யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/12/16

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு காட்டாயமில்லை: மத்திய அரசு அதிரடி

குறைந்தமாதம் ஊதியம் பெறுபவர்களுக்கு இ.பி.எஃப். எனப்படும்தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லைஎன்ற அதிரடியான
உத்தரவை மத்திய அரசுபிறப்பித்துள்ளது.
இதன்படிஅமைப்பு சார்ந்த தொழில் துறைகளில்15,000 ரூபாய்க்கும் குறைவாக மாதம் சம்பளம்பெறுபவர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பதுகட்டாயமில்லை. ஆனால் வேலை அளிக்கும்நிறுவனம் தனது பங்கை செலுத்தவேண்டும் என்பது எந்த மாற்றமும்செய்யப்படவில்லை.

பெரும்பாலானநிறுவனங்கள் தொழிலாளர்களிடம் இருந்தே இதற்கான தொகையைபிடித்தம் செய்வதால் அவற்றிற்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசின் இந்த முடிவால்ஓய்வு பெறும் தொழிலாளர்களின் சேமிப்புகேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் 60 ஆண்டுகாலஇ.பி.எஃப். முறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதாகஇந்த முடிவு அமைந்துள்ளது எனதொழிற்சங்க பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


மத்தியஅரசின் முடிவால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  சட்டபூர்வ அந்தஸ்தை இழக்கிறது. வருங்கால வைப்பு நிதிக்கான குறைந்தபட்சபங்களிப்பை 12 சதவிதத்தில் இருந்து குறைப்பதற்கான சட்டத்திருத்தத்தைமத்திய தொழிலாளர் அமைச்சகம் தயார் செய்து வைத்துள்ளது. ஆனால் அரசியல் எதிர்ப்பு காரணமாகநாடாளுமன்றத்தில் அதை தாக்கல் செய்யமுடியாமல் மோடி அரசு நிலுவையி்ல்வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக