யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/16

இனி பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாதா? மகிழ்ச்சி தகவல்

இனி பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாதா? மகிழ்ச்சி தகவல்

கடந்த 9 ஆம் தேதி முதல் வங்கிகளில் பணம் எடுக்க மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

அதன்படி, இனி வங்கியில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது மற்றும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி, வாரத்திற்கு ஒருவர் ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும், இந்த தொகையும் பல தடவை பிரித்து எடுக்கவே அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், அவசர தேவைக்கு பணம் இல்லாமல் சிரமத்திற்கும் மக்கள் ஆளாகினர். இதனால், பலர் பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய யோசித்தனர்.

இதற்கிடையில், செல்லாமல் போன பழைய ரூபாய் நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்பட்டால் தான், மீண்டும் மக்களிடம் பணம் புழக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற முடிவு செய்த மத்திய அரசு, இது குறித்து நேற்று உயர் மட்ட ஆலோசனையில் ஈடுபட்டது.

 இதன் பிறகு வங்கிகளில் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவும் எடுக்கப்பட்டது.

அந்த முடிவை ரிசர்வ் வங்கி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதன்படி இன்று (29-ந் தேதி செவ்வாய்க்கிழமை) முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்படி பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழி ஏற்பட்டுள்ளது.

சில வங்கிகளில் இந்த நடைமுறை இன்றே அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் கேட்ட கூடுதல் பணத்தை வழங்கினார்கள்.

அதே சமயம், வங்கிகளில் போதிய பணம் இல்லாததால், மக்களுக்கும் தற்போது சிறு சிறு தொகையாகவே வழங்கப்படுவதாக, சில வங்கிகள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக