- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
1/12/16
30/11/16
நாளை முதல் கனமழை பெய்யும், ஆனா, வெள்ளம்லாம் வராது... நம்பிக்கை தரும் "வெதர்மேன்"
சென்னை: கடந்தாண்டைப் போலவே நாளை பெய்ய இருக்கும் கனமழையால் வெள்ளம் வரலாம் என யாரும் அஞ்சத் தேவையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மழை என்று வந்து விட்டாலே பலருக்கும் ரமணன் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சமூக வலைத்தளவாசிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் போடும் பதிவுகள்தான் நினைவுக்கு வரும். கடந்தாண்டு சென்னை வெள்ளம் வந்த போது அவர் போட்ட பதிவுகள் பலருக்கும் உதவி செய்தது. எனவே, இந்தாண்டும் இவரது பேஸ்பும் பக்கத்தை பலரும் கவனித்து வருகின்றன.
இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டும் இதே டிசம்பர் 1ம் தேதி கனமழை பெய்ததால் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டும் அதே நாள் கனமழை பெய்ய இருப்பதால் மக்கள் மத்தியில் வெள்ளம் குறித்த பீதி அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த பீதி தேவையற்றது, தேவையற்ற புரளிகளைப் பரப்ப வேண்டாம் என தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் முதல் காற்றழுத்த தாழ்வு நிலை இதுதான். முன்பு உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகளும் வேறு திசையில் நகர்ந்ததால், தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவியது.
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, டிசம்பர் 1ம் தேதி தமிழ்நாடு கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது டிசம்பர் 1 அல்லது 2ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்கலாம். அப்போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.
சென்னை வரலாற்றில், இந்த நவம்பர் மாதம்தான் மிகவும் வறட்சியான மாதமாக பதிவாகியுள்ளது. ஆனால், அதே சமயம், இந்த டிசம்பர் 1ம் தேதி பெய்யும் கன மழை காரணமாக நிச்சயம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த ஆண்டைப் போல வெள்ளம் ஏற்படும் என்று புரளியை நம்ப வேண்டாம்.
அதே சமயம், சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும். கடலூர் முதல் புதுசேரி வரையில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.
டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். படிப்படியாக அடுத்தடுத்து நாட்களில் மழை குறையும். 2 மற்றும் 3ம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர்மந்தரில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்
செல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது
புதுடில்லி:'வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின், நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது.
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால்எழுத்து மூலம் அளித்த பதில்:வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளன. 100 ரூபாய்நோட்டுகளை வினியோகிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கிவிட்டன. வங்கிகளில் செல்லாத நோட்டுளை டிபாசிட் செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின் நீட்டிக்கப்படாது.
சிறிய தொகை
கிராமப் பகுதிகளின் தேவைகளுக்காக, 100ரூபாய் போன்ற சிறிய தொகை நோட்டுகளை சப்ளை செய்யும்படி, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், ராஜ்யசபாவில் அளித்த மற்றொரு பதிலில், ''வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைக்கேற்ப அதிகரிக்கும்படி, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது,'' என்றார்.

பஸ் ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்
சென்னை: அரசு பஸ் ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாயை, ரொக்கமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில், 1.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காரணமாக, இந்த மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாய் மட்டும் ரொக்கமாக வழங்க, போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில், மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும், 22 ஆயிரத்து, 400 ஊழியர்கள் பயனடைவர். அவர்கள், ஒரு வாரத்திற்கு, ஏ.டி.எம்.,களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்

ஆதிதிராவிட இளைஞர்களுக்கு நிதியுதவி
சென்னை:நிதியுதவி பெற விரும்பும், ஆதிதிராவிட இளைஞர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பட்டய கணக்கர், செலவு கணக்கர் தேர்ச்சி பெற்ற, ஆதிதிராவிட இளைஞர்கள், சுயமாக தொழில் செய்ய, நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, நிதியுதவி பெற விரும்புவோர், http://application.tahdco.com என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
அரசு பள்ளிகளுக்கு 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்'
சிவகங்கை: தமிழகம் முழுவதும் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தில் அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கழிப்பறைகள் பராமரிக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயினும் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன.
இதனால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்கவும், சிறப்பாக பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தவும் மாநில புதுமை நிதி மூலம் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தை செயல்படுத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.முன்னோடி திட்டமாக மாவட்டந்தோறும் சிறப்பாக கழிப்பறைகளை பராமரிக்கும் ஆறு பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பள்ளி கழிப்பறைகள் நவீனப்படுத்தப்படும்.
ஆண், பெண் கழிப்பறைகளுக்கு தனித்தனியாக 2 ஜன்னல்கள், கதவு, கை கழுவுமிடம், கண்ணாடி, சோப்பு, டவல், கழிப்பறை சுவர்களில் வண்ணமயமான சித்திரங்கள், தண்ணீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு பள்ளிகளை தேர்வு செய்து, மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி
1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும்.
2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு
வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும் பணியை புதன்கிழமை தொடங்குகிறது.
சுமார் 10.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட வேலூர் மாவட்டத்தில், அரக்கோணம் வட்டத்தில் 151 கடைகள், நெமிலியில் 115 கடைகள், வாலாஜாவில் 186, ஆற்காட்டில் 159, காட்பாடியில் 184, வேலூரில் 164, அணைக்கட்டில் 105, குடியாத்தத்தில் 114, பேர்ணாம்பட்டில் 96, ஆம்பூரில் 143, வாணியம்பாடியில் 123, நாட்டறம்பள்ளியில் 85, திருப்பத்தூரில் 190 கடைகள் என 1,815 நியாய விலைக் கடைகளில் செயலி முறை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு செயலியை இயக்க மாவட்டத்தில் 8 மையங்களில் செயல்முறை பயிற்சி அளிக்கப்
பட்டுள்ளது.
நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் செயலியில் குடும்ப அட்டையில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர், ஆதார் எண், செல்லிடப்பேசி போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுவதுடன், பொருள்கள் வாங்கிய விவரம், குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இதுவரையில் 64 சதவீத அட்டைதாரர்கள் தங்களது ஆதார் எண், செல்லிடப்பேசி விவரங்களை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்துள்ளனர்.
ஆதார் அட்டை எடுக்கத் தவறியவர்களுக்கு அட்டை எடுக்கும் பணி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் சுமார் 50,000 பேர் இணைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 வட்டங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மண்டலக் குழுவானது, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, ஆதார் அட்டையை நியாய விலைக் கடைகளில் இணைக்கும் முயற்சி எடுக்கவுள்ளது.
இதுகுறித்து பொதுவிநியோகத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம், போலி கார்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண், செல்லிடப்பேசி விவரம் இணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைக்காத உறுப்பினர்களை இணைப்பதற்காக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை முதல் தொடங்கி சில நாள்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடையில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினரின் ஆதார் அட்டை இணைக்க முடியாதவர்களின் பெயரை நீக்கம் செய்வதோ, பொருள்கள் வழங்குவதோ நிறுத்தப்பட மாட்டாது என்றார்.

லஞ்ச வழக்கு: ஊரீசுக் கல்லூரி செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
வேலூர் ஊரீசுக் கல்லூரியில் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்லூரியின் செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர், அண்ணா சாலையில் சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் செயல்படும் ஊரீசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பேராயர் ராஜவேலு, அப்போதைய கல்லூரி நிதியாளுநரும், தற்போதைய பொறுப்பு முதல்வரான எழில்கிறிஸ்துதாஸ் உள்பட 9 பேர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு, கல்லூரி நிர்வாகத்துக்கு திங்கள்கிழமை அனுப்பிய உத்தரவில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராயர் ராஜவேலுவை, கல்லூரிச் செயலர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து, நிர்வாகக் குழுவைக் கூட்டி மாற்றுச் செயலரை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல, பொறுப்பு முதல்வர் எழில்கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் அவரை புதன்கிழமை (நவ.30) பணி ஓய்வு பெற அனுமதிக்கக் கூடாது. மேலும் வழக்கு முடிவடையும் வரையில் அவருக்குச் சேர வேண்டிய பணி பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொறுப்பில் இருந்து எழில்கிறிஸ்துதாஸ் செவ்வாய்க்கிழமை விலகினார்.
கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள உத்தரவு குறித்து பேராயர் ராஜவேலுவின் கருத்தை அறிய தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

டாக்சி டிரைவரின் வங்கி கணக்கில் ரூ.9806 கோடி அதிர்ச்சியில்...

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங், டாக்சி டிரைவர். இவருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் கணக்கு உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இவரது வங்கி கணக்கில் 98,05,9510,231 ரூபாய் கணக்கு வரவு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மறு நாளே அவர் கணக்கில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இது குறித்து பல்வீந்தர் சிங் பலமுறை வங்கியில் சென்று கேட்டும் எந்த பதிலும் இல்லை.தற்போது இது தொடர்பாக வருமான வரிசோதனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பல்வீந்தர் சிங் கூறியதாவது:-
நான் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் கணக்கு தொடங்கினேன். எனது கணக்கில் மொத்தம் ரூ.3 ஆயிரம் இருந்தது.எனது கணக்கில் ரூ.9806 கோடி வரவு வைக்கபட்டது தொடர்பாக பல முறை வங்கிக்கு சென்றேன் ஆனால் யாரும் எந்தவித பதிலும் சொல்ல வில்லை.
அதே சமயம் எனது பழைய பாஸ் புக்கை வாங்கி கொண்டு 7 ந்தேதி புதிய பாஸ் புக் வழங்கினார்கள்.ஆனால் அதில் ஏற்கனவே எனது கணக்கில் வரவு வைக்கபட்ட 9806 கோடி கணக்கு விவரம் எதுவும் இல்லை.
வங்கியின் கிளை மேலாளர் ரவீந்தர் குமார் எந்த வித தகவலும் என்னிடம் கூற மறுத்து வந்தார்.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வங்கியின் மேலாளர் குறிப்பிடும் போது இது தவறுதலாக பதிவு செய்யபட்டு உள்ளது. மறுநாள் அது சரிசெய்யப்பட்டு விட்டது

இனி பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாதா? மகிழ்ச்சி தகவல்

கடந்த 9 ஆம் தேதி முதல் வங்கிகளில் பணம் எடுக்க மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.
அதன்படி, இனி வங்கியில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது மற்றும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி, வாரத்திற்கு ஒருவர் ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும், இந்த தொகையும் பல தடவை பிரித்து எடுக்கவே அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், அவசர தேவைக்கு பணம் இல்லாமல் சிரமத்திற்கும் மக்கள் ஆளாகினர். இதனால், பலர் பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய யோசித்தனர்.
இதற்கிடையில், செல்லாமல் போன பழைய ரூபாய் நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்பட்டால் தான், மீண்டும் மக்களிடம் பணம் புழக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற முடிவு செய்த மத்திய அரசு, இது குறித்து நேற்று உயர் மட்ட ஆலோசனையில் ஈடுபட்டது.
இதன் பிறகு வங்கிகளில் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவும் எடுக்கப்பட்டது.
அந்த முடிவை ரிசர்வ் வங்கி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அதன்படி இன்று (29-ந் தேதி செவ்வாய்க்கிழமை) முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்படி பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழி ஏற்பட்டுள்ளது.
சில வங்கிகளில் இந்த நடைமுறை இன்றே அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் கேட்ட கூடுதல் பணத்தை வழங்கினார்கள்.
அதே சமயம், வங்கிகளில் போதிய பணம் இல்லாததால், மக்களுக்கும் தற்போது சிறு சிறு தொகையாகவே வழங்கப்படுவதாக, சில வங்கிகள் தெரிவித்துள்ளன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)