யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/16

8 வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவருக்கு வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், புதன்கிழமை (நவ.30) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை பெற்றுத் தரும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்
அவ்வப்போது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்
நடத்தப்படுகின்றன.


அதன்படி, புதன்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முகாம் தொடங்குகிறது.

இந்த முகாமில், கோவை, சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான இளைஞர்களை தேர்வு
செய்கின்றனர்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள், ஐடிஐ, பட்டயம், பி.எட்., படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக