யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/16

அப்துல் கலாம் நினைவிடத்தில் வெண்கல சிலை அகற்றம்

அப்துல் கலாம் நினைவிடத்தில் வெண்கல சிலை அகற்றம்


ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடப்பதால், அங்கிருந்த கலாம் வெண்கல சிலை அகற்றப்பட்டுள்ளது.


ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சமாதி உள்ளது. ஜூலை 27ல், சமாதி முன், 6 அடி உயரத்தில் அப்துல் கலாம் வெண்கல சிலை நிறுவி, நினைவிடம் அமைக்க மத்திய அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

இந்நிலையில், 15 கோடி ரூபாய் செலவில், நினைவு மண்டபம் அமைக்கும் பணி, முழுவீச்சில் நடப்பதால், இதற்கு இடையூறாக இருந்த கலாம் வெண்கல சிலையை அகற்றி, பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.

சிலை இருந்த பீடம், அடித்தளத்தை இடித்தனர்.அப்பகுதியில், கட்டுமானப் பொருட்கள் குவிந்து கிடப்பதால், அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள், நுழைவாயில் முன், கலாம் சிலை இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக