யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/12/16

இண்டர்நெட்டில் உள்ள உங்களது விபரங்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை!!!

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர்மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளைதற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில
நொடிகள்அல்லது நிமிடங்களில் முடித்துவிடுகிறோம்.
இண்டர்நெட்நம் உலகையே சுருக்கிவிட்டது. எத்தனைஆயிரம் கிலோமிட்டர் தூரத்தில் இருந்தாலும் அருகில் இருப்பது போன்றஉணர்வு உள்ளது.

ஆனால் எந்த அளவுக்கு இண்டர்நெட்நமக்கு பாசிட்டிவ் ஆக இருக்கின்றதோ அதேஅளவுக்கு அதனால் நமக்கு ஒருசிலஆபத்தும் உள்ளது. ஹேக்கர்களின் கைவரிசையால்நமது பொருட்களுக்கு இழப்பு ஏற்படுவதோடு நம்முடையபர்சனல் விஷயங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

என்னதான்ஆண்ட்டி வைரஸ் வைத்திருந்தாலும், பாஸ்வேர்டுகளைசிக்கலாக வைத்திருந்தாலும் ஹேக்கர்கள் ஏதாவது ஒரு கேப்பில்உள்ளே புகுந்து நமது டேட்டாக்களை நாசமாக்கிவ்டுகின்றனர்.
இந்நிலையில்தற்போது நமக்கே தெரியாத ஒருசிலஇடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நம்முடையதகவல்களை அழிக்க, தற்போது ஒருசிறந்த வழி கிடைத்துள்ளது.

சுவீடன்நாட்டை சேர்ந்த இரண்டு டெவலப்பர்கள்இதற்கென ஒரு பிரத்யேக இணையதளத்தைஉருவாக்கியுள்ளனர். Deseat.me என்ற இணையதளம் உங்களுடைய தகவல்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை உங்கள்கண்முன் நிறுத்தும்.

அவற்றில்தேவையில்லாத இணையதளங்களில் உங்கள் தகவல் இருப்பதைநீங்கள் அறிந்தால் உடனே அவற்றை டெலிட்செய்துவிடலாம். இதற்கு ஒருசில எளியவழிமுறைகளை கடைபிடித்தாலே போதும். அவை என்னவென்றுதற்போது பார்ப்போம்
இந்த இணையதளத்தை உபயோகிக்க உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட்இருந்தால் போதும். உங்களுடைய கூகுள்அக்கவுண்டில் லாக்-இன் செய்தபின்னர் Deseat.me இணையதளத்தை ஒப்பன் செய்யுங்கள்.
அதில் நீங்கள் பயன்படுத்தும் செயலிமுதல் இணையதளங்கள் வரை திரையில் வரும். அதில் நீங்கள் அடிக்கடி உபயோகிக்காதஅல்லது அறவே உபயோகிக்காத இணையதளங்கள்இருந்தால் அதை உடனே டெலிட்செய்துவிடுங்கள். அந்த இணையதளத்தில் உங்களைபற்றிய தகவல்கள் மறைந்துவிடும்.

தற்போதைக்குஅனைத்து விதமான இணையதளங்களுக்கும் சப்போர்ட்செய்யும் வகையில் இந்த Deseat.me இல்லைஎன்றாலும் ஃபேஸ்புக் போன்ற பெரிய இணையதளங்களுக்குசப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.

ஆயினும்வரும் காலத்தில் இந்த இணையதளம், சின்னசின்ன இணையதளங்களில் உள்ள நம்முடைய விபரங்களைகண்டுபிடிக்கும் திறன் வாய்ந்ததாக செயல்படவைக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக