்பன், பொது செயலர் முத்துபாண்டியன் கூட்டாகவிடுத்துள்ள அறிக்கை:ரிசர்வ் வங்கி, சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கைப்படி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கங்களில், வரவு- செலவு, வாய்மொழியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

        தமிழகத்தில், 4,654 தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களும், உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சேவையும்செய்ய இயலாமல் பாதித்துள்ளது. சேமிப்புகணக்கில் இருந்து, உறுப்பினர்களுக்கு பணம் வழங்க இயலவில்லை. அடகு நகைகளை, சுப காரியங்களுக்குமீட்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தர முடியவில்லை.
இயலாத நிலை
உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் சேவைகளை பூர்த்தி செய்யஇயலாத நிலையில், சங்கங்களை திறந்து வைத்து பணியாற்றுவதுமிகுந்த சிரமம். விவசாய பணிகளுக்குஉரம் வழங்க இயலாத நிலைஏற்பட்டு உள்ளது.இன்று, அந்தந்தமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, ஒட்டு மொத்த பணியாளர்கள் நேரில்சென்று, நிதியுதவி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி வசதி செய்து தரும்வரை, சங்கங்கள் செயல்படாது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., நுழைவு தேர்வு; ஒப்புகை சீட்டு கிடையாது

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கு, இனி காகித வடிவில், ஒப்புகை சீட்டு வழங்கப்படாது' என, மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., தேர்வுகள்:
இது குறித்து, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர்தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:காகிதத்தின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்டவற்றுக்கு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, ஐ.ஏ.எஸ்., தேர்வுகள், வரும், 3 முதல், 9ம் தேதி வரை நடக்க உள்ளன.

காகித வடிவத்தில் வழங்கப்படாது:

இந்த ஆண்டுக்கான, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வுகள் நடத்தும்போது, அதற்கான ஒப்புகை சீட்டு, இனி காகித வடிவத்தில் வழங்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த ஒப்புகை சீட்டுகள், இணையதளத்தில் பதிவிடப்படும். அதை தேர்வு எழுதுவோர் பதிவிறக்கம் செய்து, தேர்வு எழுதும்போது எடுத்து வர வேண்டும்.

அடையாள அட்டை:

புகைப்படம் தெளிவாக இல்லாமல் இருந்தால், விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படத்தை கையில் எடுத்து வர வேண்டும். மேலும், ஆதார் உள்ளிட்ட, ஏதாவது ஒரு அடையாள அட்டையும் எடுத்து வர வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் பட்டமளிப்பு விழா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பல்கலை பதிவாளர் விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'பல்கலையின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24ல், சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்க இருந்தது.
இந்நிகழ்ச்சி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியான இலங்கை, தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருவதால், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை, தமிழகம் ஒட்டியுள்ள பகுதிகள், வட தமிழக கடற்கரை வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக் கூடும். இதேபோல், தமிழக உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தென்தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதேசமயம் நகரில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

சென்னையில் மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணி வரையில் லேசான மழை பெய்தது. இதையடுத்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல் கொரட்டூர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய இடங்களில் அதிகாலையில் மழை லேசாக தூறியது. இந்தப் பகுதிகளில் காலை 7 மணிக்கு இடி மின்னலுடன் அரை மணிநேரம் கனமழை பெய்தது.மழை அளவு: இதில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவானது.இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி, சென்னை, கன்னியாகுமரியில் தலா 30 மி.மீ என மழை அளவு பதிவாகிள்ளது.

காரைக்கால், மரக்காணம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, காஞ்சிபுரம் மாவட்டம் கோலப்பாக்கம், தரமணி, திருவாரூர், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா 20 மி.மீட்டரும், நாகர்கோவில், மயிலாடி,காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், பூதாப்பாண்டி (கன்னியாகுமரி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம், ஆர்.எஸ்.மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 10 மி.மீட்டர் அளவும் மழை பதிவாகியுள்ளது.

நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.16 கடைசி நாள்

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் கலைப்பிரிவு பாடங் களில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிக வியல், சமூகவியல், உளவியல், மேலாண்மை போன்றவை) உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும்.
நெட் தகுதித்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜுன், டிசம்பர்) நடத்தப் படுகிறது. 2016-ம் ஆண்டுக்கான 2-வது நெட் தேர்வு காலதாமதமாக அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு (www.cbsenet.nic.in) கடந்த அக்டோபர் 17-ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே சிபிஎஸ்இ அறிவித்திருந்தபடி, இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 16-ம் தேதி (புதன்கிழமை) முடிவடைகிறது.

கலைமற்றும் இலக்கியம் சம்பந்தப் பட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் நெட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம்.தற்போது முதுகலை இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப் பவர்களும், இறுதி ஆண்டு தேர்வு முடிவை எதிர்நோக்கியிருப்பவர் களும் நெட் தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கல்வியோடு நல்லொழுக்கம் பள்ளி மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
அதன்படி அனைத்து வகுப்புகளிலும் ஆசிரியர்கள் நீதிபோதனைவகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு நீதிபோதனை வகுப்புகள் எடுக்க ஆசிரியர்களுக்கு தனியாக புத்தகம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான நீதிபோதனை புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

மனிதநேயம், திறன்வளர்த்தல் அந்த புத்தகங்களில் பொதுஉடமை, மனதிடம், தேசிய உணர்வு, திறன் வளர்த்தல், சேவை மனப்பான்மை, உடல்நலம் பேணுதல், மனிதநேயம், சாலை விதிகளை மதித்தல், பொதுசொத்துகளை பாதுகாத்தல், கடமை உணர்வு, போதை இல்லா வாழ்வு, புகைபிடிப்பதால் புற்றுநோய் ஆபத்து, வெற்றி தோல்விகளை சமமாக பாவித்தல், பெற்றோரை மதித்தல், மதநல்லிணக்கம், சகிப்புதன்மை, பெண்ணின் பெருமை உள்பட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளன.

மேலும் 9, மற்றும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இந்த நீதிபோதனை வகுப்புகளை எப்படி நடத்துவது என்பது குறித்து விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் செய்து வருகிறார்.

ஆசிரியர் பணி: தவிப்பில் கணினி அறிவியல் பட்டதாரிகள்.

மாணவர்கள் கணினி அறிவைப் பெறும் வகையில், மடிக்கணினியை வழங்கிய தமிழக அரசு, கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர் பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும் கணினி அறிவியல் பட்டதாரிகள்.
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது, கணினி அறிவியல் பாடமும் அமல்படுத்தப்பட்டது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு படிப்பு கற்றுத் தரப்பட்ட நிலையில், அதற்கு அடுத்தாண்டில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. சமச்சீர் கல்வி முறையில் வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டன.பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம்... மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியல் பாடப் பிரிவைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற நோக்கில், அந்தந்தப் பள்ளிகளின் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை பல பள்ளிகள் நடத்தி வருகின்றன.கடந்த 2005-ஆம் ஆண்டில் மாதம் ரூ. 4000 ஊதியத்தில் பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட 682 கணினி ஆசிரியர்களுக்குப் பிறகு நியமனம் கிடையாது. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் பலபள்ளிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டிய நிலைதான் உள்ளது.தொடர்ந்து நீதிமன்ற வழக்கு, பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை போன்றகாரணங்களால் பாதிப்புக்குள்ளாகினர் பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்.வாழ்வாதாரமே இல்லை: ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது கணினி அறிவியலில் பி.எட். படிப்பு. மற்றப் பாடங்களைத் தேர்வு செய்து படித்தவர்கள் எல்லாம் ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஆர்பி தேர்வுகளில் பங்கேற்க முடியும். ஆனால், கணினி அறிவியலில் பி.எட். படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.மாநிலம் முழுவதும் சுமார் 39,019 பேர் பி.எட். கணினி அறிவியல் படிப்பை முடித்து தற்போது வரை வேலையில்லாமல் உள்ளனர்.

இதுபோல, எம்.எஸ்ஸி. பி.எட். முடித்தவர்கள்எண்ணிக்கை 20,000-த்துக்கு மேல் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிலையே உள்ளது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி, அவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழக அரசு, பள்ளிகளில் கணினிப் படிப்புகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணை அமைப்பாளர் ஏ. முத்துவடிவேல்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினிக் கல்வி இல்லை: 2006-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமனம் இல்லை. ஏன், கடந்தாண்டுகூட 407 பள்ளிகள் மாநிலம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்டதாகக் கூறினாலும், ஒரு பள்ளியில்கூட கணினிக் கல்வியைக் கற்பிக்க ஆசிரியர் பணியிடம் இல்லை.பி.எட். படிப்பில் கணினி அறிவியல் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும் 39,019 பேரில் ஏறத்தாழ 27,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் குமரேசன்.

"மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், சென்னையில் போராட்டம் எனப் பல்வேறு நிலைகளில் எங்களது கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்றாலும் இதுவரையில் தீர்வு எட்டப்படவில்லை. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி, அதுகுறித்த கண்கெடுப்பை அரசு மேற்கொள்கிறது. இந்த நிலையில், பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தும், அதற்கான இடங்களில் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது புதிராகத்தான் இருக்கிறது. பள்ளிக்கு ஓர் ஆசிரியரை நியமித்திருந்தால்கூட பாதிப்பேர் வேலை பெற்றிருப்பார்கள்' என்கின்றனர் வேலையில்லாகணினி அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள்.

ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்: சக்திகாந்த் தாஸ் தகவல்

ஏடிஎம்களில் வாடிக்கையாளர் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். 
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ், ரூபாய் நோட்டுகள் மாற்றம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, மக்களுக்கு எளிதில் பணம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒருவர் ஏடிஎம்மில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இனி ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.

 நம் நாட்டில் அதிகப்படியான வங்கிகள் கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உள்ளன. எனவே கிராம மக்களை அதிகம் சிரமத்துக்கு உள்ளாக்காமல் பணம் எடுக்க வகை செய்வது குறித்து ஆலோசித்தோம். தபால் நிலையங்களில் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை எடுக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றியுள்ளோம். இது இன்று முதல் நடைமுறைக்கு வரும். ஓரிரு நாட்களில் அனைத்து ஏடிகம்களில் இருந்தும் 2000 ரூபாயை எடுக்கலாம். அனைத்து வங்கி ஊழியர்களும் இரவு வரை கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இணையதள வழி பணப்பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 நவம்பர் 24ம் தேதி வரை மருந்தகங்களில் மருந்துகள் வாங்க பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரம் மருத்துவமனைகளில் முன்பணம் செலுத்த பழையே நோட்டுகளை பயன்படுத்த முடியாது. வணிகர்கள் மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருப்போம் வங்கி கணக்குகளில் இருந்து வாரத்துக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு பணப் பரிவர்த்தனையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ.24 நள்ளிரவு வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும்: மத்திய அரசு அறிவிப்பு.

வரும் 24-ஆம் தேதி வரை பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்குகளில்  பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லுபடியாகாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதே நேரம், கடந்த வெள்ளிக்கிழமை வரை பெட்ரோல் பங்குகள், அரசு மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகளில் அவை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு இது இன்று இரவு (நவம்பர் 14) நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் இன்னமும் பணப் புழக்கம் அதிகரிக்காததால், இம்மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு வரை அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்குகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் இன்று காலை தில்லியில் அறிவித்தார்.

நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னை குறித்து மத்திய ‌அமைச்சர்கள்‌ மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட அவசர ஆலோசனையின்போது, இந்த முடிவு எட்டப்பட்தாக தெரிகிறது.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் பழைய ‌‌ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்‌‌கான அறிவிப்பு இன்று இரவுடன் காலாவதியாக‌ இருந்‌த நிலையில் அது மேலும் 10 நாட்களுக்கு (நவ 24) நீட்டிக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இதன் மூலம் மின்சார கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகள் உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் ஆக செலுத்தவும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பாளர்களின் பணக் கையிருப்பு வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு பணம் கிடைப்பது எளிதாகும் என்று கூறினார். நடப்புக் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுக்கவும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு

'இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.  

இந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4,122
பணி - காலியிடங்கள் விவரம்:  
பணி: I.T. Officer (Scale-I) - 335
பணி: Agricultural Field Officer (Scale I) - 2580
பணி: Rajbhasha Adhikari (Scale I) - 65
பணி: Law Officer (Scale I) - 115
பணி: HR/Personnel Officer (Scale I) - 81
பணி: Marketing Officer (Scale I) - 946

வயதுவரம்பு: இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.11.2016 தேதியின்படி 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை 16.11.2016 முதல் 02.12.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CWE_SPL_VI_2016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.

No TET Pass? - No Salary

டெட்' தேர்ச்சி பெறாத  ஆசிரியர்களுக்கு, இம்மாதத்துக்கான ஊதிய பட்டியலை, தனியாக தயாரித்து அளிக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
ஆசிரியர்களுக்கான வருமான வரியை, இம்மாத ஊதியத்தில், கட்டாயம் பிடித்தம் செய்ய வேண்டும். வருமான வரிக்கு உட்படாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், தோராய மதிப்பீட்டு படிவத்தில், விபரங்களை குறிப்பிட்டு முன்னிலைப்படுத்த வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுதாமல், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, வரும், 15ம் தேதியுடன், கால அவகாசம் முடிகிறது.

காலநீட்டிப்பு வழங்குவது தொடர்பாக, அரசாணை வெளியிடவில்லை. எனவே, 'டெட்' தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு, தனி ஊதிய பட்டியல் தயாரிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'வருமான வரி பிடித்தம் தொடர்பாக, வழக்கமாக வெளியிடப்படும் உத்தரவு தான் இது. 'டெட்' தேர்வு எழுதாதவர்களுக்கு கால அவகாசம் முடிவதால், வருகைப்பதிவேடு விபரங்கள் அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது' என்றனர்.

2017-ம் ஆண்டில் 22 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு

அடுத்து வரும் 2017-ம்ஆண்டுக்கு 22 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 6 அரசு விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன.மத்திய அரசின் செலாவணி முறிச்சட்டத்தின் படி, ஆண்டு தோறும் அரசு விடுமுறை தினங்களை, தமிழக அரசு அறிவிக்கிறது. 
இதன்படி இந்தாண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பான அரசாணை திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் சிஎச். வித்யாசாகர் ராவின் ஒப்புதல் பெற்று, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.இதில் கூறியிருப்பதாவது: செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் வரும் 2017-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதன் படி, ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு நீங்கலாக, அனைத்து சனிக்கிழமைக்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பாது விடுமுறை தினங்களில்அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களும் மூடப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரும் 2017-ம் ஆண்டை பொறுத்தவரை, மேதினம் உள்ளிட்ட 6 விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன. இதன் மூலம், சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறை 6 முறை வருகிறது.தமிழ்ப்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. அடுத்தடுத்த நாட்களும் விடுமுறை என்பதால், தொடர் விடுமுறை வருகிறது. இது தவிர, ஜனவரி மாதம் 14,15,16, செப்டம்பரில்29,30 மற்றும் அக்டோபர் 1,2 தேதிகள் தொடர் விடுமுறையாக வருகின்றன. இவை தவிர, 8 அரசு விடுமுறைகள், வழக்கமான விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

14/11/16

CRC level science exhibition topics :

1. உடல்நலம்
2. தொழில்துறை
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. நிலையான சுற்றுச்சூழலுக்கான புதுப்பிக்கத் தக்க வளங்களைக் கண்டுபிடித்தல்
5. உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள்
6.அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள்
Primary level - 2 models or 2 projects
Upper primary level -2 models or 2 projects.
CRC level prizes.
1st prize - 400
2 nd prize- 300
3 rd prize - 200
Best school performance - 500 

அச்சப்பட தேவையில்லை : அருண் ஜெட்லி விளக்கம்:

அச்சப்பட தேவையில்லை : அருண் ஜெட்லி விளக்கம்:
தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கத்தை, பொதுமக்கள் தைரியமாக வங்கிகளில் வரவு வைக்கலாம். 2.5 லட்சம் வரையிலான தொகையை, 'டிபாசிட்' செய்யும் நபர்கள், வருமான வரி குறித்து அச்சப்படத் தேவையில்லை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி கூறியதாவது: நாட்டில், கறுப்பு பண பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவே, பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். மக்கள், தங்கள் கைவசம் உள்ள அனைத்து நோட்டுகளையும், வங்கிக் கணக்கில் செலுத்தி வரவு வைத்துக் கொள்ளலாம். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மட்டுமே இந்த அறிவிப்பால் பீதி அடைய வேண்டும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நேர்மையாக பணம் சம்பாதிப்போருக்கு, இது வரப்பிரசாதமே. தவிர, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான டிபாசிட்டுகள் குறித்து, வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்படாது. அதுகுறித்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தவும் மாட்டார்கள். உங்கள் பணம் உங்களுடையதே; பொதுமக்கள் அச்சப்பட தேவைஇல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

லைசென்ஸ்' எடுத்து செல்ல தேவையில்லை : 'ஆதார்' போதும்; வருகிறது புதிய நடைமுறை:

ஆதார்' இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்ல மறந்தாலும், போலீசில் சிக்கி விடுவோமா என்ற பயமின்றி, வாகனத்தில் செல்லலாம். புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. வாகனத்தில் செல்வோர், பல நேரங்களில், ஓட்டுனர் உரிமத்தை எடுத்துச் செல்ல மறந்து விடுவதுண்டு. இவர்கள், யாரேனும் சிக்குவரா என, போலீசார் வலை விரித்து காத்திருக்கும் நிலையில், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து, உரிய இடத்தை சென்றடைவது பெரிய விஷயம். அது போன்றவர்களுக்கு, ஆறுதல் தரும் வகையில், மத்திய அரசு, புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. புதிய திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகங்கள் இணைந்து வடிவமைத்து உள்ளன. 'டிஜி லாக்கர்' என்ற அத்திட்டத்தில், கோடிக் கணக்கான ஆவணங்களை, இணையத்தில் பொதுமக்கள் சேமித்து வைக்க முடியும். 

அதில், முதற்கட்டமாக, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன சான்றுகளை சேமித்து வைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பயன் பெற, ஆதார் அட்டை அவசியம். ஆதார் எண்ணை, மொபைல் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் மையங்களில், அதை செய்யலாம். இணைக்கப்பட்ட இந்த விபரங்கள், 'டிஜி லாக்கர்' உடன் ஒருங்கிணைக்கப்படும். பிரத்யேக, 'மொபைல் ஆப்'பை, போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் வழியாக, 'டிஜி லாக்கர்' உள்ளே நுழைந்து, வாகனம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அதன்பின், உரிமத்தை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றாலும் பரவாயில்லை. போக்குவரத்து போலீசார் பிடித்தால், மொபைல் போன் வழியாக அந்த, 'ஆப்'பில் உள்ள விபரங்களை, அவருக்கு காட்டலாம். அதை சரி பார்க்க, போலீசாருக்கு, பிரத்யேக, 'ஆப்' தயாரிக்கப்பட்டு உள்ளது. அதை வைத்து அவர் சரிபார்ப்பர். எனவே, ஓட்டுனர் உரிமத்தை மறந்தாலும், இனி, கவலையின்றி பயணத்தை தொடரலாம். 
- நமது நிருபர் -

3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!' : நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை

3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!' : நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்களை அனுபவித்து வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ''மூன்று வாரங்களில் பிரச்னைகள் அனைத்தும் சரியாகி விடும். இந்த திட்டத்தால் நாம் அடையப்போகும் லாபங்கள் ஏராளம்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:வங்கிகளில் பணம் மாற்றும் பொதுமக்களுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் தரப்படுவதால், ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம். இருப்பினும், அரசின் இத்திட்டம் நீண்ட காலப் பயன்களை அளிக்க வல்லது. எனவே, பொதுமக்கள் பொறுமையாக இருந்து அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். நாடு முழுவதும் உள்ள, இரண்டு லட்சம், ஏ.டி.எம்., இயந்திரங்கள் வழக்கமான முறையில் செயல்பட, இன்னும், மூன்று வாரங்கள் ஆகலாம். மாற்றங்கள்புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பவும், தற்போது புழக்கத்தில் உள்ள, மற்ற நோட்டுகளுக்கு ஏற்பவும், ஒவ்வொரு ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இருந்ததால், ஏ.டி.எம்.,களை முன்கூட்டியே மாற்றியமைக்க முடியாமல் போனது. இவற்றை மாற்றியமைக்க, குறைந்தபட்சம், மூன்றுவாரங்களாவது தேவை. அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டு கள் போதிய அளவுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பிரம்மாண்டமான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை, அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க, வாரக் கடைசி நாட்களிலும் வங்கிகளை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், வங்கிகளுக்கும் புதிய நோட்டுகள் முழுமையாக சென்றடைந்த பின், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும். இதனால், நம் பொருளாதாரத்தில் பெரியளவில் மாற்றம் இருக்கும். அரசியல் கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்.சமூக வலைத்தளங்கள் சமூக வலைத் தளங்களி லும், இதுகுறித்து வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
அரசு கண்காணிப்பு : 'ஜன்தன்' திட்டம் மூலம் துவக்கப்பட்ட வங்கி கணக்குகளில், திடீரென ஏராளமான பணம், 'டிபாசிட்' செய்யப்படுவது குறித்து அரசு கண்காணித்து வருகிறது.
அருண் ஜெட்லி, நிதியமைச்சர்