யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/12/16

எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

இளநிலைஉதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.'இளநிலை உதவியாளர்கள் மற்றும்உதவி சேமிப்புக் கிடங்கு
மேலாளர்கள் பணிக்கானஎழுத்துத்தேர்வு, டிச., 11ல், சென்னைவேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும்' என, தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனம் அறிவித்திருந்தது.

தற்போது, 'நிர்வாக காரணங்களால், எழுத்துத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது; தேர்வுதேதி, பின் வெளியிடப்படும்' என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு

ரொக்கம்இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசுஏற்பாடு
செய்து உள்ளது.இந்தியாமுழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பால் பணதட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம்வெகுவாக குறைந்து உள்ளது. .
இதனை தவிர்க்க மக்கள் தங்களது தேவைகளுக்குரொக்கம் இல்லா வரவுசெலவுகளை மேற்கொள்ளும்படிமத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.இது குறித்து மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் கட்டமாகபல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில்விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசுஏற்பாடு செய்து உள்ளது எனமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துஅவர் கூறியதாவது:நாட்டில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகளைஅதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் நாடுமுழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட உள்ளது.டிசம்பர்-12ந்தேதிதொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம்ஒரு மாத காலம் நடைபெறும்.இதையொட்டி நேற்று 670 துணை வேந்தர்கள் மற்றும்மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம்ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் ஆதரவுகருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
10 பேரைஇணைக்க வேண்டும்
பல்வேறுகல்வி நிறுவனங்களை ஒரு டிஜிட்டல் வளாகத்திற்குள்ஒருங்கிணைக்கும் முயற்சியின் சிறிய தொடக்கம் தான்இது.ஒவ்வொரு மாணவரும் டிஜிட்டல்தளத்தில் சேர்ந்து தனது குடும்பத்தினர் உள்பட10 பேரை ரொக்கம் இல்லா பரிமாற்றத்தில்இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு காட்டாயமில்லை: மத்திய அரசு அதிரடி

குறைந்தமாதம் ஊதியம் பெறுபவர்களுக்கு இ.பி.எஃப். எனப்படும்தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லைஎன்ற அதிரடியான
உத்தரவை மத்திய அரசுபிறப்பித்துள்ளது.
இதன்படிஅமைப்பு சார்ந்த தொழில் துறைகளில்15,000 ரூபாய்க்கும் குறைவாக மாதம் சம்பளம்பெறுபவர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பதுகட்டாயமில்லை. ஆனால் வேலை அளிக்கும்நிறுவனம் தனது பங்கை செலுத்தவேண்டும் என்பது எந்த மாற்றமும்செய்யப்படவில்லை.

பெரும்பாலானநிறுவனங்கள் தொழிலாளர்களிடம் இருந்தே இதற்கான தொகையைபிடித்தம் செய்வதால் அவற்றிற்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசின் இந்த முடிவால்ஓய்வு பெறும் தொழிலாளர்களின் சேமிப்புகேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் 60 ஆண்டுகாலஇ.பி.எஃப். முறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதாகஇந்த முடிவு அமைந்துள்ளது எனதொழிற்சங்க பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


மத்தியஅரசின் முடிவால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  சட்டபூர்வ அந்தஸ்தை இழக்கிறது. வருங்கால வைப்பு நிதிக்கான குறைந்தபட்சபங்களிப்பை 12 சதவிதத்தில் இருந்து குறைப்பதற்கான சட்டத்திருத்தத்தைமத்திய தொழிலாளர் அமைச்சகம் தயார் செய்து வைத்துள்ளது. ஆனால் அரசியல் எதிர்ப்பு காரணமாகநாடாளுமன்றத்தில் அதை தாக்கல் செய்யமுடியாமல் மோடி அரசு நிலுவையி்ல்வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Directorate of Government Examinations - - ESLC 2017 - Tatkal Date Extension - Information

பொதுத்தேர்வு எழுத முடியுமா? : 11 லட்சம் மாணவர்களுக்கு சிக்கல்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படாததால், 11 லட்சம் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களில், 55 சதவீதம் பேர், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்.
மத்திய இடை நிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும், பிளஸ் 2 மாணவர்களும், தேர்வு எழுத உள்ளனர்.தனியார் பள்ளிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட அங்கீகாரம், 2011ல், ஆண்டுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டில், அங்கீகாரம் முடிந்த, 4,800 பள்ளிகள், மீண்டும் அங்கீகாரம் நீட்டிப்பு கோரி, மெட்ரிக் இயக்குனரகம் மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தன.இவற்றில், பெரும்பாலான பள்ளிகளுக்கு, இதுவரை அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாக சங்கத்தினர், முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக்கல்வி செயலகம், மெட்ரிக் இயக்குனரகம் போன்றவற்றுக்கு, பல முறை மனுக்கள் அனுப்பியும் பயன் இல்லை.அரசு தேர்வுத்துறை, மார்ச்சில் நடக்கவுள்ள பொதுத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை, சேகரிக்க துவங்கியுள்ளது.

தனியார் பள்ளிகள், மாணவர் விபரங்களுடன், அங்கீகார நகல் கடிதத்தையும் வழங்க வேண்டும். ஆனால், அங்கீகாரம் வழங்கப்படாததால், தேர்வுத்துறைக்கு ஆவணங்கள் அனுப்ப முடியாமல், பள்ளிகள் பரிதவிப்பில் உள்ளன.இதுகுறித்து, தனியார் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறுகையில், ''அங்கீகாரம் நீட்டிப்பு கோரி, தனியார் பள்ளிகள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தும், இன்னும் அங்கீகாரம்வழங்கப்படவில்லை. அதனால், பொதுத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை தேர்வுத்துறைக்கு கொடுப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

NMMS-2017 Application Form

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு காட்டாயமில்லை: மத்திய அரசு அதிரடி

குறைந்த மாதம் ஊதியம் பெறுபவர்களுக்கு இ.பி.எஃப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லை என்ற அதிரடியான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 
இதன்படி அமைப்பு சார்ந்த தொழில் துறைகளில் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மாதம் சம்பளம் பெறுபவர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பது கட்டாயமில்லை. ஆனால் வேலை அளிக்கும் நிறுவனம் தனது பங்கை செலுத்த வேண்டும் என்பது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் இருந்தே இதற்கான தொகையை பிடித்தம் செய்வதால் அவற்றிற்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசின் இந்த முடிவால் ஓய்வு பெறும் தொழிலாளர்களின் சேமிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் 60 ஆண்டுகால இ.பி.எஃப். முறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதாக இந்த முடிவு அமைந்துள்ளது என தொழிற்சங்க பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் முடிவால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  சட்டபூர்வ அந்தஸ்தை இழக்கிறது. வருங்கால வைப்பு நிதிக்கான குறைந்தபட்ச பங்களிப்பை 12 சதவிதத்தில் இருந்து குறைப்பதற்கான சட்டத்திருத்தத்தை மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயார் செய்து வைத்துள்ளது. ஆனால் அரசியல் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் அதை தாக்கல் செய்ய முடியாமல் மோடி அரசு நிலுவையி்ல் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்று நாள் துக்கம் அனுசரித்து பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


இன்றுடன் மூன்று நாள் நிறைவு பெறுவதையடுத்து நாளை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது. 

டெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகைகள்.. அறிவித்தார் அருண் ஜேட்லி.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
# ரெயில்வே பயணச்சீட்டு மின்னனு முறையில் பதிவு செய்தால் ரூ.10 லட்சம் வரை காப்பீடு

# புறநகர் ரெயில்களில் மின்னணு முறையில் சீசன் டிக்கெட் வாங்கினால் 0.5 % தள்ளுபடி

# கிசான் கிரெடிக் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கார்டு வழங்கப்படும்

# இந்த திட்டங்களுக்கான தள்ளுபடி ஜனவரி 1-ம் தேதி முதல்அமல்படுத்தப்படும்

# பெட்ரோல்,டீசல் நிலையங்களில் மின்னணு முறையில் பரிவர்த்தனை செய்தால் 0.75 % தள்ளுபடி

# பணமில்லா பரிவர்த்தனையே பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு

# டோல்கேட்டில் கார்டு பயன்படுத்தினால் 0.5 % கட்டணச்சலுகை

# ரெயில்வே நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்தால் 5 % சலுகை

# சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 10 % தள்ளுபடி

# எல்.ஐ.சி.காப்பீடுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 8 % தள்ளுபடி

# மின்னணு முறைக்கு நுகர்வோர்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது

# மின்னணு பணப்பரிமாற்றமே பண மதிப்பிழப்பு அறிவிப்பின்இலக்கு

# ரிசர்வ் வங்கி திட்டமிட்டபடி புதிய பண தாள்களை வெளியிட்டு வருகிறது.

# ரெயில்களில் மின்னணு முறையில் டிக்கெட் வாங்கினால் ரூ.10 லட்சத்திற்கு காப்பீடு

# ரெயில்களில் உணவு வாங்க மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 5 % தள்ளுபடி

# கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மின்னணு பரிவர்த்தனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

விரைவில் தள்ளுபடி அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர் 8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.இதைத்தொடர்ந்து பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர் 8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.இதைத்தொடர்ந்து பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8/12/16

பருவம் 2 தேர்வு கால அட்டவணை


Upper primary
15.12.2016.         தமிழ்
16.12.2016.         ஆங்கிலம்
19.12.2017.         Slas
20.12.2016.         Slas
21.12.2016.         கணக்கு
22.12.2016.          அறிவியல்
23.12.2016.         சமுக அறிவியல்

Primary

15.12.2016.      தமிழ்
16.12.2016.      ஆங்கிலம்
19.12.2016.      கணக்கு
20.12.2016.      அறிவியல்
21.12.2016.       Slas
22.12.2016.       Slas
23.12.2016.       சமுக அறிவியல்

Directorate of Government Examinations- - ESLC 2017 - Tatkal Date Extension to 08/12/16 - Information

13 ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த மிலாடி நபி- பண்டிகை (விடுமுறை) 12 ம்தேதிக்கு மாற்றம்* *மத்திய அரசு ஆணை

2017-மார்ச் -SSLC தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் சலுகைகள் கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அறிவுரைகள்

TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!

பல்வேறுவழக்குகளால் தள்ளிக்கொண்டே போன ஆசிரியர் தகுதித்தேர்வு, விரைவில் வரவிருக்கிறது. இது ஆசிரியப் பட்டம்படித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.ஆசிரியர் தகுதித்தேர்வு
நடத்தப்பட்டு முதல் இரண்டு தேர்வுகளும்கடினமாக இருந்ததாகப் பரவலான கருத்து இருந்தபோதும்2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில்பலர் தேர்ச்சி பெற்றனர்.

TNPSC:'குரூப் - 1' தேர்வு; விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்குமா?

திடீர்விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம்
நீட்டிக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில், துணைகலெக்டர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் - 1' பதவிகளில், 85 இடங்கள் காலியாக உள்ளன. 

 இவற்றை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல்தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது.


ஆனால், கடந்த வாரம், வங்க கடலில்உருவான, 'நடா' புயலால் அறிவித்தவிடுமுறை; செல்லா நோட்டு அறிவிப்பால்பணத் தட்டுப்பாடு மற்றும் தமிழக முதல்வராகஇருந்த ஜெயலலிதாவின் மறைவால் விடுமுறை போன்றகாரணங்களால், விண்ணப்பிக்க, தேர்வர்களுக்கு தாமதம் ஏற்பட்டது. இன்றுஒரு நாளில், விண்ணப்பம் பதிவுசெய்வதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், ஒரு வாரம் கூடுதல் அவகாசம்வழங்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

CPS NEWS:ஆசிரியர்கள் போராட்டம் _ போலீஸ் தடியடி.ஆசிரியர் மரணம்.

 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி உத்தரபிரதேசதலைநகர் லக்னோவில் இன்று (07.12.2016) நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள்
மீது போலீசார் நடத்தியதடியடியில் ஆசிரியர் ஒருவர் மரணம்.
CPS ரத்துசெய்ய போராடிவீரமரணம் அடைந்த ஆசிரிய சகோதரருக்குவீரவணக்கம்.


நன்றி-தகவல்-திரு-எங்கெல்ஸ்.திண்டுக்கல்

மாவட்ட தொடக்ககல்வி அலுவலகம் - தஞ்சாவூர் இரண்டாம் பருவத்தேர்வுக்கான அட்டவணை...

NMMS ONLINE ENTRY !!

மாணவர்விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களைதயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால்சுலபமாக
இருக்கும்.

www.tngdc.gov.in* என்றவலைதளத்திற்கு சென்று

*Welcome to ONLINE PORTAL* ஐCLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.
அதில்*NMMS* CLICK செய்தவுடன்*USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவுசெய்யவேண்டும்.

*NMMS : Vellore District*


User Name : *D30E30* Password : *DEE30P030*

பின்னர்*ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்

  அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து இறுதியில்*Submit* கொடுத்தால்Application ஏற்றுக்கொள்ளப்படும்.