யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/16

நொடிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்று : இது டிசம்பர் மாத எச்சரிக்கை அதிர்ச்சி தகவல்

நொடிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்று : இது டிசம்பர் மாத எச்சரிக்கை அதிர்ச்சி தகவல்

சென்னை, நவ.29 (டி.என்.எஸ்) கடந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளை தண்ணீரில் தத்தளிக்க வைத்த டிசம்பர் பேய் மழையை யாராலும் மறந்திருக்க முடியாது.

100 வருடங்களுக்குப் பிறகு பார்த்த அத்தகைய கன மழை தற்போது மீண்டும் வரும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பு இருப்பதால், மக்கள் சற்று பீதியடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கையும், மக்களிடம் நல்லா கிளப்புகிறது பீதியை.

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்வதோடு, நொடிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளை முதல் தமிழக மீனவர்கள் யாருடம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் உடனடியாக கரைக்குத் திரும்புங்கள், என்று தெரிவித்துள்ளார்.

ஆக, கடந்த ஆண்டு டிசம்பர் சம்பவம் இந்த ஆண்டும் நிகழும் போல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக