யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/1/17

3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு

அரசுமேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப்
பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு மே மாதம்மேலும் 1500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.அவற்றையும் சேர்த்து 3300  முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும் நடக்கும்.ஆகையால் 3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு வரும்

TNTET-Instruction for applying TET Duplicate Certificate & Application

உதவித்தொகை பெற நாளை எழுத்து தேர்வு

அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு
உதவித்தொகை திட்டத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டு, "ஸ்காலர் ஷிப்' வழங்கப்படுகிறது.
இத்தேர்வெழுத, ஏழாம் வகுப்பில், 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்கு, 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 5,223 பேர், நடப்பு ஆண்டுக்கான "ஸ்காலர் ஷிப்' பெறுவதற்கான எழுத்து தேர்வை எழுதவுள்ளனர். இத்தேர்வு, நாளை நடைபெறுகிறது. மாவட்டத்தில், 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மாதம், 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

1ம் வகுப்பு முதல் கணினி சொல்லிக்கொடுங்க.. அரசு பள்ளி மாணவர்களும் திறன் பெறட்டும்

சென்னை: அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பும் முதல் 12ம் வகுப்பு வரை கணினிப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று கணினி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். மேலும், அச்சடிக்கப்பட்டு குடோனில்
கிடக்கும் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள கணினி பாடப் புத்தகத்தை மாணவர்களிடம் வழங்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 1992 ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணினி பட்டப்படிப்பை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் கணினி ஆசிரியர்கள் மட்டும் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 11 ஆயிரம் பேரும், பெண்கள் 29 ஆயிரம் பேரும் இருக்கிறார்கள். இவர்களது ஒரே கோரிக்கை தனியார் பள்ளிகளில் இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித் திட்டத்தில் கணினியையும் சேர்க்க வேண்டும் என்பதுதான்.

ஏற்கனவே, சமச்சீர் கல்வித் திட்டத்தில் 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதற்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு வழங்காமல் அந்தப் பாடத்தை நடத்தாமல் உள்ளது தமிழக அரசு. இதுகுறித்து மேலும் பல தகவல்களை ஒன் இந்தியாவிடம் பகிர்ந்து கொள்கிறார் வெ.குமரேசன்.

குடோனில் கணினிப் புத்தகம்

சமச்சீர் கல்வியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டு பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. என்றாலும் அவற்றை மாணவர்களுக்கு இதுவரை வழங்காமல் குடோனிலேயே குப்பை போல கிடக்கிறது. இதற்கு காரணம் அவற்றை சொல்லித் தர அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை.

900 கோடி எங்கே?

கணினி பாடத்திற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு 900 கோடி ரூபாய் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலமாக ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த பணத்தை செலவு செய்யக் கூட தமிழக கல்வித் துறைக்கு தெரியவில்லை. அது அப்படியே மத்திய அரசிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு சென்று சேர வேண்டிய தரமான கணினிக் கல்வி மறுக்கப்படுகிறது.

கணினி ஆய்வகங்கள்

தமிழகத்தில் 21 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசு மடிக்கணினியை வழங்கியுள்ளது. என்றாலும் பள்ளிக் கூடங்களில் கணினிப்பொறி ஆய்வகங்கள் முறையாக இல்லை. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமைத்துக் கொடுத்தால்தான் மாணவர்கள் திறம்பட கற்க முடியும். வெறும் மடிக்கணினியை கொடுத்து என்ன பயன்?

கணினி ஆசிரியர்கள்

அரசுமேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருக்கிறது. என்றாலும், அந்தப் பாடங்களை நடத்துவதற்கு முறைப்படி கணினி பிரிவில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது. அதே போன்று கடந்த பத்து வருடங்களாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவு சுத்தமாக இல்லை. அங்கேயும் கணினி அறிவியல் பாடப்பிரிவு கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இணையாக வளர..

தமிழக அரசு கணினி கல்வியில் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கணினி அறிவைப் பெறுவது போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் பெற முடியும்.

கட்டாயக் கல்வி

தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் கணினிக் கல்வி கட்டாயக் கல்வியாக உள்ளது. வரும் கல்வியாண்டில், ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு குடோனில் தூங்கிக் கொண்டிருக்கும் கணினிப் பாடப் புத்தகங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கணினி கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும் என்று குமரேசன் கூறியுள்ளார்.

அரசு கேபிள் 'டிவி' கட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'

அரசுகேபிள், 'டிவி' சந்தாதாரர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, 'மொபைல் ஆப்' மூலம் நேரடியாக செலுத்தும்
திட்டம், விரைவில் அறிமுகம் ஆகிறது.  இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:

தமிழகத்தில், 2011 முதல், அரசு கேபிள், 'டிவி' புனரமைக்கப்பட்டு, சென்னையை தவிர, மற்ற இடங்களில் அறிமுகமானது. பின், சென்னையிலும் சேவை துவங்கியது.

பொதுமக்களுக்கு மாத சந்தா, 70 ரூபாயாக நிர்ணயித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்; 2011 நவ., 11ல், அது அமல்படுத்தப்பட்டது. அதில், 20 ரூபாய் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு தரப்படுகிறது; அதற்காக ரசீது வழங்கப்படுகிறது.

எனினும், சில ஆப்பரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிப்பதாக, பொது மக்கள் புகார் கூறுகின்றனர். அதனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும், சந்தாதாரர் செலுத்துவதற்காக, ஒரு பிரத்யேக, 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டு வருகிறது. அதை, 'ஆண்ட்ராய்டு போன்' மூலம் பதிவிறக்கம் செய்து, மாத கட்டணத்தை, அரசுக்கு நேரடியாக செலுத்தலாம்.
இதற்காக, சந்தாதாரர்களின் விபரம் தொகுக்கும் பணி நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஆப்பரேட்டர்களுக்கு, வங்கி மூலம் கமிஷன் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

லாபத்தில் அரசு கேபிள்!

மற்றநிறுவனங்கள், மாத வாடகையாக, 150 ரூபாய் வரை வசூலிக்கும் நிலையில், குறைந்த கட்டணம் வசூலிக்கும் அரசு கேபிள், 'டிவி'யும் லாபம் பார்க்க துவங்கியுள்ளது. 2011 - 12ல், 23 லட்சம் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய இந்நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில், 5.2 கோடி; 12.02 கோடி; 18.46 கோடி; 34.95 கோடி ரூபாய் என, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.

பணம் எடுக்கும் கட்டுப்பாடு மார்ச்சில் நீக்கம்!

வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்படிருக்கும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதியில்
தளர்த்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  நாட்டில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கள்ள நோட்டுகளை ஒழித்துக்கட்டவும் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாதவைகளாக பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. இந்நோட்டுகளை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, அவை அடிக்கடி மாற்றப்பட்டும் வந்தன.

கடைசியாக, ரிசர்வ் வங்கி விதித்திருந்த கட்டுப்பாட்டின்படி, ஒரு நாளைக்கு ஏ.டி.எம்-களிலிருந்து 10,000 ரூபாய் மட்டுமே அதிகபட்சமாக எடுக்க முடியும் என்று அறிவித்திருந்தது. முன்னதாக ஒரு நாளில் 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்றும், பின்னர் இந்த வரம்பை 4,500 ரூபாயாக உயர்த்தியது என்பதும் நினைவுகூரத்தக்கது. மேலும், தற்போது ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.24,000 மட்டுமே எடுக்க இயலும்.


இந்நிலையில், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநரான ஆர்.கே.குப்தா கூறுகையில், “என்னைப் பொருத்தவரையில் நோட்டுகள் எடுப்பதற்கான வரம்புகள் பிப்ரவரி மாத முடிவிலோ அல்லது மார்ச் மாத மத்தியிலோ நீக்கப்படும். இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்” என்று கூறினார்.

SSA SPD Proceedings regarding PINDICS - QMT dated 24/1/2017.

10 ரூபாய் நாணயங்கள் எப்படி இருந்தாலும் செல்லபடியாகும் - ரிசர்வ் வங்கி

தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.

டெல்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 10 ரூபாய்
நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அவை பல்வேறு வடிவங்களில் இருப்பதால் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக ஒருவித அச்சம் பரவியது. இது குறித்து பலமுறை ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் பழையது, புதியது என எந்த வடிவத்தில் இருந்தாலும் செல்லும் என்று மீண்டும் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளைவிட நாணயங்கள் நீண்ட காலத்திற்குப் புழக்கத்திலிருக்கும் என்பதால் ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவை வெளியிடப்படுகின்றன. கடந்த 2010 ஜூலை 15 ஆம் தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் அந்த குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலிருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் இத்தகைய நாணயங்கள் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவேபொதுமக்கள் இதுகுறித்து வரும் வதந்திகளை புறக்கணித்து, 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பெட்டிக்கடைகள், சிறு வியாபாரிகள் தான் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்து வருகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி அதிக அளவில் பத்து ரூபாய் நாணயங்களை மக்களுக்கு வழங்கியது. இப்போது அவற்றை செலவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருவதால் மீண்டும் மீண்டும் ரிசர்வ் வங்கி மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது.

26/1/17

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர். அவர்களில், ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர்.ஜன., 19, 20ல், சென்னை, தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 385 பேர் பங்கேற்றனர்; 20 பேர் வரவில்லை. அவர்களுக்கு, பிப்., 2ல், நுங்கம்பாக்கம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா அறிவித்துள்ளார்.

TNPSC:குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது.இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று, இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படுமா? - நிதியமைச்சகம் பதில்!

  ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் முதலமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை அன்று அளிக்கப்பட்டது. 

அந்த அறிக்கையில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும், கடன் அட்டை மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வரிவிதிப்பு ரத்து, டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளுக்கு வரிச்சலுகை மற்றும் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.1000 மானியம் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிப்பு என்ற விஷயம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. எனவே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம் மாநில முதலைமைச்சர்களின் குழு அளித்த பரிந்துரை அறிக்கையானது கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். தற்போது இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. 

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.

25/1/17

Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.

கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன்இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.


இந்த புதிய அம்சமானது, பயனர்களின் எந்த இணைப்பும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கூட பிற கருவிகளை ஒரே கூகுள் அக்கவுண்ட் மூலம் இணைக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் கூகுளின் இந்த அம்சத்தை Wi-Fi மற்றும் Hotspot அம்சத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம்.
இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை இணைத்துள்ள கூகுள் அக்கவுண்ட்டில் அவர்களின் Tablets-ஐயும் இணைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பார்ந்த தனி ஊதிய பாதிப்பு கொண்ட ஆசிரியர் பெருமக்களே !!

தமிழகம் முழுவதும் 1.1.2011 முதல் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் ரூபாய் 750 பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து உயர் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய தொடர்ந்து நீதிமன்றத்தில் தனி ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்கப் போராடும் நிலையில் . தமிழகத்தில் பல
இடங்களில்தொடக்கக்க் கல்வித்துறையில் பதவி உயர்வில் 750த னி ஊதியத்தை அடிப்படை ஊதியத்தில் 3% ஊதிய உயர்வு மட்டும் வழங்கி பிறகு கழித்துவிடாமல் அடிப்படை ஊதியத்தோடு இணைத்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடைகள் வரும் நிலையில் ....நாமக்கல் மாவட்டம் .கொல்லிமலை ஒன்றியத்தில் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்றும் 3% கணக்கீட்டில் மட்டுமே தனி ஊதியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மிகை ஊதியம் பெற்று வந்த ஆசிரியர் ஒருவரின் ஊதியத்தை இன்று 24.01.2017 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பிடித்து ஆணை பிறப்பித்து உள்ளார் ....நமது வழக்கு பட்டியலில் வந்தும் விசாரணைக்கு வரவில்லை ..விரைவில் விசாரணைக்கு வரும் .....தனி ஊதிய முரண்பாடுகள் ஓர் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது ......
தகவல்:-திரு.சுரேஷ், ஆசிரியர்

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர். அவர்களில், ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர்.

ஜன., 19, 20ல், சென்னை, தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 385 பேர் பங்கேற்றனர்; 20 பேர் வரவில்லை. அவர்களுக்கு, பிப்., 2ல், நுங்கம்பாக்கம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.


அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'

'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 


மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், இன்று முதல், ஜன., 29 வரை, தங்கள் ஹால் டிக்கெட்டை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்த வேண்டும். மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்றவை குறித்து, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாதோருக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அப்கிரேட் செய்தி போலியானது: மக்களே உஷார்!

ரிலையன்ஸ் ஜியோவில் உங்களது தினசரி டவுன்லோட் அளவை அதிகரிக்க வேண்டுமா? ஜியோ 4ஜி அப்கிரேஷன் என்று வரும் செய்தி போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது வெறும் போலி மட்டும் அல்ல என்றும், இந்த செய்தியின் மூலம், மக்களின் முக்கிய தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள், உங்களது தினசரி இணைய பயன்பாட்டை 1 ஜிபியில் இருந்து 10 ஜிபிக்கு அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று ஒரு லிங்க் வருகிறது.

அதனை க்ளிக் செய்தால் அதில், பயனாளரின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கேட்கப்படுகிறது. அனைத்தையும் பதிவு செய்து சப்மிட் செய்தால், இந்த லிங்க்கை உங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் அல்லது குறைந்தது 10 வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் என்று வாசகம் வருகிறது.
அந்த லிங், போலியான சலுகைகளை அறிவித்து, பயனாளர்களை உள்ளே நுழைய வைப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த லிங்கில், ரிலையன்ஸ் அல்லது ஜியோவுக்கு இந்த லிங்க் எந்த வகையிலும் தொடர்பில்லை என்றும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற போலியான லிங்குகளை நம்பி, பயனாளர்கள் தங்களது தகவல்களையும், அதை நண்பர்கள் குழுவிலும் பகிர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.