தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படாததால், 11 லட்சம் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களில், 55 சதவீதம் பேர், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்.
மத்திய இடை நிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும், பிளஸ் 2 மாணவர்களும், தேர்வு எழுத உள்ளனர்.தனியார் பள்ளிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட அங்கீகாரம், 2011ல், ஆண்டுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டில், அங்கீகாரம் முடிந்த, 4,800 பள்ளிகள், மீண்டும் அங்கீகாரம் நீட்டிப்பு கோரி, மெட்ரிக் இயக்குனரகம் மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தன.இவற்றில், பெரும்பாலான பள்ளிகளுக்கு, இதுவரை அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாக சங்கத்தினர், முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக்கல்வி செயலகம், மெட்ரிக் இயக்குனரகம் போன்றவற்றுக்கு, பல முறை மனுக்கள் அனுப்பியும் பயன் இல்லை.அரசு தேர்வுத்துறை, மார்ச்சில் நடக்கவுள்ள பொதுத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை, சேகரிக்க துவங்கியுள்ளது.
தனியார் பள்ளிகள், மாணவர் விபரங்களுடன், அங்கீகார நகல் கடிதத்தையும் வழங்க வேண்டும். ஆனால், அங்கீகாரம் வழங்கப்படாததால், தேர்வுத்துறைக்கு ஆவணங்கள் அனுப்ப முடியாமல், பள்ளிகள் பரிதவிப்பில் உள்ளன.இதுகுறித்து, தனியார் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறுகையில், ''அங்கீகாரம் நீட்டிப்பு கோரி, தனியார் பள்ளிகள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தும், இன்னும் அங்கீகாரம்வழங்கப்படவில்லை. அதனால், பொதுத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை தேர்வுத்துறைக்கு கொடுப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக