யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/16

எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை அரசினர் தோட்டத்துக்கு அருகேயுள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் எனத் தெரிகிறது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர், பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் நினைவிடம் அமைக்கப்பட்டு அங்கே வைக்கப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மன்னிப்பு கோரினார் ரங்கராஜ் பாண்டே

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்  பொதுமக்களின் அஞ்சலிக்காக  ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதா ஆவார்.

CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை

கல்வி கட்டண கமிட்டி காலி; தொடருது கண்ணாமூச்சி!!

காமராஜர் பல்கலையில் இட ஒதுக்கிடு விவகாரம்; உயர்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்; தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது

BREAKING NEWS : முதல்வர் ஜெயலலிதா காலமானார்!! அப்பல்லோ அறிவிப்பு Posted: 05 Dec 2016 12:46 PM PST 05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார் செல்வி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர். ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா. தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே! எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார். இதனால்தான் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது. அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார். 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார். 2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்! தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார். ‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு. Posted: 05 Dec 2016 12:47 PM PST பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்புமரியாதைக்குரிய தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா "அம்மா" காலமானார்., இரவு 11:30 மணிக்கு (05-12-2016) உயிர் பிரிந்ததாக அப்போல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு. முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்றன வியாழக்கிழமை வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம் Posted: 05 Dec 2016 12:48 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலன் இன்றி காலமானார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தனர். பின்னர். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியா சாகர் ராவ் புதிய முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பன்னீர் செல்வம் உறுதி மொழி ஏற்றார். ஓ.பன்னீர் செல்வத்தைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம். Posted: 05 Dec 2016 12:59 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின் தமிழ் சாரம் இது: தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்ந்துகொள்கிறோம். மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா காய்ச்சல், நீர்ப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாண்புமிகு முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட பல்நோக்கு சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வாய் வழியே உணவு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு உடல்நிலை சீரடைந்து வந்தது. இதனடிப்படையில் மாண்புமிகு முதல்வர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயர் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கே எங்களின் மருத்துவ நிபுணர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்நிலையில், திடீரென டிசம்பர் 4, 2016-ல் துரதிர்ஷ்டவசமாக மாண்புமிகு முதல்வர் இதய துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்டார். அருகிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இருந்ததால், முதல்வருக்கு உடனே சர்வதேச அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட முறையான எக்மோ முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அளவில் முயற்சி செய்து சிறந்த சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (5.12.2016) இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அப்போலோ குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஊழியரும், மருத்துவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மாண்புமிகு முதல்வரை அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். நவீன சிகிச்சை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு மாண்புமிகு முதல்வரை ஆற்றுப்படுத்த ஓய்வின்றி உழைத்தோம். இந்திய தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் நேர்ந்த இந்த அளவுகடந்த துயரத்தில் நாங்களும் கனத்த இதயத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு. Posted: 05 Dec 2016 12:49 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது, முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளாது. காலை 4.30 மணி முதல் ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு. Posted: 05 Dec 2016 01:49 PM PST பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதா உடல் காலை 4.30 மணி முதல் ராஜாஜி அரங்கில் வைக்கப்படுகிறது. ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு? Posted: 05 Dec 2016 01:44 PM PST முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை அரசினர் தோட்டத்துக்கு அருகேயுள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் எனத் தெரிகிறது. நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர், பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் நினைவிடம் அமைக்கப்பட்டு அங்கே வைக்கப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.ஜி.ஆர் வழியில் ஏழைகளின் ஏந்தலாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா! Posted: 05 Dec 2016 01:06 PM PST "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - இந்த தாரக மந்திரச் சொல்லைக் கேட்டதுமே, தமிழக மக்கள் அனைவர் மனதிலும் நிழலாடும் உருவமாகத் திகழ்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான். திரைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டு, இறுதி மூச்சு உள்ளவரை, எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர் ஜெயலலிதா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர், கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கியது முதல், கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்களும், சாமான்ய மற்றும் ஏழை-எளிய மக்களும், குறிப்பாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களும் எம்.ஜி.ஆரின் பின்னால் அணிவகுத்து, அவருக்கு மகத்தான ஆதரவை அளித்தனர். ஏழை-எளிய மக்களும், ரசிகர்களும் அளித்த பேரன்பு, எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காதது. திரையுலகில் அளித்த பேராதரவைக் காட்டிலும், அரசியலில் தம்மை திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்த சாமான்ய மக்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? என்று பல நாட்கள் இரவு, பகலாக எம்.ஜி.ஆர் யோசித்ததன் விளைவாகவே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சத்துணவுத்திட்டம், வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை, ஏழை மக்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு தடையில்லா இலவச மின்சாரம் என்று, தம்மை முதல்வர் பதவியில் அமர்த்தி வைத்த, சாமான்ய மக்களின் நலனில் அன்றாடம் அக்கறை கொண்டு, தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர் எம்.ஜி.ஆர். கடந்த 1977-ல் ஆட்சியைப் பிடித்தது முதல், 1987-ல் எம்.ஜி.ஆர் மறையும் வரை, தொடர்ந்து முதல்வராகப் பதவியில் இருந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை, தனது அரசியல் ஆசானாகக் கொண்டு, அரசியலில் அவரது வழியைப் பின்பற்றி ஏழை-எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும் திகழ்வதற்காகவும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. தமது 68-வது வயதில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் ஜெயலலிதா. கடந்த 75 நாட்களாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல்நிலைலயில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று மாரடைப்பு ஏற்பட்டு, தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. எம்.ஜி.ஆர் வழியில், செயல்பட்ட முதல்வர் ஜெயலலிதா, 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று தனது ஒவ்வொரு உரையின் போதும், ஜெயலலிதா தவறாமல் குறிப்பிடுவார். ஏழை மக்கள் எல்லாமும் பெற வேண்டும் என்பதற்காக, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, அல்லும், பகலும் ஏழை மக்கள் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்டு வந்த, ஏற்றமிகு ஏந்தலான முதல்வர் ஜெயலலிதா என்னும் ஒளிவிளக்கு இப்போது அணைந்து விட்டது. ஏழை மக்களுக்கு என்றென்றும் அரணாக விளங்கிய ஜெயலலிதா-வின் ஆன்மா அவர் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டன் மறைவின்போதும், தெரிவிப்பது போன்ற, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். ஏழைகள் வாழ்வில், ஜெயலலிதா தொடங்கி வைத்த எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள், என்றென்றும் நீடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மன்னிப்பு கோரினார் ரங்கராஜ் பாண்டே Posted: 05 Dec 2016 12:55 PM PST ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பியதற்காக, தந்தி தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டை மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல். Posted: 05 Dec 2016 12:49 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதா ஆவார். Flash News:முதல்வர் உடல்நிலை குறித்த தகவல் தவறான செய்தி - அப்போலோ மறுப்பு Posted: 05 Dec 2016 05:09 AM PST முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. முதல்வர் உடல்நிலை குறித்த தகவல் தவறான செய்தி - அப்போலோ விளக்கம். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்: அப்பல்லோ புதிய அறிக்கை Posted: 05 Dec 2016 12:16 AM PST சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் முதல்வருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை Posted: 05 Dec 2016 07:54 AM PST G.O NO - 449,dt-29.11.2016-CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை CLICK HERE-TO DOWNLOAD CCE- G.O முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது: ரிச்சர்ட் பீலே Posted: 05 Dec 2016 02:55 AM PST முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முடிந்த வரை சிறப்பான சிகிச்சை அளித்துவிட்டோம் என்று மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப் பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பிரிவுகளின் சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாலும் சர்வதேச தரத்தில் சிகிச்சை அளித்தும் முதல்வரின் உடல் நிலை மோசமாக உள்ளது. என்று மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார். CCE 4th Week Tamil - Answer Keys (1 to 10th std) Posted: 04 Dec 2016 11:46 PM PST கல்வி கட்டண கமிட்டி காலி; தொடருது கண்ணாமூச்சி!! Posted: 04 Dec 2016 10:32 PM PST காமராஜர் பல்கலையில் இட ஒதுக்கிடு விவகாரம்; உயர்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்; தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது Posted: 04 Dec 2016 10:29 PM PST ''நீட்'' தேர்விலும் குஜராத்தி மொழிக்கு அனுமதி

புதுச்சேரி தனியார் பள்ளிகளில் ஸ்வைப் மெஷின்’ மூலம் கல்விக் கட்டணம்: கல்வித் துறை விரைவில் நடவடிக்கை.

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்என உத்தரவிட்டு கல்வித் துறை மூலம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.பண மதிப்பு நீக்கம் செய்யப் பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகி யும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் கூட்டம் இன்னும் குறையவில்லை. 
புதுச்சேரியில் தற்போது கடும் பணத் தட்டுபாடு பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத் தும் கல்விக் கட்டணத்தை ரொக்க மாக செலுத்த வேண்டும் என பெற்றோரை கட்டாயப்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதை யடுத்து கல்விக் கட்டணத்தை ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தர விட்டு கல்வித் துறை மூலம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.

பணத் தட்டுப்பாடு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 731 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசுஉதவிபெறும் பள்ளிகள் 33, தனியார் பள்ளிகள் 268 என மொத்தம் 301 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளிலேயே அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் ஏற்பட் டுள்ள பணத்தட்டுப்பாடு காரண மாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்ற னர். குறிப்பாக, வீட்டின் அத்தியா வசிய தேவைகளுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

பெற்றோர் புகார்

இந்நிலையில், தனியார் பள்ளி கள் கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும் என தொடர்ந்து பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இது தொடர்பாககல்வித் துறை அமைச்சர் மற்றும் கல்வித் துறை இயக்குநருக்கு பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த முடிவை கல்வித்துறை எடுத்துள்ளது.

சுற்றறிக்கை

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, “தற் போது நிலவி வரும் பணத் தட் டுப்பாடு பிரச்சினையால் கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்து வதில் சிரமம் உள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை காசோலையாக பெற்றுக்கொள்ள வேண்டும். ஸ்வைப் மெஷினை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படும். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து தனியார் பள்ளி நிர் வாகத்துக்கும் 5-ம் தேதி (இன்று) கல்வித் துறை மூலம் அனுப்பப் படும்” என்றார்.

5/12/16

TNPSC - MAY 2016 BULLETIN...

பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை

 பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களைவிற்க, தடை
விதிக்கப்பட்டுள்ளது.

       இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்அனுப்பியுள்ள கடிதம்:பள்ளியில் வழங்கப்படும்சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.
அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்டஉணவு பொருட்கள், துாய்மையான நீரில் சுத்தம் செய்யப்படவேண்டும். சமையல் கூடம், உணவுஅருந்தும் இடத்தை சுத்தமாக பராமரிக்கவேண்டும்.
மதிய உணவை, துாய்மையான முறையில்வினியோகம் செய்ய வேண்டும். மாணவர்கள்உணவு அருந்தும் தட்டு, டம்ளர் போன்றவற்றை, கழுவி சுத்தமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உணவு சமைத்தல் மற்றும்பரிமாறும் முறைகளை, தலைமை ஆசிரியர், தினமும்கண்காணிப்பது அவசியம்.
விழா நாட்களில், தன்னார்வ நிறுவனங்கள் வெளியிலிருந்து கொண்டு வரும், உணவின்தரத்தை சோதித்த பின்பே, மாணவர்களுக்குவழங்க வேண்டும்.பள்ளி வளாகத்திற்கு அருகில்விற்கப்படும், சுகாதாரம் இல்லாத தின்பண்டங்களை உண்ணக்கூடாது என, மாணவர்களுக்கு, தினமும்அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிகளின்முன், சுகாதாரமற்ற உணவு விற்கும் கடைகளைஅனுமதிக்க கூடாது; முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.

இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.

தயிர் அதிகம் உட்கொண்டால் மார்பகப் புற்று நோயை தடுக்கலாம்

Periyar University - B.Ed Part time - ( 3 years) Notification

CCE WORKSHEET TAMIL KEY ANSWERS - 4 week 1 to 5 std

G.O NO -449-DT-29.11.2016-CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை-

4/12/16

ஆசிரியர் காலி பணியிடம் ; 3 மாதங்களில் நிரப்ப அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

NMMS-ONLINE- -ல் பதிவேற்றம் செய்யும் போது Phone No., Mobile No., Email – ID அவசியம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஏற்கனவே வழங்கப்பட்ட USER ID/PASSWORD-ஐ பயன்படுத்தி 14.12.2016-குள் ONLINE-ல் பதியவும் -இயக்குநர் அறிவுரை


கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி தற்காலிக பணிநீக்கம்

பள்ளி சென்று இடையில் நின்றமாணவர்களின் கல்வியை தொடரவும், அனைவருக்கும்கல்வி கிடைக்கவும், அனைவருக்கும் கல்வி திட்டம்
மூலம்பல்வேறு திட்டங்களை மத்திய அரசு  செயல்படுத்தி வருகிறது.

இதற்குஉதாரணமாக மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், மாணவமாணவிகளுக்கு ஊக்கத் தொகை, மாற்றுத்திறனாளிமாணவ மாணவிகளுக்கு கூடுதல் ஊக்கத் தொகைஇப்படிப்பட்ட செலவினங்களுக்காக பல கோடிகளை ஒதுக்கிசெலவிடுகிறது மத்திய அரசு.

இந்த திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் அனைவருக்கும்கல்வி திட்டத்தில் செயல்பாடுகளில் முறைகேடு நடப்பதாக புகார்கள் சென்றதையடுத்து திட்ட இயக்குநர் உஷாராணிதலைமையிலான குழு, இரண்டு நாட்கள்கடலூரில் முகாமிட்டு விசாரணை செய்ததன் அடிப்படையில்நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இத்திட்டத்தின் உதவித் திட்ட அலுவலர்வெங்கடேசனை தற்காலிக பணிநீக்கம் செய்து திட்ட இயக்குநர்உத்தரவிட்டார்..

CPS NEWS:PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான UTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு.

மத்தியஅரசில் Cpsல் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியவிபரங்கள்
வழங்க மறுக்கும் நிதிமேலாளர்கள். 

PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான UTI
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு.


பதில் வழங்க மறுக்கும் காரணம்அறிவீரோ?


திண்டுக்கல்எங்கெல்ஸ்

பள்ளிக் கல்வி - டிசம்பர் - 7 கொடிநாள் கொண்டாடுவது குறித்த இயக்குனர் செயல்முறைகள்!!!

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது. மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

நீட்' தேர்வு: அடுத்த வாரம் விண்ணப்பபதிவு
அத்துடன், 'மாநில அரசு மற்றும் தனியார்மருத்துவ கல்லுாரி களிலும், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்வு தேர்ச்சிகட்டாயம்' என, உச்ச
நீதிமன்றம், கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு, தமிழகம் உட்பட பல மாநிலங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தமிழகம், ஆந்திராஉள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள, அரசுகல்லுாரிகளில், மாநில அரசின் ஒதுக்கீட்டுஇடங்களில், கடந்த ஆண்டு சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில், தனியார் கல்லுாரி இடங்களை, 'நீட்' தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நிரப்ப உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு, அரசு மற்றும்தனியார் கல்லுாரி களுக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம்என்ற நிலையே உள்ளது.

கடைசி நேரத்தில், மாநில அரசு ஒதுக்கீட்டுஇடங்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்குஅளிக்கப்படலாம். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கும் என, தெரிகிறது. ஜன., முதல் வாரம்வரை, விண்ணப்பத்தை பதிவு செய்ய, அவகாசம்வழங்கப்படலாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., ஒரு வாரத்திற்குள் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.