யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/11/16

Directorate of Government Examinations ESLC - Jan 2017 - Private Candidates Time Table

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு - புதிய விதிமுறைகள் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்....

Students Adhaar format details....

வங்கிகளில் ரூ. 500, 1000 இனி மாற்ற முடியாது. ஆனால் DEPOSIT செய்யலாம்.. டிச. 15 வரை மின், குடிநீர் கட்டணத்திற்கு செலுத்தலாம்

டெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மின்கட்டணம்உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரைபயன்படுத்த மத்திய
அரசு அனுமதிஅளி்த்துள்ளது.

ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்துபொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்துவருகின்றனர். எதிர்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர். இதனால்நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியுள்ளது. மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வங்கிக் கவுண்டர்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இன்றுநள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் எனமத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்துமத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

குடிநீர்க்கட்டணம், மின்கட்டணம் செலுத்த பழைய ரூபாய்நோட்டுக்களை டிசம்பர் 15 வரை பயன்படுத்தலாம்

500, 1000 ரூபாய்நோட்டுக்களை இன்று நள்ளிரவுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்

நள்ளிரவுக்குமேல் ரூபாய் நோட்டுக்களை மாற்றமுடியாது

நள்ளிரவுக்குமேல் பழைய ரூபாய் நோட்டுக்களைமாற்றுவது நிறுத்தப்படும்

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களை பழையரூபாய் நோட்டுக்கள் மூலம் பெறலாம்

500, 1000 ரூபாய்நோட்டுக்களை வங்கிக் கணக்கில் டெபாசிட்செய்யத் தடை இல்லை

மத்திய, மாநில, அரசு பள்ளி, கல்லூரிகளில்ரூ2000 வரை பழைய 500 ரூபாய்நோட்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்

பழைய500 ரூபாய் மூலம் ப்ரீபெய்டு மொபைல்களில்ரூ500 வரை ரீசார்ச் செய்யலாம்

வங்கிகளில்பாஸ்போர்ட்டை காண்பித்து வெளிநாட்டினர் பணம் பெறலாம்

வெளிநாட்டினர்தங்கள் நாட்டு பணத்தை வாரத்திற்குரூ5000 வரை மாற்றிக் கொள்ளலாம்

பழைய நோட்டுகளை பயன்படுத்தி டிச.3 முதல் டிச15 சுங்க கட்டணம் செலுத்தலாம்


கூட்டுறவுஅங்காடிகளில் ஒரு முறை மட்டும்ரூ5000 வரை பொருட்களை வாங்கலாம்

1000 ரூபாய் நோட்டுக்கு 'கோவிந்தா'.. விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளில் ரூ. 500 மட்டுமே பயன்படுத்தலாம்!

சென்னை: மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்புகளில்முக்கியமானது இது. அதாவது 1000 ரூபாய்நோட்டு முழுமையாக இன்று
முதல் பயன்பாட்டிலிருந்துவிலக்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளில்500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

டிசம்பர்15ம் தேதி வரை குடிநீர்க்கட்டணம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கானகட்டணத்தை செலுத்த 500 ரூபாய் நோட்டை அனுமதிப்பதுகுறித்த முடிவை இன்று மாலைநிதியமைச்சகம் அறிவித்தது. அதில் இடம் பெற்றுள்ளமுக்கிய அறிவிப்பு என்னவென்றால், அந்த கட்டணத்தை 500 ரூபாய்நோட்டுக்களை மட்டுமே செலுத்தி சலுகையைபயன்படுத்த முடியும்.


மாறாக. 1000 ரூபாய் நோட்டு வாங்கப்பட மாட்டாதுஎன்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 1000 ரூபாய்நோட்டு இன்று நள்ளிரவோடு முற்றாகவிடைபெறுகிறது. இருப்பினும் வங்கிகளில் தங்களது கணக்குகளில் 1000 ரூபாய்நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

Revision in Interest Rates on Domestic Bulk Term Deposits (Rs.1-10 crs) W.E.F. 24.11.2016

ஒன்றியம் விட்டு ஒன்றிய அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு ! - கற்றல் உபகரணங்களை வாங்குவதில் முறைகேடா??

ALL "SLAS" STUDY MATERIALS & OLD QUESTION PAPERS

CCE WORKSHEET TEST - IMPORTANT FORMS

அஞ்சலகங்களில் இனி டெபாசிட் மட்டுமே செய்யலாம்.

செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) முதல் அஞ்சலக சேமிப்பு கணக்கில் டெபாசிட் மட்டுமே செய்யலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பொதுமக்கள்பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்தனர்.

அதன்படி, கோடிக்கணக்கிலான பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு ரூ.2000, ரூ.100 உள்ளிட்ட நோட்டுகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து அஞ்சல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசு விதித்திருந்த காலக்கெடு நவம்பர் 24 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அத்துடன், மை வைக்கும் முறைக்கு பிறகு அஞ்சலகங்களில் பணம் மாற்ற வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் பழைய ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

சேமிப்பு கணக்குக்கு மட்டும்: ஆனால், அரசு நிர்ணயித்த காலக்கெடு வரை அஞ்சலக சேமிப்பு கணக்கில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். அதுபோல், சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை நேரடியாகப் பெறலாம்., ஏடிஎம்-களில் போதுமான அளவுக்கு ரூ.100 நோட்டுகள் நிரப்பப்பட்டு வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

'EMIS' சர்வரை மேம்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை.

கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான (எமிஸ்) இணையதள சர்வரை மேம்படுத்த வேண்டும் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து 47 வகையான விவரங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எமிஸ் சர்வரின் வேகம் மிகக் குறைவாக உள்ளது. மாணவரின் ஜாதி உட்பிரிவுகளைக் குறிப்பிடுவதற்கான வழிகள் இல்லை. மேலும் எடை, உயரம் உள்ளிட்ட மாறுபடக் கூடிய தேவையற்ற விவரங்களையும் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் வழக்கமான கல்வி, பள்ளி நிர்வாகப் பணிகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, இந்த முறையில் தேவையற்ற விவரங்களைக் கேட்பது தவிர்க்கப்படவேண்டும் என்பதோடு, "எமிஸ்' சர்வர் வேகம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்..

சான்றிதழ் சரிபார்ப்பு பணி 'ஜவ்வு' : 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ஆபத்து?

மூன்று ஆண்டுகளாக, சான்றிதழ் சரிபார்க்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடித்து, ஓர் ஆண்டை தாண்டி விட்டது. 
ஆனால், அவர்களின் சான்றிதழ்கள் உண்மையானதா என்பதை, அதிகாரிகள் சரிபார்த்து முடித்தால்தான், ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு கிடைக்கும். பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணிகள், முடியவில்லை. இதனால், திருப்பூர் மாவட்டத்தில், 600 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் ஆகாமல் உள்ளனர். மேலும், விடுப்பு, பணப் பலன்கள் போன்றவை, நிறுத்தப்பட்டுஉள்ளன.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக்கல்வி இயக்குனரை சந்தித்து, முறையிட்டுள்ளனர். இத்தகையோரிடம், பாடம் நடத்தும் ஆர்வம் குறைந்துள்ளதால், 10ம் வகுப்பில், தேர்ச்சி பாதிக்கும் என, ஆசிரியர்கள் கூறினர்.

நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டி

தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்ட சுற்றறிக்கை:

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழு வதும் நடுநிலைப்பள்ளி மாணவர் கள் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளவும், 
அவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்தவும் அம்பேத்கர் விநாடி-வினா போட்டியை நேரடி யாகவும், ஆன்லைன் வழியாக வும் நடத்தஅனுமதி அளிக்கப் படுகிறது. இப்போட்டிகள் அரை யாண்டு விடுமுறை மற்றும் ஜனவரி மாத விடுமுறை நாட்களில் நடத்தப்படும்.

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல்.

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல் | தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடிக்கும் மாணவ, மாணவிகள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் வரை பெயர் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 36 ஆயிரத்து 843 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 42 லட்சத்து 33 ஆயிரத்து 343 பேர் பெண்கள். அந்த பெண்களில் 9 லட்சத்து 6 ஆயிரத்து 962 பேர் தொழில் கல்வியாளர்கள், 10 ஆயிரத்து 970 பேர் விதவைகள், 43 ஆயிரத்து 64 பேர் கலப்புத் திருமணம் செய்தவர்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 509 பேர் மாற்றுத்திறனாளிகள்.

அரசு பள்ளிக்கூடங்களில் துப்புரவு ஊழியர்கள் நியமனம் அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், 
மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் கழிவறைகளை சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர்களை நியமிக்கப்பட உள்ளனர். இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விதி எண்-110 அறிக்கையில் அறிவித்தார். அந்த அறிவிப்பையொட்டி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு

தனித்தேர்வர்களுக்காக அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 
மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். செப்டம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 27,397 ஆகும். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 227 ஆகும். மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 455. இதில் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள விடைத்தாள்களின் எண்ணிக்கை 5 ஆகும்.

மேற்படி தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களை பதிந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.tnd-ge.in என்ற இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

SLAS Test என்றால் என்ன?

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க,9 மற்றும் 10ம் வகுப்பு  மாணவர்களுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்குவரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமைஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.

ரூ.500 பழைய நோட்டுகளை டிச.15 வரை பயன்படுத்த அனுமதி.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவுவதைக் கருத்தில் கொண்டு, பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
அதே நேரத்தில் ரூ.1,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது. அப்போது, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக, ரூ.100, ரூ.50, ரூ.20 என குறைந்த மதிப்புடைய நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும், நவம்பர் 24-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், வியாழக்கிழமை (நவ.24) நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி, நகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.2,000 வரை கட்டணம் செலுத்துவதற்கு பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பலாம்

சுங்கக் கட்டணம் செலுத்தலாம்

மத்திய, மாநில அரசுகளின் கூட்டுறவு பண்டக விற்பனை சாலைகளில் ஒரு முறை ரூ.5,000 வரை பொருள்கள் வாங்கலாம்.

குடிநீர் கட்டணம் செலுத்தலாம்

மின் கட்டணம் செலுத்தலாம்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான தொகையை செலுத்தவும், மருந்தகங்களிலும் மருந்துகளை வாங்கலாம்

சமையல் எரிவாயு உருளை வாங்கலாம்

மெட்ரோ, புறநகர் ரயில்களில் டிக்கெட் வாங்குவதற்கும், ரயில் கட்டணம் செலுத்தலாம்

பேருந்து கட்டணம் செலுத்தலாம்

விமானக் கட்டணம் செலுத்தலாம்

ரூ.500 வரையிலான செல்லிடப்பேசி ரீசார்ஜ் செய்வதற்கும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

WIFS(Weekly Iron Folic Acid Supplementation)வாராந்திர போலிக் அமிலம்அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் - படிவங்கள்








TET தளர்வு மதிப்பெண் 2012ல் எழுதியோர் எதிர்பார்ப்பு.

'2012ம் ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) எழுதியோருக்கும், 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்' என எதிர்பார்ப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது.
2011ல் தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல் குறிப்பில், 'அந்தந்த மாநிலம் விரும்பினால் இடஒதுக்கீடு பிரிவின் அனைவருக்கும் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கலாம்' என குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில், 2013ல் எழுதிய தேர்வர்களுக்கு 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்கி, அரசு உத்தரவிட்டது. இதனால் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) என்பதில் இருந்து 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டது.'இது, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவருக்கு மட்டும்தான்' என தெரிவிக்கப்பட்டது.

'இச்சலுகையை 20௧௨ல் தேர்வு எழுதியவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்' என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.டி.இ.டி., தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், 'அரசின் கொள்கை முடிவுப்படி 2013ல் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கியது செல்லும்' என உத்தரவிடப்பட்டது. 2012ம் ஆண்டு தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தன. அந்த ஆண்டுக்கும் தளர்வு மதிப்பெண் வழங்கினால் பலர் பயன்பெறுவர் .