யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/1/17

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இல்லை !!


மக்களை மதிக்காமல் ரேக்ளா பந்தயம்.. இளைஞர்கள் ஆவேசப் போராட்டம்.. கோவையில் பதட்டம் !!

மக்கள் எதிர்ப்பு காரணமாக பலத்த பாதுகாப்புக்கு நடுவே ரேக்ளா பந்தயம் கோவையில் நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் விரைந்து வந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.

இதற்கும் மக்கள் இடையூறு செய்ய வாய்ப்பிருப்பதாக கருதிய அரசு பந்தய பாதையின் இருபுறமும் போலீசாரை குவித்திருந்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற காளைகளை பயன்படுத்தும் விளையாட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கேட்டு மக்கள் போராடி வரும் நிலையில், எப்படியாவது இந்த *ஒற்றுமையை கலைத்துவிட வேண்டும்* என்ற நோக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
இதனால் கோபமடைந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் பைக்குகளில் அங்கு விரைந்து வந்து ரேக்ளா பாதையில் அமர்ந்து தர்ணா நடத்தி வருகிறார்கள். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார்கள். இதனால் போலீசாரால் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த இடமே பரபரப்பாக காட்சியளிக்கிறது.

TAMIL NADU GOVERNMENT CONDUCT RULES !!

13/1/17

ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று வெளியாகிறது தீர்ப்பு?

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனால் தமிழகத்தில் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. இது தொடர்பான வழக்கு
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த 
நிலையில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அப்போது அனைத்து தரப்பும் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சார்பாக ஆஜரான பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியும் தமது வாதத்தை 11 பக்கமாக எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முன்னதாக நடைபெற்ற வாதத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. பசுவிற்கு வலிக்கும் என்பதற்காக பால் கறக்காமலா இருக்கிறோம் என மத்திய அரசு வாதம் முன் வைத்தது. ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு கிடையாது, அது ஒரு திருவிழா என்றும் வாதம் செய்தனர்.
இந்த வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வெளியாகும் என்று சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே கோர்ட் உத்தரவு வரும் வரை அவசர சட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.

நேற்று முன்தினம் மாலை, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனில் மாதேவ் , 'தமிழ் மக்களின் கலாசாரத்திற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும் .ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மத்திய அரசு காத்திருக்கிறது' என கூறிவிட்டார். எனவே அனவைரது எதிர்பார்ப்பும் சுப்ரீம் கோர்ட் மீது உள்ளது. காளையை காட்சி விலங்காக மாற்றிய சட்டத்தில் திருத்தம் செய்யாத நிலையில், உச்சநீதிமன்றம் வாதத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக வழங்குமா என்று தெரியவில்லை.

மருந்து சீட்டுகளை கைகளால் எழுத டாக்டர்களுக்கு தடை!!!

வங்கதேசத்தில், டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் எழுதி கொடுக்கும் மருந்துகளின் பெயர்கள் என்னவென்றே தெரியாத அளவிற்கு அவர்களின் கையெழுத்து உள்ளது. இதனால் மருந்து கடைக்காரர்களுக்கும் மருந்துகளின் பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து வங்கதேச கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‛இனி டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும்.அதையும் மீறி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தால் மருந்து விவரங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாக எழுத வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

மேலும் சுகாதார துறையினர் இதை கண்காணித்து 3 மாதத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு அறிமுகம்!!!

பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை போடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர்.

’டிஸ்லெக்ஷியா’ - வாசித்தல் குறைபாடு, ’டிஸ்கிராபியா’- எழுதுவதில் குறைபாடு, ’டிஸ்கால்குளியா’ - கணக்கு போடுதல் குறைபாடு, ’டிஸ்பிராக்சியா’, ’டிஸ்பேசியா’ என ஐந்து வகையாக, கற்றல் குறைபாடுகள் உள்ளன.

இவற்றில், வாசித்தல், எழுதுதல், மற்றும் கணக்கு போடுதல் தொடர்பான குறைபாடுகளே பெரும்பான்மையாக பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இதனைக் கண்டறிந்து, அதற்கான பயிற்சி அளித்து, மாணவர்களை, மேம்படுத்தவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கற்றல் குறைபாடுள்ளவர்கள், மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், ஓரளவு மட்டுமே கல்வியில் பின்தங்கி இருப்பவர்களாக துவக்கத்தில் காணப்படுவர். இதனை சரிசெய்யாமல் விடுவதால், அடுத்தடுத்த வகுப்புகளில், அவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, இக்குறைபாடுகளுக்கு போதியளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ’ஆல்பாஸ்’ முறையினால், இவ்வாறு கற்றலில் பின்தங்கும் மாணவர்கள் குறித்தும் பெரிதானதொரு விழிப்புணர்வு இல்லை. இதனால், பொதுத் தேர்வு வகுப்புகளில், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் இல்லாமல், தேர்ச்சி விகிதம் சரிந்தது.

இக்குறைபாடுகளை துவக்கத்திலேயே கண்டறிந்து, அதற்கு முறையே பயிற்சி அளித்து, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, கல்வித்துறை பல்வேறு தேர்வுகளை, நடத்த துவங்கியது. மாணவர்களின், கல்வித்திறன் மட்டுமின்றி, பல்வேறு இணை செயல்பாடுகள் மூலம், அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் அளவிடப்படுகிறது. இந்த அளவுகளைக் கொண்டு, அம்மாணவர் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை ஆசிரியர் பயிற்றுனர்கள் பதிவு செய்தனர்.

ஒருங்கிணைந்த கோவை, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்குட்பட்ட, 22 வட்டாரங்களில் கடந்த 2014-15 கல்வியாண்டில் 40, 2015-16 ல் 39, நடப்பு கல்வியாண்டில், 43 குழந்தைகளும், கற்றலில் பின்தங்கியவர்களாக உள்ளனர்.

மாவட்ட திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ”இதுவரை, ஆசிரியர் பயிற்றுனர்கள், மாணவர்களுக்கு அளித்த பயிற்சி அடிப்படையில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்தனர்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் பட்டியல் தயார்படுத்தப்படவில்லை. ஒரு மாணவர் நுாறு சதவீதம் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை துல்லியமாக கண்டறிய, ’சிறப்பு செயல்திறன் பயிற்சியை, கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இதன்படி, குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருமென கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில், மாணவர்களுக்கு எழுத்து தேர்வு, செயல்திறன் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது, ” என்றார்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - விலங்குகள் நலவாரியம்!!!

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல்

கொடுத்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “பொங்கல் பண்டிகைக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க சாத்தியமில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான வரைவு தீர்ப்பு தயாராக இருந்தாலும் வரும் சனிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்க சாதியமில்லை” என்றது. சுப்ரீம் கோர்ட்டு இவ்வாறு கூறியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்றும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே தடை உள்ளநிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் கடிதம் எழுதிஉள்ளனர். தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிஉள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது போலீசின் கடமை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜாபர் சேட் சஸ்பெண்டு ரத்து - பணி வழங்க கோர்ட் உத்தரவு!

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட் கடந்த ஐந்தரை வருடங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அரசின்

தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ததுடன் வரும் 18ஆம் தேதிக்குள் ஜாபர் சேட்டுக்கு பணி வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவு தெரிவிக்கிறது.

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், தோட்டக்காரர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 61


பணியின் தன்மை: உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், தோட்டக்காரர்.

பணியிடம்: தமிழ்நாடு

வயது வரம்பு: 18 - 30

விண்ணப்பக் கட்டணம்: உதவியாளர் ரூ.100, அலுவலக உதவியாளர் டிரைவர், தோட்டக்காரர்- ரூ.50

கடைசித் தேதி: 23.01.2017

மேலும், கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு http://www.bdu.ac.in/adv/bduntadvtapp2017_v2.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பாதுகாப்பு பணி தேர்வு : ஹால்டிக்கெட்!

நாடு முழுவதும், பிப்ரவரி 5ஆம் தேதி ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் சுமார் 41 மையங்களில் நடைபெறும். பாதுகாப்பு பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்னும் யுபிஎஸ்சி இணையதளத்தில் தங்கள் பதிவெண்ணை சமர்பித்து குறிப்பிட்ட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டில் புகைப்படம் அச்சிடப்படாவிட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் 3 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும் என யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

செயல்படாத ரிசர்வ் வங்கி! : அமர்த்தியா சென் !!

பணமதிப்பழப்பு விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாகவும், ரிசர்வ் வங்கி எவ்வித முடிவையும் தன்னிச்சையாக மேற்கொள்ளாமல் செயலற்றுக் கிடப்பதாகவும், 1998ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பணமதிப்பழிப்பு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி தனது அதிகாரத்தில் தனித்து இயங்கவில்லை என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்களான ஒய்.வி.ரெட்டி மற்றும் பிமல் ஜலன் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இதுகுறித்து இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரிசர்வ் வங்கி தனது அதிகாரத்தில் தன்னிச்சையாக செயல்படவில்லை. பிரதமர் மோடியின் கட்டளையின்கீழ் செயல்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு பழைய நோட்டுகளை மாற்ற முடியாது என்ற கட்டுப்பாடு கூட மோடியின் பரிந்துரையாலேயே ரிசர்வ் வங்கி செயல்படுத்தியிருக்கும்.

கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டு புழக்கத்தையும் கட்டுப்படுத்தவே இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் முந்தைய காலங்களில் கள்ள நோட்டுகள் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் இதில் அவருக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதோடு பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. இந்த நடவடிக்கையால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது ஏழை மக்கள்தான்’ என்று கூறியுள்ளார்.

பாஸ்போர்ட் தொலைத்தால் அபராதம்!

மலேசியாவில் பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், சுற்றுலாவுக்காக லட்ச கணக்கானோர் மலேசியாவுக்கு வந்து செல்கின்றனர்.

இப்படி மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டினர் தங்களது பாஸ்போர்ட்டை தொலைக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

இதுகுறித்து துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடியும், மலேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலியும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து,மலேசிய குடிநுழைவுத்துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில், அவரவர் பாஸ்போர்ட்டை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். இதுவரை பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களுக்கென அபராதம் ஒன்றும் விதிக்கப்படவில்லை. மலேசியாவில், முதல் முறை அடையாள அட்டையைத் தொலைத்தவர்களுக்கு 100 ரிங்கிட்டு (1527.97ரூ), அபராதமும், இரண்டாவது முறை தொலைத்தால் 300 ரிங்கிட்டும் (4583.92ரூ) அபராதமும், மூன்றாவது முறை தொலைத்தால் 1,000 ரிங்கிட்டும் (15280.76ரூ) அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதே முறையில்,பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டில் மட்டும் 44, 528 பாஸ்போர்ட்கள் தொலைந்ததாக புகார்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் சுமார் 32 லட்சம் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொண்டு நிறுவனங்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாதான் முதன்மையாக இருக்கிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, 
குழந்தைகள் நலன், எய்ட்ஸ், கல்வி என சகல துறைகளிலும் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி உதவி கிடைக்கிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் ஆண்டுதோறும் வரும் வருமானக் கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்கவிட்டால், அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி முறையாக கையாளப்படுகிறதா ? நிதியை கண்காணிக்க எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி ஒரு வழக்கில் கேள்வி எழுப்பியது. அதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

அதில், அந்த நிறுவனங்கள், 2014-2015 ஆம் நிதி ஆண்டில் இருந்து தங்களின் ஆண்டு கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

2010-11ம் ஆண்டில் அதிக வெளிநாட்டு நிதி பெற்றிருப்பது டெல்லி (2,016 கோடி). இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு (1,557 கோடி). 2009-10ம் ஆண்டுக் கணக்கின்படி, இந்தியாவிலேயே என்.ஜி.ஓ-க்கள் மூலம் அதிகம் நிதி பெறுவதில் முதல் இடத்தில் இருக்கும் மாவட்டம் சென்னை. 871 கோடி நிதியுதவி பெற்றுள்ளது.

தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. (வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) உரிமம் பெற வேண்டும். கடந்த 2011-2012ஆம் ஆண்டு எஃப்.சி.ஆர்.ஏ. உரிமம் பெறாத தொண்டு நிறுவனங்களை மத்திய உள்துறை ரத்துசெய்து உத்தரவிட்டது.

கடந்த மாதம் வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் 33,000 தொண்டு நிறுவனங்களில், 20,000 தொண்டு நிறுவனங்கள் முறைகேடாக செயல்படுவது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவற்றின் நிறுவனங்களின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகளின் பற்றாக்குறையே காரணம்! – உச்சநீதிமன்ற நீதிபதி

இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறையால் பல வருடங்களாக லட்சக்கணக்கான வழக்குகள் நீதிபெறாமல் தேங்கிக் கிடக்கின்றன என பலமுறை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிவந்துள்ளனர்.


இந்நிலையில், நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லாததால்,வழக்குகள் தேக்க நிலையில் உள்ளது. இது மிகவும் வேதனையளிக்கிறது என புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் வேதனை தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலீஜியம்' விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுக்கு நீதிபதிகள் குழு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அந்த விவகாரம் முடிவுக்கு வராமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், காலியிடங்களில் நீதிபதிகளை நிரப்ப முடியாத காரணத்தால் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்களுக்கு இடையேயான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவன், அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறியதாவது, ’உச்சநீதிமன்றத்துக்கு 31 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போது 23 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், உச்ச நீதிமன்ற அலுவல் வேலைகள் முடிக்கப்படாமல் பாதிக்கப்படுகின்றன. இதனால், தினசரி வழக்குகளும் முடிக்கப்படாமல், கால தாமதமடைகின்றன. தற்போது,

நீதிபதிகளை விரைவில் நியமிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த மாத இறுதிக்குள் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்’ என நீதிபதி கூறினார்.

நாட்டில் உள்ள எட்டு மாநில உயர்நீதிமன்றங்களில் மட்டும் 80% வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒட்டுமொத்த வழக்குகளையும் சேர்த்து பார்த்தால் உத்தரபிரதேசத்தில் மட்டும் 25% வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்து, மராட்டியம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதற்கு முன்பு, நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது தேசத்துக்கு சவாலான பிரச்சனை மற்றும் உயர்நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணியில் உள்ள நீதிபதிகள் அதிகளவில் பணிசுமைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ்.தாகூர் வேதனையுடன் முன்பு பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நீதிபதி தாகூரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ' சொத்து: வழக்கு தள்ளுபடி!

ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க முடியாதென்று கூறி அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானதையடுத்து அவரது சொத்துகள் அனைத்தும் யாருக்கு போய் சேருமென கேள்வி எழுந்தது. தற்போது ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள வி.கே.சசிகலா வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டுமென்று தமிழக பொதுநலன் வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

“ஜெயலலிதா கடந்த 2016-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கில், தனக்கு ரூ.10,63,83,945 வங்கி டெபாசிட், ரூ.27,44,55,450 மதிப்புள்ள முதலீட்டு பத்திரங்களும், ரூ.41,63,55,395 மதிப்புள்ள நகைகளும், ரூ.72,09,83,190 மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் வாகனங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. அவருக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கி, அந்த சொத்துகளில் இருந்து வரும் வருமானத்தை ஜெயலலிதாவின் விருப்பத்தின்படி ஏழைகளின் நலனுக்காக செலவிட வேண்டும்.

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கவும், அந்த குழு ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும், பின்னர் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்கவும், அந்த சொத்துகளை நிர்வகிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க முடியாதென்று கூறி ரமேஷின் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, "பொதுநல வழக்குகள் எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும், எது சம்பந்தமாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகள் அவர் சினிமாவில் இருந்தபோது சம்பாதித்தது. அந்த வகையில் மனுதாரரின் மனு ஏற்புடையதல்ல" என வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "தனிநபர் சார்புடைய வழக்குகளை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. அதனால் இந்த வழக்கை ஏற்க முடியாது" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறலாம்

NHIS -2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded online in the above link by entering your NHIS - 2012 card No. & password. Password is date of birth in (DD/MM/YYYY)format..

.http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/EmployeeLogin.aspx

12/1/17

PRESS RELEASE - பொங்கல் போனஸ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செய்திக் குறிப்பு

PRESS RELEASE - பொங்கல் போனஸ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செய்திக் குறிப்பு

DSE PROCEEDINGS- அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்குதல் மற்றும் ஆலோசனைப்பெட்டி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு

CPS க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓர் ஒப்பீடு -நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ்