மக்கள் எதிர்ப்பு காரணமாக பலத்த பாதுகாப்புக்கு நடுவே ரேக்ளா பந்தயம் கோவையில் நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் விரைந்து வந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.
இதற்கும் மக்கள் இடையூறு செய்ய வாய்ப்பிருப்பதாக கருதிய அரசு பந்தய பாதையின் இருபுறமும் போலீசாரை குவித்திருந்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற காளைகளை பயன்படுத்தும் விளையாட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கேட்டு மக்கள் போராடி வரும் நிலையில், எப்படியாவது இந்த *ஒற்றுமையை கலைத்துவிட வேண்டும்* என்ற நோக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
இதனால் கோபமடைந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் பைக்குகளில் அங்கு விரைந்து வந்து ரேக்ளா பாதையில் அமர்ந்து தர்ணா நடத்தி வருகிறார்கள். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார்கள். இதனால் போலீசாரால் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த இடமே பரபரப்பாக காட்சியளிக்கிறது.