யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/1/17

CPS NEWS:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம்
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து,
ஊதிய குழு அமைத்தல்,
இடைக்காலநிவாரணம் 20%

உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்ட ம் அறிவிப்பு

TNGEA மாநில மாநாடு அறைகூவல் தீர்மானங்கள்:

1. CPS ரத்து

2. 8 வதுஊதியக்குழு அமைக்க

3. இடைக்காலநிவாரணமாக 20% வழங்க

4. சிறப்புகாலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்குவரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க

5. Outsourcing,  daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில்நிரப்ப

6. சாலைப்பணியாளர்களின்41 மாத பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க

தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

மேற்கண்டகோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

02.02.2017 மாவட்டதலைநகரங்களில் உண்ணாவிரதம்

05.03.2017 மாவட்டதலைநகரங்களில் பேரணி


18.03.2017 /25.03.2017 வேலைநிறுத்த ஆயத்த மாநாடு


25.04.2017 காலவரையற்றவேலை நிறுத்தம்

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுநடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற
இணையதளத்தில் ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். மேலும் வரும் மே7ம் தேதி இந்த தேர்வுநாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.

இதற்கானவிண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1400ம் பிற்படுத்தப்பட்ட மற்றும்பழங்குடியினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கட்டணங்களை செலுத்தபிப்ரவரி 1ம் தேதியே கடைசியாகும்.

இந்த தேர்வு முடிவுகள் வரும்ஜூன் மாதம் முதல் வாரத்தில்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள்தங்களின் ‘பான் கார்டு’ எண்ணைவரும் அடுத்த மாதம் பிப்ரவரி28-
ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய வருமான வரித்துறைஉத்தரவிட்டுள்ளது.


கருப்புபணத்தை தடுக்கும் விதமாக, செல்லாத ரூபாய்நோட்டு  அறிவிப்புவெளியான கடந்த ஆண்டு நவம்பர்8ந் தேதிக்கு முந்தைய வங்கி , தபால்நிலையடெபாசிட்களையும் ஆய்வு செய்ய வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.

அதாவது2016ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில்இருந்து நவம்பர் 8-ந்தேதிக்கு முன்பு வரை வங்கிகள், தபால் நிலையங்களில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

நாட்டில்கருப்பு பணத்தையும், கள்ளநோட்டுகளையும் ஒழிக்க பிரதமர் மோடிகடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதுஎன அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புபணத்தைபிடிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில் ரூபாய் நோட்டு தடைஅறிவிப்பு காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்குகளில்லட்சக்கணக்கில் திடீரென செய்யப்பட்ட டெபாசிட்கள், சேமிப்பு கணக்குகளில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் டிசம்பர் 30ந்தேதிவரை ரூ.2.5 லட்சம் வரைசெய்யப்பட்டடெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கருப்புபணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி, விரைவுப்படுத்தும் விதமாக  வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள் கணக்கில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் ரூ.2.5 லட்சம்வரை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அவர்களின் கணக்கில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நவம்பர்9 ந்தேதி வரை செய்யப்பட்ட டெபாசிட்குறித்தும்ஆய்வு செய்ய வருமான வரித்துறைதிட்டமிட்டுள்ளது.

இதற்காகவங்கிகள், தபால்நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களின் பான்கார்டுஎண், படிவம் 60 ஆகியவற்றை கேட்டு வருமான வரித்துறைஉத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும்வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் தங்களின் பான்கார்டு எண்ணை அளிக்கவும் வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்புக்கு பின் ஒருவர் கணக்கில்செய்யப்பட்ட டெபாசிட் குறித்தும், செல்லாத ரூபாய் அறிவிப்புக்குமுன் அவர்கள் கணக்கில் இருப்பில்இருந்த பணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறைமுடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து வங்கிகள் , தபால்நிலையங்களுக்கும்கடந்த 6-ந்தேதி நிதி அமைச்சகத்தின்ேநரடி வரிகள் வாரியம் அதிகாரப்பூர்வஉத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, வங்கி, தபால்நிலையங்களில் பான்கார்டு எண் கொடுக்காதவர்கள் தங்கள்பான்கார்டு எண்களை உடனடியாக கொடுக்கவேண்டும். சில வங்கியில் கணக்குதொடங்கும்போது, பான்கார்டு முறை அறிமுகம் இல்லாதநிலையில் இருந்தாலும், அவர்களும் இப்போது தங்களின்  பான்கார்டு எண்களை உடனடியாக வங்கியில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பற்றி ஆய்வு.

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள், எந்த பள்ளிகளில்
படிக்கின்றனர்என்பது குறித்த விவரங்களை சேகரிக்ககேரள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 அரசு சம்பளத்தை வாங்கும், அரசு பள்ளி மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுபள்ளிகளில்தான் படிக்க வைக்கவேண்டும் என்றுஅலகாபாத்உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை பின்பற்றிகேரளாவிலும் நடவடிக்கை மேற்ெகாள்ள மாநில அரசு தீர்மானித்துள்ளது.


இதையடுத்துஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர்என்பது குறித்த விவரங்களை சேகரிக்கமாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாநில கல்வித்துறை இயக்குனர்உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவுக்குகேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குழந்தைகளை இந்த பள்ளியில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தசட்டத்தில்இடம் இல்லை. தங்கள் குழந்தைகள்எந்த பள்ளியில் படிக்க வைப்பது என்பதுபெற்றோரின் உரிமையாகும் என்று அரசு பள்ளிஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

How To » 1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி?

1ஜிபி தினசரி வரம்பை மீறிஜியோ ஹை-ஸ்பீட் தரவுபயன்படுத்துவது எப்படி? ரிலையன்ஸ் ஜியோவின்ஹேப்பி நியூ இயர் சலுகையின்கீழ்
மார்ச் 31 வரை இலவச டேட்டாவைவாடிக்கையாளர்கள் தினசரி பயன்பாடு எல்லையுடன்பெற்று வருகிறார்கள்.


2016- நமக்கெல்லாம்பொதுவாக நடந்த ஒரு நல்லவிடயம் தான் - ரிலையன்ஸ் ஜியோஅறிமுகம். இதுவரை ஜியோ 4ஜிசிம் கார்ட் ஒன்றை கையில்பெறாதவர்கள் தவிர்த்து பிற அனைவருமே ஜியோ2016-ஆம் ஆண்டில் நடந்த ஒருநல்ல விடயம்என்பதை ஒற்றுக்கொள்வார்கள். அதிலும் மிக முக்கியமாகஜியோ வெல்கம் ஆபர் முடிவடையும்நேரத்தில் மேலும் 3 மாதங்களுக்கான அதன் இலவச சலுகைகளைநீட்டிக்கும் (மார்ச் 31, 2017 வரை) வண்ணம் ஹேப்பிநியூ இயர் ஆபர் வழங்கியது.2017-ஆம் ஆண்டிற்க்கும் சேர்த்தேஒரு நல்ல விடயமாக அமைந்ததுஆனால் பயனர்கள் அனைவருக்கும் ஜியோவின் ஹேப்பிநியூ இயர் ஆபரில் ஒருசின்ன வருத்தம் காத்திருந்தது. அதுதான் 1ஜிபி என்ற தினசரிடேட்டா லிமிட் அதாவது ஒருநாளைக்கு இவ்வளவுதான் அதிவேக இண்டர்நெட் என்றதரவு எல்லை. ஆனாலும் கூட1ஜிபி என்று வழங்கப்பட்டுள்ள தினசரிரிலையன்ஸ் ஜியோ 4ஜி வரம்பைமீறி ஜியோ ஹை-ஸ்பீட்தரவு பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. அதெப்படி என்பதை பற்றிய தொகுப்பேஇது.

பூஸ்டர்பேக் 1ஜிபி என்ற தரவுஎல்லையை மீறி அதிக வேகத்தில்மீண்டும் உலவ நீங்கள் ரிலையன்ஸ்ஜியோ வழங்கும் பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்தமுடியும். இதற்கான செலவாக நிறுவனம்6ஜிபி பேக் ரூ.301/- என்றும்மற்றும் 1ஜிபி பேக் ரூ.51/- என்றும் நிர்ணயித்துள்ளது. இதை ஆக்டிவேட் செய்வதும்மிகவும் எளிமையே.!

வழிமுறை#01

உங்கள்மொபைலில், மைஜியோ பயன்பாட்டை திறக்கவும். உள்நுழைந்து லாக்-இன் அல்லதுரிஜிஸ்டர் செய்யவும். உங்கள் ஜியோ தொலைபேசிஎண் தான் உங்கள் பயனர்பெயராகும். இப்போது, நீங்கள் ஜியோ பயன்பாடுகளின்ஒரு பட்டியலை பார்ப்பீர்கள் இப்போது மை ஜியோஎன்பதற்கு அருகிலுள்ள ஓபன் என்பதை டாப்செய்யவும்.

வழிமுறை#02

யூஸேஜ்என்பதை டாப் செய்து - டேட்டாஎன்பதை டாப் செய்யவும். நீங்கள்1ஜிபி என்ற டேட்டா எல்லைகடந்து விட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த இதைசெய்ய வேண்டும். ஜியோ வேகம் எப்போதுமேநிலையானதாக இருக்காது ஏனெனில் மெதுவான இணைப்பில்இருக்க முடியும். ஆக டேட்டா எல்லையைசோதிப்பது அவசியமாகிறது.

வழிமுறை#03


நீங்கள்வரம்பை கடந்து விட்டீர்கள் என்றால், பேக் ஐகானைடாப் செய்து மீண்டும் மெயின்ஸ்க்ரீனுக்கு திரும்பி போகவும். ரீசார்ஜ் ஐகானை டாப் செய்யவும், பின்னர் பூஸ்டர் ஐகானை டாப்செய்யவும். நீங்கள் விரும்பும் திட்டத்தைதேர்வு செய்து வலது பக்கத்தில்விலை ஆப்ஷனை டாப் செய்யவும். அதன் வழியாக நீங்கள் ஜியோமணிஆப்பிற்குகொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு கிரெடிட், டெடிபிட்அல்லது நெட் பேங்கிங் வழியாககட்டணம் செலுத்த முடியும்.வழக்கமான4ஜி வேகம் அவ்வளவு தான்இப்போது நீங்கள் வழக்கமான 4ஜிவேகத்தில் உலவ முடியும். 6ஜிபிபேக் மூலம்நீங்கள் ரூ.4 சேமிக்க முடியும், அதன் தரவு எல்லை தினமும்மறுகட்டமைக்கப்படும் மற்றும் இந்த பேக்28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்குத் தேவை புள்ளிவிவரம் மட்டுமே,வகுப்பறை அல்ல!

'நமதுவகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனைபேர் நூற்றுக்கு
நூறு, ஸ்டேட் ரேங்க்எத்தனை பேர், கடந்த வருடத்தைவிடஎத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... எனஎண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.


இந்தப்புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள்ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒருதலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும்உயரிய இடம்.

அதற்குமனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுமுடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

உலகின்எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போதுஇத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது.

 மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையைஅடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வுமுடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.

அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம்புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டுமுழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தைஅவமதிக்கும் அந்தக் கணம், அவன்பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.


 இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டுநமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கவேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க்வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல்விடப்படும்!''

RMSA POSTS PAY ORDER FOR 6872 BT & 1590 PG POSTS FOR 3 MONTHS ( FROM JAN'17 TO MARCH'17)

13ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டு ஏற்கப்படும்: பெட்ரோல் முகவர்கள் சங்கம்!!!

கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படாதுஎன்ற முடிவை பெட்ரோல்
முகவர்கள்சங்கம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

அதன்படி, ஜன., 13 ம் தேதி வரைகிரேடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்திபெட்ரோல், டீசல் பெறலாம்.

1 சதவீதவரி

ரூபாய்நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகுமத்திய அரசு ரொக்கமில்லா பரிவர்த்தனைஅதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. பெட்ரோல் பங்குகளில் வங்கி கிரெடிட், டெபிட்கார்டுகளை பயன்படுத்தினால் 0.75 சதவீதம் விலை குறைப்புஅளிக்கப்படும் என அறிவித்தது. இதற்கிடையே, ஹச்.டி.எப்.சி., ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்டசில வங்கிகள் பெட்ரோல் பங்குகளின் மின்னணு பரிவர்த்தனைக்கு 1 சதவீதவரியை விதித்தன. மேலும், அவர்களின் வங்கிகணக்கில் பணத்தை தாமாதமாக பரிமாற்றம்செய்தன. இதனால், தங்கள் வருமானம்பாதிக்கப்படுவதாக கூறிய பெட்ரோல் முகவர்கள்சங்கம் இன்று முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளை வாங்க மாட்டோம் எனஅறிவித்தது. இந்நிலையில், அந்த முடிவு தற்காலிகமாகஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முடிவுஒத்திவைப்பு

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க தலைவர், கே.பி.முரளி கூறியதாவது:

மின்னணுபரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் 1 சதவீத வரியால் பெட்ரோல்பங்கு முகவர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பான, எங்கள்பிரச்னைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம்தெரிவித்தோம். அவர்கள் மத்திய அமைச்சருடன்பேசினார்கள். பின்னர், ஜன.,13 வரை 1 சதவீதவரி பிடித்தம் செய்யப்படாது என அவர்கள் உறுதிஅளித்துள்ளனர். அதை ஏற்று எங்கள்முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். ஜன.,13ம் தேதிவரை கார்டுகள் ஏற்கப்படும். அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவுகாண முயற்சிப்போம். பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் கிரெடிட், டெபிட் கார்டுகள் வாங்கமாட்டோம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

SERVICE REGISTER - ல் (SR) விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது

*பணிப்பதிவேட்டில் விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது*
பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளில் உள்ள
1. ந.க. எண் / தேதி
2. வரிசை எண்
3. பதிவு எண்
4. வழங்கப்பட்ட தேதி
5. தேர்ச்சி பெற்ற தேதி
6.பணியேற்ற தேதி மற்றும் மு.ப/பி.ப
7.விடுவித்த தேதி மற்றும் மு.ப/பி.ப
*மேற்கண்ட அனைத்தையும் உங்களிடம் உள்ள சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்*
💥 அதே போல் துறை சார் அலுவலரின் கையொப்பம் முத்திரை இல்லாத பதிவுகளை சுட்டிக்காட்டவும்.
💥 வாரிசுதாரர் பெயர்களை பதிவு செய்யும் பொழுது பின்புறம் இரண்டு ஆசிரியர்களிடம் சாட்சிக் கையெழுத்து வாங்கிய பின் தங்களின் கையொப்பத்தையும் செய்யவும்.
💥 ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு பெற்றதற்கான பதிவுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளதா?
💥 பணி நியமனம் பெற்றது முதல் 31.12.2016 வரை பணிப்பதிவேடு சரிபார்த்தல் என்ற பதிவு தொடர்ச்சியாக உள்ளதா...?
💥 ஈட்டிய விடுப்பு கையிருப்பை கணக்கீடு செய்ததில் தவறுகள் ஏதேனும் உள்ளதா..? (365÷21.47=?)
💥 அதே போல் உயர் கல்வி பயின்ற அனைத்து படிப்பிற்கும் பட்டயச்சான்றினை (கான்வகேசன்) பதிவு செய்வது அவசியம் ஆகும்.
📡📡📡📡📡📡📡📡
🔴 *பணிப்பதிவேட்டினை சரிபார்ப்பதற்கான check list -ஐ கொண்டு சரிபார்க்கும் பொழுது*
10th, 12th,
DTEd,
UG degree,
PG degree,
B.Ed,
M.phill/M.Ed,
போன்ற சான்றிதழ்களின் நகல்கள் (அனைத்திற்கும் பட்டயச்சான்று அவசியம்)
*{ இதுவரை பதிவு செய்யாத கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஒரிஜினல் சான்றிதழையும், பதியப்பட்டதை சரிபார்க்க நகலினையும் கொண்டுசெல்லவும் }*
🔴 துறை தேர்வு தேர்ச்சி பெற்ற ஆணை,
🔴 CPS / TPF எண்,
🔴 துறை முன் அனுமதி /பின் அனுமதி,
🔴 உண்மைத்தன்மை சான்றிதழ்கள்,
🔴 பணியேற்பு ஆணை,
பணிவிடுப்பு ஆணை,

8/1/17

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பா.வளர்மதி நியமனம்

RTI - CPS-ல் செலுத்திய தொகையினை வரம்பைத்தாண்டி 80CCD(1B)-ல் கூடுதலாகவும் கழிக்கலாம்!

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமைஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில்காலியாக உள்ளன. இவற்றை
பதவிஉயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல்தயாரிக்கப்படுகிறது. எனவே, விதிகளின்படி பணிமூப்புவிபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்குஅனுப்ப, மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


பட்டியல்தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள்ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள்எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர்விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன்ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராயபட்டியல், மூன்று மாதங்களில் இறுதிசெய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதிபட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!

‘பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள்மீது நடவடிக்கை
எடுக்கப்படும்,‘ என தேர்வுத் துறைதுணை lஇணை இயக்குனர் அமுதவல்லிஎச்சரித்தார்.

மாவட்டத்தில்அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொதுத் தேர்வு தொடர்பானஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோஇருதயசாமி தலைமை வகித்தார்.

இதில் அமுதவல்லி பேசியதாவது:

பொதுத்தேர்வில் மாணவர் பட்டியல் (நாமினல்ரோல்) தயாரித்து தேர்வுக்கு முன் அடித்தல், திருத்தல், சேர்த்தல் பணி நடக்கும். இந்தாண்டுமுதல் மாணவர் பெயர்களை தலைமையாசிரியர்தன்னிச்சையாக நீக்க முடியாது. அதற்கான’ஆப்சன்’ ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்கடைசி வாய்ப்பிற்கு பின் மாணவர்களின் மதிப்பெண்சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது. எனவேபெயர், பிறந்த தேதி உட்படஅனைத்து விவரங்களையும் கவனமாக பதிவு செய்யவேண்டும். அதற்கு பின்னரும் தவறுஏற்பட்டால் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில்மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு மற்றும் 196 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். 

இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்

கார், பைக், ஏசி, 2 சிலிண்டர்கள்வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை ரத்துசெய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 1.20
கோடி கார்டுதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 33, 973 ரேஷன் கடைகள் மூலம்இலவச அரிசி, குறைந்த விலையில்துவரம், உளுந்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் உணவுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த பொருட்கள்இனி மானிய விலையில் கிடைப்பதுபடிப்படியாக நிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்தியஅரசு நாடு முழுவதும் உணவுப்பாதுகாப்புசட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டியது. ஜெயலலிதாமுதல்வராக இருந்தபோது அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா உயிருடன்இருந்தபோது மக்கள் நலனுக்கு எதிரானமத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புதெரிவித்தார். அந்த வகையில் உணவுபாதுகாப்பு திட்டமும் ஒன்று.
ஓபிஎஸ்ஆதரவு: ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எந்தெந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரோ, அந்த திட்டங்களுக்கு எல்லாம்ஓபிஎஸ் தலைமையிலான அரசு தற்போது மறைமுகமாகஆதரித்து வருகிறது. அந்த வகையில் தற்போதுமத்திய அரசின் உணவுப் பாதுகாப்புதிட்டத்தில் இணைந்துள்ளது. மத்திய அரசின் உணவுப்பாதுகாப்பு திட்டப்படி, குடும்பத்தில் நபர் ஒருவருக்கு தலா5 கிலோ அரிசி வழங்க வேண்டும். இதுவரை ஒரு குடும்பத்தில் எத்தனைபேர் இருந்தாலும் 20 கிலோ அரிசி மட்டுமேவழங்கப்பட்டது. ஆனால் உணவு பாதுகாப்புச்சட்டப்படி ஒரு குடும்பத்தில் 6 பேர்இருந்தால் அவர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கவேண்டும். இதனால் வழக்கத்தைவிட கூடுதலானஅரிசி கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம்தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
மக்களைகடனாளியாக்கும் முடிவு: தமிழகத்தில் வறுமைகோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்அரிசியின் விலையை மத்திய அரசுஉயர்த்தியது. அதன்படி ஒரு கிலோரூ.8.30ல் இருந்து ரூ.21.40 ஆக அதிகரிக்கப்பட்டது. திடீரென இருமடங்கு விலைஉயர்த்தப்பட்டதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமைமேலும் அதிகரித்தது. தற்போது அரிசிக்காக மட்டும்தமிழக அரசு சுமார் ரூ.2,700 கோடி செலவிடுகிறது. இந்த விலையில், அரிசிவழங்குவதால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 60 சதவீதகுடும்ப அட்டைத்தாரர்களுக்கு அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளதாக பகீர்தகவல் வெளியாகி உள்ளது.
யார் யாருக்கு அரிசி கிடைக்காது ரேஷன்கடைஊழியர்கள் கூறியதாவது: ஒரு வீட்டில் 2 சிலிண்டர்கள், கார், பைக், ஏசி வைத்திருப்பவர்களுக்குரேஷன் அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளது. இதற்காகஉணவுப்பொருள் வழங்கல்துறை ரகசிய சர்வே நடத்திஉள்ளது. அதில் கிடைத்துள்ள பட்டியலைவைத்து ரேஷன் கார்டை என்பிஎச்எச்(non priority house holder), பிஎச்எச்(poor house holder) என 2 பிரிவுகளாக பிரித்துள்ளனர். சிலிண்டர், ஏசி, பைக், கார்வைத்திருப்பவர்கள் என்எச்எச் பிரிவிலும், எதுவும் இல்லாதவர்கள் பிஎச்எச்பிரிவிலும் சேர்க்கப்படுவார்கள். இதற்காக 3 படிவங்கள் தயாரித்து அதை எங்களிடம் வழங்கிவீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும்படிரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
முதல் படிவத்தில், குடும்பத்தில் உள்ளவர்களில் யார், யாரெல்லாம் ஆதார்கார்டு வாங்கி உள்ளனர் என்றவிவரமும், 2வது படிவத்தில் வீட்டில்ஏசி, கார், பைக், 2 சிலிண்டர்உள்ளதா என்ற விவரமும், 3வதுபடிவத்தில் இதுவரை ஆதார் கார்டுவாங்காத நபர்கள் அவர்களின் முகவரில்வசித்து வருகின்றனரா என்ற விவரமும் பதிவுசெய்யப்படுகிறது. கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் மிகரகசியமாகவும், மறைமுகமாகவும் நடக்கிறது. கணக்கெடுப்பின் இறுதியில் கார், பைக், ஏசி, 2 சிலிண்டர் வைத்திருக்கும் குடும்பத்தினரை NPHல் இணைத்து அவர்களுக்குஅரிசியை ரத்து செய்ய அரசுமுடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள2 கோடி அட்டைத் தாரர்களில் சுமார்1.20 கோடி கார்டுகளுக்கு அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னையில்  12 லட்சம்பேருக்கு அரிசி ‘கட்’

தமிழகத்தில்முதல்கட்டமாக சென்னையில் இப்பணிகள் வேகமாக நடக்கிறது. சென்னையில்உள்ள 20 லட்சம் ரேஷன் கார்டுகளில்60 சதவீதம்(12 லட்சம்) கார்டுகளுக்கு அரிசிரத்தாகும் என தெரிகிறது. அரசின்இந்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள் கடுமையாகபாதிக்கப்படுவார்கள் என்றனர். 

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி

தமிழகம்முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும்
வித்தியாசமான கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு அரசு பள்ளியில்இருந்தும் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எளியபொருட்களை வைத்து அறிவியல் உருவாக்கங்களைசெய்து காண்பிக்க வேண்டும். முதல் 3 இடங்களை பெறும்அணிக்கு தலா 1,500, 1,000, 500 பரிசு வழங்கப்படும். ஒவ்வொருமாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு

தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும்சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. இவற்றில்,
தங்கிபடிக்கும், மாணவ, மாணவியர், 10ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுத்தால், அவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்என, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுக்கும்மாணவ, மாணவியருக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை மாணவ, மாணவியர், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

CPS : மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தமுடிவு செய்துள்ளனர். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்சங்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழுமீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாநில மாநாடு இந்த மாதம்6-ம் தேதி முதல் 8-ம்வரை திருவண்ணாமலையில் நடக்கிறது.


மாநாட்டுக்குதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாநிலத் தலைவர் தமிழ்செல்வி தலைமைதாங்கினார். மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடுதலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர்கணேசன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாநிலஅரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டில்இதுவரை 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வரும்8-ம் தேதி ஒரு லட்சம்அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மோசஸ்,

 வணிகவரித்துறை சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன் உள்படபலர் கலந்து கொண்டனர்.


மாநாடுகுறித்து தமிழ்செல்வி கூறுகையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதில்லை. புதியபென்சன் திட்டத்தை அரசு ரத்து செய்யவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி10-ம் தேதி முதல் 19-ம்தேதி வரை வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டோம்.

 இதற்கிடையில் சட்டசபையில் 110 விதிகளின் கீழ் தொகுதிப்பூதியம், மதிப்பூதியம்ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். பென்சன் திட்டத்துக்கு வல்லுநர்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதையமுதல்வர் ஜெயலலிதா. அதில் 8 அறிவிப்புக்கு அரசாணைவெளியிடப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்குகாரணமாக சில அரசாணைகள் நிறைவேற்றப்படவில்லை.

தற்போதுசங்கத்தின் 12-வது மாநில மாநாடுதிருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இந்தமாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குபொங்கல் போனஸ் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து விட்டு பழைய பென்சன்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஊதியக்குழுவை அமைக்கவேண்டும். அரசுத் துறைகளில் உள்ளகாலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தைவறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(JACTO-GEO) என்ற அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின்தலைவர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில்ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அரசு ஊழியர்கள் வட்டாரங்கள் கூறுகையில், "ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்துஅ.தி.மு.க அரசு இருந்துவருகிறது. அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில்காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய பென்சன் திட்டம்ரத்து செய்யப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்குஊதிய மாற்றம் ஏற்படும் போதுதமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியமாற்றம் ஏற்படுத்தப்படும். சத்துணவு, அங்கன்வாடியில் கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணியில் சேருபவர்களுக்காக விதிகள்தளர்த்தப்படும். அரசு ஊழியர்கள் சங்கநிர்வாகிகளிடம் அவ்வப்போது கலந்து ஆலோசிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால்தான் கடந்த பிப்ரவரியில் அரசுக்குஎதிராக போராட்டத்தில் குதித்தோம். அப்போது நிதியமைச்சராக இருந்தஓ.பன்னீர்செல்வம், சங்கநிர்வாகிகளிடம் 9.2.2016ல் 2 மணி நேரம்சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஜெயலலிதாவிடம்சொல்லி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள்நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தற்போதுஓ.பன்னீர்செல்வம் முதல்வராகஇருக்கிறார். இப்போது அவர் யாரிடமும்கேட்க வேண்டிய அவசியமில்லை. புதியபென்சன் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டவல்லுநர் குழு சங்க நிர்வாகிகளிடம்கலந்து ஆலோசித்தப் பிறகும் எந்த அறிவிப்பும்வெளியிடப்படவில்லை. முதல்வரையும், அமைச்சர்களையும் குறைச் சொல்வதைவிட சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர். குறிப்பாக நிதித்துறை, நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால்அறிவிக்கப்பட்ட அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. குறிப்பாக நிதித்துறையைசநிதித்துறையை சாராத பதவி உயர்வு, சீனியாரிட்டி, பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால் லட்சக்கணக்கானஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லைஎன்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுபோராட்ட காலங்களில் ஏற்படுத்தப்படும். அந்த அமைப்பு இப்போதும்ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

பி.எஃப். பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) கீழ் பயன்பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும், தங்களுக்கு கிடைக்கும் சேவைகள் தொடர்வதற்கு தங்களது ஆதார் அடையாள எண்ணை இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இபிஎஃப்ஓ அமைப்பின் ஆணையர் வி.பி.ஜாய், தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இபிஎஃப்ஓ அமைப்பின் சேவைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனில் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும் வரும் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அல்லது ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள படிவத்தின் நகலை அளிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து, கால அவகாசம் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
நாடு முழுவதும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 4 கோடி சந்தாதாரர்களும் உள்ளனர்.
இந்நிலையில், ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது குறித்து நாடு மழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 120 மண்டல அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

TRB:உதவிப் பேராசிரியர் நேரடி நியமன எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு!

அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
இதில் தகுதி பெற்றவர்களுக்கு வருகிற 19,20 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பை கடந்த 2014 ஆம் ஆண்டு டிஆர்பிவெளியிட்டது. அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக, இந்தப் பணியாளர் தேர்வுப் பணிநிறுத்திவைக்கப்பட்டது.அதன் பிறகு வயது உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

விண்ணப்பதாரருக்கான அதிகபட்ச வயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 22-10-2016 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.மொத்தம் 48,286 பேர் விண்ணப்பித்ததில் 27,635 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.இந்தத் தேர்வுக்கான முடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய அனைவருக்குமான முடிவுகள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதனுடன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதகுதிவாய்ந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.ஒரு இடத்துக்கு இருவர் என்ற அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பானது செனனை கிழக்கு தாம்பரத்தில் பாரத் மாதா சாலையில் அமைந்துள்ள ஜெய் கோபால் கரோடியா தேசிய உயர்நிலைப் பள்ளியில் வருகிற 19, 20 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.இதற்கான அழைப்புக் கடிதத்தை டிஆர்பி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்புக் கடிதம் தனியார் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.