யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/16

லஞ்ச வழக்கு: ஊரீசுக் கல்லூரி செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலூர் ஊரீசுக் கல்லூரியில் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்லூரியின் செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர், அண்ணா சாலையில் சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் செயல்படும் ஊரீசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பேராயர் ராஜவேலு, அப்போதைய கல்லூரி நிதியாளுநரும், தற்போதைய பொறுப்பு முதல்வரான எழில்கிறிஸ்துதாஸ் உள்பட 9 பேர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு, கல்லூரி நிர்வாகத்துக்கு திங்கள்கிழமை அனுப்பிய உத்தரவில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராயர் ராஜவேலுவை, கல்லூரிச் செயலர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து, நிர்வாகக் குழுவைக் கூட்டி மாற்றுச் செயலரை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல, பொறுப்பு முதல்வர் எழில்கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் அவரை புதன்கிழமை (நவ.30) பணி ஓய்வு பெற அனுமதிக்கக் கூடாது. மேலும் வழக்கு முடிவடையும் வரையில் அவருக்குச் சேர வேண்டிய பணி பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொறுப்பில் இருந்து எழில்கிறிஸ்துதாஸ் செவ்வாய்க்கிழமை விலகினார்.
கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள உத்தரவு குறித்து பேராயர் ராஜவேலுவின் கருத்தை அறிய தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக