யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/1/17

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: வணிகர் சங்கம்.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து விழுப்புரத்தில் அவர் கூறியதாவது: -பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.

அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.

சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர். ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.

SMC மூன்று நாட்கள் பயிற்சி பற்றிய செய்தி வருகின்ற *( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)*- மொத்தம் மூன்று நாட்கள் *( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .

SMC மூன்று நாட்கள் பயிற்சி* நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

மேற்கூறிய பயிற்சிக்கு
தங்கள் பள்ளியின் சார்பில்
*( 1 ) பள்ளியின் தலைமை ஆசிரியர்*
*( 2 ) SMC தலைவர் - பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்*
*( 3 ) ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்*


 ( அல்லது )
 *ஏதேனும் SMC உறுப்பினர்*

ஆக *மொத்தம் மூன்று பேர் ( 1  HM +  2 SMC members )*
 இப்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் .

*மேற்கூறிய பயிற்சிக்கு வரும் போது  ஈராசிரியர்பள்ளியில்*
*( 1 HM + 2 SMC members ) - Total 3 members*

*அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ள பள்ளியில்*
*( 1 HM + 3 SMC members) - Total 4 members*

அனைவரும் தங்கள் *STAMP SIZE SIZE PHOTO*
 இல்லாத நபர்களுக்கு *PASSPORT SIZE PHOTO*  எடுத்து வர வலியுறுத்தவும் .

SMC பயிற்சி நடைபெறும் இடங்கள்  ஆசிரியர் பயிற்றுநரைத் BRTE தொடர்பு கொண்டு    
 தெளிவு பெற வேண்டப் படுகிறது.

குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

சென்னை: அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று,
இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

திடீர் விடுமுறைகளால் தேங்கிய பாடங்கள்

பொங்கலுக்கு பின் அறிவிக்கப்பட்ட, திடீர் விடுமுறைகளை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, தினமும் கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பரில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது மறைவு வரை, பல நாட்கள் திடீர் விடுமுறை அளிக்கப்பட்டது. பின், 'வர்தா' புயல் தாக்குதலால், பள்ளிகளுக்கு, மூன்று நாட்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
பின், ஜனவரியில் நிலைமையை சமாளிக்கலாம் என, பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்த நிலையில், பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு நிற்காமல், ஜல்லிக்கட்டு போராட்டம், பந்த் மற்றும் கலவரம் என, நான்கு நாட்கள் வரை, பள்ளிகள் முறையாக இயங்கவில்லை.அதனால், பல பள்ளிகளில் பாடங்கள் நடத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், திருப்புதல் தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சியும் நடத்த முடியவில்லை. எனவே, நிலைமையை சமாளிக்க, தினமும் வழக்கமான காலை, மாலை சிறப்பு வகுப்புகளில், கூடுதலாக ஒரு மணி நேரம் பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளிலும், சிறப்பு வகுப்புகளை நடத்த, பள்ளிகள் முடிவு செய்துஉள்ளன.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகளை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பொதுவாக, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்குவது மட்டுமே அங்குள்ள பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. கல்வி உரிமை சட்டப்படி, அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை, தேர்தல் பணிகள் ஆகியவற்றில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று விதி உள்ளது.

ஆனால், அத்தகைய கல்வி பணியில் இருக்கும் ஆசிரியர்களை கால்நடை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ரேஷன் கார்டு சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் பொதுப் பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் குறைவதுடன், மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதில் நாட்டம் குறைந்துவிடுகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. இதன்மூலம் வரும் பொதுத் தேர்வில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகளவில் குறையலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து 10 மற்றும் பிளஸ் 2 பள்ளி மாணவர்களிடம் பேசியபோது, ‘அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி பணி தவிர, மற்ற பணிகளில் முழு நேரத்தையும் செலவிடுகின்றனர்.

கடந்த அரையாண்டு தேர்வுகளில் நாங்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. மூன்றாம் பருவ பாடங்களும் நிறைவு பெறவில்லை. இதே நிலை நீடித்தால், பொதுத் தேர்வில் பெயிலாகி விடுவோம் என்ற அச்சம் மாணவர்களிடம் நிலவி வருகிறது. இதனால் எங்களை தனியார் டியூஷன் சென்டர்களில் அதிக பணம் செலவழித்து பெற்றோர் சேர்த்துள்ளனர். நாங்கள் தொடர்ச்சியாக அலைவதால், எங்களுக்கு பாடங்களில் உரிய கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்’ என்று மாணவர்கள் கூறுகின்றனர். இதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி பணி மட்டுமல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்–்ட அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ‘தனியார் பள்ளிகளில் பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை கூடுதலாக ஒரு மணி நேரம் அமரவைத்து சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் எங்களுக்கு ஒரே நாளில் அனைத்து பாடங்களையும் படிப்பதால் கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது’ என்று தனியார் பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களின் கல்வி நேரம் வீணடிக்கக்கூடாது’ என பிரதமர் நரேந்திரமோடி ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்கள் குழு சமீபத்தில் ஆய்வு நடத்தி மத்திய மனிதவள அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி அல்லாத மற்ற பணிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அவர்களின் கவனம் கல்வியை தவிர, வேறு எதிலும் செல்லக்கூடாது’ என்று குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான புதிய பணி விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் என்று தமிழக கல்வித்துறை ஏற்கெனவே அட்டவணை வெளியிட்டுள்ளது.‘இன்னும் ஒரு மாதமே நடுவில் உள்ள நிலையில், பொது தேர்வுக்கு தயாராகும் அனைத்து பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க, சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?’ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். விடை கிடைக்குமா?

NMMS EXAM - Instruction Regarding Director Proceedings..

'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாகசெயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கழிப்பறைகள் நிறுவப்பட்டு வருகின்றன.சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங்களைச்சார்ந்த குழந்தைகள் பயன் பெறும் வகையில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தி வருகிறது என ஆளுநர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 15 ஆயிரம் போலீசார் தேர்வு

தமிழக காவல் துறையில் 15,711 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வரும் மே 21ம் தேதி நடக்கிறது.

காலியிட விவரம்: இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1016 இடங்களும், தீயணைப்போர் 1512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி :பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1993 ஜூலை 1க்கு பின்னரும், 1999 ஜூலை 1 க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். இதிலிருந்து பி.சி, எம்.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.உடல்கூறு அளவுகள்: உயரம் குறைந்த அளவு 170 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 167 செ.மீ.,) இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ., மார்பு விரிவாக்கம் குறைந்த 5 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள் உயரம் 159 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 157 செ.மீ.,)இருக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:தேர்வு செய்யப் பட்ட 284 அஞ்சல் நிலையங்களில், ரூ.30 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டணம் ரூ. 135.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மதிப்பெண் விவரம்: மொத்த மதிப்பெண்கள் 100 ( எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்கள்,என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள்)

தேர்ச்சி முறை: முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முழு விவரங்களுக்கு:http://www.tnusrb.tn.gov.in/

RTI தகவல்: CPSல் இதுவரையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் அரசின் பங்களிப்புவிபரம்...

பேஸ்புக் பயன்படுத்துவோர்களுக்கு அதிர்ச்சி தகவல்: 5 ல் ஒருவரின் கணக்கில் மற்றவர்கள் ஊடுருவல்.

சமூக வலைத்தங்களில் அதிகமானோரின் ஆதரவைப் பெற்று 2012ம் ஆண்டே 100 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களை தாண்டி நிற்கும் பேஸ்புக் நிறுனம் தற்போது 2016ம் ஆண்டின் கணக்குப் படி 176 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது.


இதுகுறித்து பிரிட்டன், கொலம்பியா, பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒரு அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது.

முகநூல் என்று சொல்லப்படும் பேஸ்புக் பயன்படுத்துவோர்களில் 5 ல் ஒருவரின் கணக்கை அவருக்கு தெரியாமல், அவரது நண்பர், காதலர், அல்லது குடும்ப உறுப்பினர்களே ரகசியமாக ஊடுருவி பார்க்கின்றனர் என தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் ஸ்மார் போன், வழியாக இந்த ஊடுருவல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. 

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: வணிகர் சங்கம்.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து விழுப்புரத்தில் அவர் கூறியதாவது: -பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.

அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.

சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர். ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தினம் வரலாறு!(ஒரு சிறப்பு பார்வை)

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும்
நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். 
ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர்.

அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1498 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

கல்விச்சிறகுகள்

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்:

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!!

Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.

கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன்இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அம்சமானது, பயனர்களின் எந்த இணைப்பும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கூட பிற கருவிகளை ஒரேகூகுள் அக்கவுண்ட் மூலம் இணைக்க அனுமதிக்கப்படுகிறது.மேலும் கூகுளின் இந்த அம்சத்தை Wi-Fi மற்றும் Hotspot அம்சத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம். இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை இணைத்துள்ள கூகுள் அக்கவுண்ட்டில் அவர்களின் Tablets-ஐயும் இணைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

750 PP - COURT NEWS...

அன்பார்ந்த தனி ஊதிய பாதிப்பு கொண்ட ஆசிரியர் பெருமக்களே !!

தமிழகம் முழுவதும் 1.1.2011 முதல் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் ரூபாய் 750 பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து உயர் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய தொடர்ந்து நீதிமன்றத்தில் தனி ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்கப் போராடும் நிலையில் .

தமிழகத்தில் பல இடங்களில்தொடக்கக்க் கல்வித்துறையில் பதவி உயர்வில்750த னி ஊதியத்தை அடிப்படை ஊதியத்தில் 3% ஊதிய உயர்வு மட்டும் வழங்கி பிறகு கழித்துவிடாமல் அடிப்படை ஊதியத்தோடு இணைத்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடைகள் வரும் நிலையில்.... நாமக்கல் மாவட்டம் .கொல்லிமலை ஒன்றியத்தில் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்றும் 3% கணக்கீட்டில் மட்டுமே தனி ஊதியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மிகைஊதியம் பெற்று வந்த ஆசிரியர் ஒருவரின் ஊதியத்தை இன்று 24.01.2017 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பிடித்து ஆணை பிறப்பித்து உள்ளார் ....நமது வழக்கு பட்டியலில் வந்தும் விசாரணைக்கு வரவில்லை ..விரைவில்விசாரணைக்கு வரும்

.....தனி ஊதிய முரண்பாடுகள் ஓர் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது ......

தகவல்:-திரு.சுரேஷ், ஆசிரியர்.

ஜல்லிக்கட்டு மீதான 2016-ம் ஆண்டு அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தனது 2016-ம் ஆண்டு அறிவிப்பாணைகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது.
இதனை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தது மத்திய அரசு. இது தொடர்பான நீதிமன்ற அமர்வு ஜல்லிக்கட்டு மனு மீதான முடிவை எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கியிடம் தெரிவித்தது.கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டது.

இந்தஅறிவிப்பாணை 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட அறிவிப்பாணையை மறுதலித்து வெளியிடப்பட்டதாகும்.பின்னர், 2014ஆம் ஆண்டு விலங்குகள் வதைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் மீண்டும் தடைவிதித்தது. இதனையடுத்து, மத்திய அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிப்பாணை பிறப்பித்தது மத்திய அரசு.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள புதிய நிரந்தர சட்டத்திற்கான சட்ட முன்வடிவினால் இவ்விரு அறிவிப்பாணைகளுக்கும் தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது

+2 தனித் தேர்வர்களுக்கு புதன் முதல் ஹால்டிக்கெட்.

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை புதன்கிழமை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறி்ப்பு: 'வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) 25-ம் தேதி(புதன்கிழமை) முதல் 29-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பிரிண்ட் அவுட் என குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை கிளிக் செய்துவிட்டுவிண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்தால் போதும்.மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23/1/17

ஜல்லிக்கட்டுக்கு எந்த தடை வந்தாலும் தமிழக அரசு முறியடிக்கும்: முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி!

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த தடை இனிமேல் வந்தாலும் அதை தமிழக அரசு சட்டப்பூர்வமாக முறியடிக்கும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.


ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தின்படி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைப்பதற்காக முதல்வர் பன்னீர்செல்வம் மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவர் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் தெரிவித்தததாவது:

முன்னர் தெரிவித்திருந்தபடி ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைப்பதற்காக இங்கு வருகை தந்துள்ளேன்.ஆனால் அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் போது அங்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.    

மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிஅளித்துள்ளது. அதே போல காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதனையொட்டி பல இடங்களில் இன்று வாடிவாசல் திறக்கப்பட்டு, காளைகள் சீறிப் பாய்ந்துள்ளன.   

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம்தான் நிரந்தர தீவும் கூட. இது தொடர்பான சட்ட முன்வரைவு விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த தடை இனிமேல் வந்தாலும் அதை தமிழக அரசு சட்டப்பூர்வமாக முறியடிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்! நிபுணர்கள் கருத்து

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இதன்படி, ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விட்டன. 
முக்கிய இடங்களில் நடத்த முடியாவிட்டாலும் அவசர சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.மத்திய அரசு இயற்றிய பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளையும் அரசு வகுத்துள்ளது. இதில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கைவிட மறுப்பு
'இந்த சட்டம் தற்காலிகமானது தான்; ஆறு மாதங்களுக்கு தான் செல்லும். இது தேவையில்லை; நிரந்தர சட்டம் தான் வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிடவும் மறுக்கின்றனர்.பார்லிமென்ட் அல்லது சட்டசபை நடக்கும் போது சட்ட மசோதா தாக்கல் செய்து, விவாதம் நடத்தி, அது நிறைவேறும் போது சட்டமாக மாறுகிறது. அதன்பின், அந்த சட்டத்துக்கு கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அப்போது, சட்டம் முழு வடிவம் பெறுகிறது.
சட்டசபையோ, பார்லிமென்ட்டோ கூடாத போது சூழ்நிலையை மற்றும் அவசர தன்மையை கருத்தில் கொண்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. அதாவது, சட்டசபை கூடும் வரை காத்திருக்காமல், அவசர தேவையை கருதி, அவசர சட்டம் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவசர சூழ்நிலை உள்ளது என்பதில் கவர்னர், ஜனாதிபதி திருப்தியடைய வேண்டும்.இந்த அவசர சட்டத்தின் ஆயுள், அதிகபட்சம் ஆறு மாதங்கள் தான்; சட்டசபை கூடியதும், ஆறே வாரங்களில் அவசர சட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். அவசர சட்டம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகலாம். இல்லையென்றால் புதிய சட்டமும் கொண்டு வரலாம்.
முதல்வர் உறுதி
'தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் தொடர்பாக, இன்று துவங்க உள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்படும்; மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.இந்த அவசர சட்டம் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தன் முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அவசர சட்டம் என்பது தற்காலிகமானது தான்; ஆனால், இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது; அப்போது, அது நிரந்தமானதாகி விடும்.
ஒரு சட்டத்தை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தால், அது வெற்றி பெறாது; ஏனென்றால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 254(2)ன் கீழ், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனால், சிலரது யூகங்களுக்கு அடிப்படை இல்லை. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது:தமிழக அரசு, 2009ல், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம், மத்திய சட்டத்துக்கு முரணாக இருந்ததால் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்போது, மத்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால், மாநில சட்டத்துக்கும், மத்திய சட்டத்துக்கும் இடையே முரண்பாடு எழாது.சட்டசபை கூடாத போது அவசர சட்டம் தான் பிறப்பிக்க முடியும். சட்டசபை கூடும் போது அவசர சட்டத்தையே சட்டமாக நிறைவேற்றினால் போதும்; அது, சட்ட வடிவம் பெற்றுவிடும். அவசர சட்டத்துக்கும், நிரந்தர சட்டத்துக்கும் இது தான் வித்தியாசம். இதை புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரமுள்ளது
உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டருமான பி.வில்சன் கூறியதாவது:அவசர சட்டம் பற்றிய முழு தகவல்களும் கிடைக்கவில்லை. அரசின் உத்தரவை பார்த்தால், இந்த அவசர சட்டம், நீதிமன்றத்தின் பரிசீலனையின் போது நிற்காது. ஏனென்றால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது.
அதேநேரத்தில், அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், பொதுவாக நீதிமன்றம் தடை விதிப்பதில்லை. அவசர சட்டம் பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றால் தான் தடை விதிக்க முடியும். ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

ஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை, தமிழக அரசு, நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது; இது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவசர சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள், மத்திய சட்டம் - 1960 பிரிவு மூன்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. 

விதிமுறைகள் விபரம்:ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர், அமைப்பு அல்லது குழு, கலெக்டரிடம் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டரின் அனுமதி கிடைத்ததும், ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள், இடம் ஆகியவற்றை அரசு வெளியிடும்அனுமதி தரும் கலெக்டர், போட்டி நடக்கும் இடத்தை பார்வையிட வேண்டும்போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் குறித்த விபரத்தை அளித்து, கலெக்டரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்வருவாய், கால்நடை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் காவல் துறையினர் இடம்பெற்ற, ஜல்லிக்கட்டு கமிட்டியை, கலெக்டர் அமைத்து, ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை, கண்காணிக்க வேண்டும்ஜல்லிக்கட்டு காளைகள், நோயால் பாதிக்கப்படவில்லை; போதை பொருட்களுக்கு ஆட்படவில்லை என்பதை, காவல் துறை நிபுணர்கள் உதவியுடன், கலெக்டர் உறுதி செய்ய வேண்டும் காளைகள் களத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன், 20 நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில், அவற்றுக்கு இடையே, 60 சதுர அடி அளவில், போதிய இடைவெளி அளிக்க வேண்டும்காளைகள் பாதுகாப்பாக உணர, காளையின் உரிமையாளர் அருகில் இருக்க வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில், மழை, வெயில் பாதிக்காமல் கூடாரம் அமைக்க வேண்டும்காயம் இருக்கும் காளைகளை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும்ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்போதை பாதிப்புக்கு உள்ளான காளையை, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாதுகாளைகளை பரிசோதனை செய்யும் இடம், ஷாமியானா வசதியுடன் இருக்க வேண்டும்போட்டி நடக்கும் மைதானம், குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர், இடவசதி கொண்டதாக இருக்க வேண்டும்வாடிவாசலை மறித்தபடி, போட்டியாளர்கள் நிற்கக் கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15 மீட்டர் அல்லது, 30 வினாடிகள் அளவுக்கு அல்லது மூன்று துள்ளல்கள் வரை, போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும்போட்டியாளர்கள், காளையின் வால், கொம்பு ஆகியவற்றை பிடித்து, அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்தக் கூடாதுவாடிவாசல் பகுதியில் இருந்து, 15 மீட்டர் துாரத்தில், பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட வேண்டும்பொதுப்பணித் துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும்போட்டியாளர்களை, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை, அடையாள அட்டை அணிந்து இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்போட்டியாளர்கள் மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது

நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகள் பரவுவதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அறிவித்தது. தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் மட்டும், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், 'நீட்' தேர்வின்படியே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு உண்டா என்பது பற்றி, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவர்கள், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.
அதே நேரம், 'நீட்' தேர்வு தேதியும், விண்ணப்ப பதிவுக்கான தேதியும், இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 'நீட்' தேர்வு குறித்து, பல்வேறு தகவல்கள் வதந்தியாக பரவுகின்றன. இது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தவறான தகவல்களை நம்ப வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்