யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/16

வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு

'இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.  

இந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4,122
பணி - காலியிடங்கள் விவரம்:  
பணி: I.T. Officer (Scale-I) - 335
பணி: Agricultural Field Officer (Scale I) - 2580
பணி: Rajbhasha Adhikari (Scale I) - 65
பணி: Law Officer (Scale I) - 115
பணி: HR/Personnel Officer (Scale I) - 81
பணி: Marketing Officer (Scale I) - 946

வயதுவரம்பு: இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.11.2016 தேதியின்படி 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை 16.11.2016 முதல் 02.12.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CWE_SPL_VI_2016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.

No TET Pass? - No Salary

டெட்' தேர்ச்சி பெறாத  ஆசிரியர்களுக்கு, இம்மாதத்துக்கான ஊதிய பட்டியலை, தனியாக தயாரித்து அளிக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
ஆசிரியர்களுக்கான வருமான வரியை, இம்மாத ஊதியத்தில், கட்டாயம் பிடித்தம் செய்ய வேண்டும். வருமான வரிக்கு உட்படாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், தோராய மதிப்பீட்டு படிவத்தில், விபரங்களை குறிப்பிட்டு முன்னிலைப்படுத்த வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுதாமல், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, வரும், 15ம் தேதியுடன், கால அவகாசம் முடிகிறது.

காலநீட்டிப்பு வழங்குவது தொடர்பாக, அரசாணை வெளியிடவில்லை. எனவே, 'டெட்' தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு, தனி ஊதிய பட்டியல் தயாரிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'வருமான வரி பிடித்தம் தொடர்பாக, வழக்கமாக வெளியிடப்படும் உத்தரவு தான் இது. 'டெட்' தேர்வு எழுதாதவர்களுக்கு கால அவகாசம் முடிவதால், வருகைப்பதிவேடு விபரங்கள் அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது' என்றனர்.

2017-ம் ஆண்டில் 22 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு

அடுத்து வரும் 2017-ம்ஆண்டுக்கு 22 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 6 அரசு விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன.மத்திய அரசின் செலாவணி முறிச்சட்டத்தின் படி, ஆண்டு தோறும் அரசு விடுமுறை தினங்களை, தமிழக அரசு அறிவிக்கிறது. 
இதன்படி இந்தாண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பான அரசாணை திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் சிஎச். வித்யாசாகர் ராவின் ஒப்புதல் பெற்று, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.இதில் கூறியிருப்பதாவது: செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் வரும் 2017-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதன் படி, ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு நீங்கலாக, அனைத்து சனிக்கிழமைக்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பாது விடுமுறை தினங்களில்அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களும் மூடப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரும் 2017-ம் ஆண்டை பொறுத்தவரை, மேதினம் உள்ளிட்ட 6 விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன. இதன் மூலம், சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறை 6 முறை வருகிறது.தமிழ்ப்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. அடுத்தடுத்த நாட்களும் விடுமுறை என்பதால், தொடர் விடுமுறை வருகிறது. இது தவிர, ஜனவரி மாதம் 14,15,16, செப்டம்பரில்29,30 மற்றும் அக்டோபர் 1,2 தேதிகள் தொடர் விடுமுறையாக வருகின்றன. இவை தவிர, 8 அரசு விடுமுறைகள், வழக்கமான விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

14/11/16

CRC level science exhibition topics :

1. உடல்நலம்
2. தொழில்துறை
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. நிலையான சுற்றுச்சூழலுக்கான புதுப்பிக்கத் தக்க வளங்களைக் கண்டுபிடித்தல்
5. உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள்
6.அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள்
Primary level - 2 models or 2 projects
Upper primary level -2 models or 2 projects.
CRC level prizes.
1st prize - 400
2 nd prize- 300
3 rd prize - 200
Best school performance - 500 

அச்சப்பட தேவையில்லை : அருண் ஜெட்லி விளக்கம்:

அச்சப்பட தேவையில்லை : அருண் ஜெட்லி விளக்கம்:
தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கத்தை, பொதுமக்கள் தைரியமாக வங்கிகளில் வரவு வைக்கலாம். 2.5 லட்சம் வரையிலான தொகையை, 'டிபாசிட்' செய்யும் நபர்கள், வருமான வரி குறித்து அச்சப்படத் தேவையில்லை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி கூறியதாவது: நாட்டில், கறுப்பு பண பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவே, பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். மக்கள், தங்கள் கைவசம் உள்ள அனைத்து நோட்டுகளையும், வங்கிக் கணக்கில் செலுத்தி வரவு வைத்துக் கொள்ளலாம். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மட்டுமே இந்த அறிவிப்பால் பீதி அடைய வேண்டும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நேர்மையாக பணம் சம்பாதிப்போருக்கு, இது வரப்பிரசாதமே. தவிர, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான டிபாசிட்டுகள் குறித்து, வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்படாது. அதுகுறித்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தவும் மாட்டார்கள். உங்கள் பணம் உங்களுடையதே; பொதுமக்கள் அச்சப்பட தேவைஇல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

லைசென்ஸ்' எடுத்து செல்ல தேவையில்லை : 'ஆதார்' போதும்; வருகிறது புதிய நடைமுறை:

ஆதார்' இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்ல மறந்தாலும், போலீசில் சிக்கி விடுவோமா என்ற பயமின்றி, வாகனத்தில் செல்லலாம். புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. வாகனத்தில் செல்வோர், பல நேரங்களில், ஓட்டுனர் உரிமத்தை எடுத்துச் செல்ல மறந்து விடுவதுண்டு. இவர்கள், யாரேனும் சிக்குவரா என, போலீசார் வலை விரித்து காத்திருக்கும் நிலையில், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து, உரிய இடத்தை சென்றடைவது பெரிய விஷயம். அது போன்றவர்களுக்கு, ஆறுதல் தரும் வகையில், மத்திய அரசு, புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. புதிய திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகங்கள் இணைந்து வடிவமைத்து உள்ளன. 'டிஜி லாக்கர்' என்ற அத்திட்டத்தில், கோடிக் கணக்கான ஆவணங்களை, இணையத்தில் பொதுமக்கள் சேமித்து வைக்க முடியும். 

அதில், முதற்கட்டமாக, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன சான்றுகளை சேமித்து வைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பயன் பெற, ஆதார் அட்டை அவசியம். ஆதார் எண்ணை, மொபைல் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் மையங்களில், அதை செய்யலாம். இணைக்கப்பட்ட இந்த விபரங்கள், 'டிஜி லாக்கர்' உடன் ஒருங்கிணைக்கப்படும். பிரத்யேக, 'மொபைல் ஆப்'பை, போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் வழியாக, 'டிஜி லாக்கர்' உள்ளே நுழைந்து, வாகனம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அதன்பின், உரிமத்தை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றாலும் பரவாயில்லை. போக்குவரத்து போலீசார் பிடித்தால், மொபைல் போன் வழியாக அந்த, 'ஆப்'பில் உள்ள விபரங்களை, அவருக்கு காட்டலாம். அதை சரி பார்க்க, போலீசாருக்கு, பிரத்யேக, 'ஆப்' தயாரிக்கப்பட்டு உள்ளது. அதை வைத்து அவர் சரிபார்ப்பர். எனவே, ஓட்டுனர் உரிமத்தை மறந்தாலும், இனி, கவலையின்றி பயணத்தை தொடரலாம். 
- நமது நிருபர் -

3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!' : நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை

3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!' : நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்களை அனுபவித்து வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ''மூன்று வாரங்களில் பிரச்னைகள் அனைத்தும் சரியாகி விடும். இந்த திட்டத்தால் நாம் அடையப்போகும் லாபங்கள் ஏராளம்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:வங்கிகளில் பணம் மாற்றும் பொதுமக்களுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் தரப்படுவதால், ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம். இருப்பினும், அரசின் இத்திட்டம் நீண்ட காலப் பயன்களை அளிக்க வல்லது. எனவே, பொதுமக்கள் பொறுமையாக இருந்து அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். நாடு முழுவதும் உள்ள, இரண்டு லட்சம், ஏ.டி.எம்., இயந்திரங்கள் வழக்கமான முறையில் செயல்பட, இன்னும், மூன்று வாரங்கள் ஆகலாம். மாற்றங்கள்புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பவும், தற்போது புழக்கத்தில் உள்ள, மற்ற நோட்டுகளுக்கு ஏற்பவும், ஒவ்வொரு ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இருந்ததால், ஏ.டி.எம்.,களை முன்கூட்டியே மாற்றியமைக்க முடியாமல் போனது. இவற்றை மாற்றியமைக்க, குறைந்தபட்சம், மூன்றுவாரங்களாவது தேவை. அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டு கள் போதிய அளவுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பிரம்மாண்டமான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை, அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க, வாரக் கடைசி நாட்களிலும் வங்கிகளை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், வங்கிகளுக்கும் புதிய நோட்டுகள் முழுமையாக சென்றடைந்த பின், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும். இதனால், நம் பொருளாதாரத்தில் பெரியளவில் மாற்றம் இருக்கும். அரசியல் கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்.சமூக வலைத்தளங்கள் சமூக வலைத் தளங்களி லும், இதுகுறித்து வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
அரசு கண்காணிப்பு : 'ஜன்தன்' திட்டம் மூலம் துவக்கப்பட்ட வங்கி கணக்குகளில், திடீரென ஏராளமான பணம், 'டிபாசிட்' செய்யப்படுவது குறித்து அரசு கண்காணித்து வருகிறது.
அருண் ஜெட்லி, நிதியமைச்சர் 

தபால் நிலையங்களில் ரூ.435 கோடி பழைய நோட்டுகள் மாற்றம்:

மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தபால் நிலையங்களில், இரண்டு நாட்களில், 435 கோடி ரூபாய் அளவிற்கு, பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்பட்டுள்ளன.நாட்டில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், வங்கிகள் முடங்கி, செலவு செய்ய பணம் இல்லாமல், மக்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள், பழைய ரூபாய் நோட்டிற்கு பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றி தருகின்றன. மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள, தபால் நிலையங்களில், மட்டும், கடந்த இரண்டு நாட்களில், 435 கோடி ரூபாய் அளவிற்கு, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள், பொதுமக்களுக்கு மாற்றி தரப்பட்டுள்ளன.

டிக்கெட் ரத்து: பணம் வாபஸ் இல்லை:

சில்லரை தட்டுப்பாடு காரணமாக, ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு, பணம் திருப்பி கொடுப்பதை, ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. ரயில்வே முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யும்போது, அதற்குரிய பணத்தை டிக்கெட் கவுன்டர்களில், நேரடியாக பெற முடியும். இந்நிலையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என, அறிவிக்கப்பட்டதால், ரயில்வே கவுன்டர்களில், 100, 50 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால், டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு, ரயில்வே அலுவலர்களால், உடனடியாக, பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை; உடனடியாக பணத்தை திருப்பி கொடுப்பதை, ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
அதற்கு பதிலாக, ரசீது வழங்கப்படுகிறது.அதை பயன்படுத்தி, பயணிகள், பின், பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதேசமயம், டிக்கெட் ரத்து செய்யும்போது, பயணிகளுக்கு தர வேண்டிய தொகை, 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், அதை, பயணிகளின் வங்கி கணக்கில், ரயில்வே நிர்வாகம் நேரடியாக செலுத்தி வருகிறது.

வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு !

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4,122       http://madurainanpan.blogspot.in/  

புதுசா வர்ற ரூபாய் நோட்கள்ல காந்தி படத்துக்கு இணையாக,எதற்காக மங்கள்யான் விண்கலத்தின் படத்தை வைக்க வேண்டும்?அப்படி என்ன சாதனை செஞ்சது மங்கள்யான்?


புதுசா வர்ற ரூபாய் நோட்கள்ல காந்தி படத்துக்கு இணையாக,எதற்காக மங்கள்யான் விண்கலத்தின் படத்தை வைக்க வேண்டும்?அப்படி என்ன சாதனை செஞ்சது மங்கள்யான்?
சுருக்கமாக நான்கு காரணங்கள்.
1.Escape Velocity-பூமியின் புவியீர்ப்பு விசையை சமாளித்து,பூமியின் வளிமண்டலப் பரப்பை விட்டு வெளியேற ஒரு பொருள் பயணிக்க வேண்டிய வேகத்தின் அளவு.தமிழில் விடுபடு திசைவேகம்.இது 11.2 கி.மீ/செகன்ட் என இருக்க வேண்டும்.இந்த அளவை விட அதிகமான வேகத்தில் ஒரு பொருள் பூமியை விட்டு வெளியே பயணித்தால் அது காற்றின் உராய்வினால் தீப்பற்றி எரிந்து விடும்.குறைவான வேகமாக இருந்தால் பூமியைத் தாண்டவே முடியாது.பூவியீர்ப்பு விசை கீழே பிடித்து இழுத்துவிடும்.இறந்த பின் எஸ்கேப் வேலிசிட்டி வேகத்தை அடைய முடியாத ஆன்மாக்கள் தான் பூமியை விட்டு வெளியேற முடியாமல் பேய்-பிசாசுகளாக முருங்கை மரத்திலோ-புளியமரத்திலோ திரியும்ன்னு கூட சொல்லலாம்.
ஆனால் மங்களயான் எஸ்கேப் வேலாசிட்டி வேகத்தில் அனாயசமாக கடந்து சென்றது.இது வரை அனுப்பப்பட்ட செயற்கைகோள்களும்,ராக்கெட்களும் இதைக் கடந்து தானே சென்றன? 

ஆம்.இதுவரையில் அனுப்பப்பட்ட அத்தனை செயற்கைகோள்கள் மற்றும ராக்கெட்களின் எடைகள் எல்லாம் பல நூறு கிலோக்களுக்கு மேல் இருந்தன.ஆனால் மங்கள்யானின் எடை வெறும் 15 கிலோ மட்டுமே.இவ்வளவு எடைக்குறைவான ஒன்றை பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி அனுப்புவது சாதாரண வேலை அல்ல.திறமையான டிசைன் வேண்டும்.உச்சபட்ச தொழில் நுட்பம் வேண்டும்.நம் விஞ்ஞானிகள் இதைச் செய்தார்கள்.

2.செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பதென்றால் ஒரு ராக்கெட்டை எடுத்து வான்வெளியில் செவ்வாய் கிரகம்  இருக்கும் திசையைப் பார்த்து அனுப்புவதல்ல.அதற்கு ஏகப்பட்ட கணக்கீடுகளைச் செய்ய வேண்டும்.

சூரியக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும்-ஒவ்வொரு வேகத்தில்,ஒரு நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும்.செவ்வாயின் வேகம் வேறு.பூமியின் வேகம் வேறு.நீள்வட்டப்பாதையிலேயே ஒவ்வொரு கோளும் சுற்றுவதால் ஒரு ஒவ்வொரு கோளும்-தன் பக்கத்திலுள்ள கோளுக்கு-ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மிக அருகே வரும்.அந்தப் புள்ளியை Perigee என்பார்கள்.அப்படி செவ்வாய்க்கும்-பூமிக்குமிடையிலான அந்த Perigee க்கணக்கிட்டு,அந்தப் புள்ளியில் ராக்கெட்டை அனுப்ப வேண்டும்.இல்லாவிட்டால் செவ்வாயின் தூரம் கூடும்.செலவும் எகிறும்.அதோடு செவ்வாயின் சுற்று வேகத்தில் கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.

நம் ஆனால் நம் விஞ்ஞானிகள் Perigee யை துல்லியமாகக் கணக்கிட்டு மங்கள்யானை கொண்டு சென்றார்கள்.செவ்வாயின் சுற்று வேகத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யானைச் சுற்றச் செய்தார்கள்.

3.அப்படி செவ்வாயைச் சுற்றச் செய்யும் போது-மங்கள்யானின் கிரையோஜனிக் என்ஜின்களை பூமியிலிருந்து தான் இயக்க வேண்டும்.இங்கே தான் ஒரு சவால்.பூமியில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் மங்கள்யானைச் சென்றடைய 12 நிமிடங்களாகும்.மங்கள்யானிடமிருந்து பதில்கள் வரவும் இதே 12 நிமிடங்கள் தேவைப்படும்.ஆக அடுத்த 12 நிமிடங்கள் கழித்து மங்கள்யான் எப்படி இயங்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும்.ஒரு கட்டளையைப் பூமியில் இருந்து அனுப்பினால்,அது 12 நிமிடங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்று இந்தக் கணத்திலேயே தீர்மானிக்க வேண்டும். அது எவ்வளவு சவாலான பணி!!அதையும் நம் விஞ்ஞானிகள் செய்து முடித்தார்கள்.

4.இந்த துல்லியப் பணிகளை எல்லாம் நம் விஞ்ஞானிகள் தங்களது எத்தனையாவது முயற்சிகளில் செய்தார்கள் தெரியுமா? 

முதல் முயற்சியில்...

ஆம் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தார்கள்.

ஆனானப்பட்ட அமெரிக்காவே செவ்வாய் பயணத்தை 51 முறைகள் முயற்சி செய்து அதில் 21 முறைகளே வெற்றியடைந்தது.இந்தியா தன் முதல் முயற்சியிலேயே-சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து-அடித்த அந்த பந்து ஸ்டேடியத்தைத் தாண்டியது.ஆம்.அப்படிப்பட்ட நெத்தியடியாக அமைந்தது,"மங்கள்யானின்" பயணம்.

5.இவற்றிக்கெல்லாம் மேலாக இருந்தது மங்கள்யான் திட்டத்மிற்கான செலவு தான்.அமெரிக்கா செவ்வாய் பயணத்திற்குச் செய்த செலவை வைத்து இந்தியாவின் பொது பட்ஜெட்டையே முடித்து விடலாம்.ஆனால் மங்கள்யான் திட்ட செலவு எவ்வளவு தெரியுமா? 

வெறும் 454 கோடிகளில்!!!!

இந்தியா என்றாலே பாம்புகளும்,கொசுக்களும் நிறைந்த நாடென்றும்,அழுக்கான,சாலை விதிகளைப் பின்பற்றாத நாடென்றும்,You can piss in public,But you can't kiss in public in India-என்றும் எள்ளி நகையாடியவர்களின் நெற்றியில் 4 இஞ்ச் ஆணியை இறக்கியது "மங்கள்யானின்" வெற்றி.

அமெரிக்கா,ரஷ்யா,இங்கிலாந்து,ஐரோப்பா என உலகத்தின் வல்லரசு நாடுகளின் மத்தியில் இந்தியப் பொறியாளர்களின் வல்லமையை உயரத்தில் தூக்கி வைத்தது மங்கள்யான்.அதனால் தான் மங்கள்யானுக்கு ரூபாய் நோட்டில் இடம்.

மங்கள்யான் நம் திறமையின் வெளிப்பாடு

கறுப்பு பண ஒழிப்பில் உயிரையும் தியாகம் செய்ய தயார்; மோடி கண்ணீர் பேச்சு:

பானாஜி : நான் பிரதமர் ஆவதற்காக பிறக்கவில்லை. நான் எதையும் மறைக்கவும் இல்லை, நாட்டை இருளில் தள்ளவும் இல்லை என கோவா விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இது பற்றி நான் கவலைப்படவில்லை. உயிரையும் தியாகம் செய்ய தயார் என மோடி கண்ணீர் விழ உணர்ச்சி பொங்கிட பேசினார். கோவா விழாவில் ரூ.500, 1000 வாபஸ் பெறப்பட்டது குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக பேசியதாவது: கறுப்பு பணத்திற்கு எதிராக போராடுவேன் என்ற எனது வாக்குறுதியை காத்து வருகிறேன். காங்., அரசு ஊழலுக்கு எதிராக போராடவில்லை. அதனால் தான் இப்போது நான் அதை செய்கிறேன். நான் எதையும் மறைக்கவும் இல்லை, நாட்டில் இருளில் தள்ளவும் இல்லை.
கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கை இது. ஆனால் சிலர் இதை புரிந்து கொள்ளவில்லை. இந்திய பணம் ஏதாவது கொள்ளயைடிக்கப்பட்டிருந்தால் அதை இந்தியர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதே எங்களின் நோக்கம். அதனை கண்டறிவதும் எங்களின் கடமை.

நவம்பர் 8 ம் தேதி நிறைய மக்கள் இந்தியாவில் அமைதியாக தூங்கினர். சில இடங்களில் சிலர் மட்டுமே இப்போது வரை உறக்கமின்றி அலைகின்றனர். கறுப்பு பணத்தால் நேர்மையான மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பதற்கே இந்த முக்கிய நடவடிக்கை.மக்கள் இந்த அரசை தேர்வு செய்துள்ளனர். அவர்கள் எங்களின் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக 2014 ல் நிறைய மக்கள் ஓட்டளித்தனர். நிறைய எம்.பி.,க்கள் நகை வாங்குவதற்கு பான் எண் அவசியம் என்ற கட்டுப்பாட்டை நீக்குங்கள் என என்னிடம் கூறினர். இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.பிரதமர் நாற்காலியில் அமருவதற்காக நான் பிறக்கவில்லை. எனது குடும்பம், வீடு என அனைத்தையம் நாட்டிற்கான துறந்தேன்.

பினாமி பெயர்களில் இருக்கும் சொத்துக்கள் மீத நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய நடவடிக்கை இது. நீங்கள் கேட்கலாம் கறுப்பு பணத்திற்கு மீட்பு என்ன ஆயிற்று என்று. நான் செய்ய மாட்டேன் என எப்படி சொல்ல முடியும்.

போராட்டம் இப்போது தான் துவங்கி உள்ளது. இந்தியாவில் கறுப்பு பணம், ஊழலால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. 70 ஆண்டுகால நோய்: என்னை எல்லோரும் எதிர்ப்பார்கள் என எனக்கு தெரியும். ஏனெனில் 70 ஆண்டுகளாக கொள்ளையடித்தே வாழ்ந்து விட்டனர்.

இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் நான் எதற்கும் தயாராக இருக்கின்றேன். 70 ஆண்டுகளாக இருந்த கறுப்பு பண நோய் 17 மாதத்தில் தீர்ந்து விட்டது. மக்கள் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.

இதனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். இன்று 2 ஜி ஊழல் புரிந்தவர்கள் எல்லாம் உங்களை மோற்ற உங்களுடன் ஏ.டி.எம்.,மில் வரிசையில் நிற்கின்றனர். மக்களுக்கு சிரமத்தை தரும் என்று தெரியும். இருந்தும் இது இக்கட்டான தருணம்.

எனவே மக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்து பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை தொடரும். நாட்டின் வளர்ச்சி வேகம் விரைவில் இருக்கும். நான் பிரதமர் நாற்காலிக்காக வரவில்லை.

இந்த நாட்டிற்காக வந்துள்ளேன். இந்த நாட்டிற்காக எனது குடும்பத்தினரை இழந்தேன். டிச. 30 க்கு பின் இன்னும் அதிரடி காத்திருக்கிறது.

ஏடிஎம்.,களில் வரிசையில் நிற்கும் மக்கள் மத்திய அரசிற்கு எதிரான நிலைப்பாட்டிற்காக நிற்கவில்லை. நாட்டை காக்க வேண்டும் என்பதற்காக, கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நிற்கிறார்கள். கறுப்பு பணம் பதுக்குபவர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மக்கள் ஆதரிக்கிறார்கள்.

கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் மிகப் பெரிய பணிக்காகவே ரகசியம் காக்கப்பட்டது. நேர்மையான மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றோம். கறுப்பு பணத்தை ஒழிக்கும் போராட்டத்தில் என்னுடன் இணைய வாருங்கள்.50 தினங்களுக்கு ஒத்துழைப்பு: இந்த நடவடிக்கையால் பணத்தை இழந்து, பாதிக்கப்பட்டவர்களே வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அவர்கள் எனக்கு எதிராக நடவடிக்கைகளை செய்வார்கள், என்னை அழிக்க நினைக்கலாம்.

எதற்கும் நான் தயாராக உள்ளேன். நாட்டில் முதல் முறையாக ரூ.4.76 ஆயிரம் கோடி வங்கிகளில் டிபாசிட் ஆகி உள்ளது. இன்னும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் அத்தனையும் வெளியே வரும். கள்ள சந்தையில் நடக்கும் ஊழல்களை இத்துடன் இணைக்க வேண்டாம்.

அதுற்கான நடவடிக்கை விரைவில் துவங்கப்படும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதற்காக திட்டம் தயாராக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதற்காக திட்டம் தயாராக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மக்களாகிய நீங்கள் இன்னும் ஒரு 50 தினங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்என பேசினா

புது 2000 ரூபாய் நோட்டில் போலியை கண்டுபிடிப்பது எப்படி? 2000 ரூபாய் தாளின் அம்சங்கள் யாவை?


நாட்டிற்குள்ளேயேசுற்றித் திரியும் குள்ள நரிக் கூட்டம்கள்ள நோட்டு அடித்து இந்தியப்பொருளாதாரத்தை சீர்குழைப்பதற்கென்றே இருக்கிறது. அந்த ஈனர்களின் சூழ்ச்சியில்சிக்காமல் இருக்கவே இந்த பதிவு:
1. வெளிச்சத்தில்வைத்துப்பார்த்தால் 2000 என்று அச்சு செய்யப்
பட்டிருக்கும்.
2. உள்ளுறைப்படுமமாக 2000 என்று பொறிக்கப் பட்டிருக்கும்.
3. இந்தியமொழியில் தெளிவாக 2000 என்று பொறிக்கப் பட்டிருக்கும்.
4. காந்தியின்புகைப்படம் நடுவில் இருக்கும்.
5. காந்திக்குஇடது புரம் “RBI 2000" என்று நுண்ணிய எழுத்துக்களால்பொறிக்கப் பட்டிருக்கும்.
6. நிறம்மாறும் பாதுகாப்பு இளை (பச்சையில் இருந்துநீலமாக) ரூபாயின் நடுவில் கோர்க்கப்பட்டிருக்கும். அந்த பாதுகாப்புஇளையில் Bharath(hindi) RBI and 2000 என்று நுண்ணிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். நோட்டை மேலும் கீழுமாகஅசைக்கும் போது பாதுகாப்பி இளைபச்சையில் இருந்து நீலமாக மாறும்.
7. RBIயின்சத்திய பிரமானமும் RBI ஆளுனரின் கையொப்பமும் இடம் பெற்றிருக்கும்.
8. இந்தியரூபாயின் குறியீடுடன் சேர்ந்து 2000 என்று பொறிக்கப் பட்டிருக்கும்இதுவும் நிறம் மாறுபவையாக இருக்கும்(பச்சையில் இருந்து நீலமாக).
9. அசோகச்சின்ன குறியீடு, காந்தியின் தனியுருவப்படம் மற்றும் 2000 நீரோட்டக் குறியாக இடம் பெற்றிருக்கும்.
10. நோட்டின்எண் இடப் பக்கதில் இருந்துவலப்பக்கமாக சிறிதாக ஆரம்பித்து பெரிதாகிக்கொண்டே போகும்.
11. அசோகச்சின்னமும், காந்தியின் தனி உருவப்படமும் உருசெதுக்கலாகஅமைந்திருக்கும் அதாவது மிகவும் நுண்ணியஎழுத்தாக....
12. செவ்வகத்தில்2000 என்று அச்சிடப் பட்டிருக்கும்.
13. 7 கோணவடிவு கோடுகள் இடம் பெற்றிருக்கும்.
14. இடதுபக்கம் எந்த வருடம்(2016) இந்தநோட்டு அச்சிடப்பட்டது என்ற விபரம் இருக்கும்.
15. தூய்மைஇந்தியா குறியீடு அமையப் பெற்றிருக்கும்.
16. இந்தியஅரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இடம் பெற்றிருக்கும்.
17. மங்கல்யான்புகைப் படம் பொறிக்கப் பட்டிருக்கும்.

TNPSC GROUP IV EXPECTED CUT OFF MARKS-EXAM DATE 06.11.2016:

tnpsc Gruop IV cutoff ( குருப் 4 கட்ஆப் துல்லியம்)

நண்பர்களுக்கு வணக்கம் தற்போது நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வரியத்தின் மூலம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான கட்ஆப் நிலவரம் மிக துல்லியமாக ஆரயபட்டதன் மூலம் இந்த தகவல் வெளியிடப்படுகிறது.
தற்போது தேர்ந்தெடுக்கவுள்ள பணியிடங்கள்
 VAO -800
 Group 2A-1500 மேல்
 Gruop 2(interview)=2000க்குள்
chennai high court = 350
Gruop 1= 100 க்குள் (பழைய அனைத்து பணியிடங்கள்)
EB = 2000 க்கும் மேல்
ஆய்வக உதவியளார் மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வு(நடைபெற உள்ளது மற்றும் பழைய பணியிடம்) , SSC. Bank etc..... இவர்கள் Gruop 4 வேலையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு குறைவு.
மேலும் ஏற்கனவே வேலை பார்க்கும் அரசு ஊழியர் (மறக்காமல் இருக்க எழுதுபவர்கள்) மற்றும் சென்றால் Gruop 2 க்கு மேல் தான் செல்வேன் (IAS உட்பட)   பலர் இந்த குரூப் 4 தேர்வில் எழுதியுள்ளனர் இவர்களை எல்லாம் பார்த்தால் அனைவரும் 170 மேல் தான் கேள்வி சரியாக எழுதியுள்ளார்கள்

இவர்களில் TNPSC VAO மற்றும் Gruop 2A போன்ற பணியிடங்களுக்கு மிக மிக விரைவில் பணியிடங்கள் நிரப்பபட உள்ளது எனவே இதனால் மட்டுமே 2400 பணியிடங்கள் + EB (2000) குரூப் 4 ரிசல்ட் வருவதற்குள் நிரப்படும் எனவே கட் ஆப் மேல் கூறியவற்றை விட குறைவாக வர வாய்ப்பு உள்ளது இரண்டாவது கவுன்சிலிங் நடைபெற்றால் இட ஒதுக்கீட்டு பிரிவினர்களுக்கு 165 கேள்வி வரை வர வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. நான் ஆதரங்களுடன் கூறி உள்ளேன் ஆனால் பணியிடங்கள் தோரயமானது கூடலாம் குறையலாம் இவை ஒரு சாம்பிள் தான் எனவே பலர் குழப்பும் குழப்பங்களை விட்டு கண்டிப்பாக கிடைக்கும் எனும் மனநிலையுடன் அடுத்த தேர்வுகளுக்கு படியுங்கள்

170க்கு மேல் பெற்றவர்கள் 5000 ரேங்க்குள் வருவார்கள் அவர்களை முதல் சாண்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கலாம் 2500 பணியிடம் உள்ளது இதில் தட்டச்சர் 1700 இவர்களும் ஓவர் ஆல் ரேங்க்குள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது எனவே 7000 ரேங் வரை அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இங்கு அளிக்கப்படும் கட்ஆப் ஒரு தோரயமானதே இவை மாறுதலுக்கு உட்பட்டது

இந்த கட்ஆப்விட குறையலாம் அதிகரிக்கலாம் இவை மாறுதலுக்கு உட்பட்டது இதற்கு இந்த வலைதளம் பொறுப்பல்ல
நன்றி


13/11/16

இல்லந்தோறும் இணையம்' விண்ணப்பிக்க அவகாசம்

இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், மார்ச், 1 முதல், மாவட்ட தலைநகரங்களில், அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை வழங்கி வருகிறது. 
இரண்டாம் கட்டமாக, அனைத்து நகராட்சி பகுதிகளுக்கும், திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளது. இதில் சேர்ந்து, இணைய சேவை வழங்க விரும்புவோர், நிறுவனத்தின் இணைய தளத்தில் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்; வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இதுவரை, 7,317 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பலர், கால அவகாசத்தை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும்,www.tactv.inஎன்ற இணையதளத்தில், 14ம்தேதி முதல் தெரிந்து கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருந்தால், 1800 425 2911 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

TN திறந்த நிலை பல்கலையில் 24ல் பட்டமளிப்பு விழா.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24ல் நடக்கிறது.இது தொடர்பாக, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24, காலை, 11:00 மணிக்கு, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. 
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், டாக்டர் சாந்தா பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார்.

விழாவில், 3,397 முதுநிலை, 7,520 இளநிலை, 2,719 டிப்ளமோ மற்றும், 152 முதுநிலை டிப்ளமோ மாணவர்கள் என, 13 ஆயிரத்து, 788 பேர், பட்டம் மற்றும் சான்றிதழ் பெறுகின்றனர். பல்கலை அளவில் முதலிடம் பெற்ற, 142 பேர் தங்கப் பதக்கமும், 256 பேர் இரண்டு, மூன்றாம் இடம் பெற்றதற்கான சான்றிதழும் பெறுகின்றனர். இளநிலை மாணவி முத்துவுக்கு, கனடா காமன்வெல்த் கல்வி கழகத்தின், பாராட்டு சான்றிதழும், 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கணக்குக்கு இனி இல்லை பிணக்கு!:அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்.

பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு மதிப்புண்டு என, உலகத்திற்கு உரக்க சொன்னவர்கள் தான் நம் முன்னோர்கள்.ஆனால் இன்று, சிறுவண்டுகளுக்கு சின்ன வாய்ப்பாட்டில் கூட, எக்கச்சக்க திணறல். 3*2 என்றால் கூட, விரல் விட்டு எண்ணி, பதில் சொல்றாங்க.இப்படியிருக்கும் நிலையில், 'கணக்கு பார்முலா வர்றதுக்கு, ஸ்பெஷல் மில்க் ரிடிங்ஸ் எல்லாம் குடிக்கதேவையில்ல. 
எளிய முறையில், அடிப்படை தகவல்களை சொல்லி கொடுத்தாலே போதும். சதம் அடிப்பது எளிது' என, அசால்ட்டாய் சொல்கிறார்,கோவை தீத்திப்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ரகோத்தமன். வகுப்பறைக்குள் நுழைந்ததும், தலையை குனிந்தபடி, ஏதோ போர்டுக்குள் மூழ்கியிருந்தனர் மாணவர்கள். கூட்டல், கழித்தலில், எவ்வளவு பெரிய எண்களை கூறினாலும், கண் இமைக்கும் நேரத்தில், கோரஷாக பதில் வந்தது. ஆச்சரியத்துடன் பார்த்த போது, கணித ஆசிரியர் ரகோத்தம்மன் கூறியதாவது:தொடக்கப் பள்ளிகளில் இருந்தே, கணிதம் சார்ந்த புரிதல்ஏற்படுத்துவது அவசியம். ஏனெனில், கணிதம் இல்லாமல், அன்றாட பிழைப்பை நகர்த்துவது கடினம். படிக்காத பாட்டிகூட, கூட்டல், கழித்தல் தெரிந்து வைத்திருப்பார். ஏனெனில், கணிதம் வாழ்க்கை கல்விக்கு தொடர்புடையது.இதை எளிமையாக, மாணவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லி கொடுக்க, 'பெக் மேட்' என்ற, செயல்வழி கணித போர்ட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதைப் பயன்படுத்தி, ஒற்றை எண், இரட்டை எண் வேறுபாடு, பகு எண், பகா எண், காரணிகள், மீ.பொ.வ., - மீ.சி.ம., என, பல்வேறு அடிப்படை விசயங்களை அறியலாம்.

 பத்து நாணயங்கள் கொடுத்து, வேறுபாடுகளை அறிய சொன்னால், எளிதில் விளங்கிவிடும். இதேபோல், கூட்டல், கழித்தலை போர்டிலே செய்யலாம்.வட்டம், சதுரம், செவ்வகம் என, வடிவங்கள், அதன் தன்மை, அளவுகளை சொல்லி கொடுக்க லாம். என்னதான் கரும்பலகையில்வரைந்து சொல்லி கொடுத்தாலும், ரப்பர் பேண்டு கொண்டு, மாணவர்களே போர்ட்டில், வடிவங்கள் உருவாக்கும் போது, நிறைய கற்றுக் கொள்வர்.நான்கு புறமும் சமமாக இருந்தால் சதுரம் என, நீளமாக நீட்டி முழக்கி, சொல்லி கொடுப்பதற்கு பதில், செய்ய பழக்கினால், மனதில் பதிந்துவிடும்.

இதுமட்டுமல்ல, பத்தாம் வகுப்பு வரை,தேற்றங்கள், வரையறை என, கணிதம் சார்ந்த அனைத்து பார்முலாக்களுக்கும், கற்பித்தல்கருவிகள் உள்ளன.மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், கணித கற்பித்தல் உபகரணங்களை, அனைவருக்கும்இடைநிலை கல்வி திட்டம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதால், மற்ற பள்ளிகளுக்கும் வளங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

HSE : OCTOBER 2016 EXAM ANSWER SCRIPT SCAN COPY DOWNLOAD INSTRUCTIONS














சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு டிசம்பர் 3–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை நடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டு தோறும் நடத்துகிறது.
இந்த வருடம் 1,079 பணிகளுக்கு முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு முடிவு கடந்த செப்டம்பர் மாதம் 16–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 9 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் மட்டுமே எழுதினார்கள். இந்த தேர்வில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வை எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர் ) 3–ந்தேதி தொடங்குகிறது. அந்த தேர்வு டிசம்பர் 9–ந்தேதி வரை நடக்கிறது. ஹால் டிக்கெட் இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்கு வர்த்தக பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிப்பதா?- உயர் நீதிமன்றம் கண்டனம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மாநில அரசு சுகாதாரம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. கழிப்பறை இருந்தால் அது பயன்பாட்டில் இல்லை. மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளை பூட்டி வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகி ன்றனர்.

அரசு பள்ளிகளில்கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்கு மத்திய அரசு 60 சதவீத நிதி வழங்குகிறது. மாநில அரசு 40 சதவீத நிதி வழங்காவிட்டால் எந்தப் பணியும் நடைபெறாது. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதாவது செய்தால் அரசை பாராட்டலாம். எதுவும் செய்யாமல் இருந்தால் எப்படி பாராட்டுவது?துப்புரவுப் பணியாளர்களைப் பெற்றோர்-ஆசிரியர்கள் கழகம் நியமனம் செய்கின்றனர் என அரசு சொல்கிறது. பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.750 முதல் ரூ.1500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்திற்கு இந்த காலத்தில் யார் வேலைக்கு வருவர்.மின்சார கட்டணம் செலுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1500வழங்குவதாக அரசு கூறுகிறது.

கட்டணம் அதிகமாக வந்தால் தலைமை ஆசிரியர் சரி செய்து கொள்வார் என்கின்றனர். தலைமை ஆசிரியர் பணத்துக்கு எங்கு போவார். ஒவ்வொரு பள்ளிக்கும் இரு மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வருகிறது. அரசு பள்ளிகளுக்கு வர்த்தகப் பிரிவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பள்ளி என்ன தொழிற்சாலையா? பள்ளிகளுக்கு வீட்டுக்கான மின் கட்டணம் நிர்ணயம் செய்தால் என்ன ஆகி விடும்.வழக்கறிஞர்கள் குழு பள்ளிக ளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி நாப்கின் வழங்கும் இயந்திரம் செயல்படவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் பதில் மனுவில் நாப்கின் இயந்திரம் செயல்படுகிறது எனக் கூறப் பட்டுள்ளது. இது நம்பும்படியாக இருக்கிறதா? என்றனர்.

அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, பள்ளிகளில் படிப்படியாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நாப்கின் இயந் திரத்தை பயன்படுத்த மாண விகள் தயங்குகின்றனர்.இதனால் அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து குறைபாடுகளும் களையப்பட வேண்டும் என்றனர். பின்னர் விசாரணையை நவ.18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.