யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/2/17

இன்று முதல் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !!

பேராசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வான ‘செட்’ தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 12 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி,பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, முதுநிலை பட்டப் படிப்புடன் "நெட்' (பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு)அல்லது "செட்' (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அகில இந்திய அளவில் "நெட்' தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. அதேபோல், மாநில அளவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் ‘செட்’ தேர்வு நடத்தப்படுகிறது.இந்நிலையில்,2017 ஆம் ஆண்டிற்கான ‘செட்’ தேர்வு கொடைக்கனலில் உள்ள அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு,ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். இந்த தேர்வுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கத் தவறியாதவர்கள், அபராதமாக ரூ.300 செலுத்தி மார்ச் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்."செட்' தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.1,250-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ஆகவும் தேர்வுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,நெட் தேர்விற்கு 500 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அன்னைத் தெரசா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திட்ட வேலையை மாற்றி, நிரந்தரப் பணி வழங்க, பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.

திட்ட வேலையால் வாழ்வாதாரத்தை இழக்கும், 16549 பகுதிநேர ஆசிரியர்களை (பயிற்றுநர்களை), தமிழக அரசு நிரந்தரப் பணிக்குமாற்ற வேண்டும்.
தமிழக அரசானது,  மத்திய அரசின் திட்ட வேலையை, மத்திய-மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 2012-ஆம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்களை (உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல்திறன், கட்டிடவியல்)ஒப்பந்த அடிப்படையில், ரூ.5000/- தொகுப்பூதியத்தில்பகுதிநேரமாக பணியாற்றும் வகையில் நியமித்தது. 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 அரைநாள்கள் வீதம், மாதத்தில் 12 அரைநாள்கள் பணியாற்றஉத்தரவிடப்பட்டது. இவர்களுக்கு தொகுப்பூதியம் முதலில் கிராமக் கல்விக்குழு மூலமாகமாகவும், தற்போதுபள்ளி மேலாண்மைக்குழுவாலும் வழங்கப்பட்டு வருகிறது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அனைத்து வகைப் பணிப்பிரிவினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோது, முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கும் (2014 ஏப்ரல் முதல்) ரூ.2000/- ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.7000/- வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக், ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட கணினி இயக்குபவர்களைப் போல பல்வேறு துறைகளில் உள்ள தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. எனவே, பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு 2011-12ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ஓராண்டுக்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டு அறிவித்ததை அமுல்படுத்த வேண்டும்.

2012ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒவ்வொரு வருடமும் 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளமே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான ரூ.51 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பின் போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க அரசின் உத்தரவுப்படி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேற்பட்ட பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு, தொடர் கோரிக்கையான முழுநேரப் பணிவழங்கவில்லை.கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15000/-, ஹரியானாவில் ரூ.10000/- வீதம் வழங்கப்படுகிறது. மேலும், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு,கூடுதல் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. எனவே, மற்ற மாநிலங்களில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு  10000/- முதல் 15000/-வரை தொகுப்பூதியமும், ஒன்றுக்கும் அதிகமான பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்புகளும் இதுவரை தமிழகத்தில் அமுல்படுத்தப்படவில்லை. எனவே பொருளாதார சிக்கல்களால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.400/- கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

சமவேலை – சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை, மத்திய – மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த வேலையில் உள்ளதால் பண்டிகை கால ஊக்கத்தொகை, பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டுவருகிறது. மகளிர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. பணி நியமனம் மற்றும் பணி நிரவலின்போது தொலைதூரப் பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும், ஒரே கல்வித் தகுதியில் உள்ளவர்களில் இருவேறு நிலைகளில் பணிமர்த்தி, ஒரு பிரிவினர் அரசு சலுகைகளுடன் சிறப்பாசிரியர்களாகவும், மறு பிரிவினர் ரூ.7000/- தொகுப்பூதியத்தில் மத்திய அரசின் திட்ட வேலையில், ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேரப் பயிற்றுநர்களாகவும் பணியாற்றி வருவதை தமிழக அரசு தீர்வு காண வேண்டும். ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுநர்களை, பணிநிரந்தரம் செய்தது போல 16549 பகுதிநேரப் பயிற்றுநர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்

வெறும் மூன்றே ரூபாயில் ஏர்செல் அன்லிமிடட் டேட்டா நாள் முழுவதும்... இதோ உங்களுக்காக...

ஜியோ சவாலைத் தொடர்ந்து அனைத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள, பல கவர்ச்சிகரமான திட்டங்களை தினந்தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில் ஏர்செல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக மிக மலிவான விலையில் 3ஜி டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.ஒரு நாளுக்கான அன்லிமிடட் டேட்டாவை வெறும் 3 ரூபாய்க்கு வழங்க இருக்கிறது.ஏர்செல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணிலிருந்து *122*557# என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.அதைத் தொடர்ந்து உங்கள் போனின் திரையில், ஒரு பாப் அப் தோன்றும். அதில் 1 என டைப் செய்து சென்ட் பட்டனை அழுத்தவும்.மெசேஜ் சென்றபின், மீண்டும் ஒரு பாப் அப் திரையில் தோன்றும்.அதில் பல ஆப்ஷன்கள் இருக்கும். அதற்கும் 1 என்பதை டைப் செய்து பதில் அனுப்ப வேண்டும்.

அதற்கடுத்து ஒரு நாளுக்கான மொபைல் டேட்டா ஆக்டிவேட் செய்யப்பட்டது என்ற அறிவிப்பு மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்.இதற்கான கட்டணமான ரூ.3 உங்களுடைய மெயின் பேலன்ஸிலிருந்து கழிக்கப்படும்.அடுத்த நொடி முதல் ஒரு நாளுக்கான மொபைல் டேட்டா சேவையை நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த முடியும்.

TET தேர்ச்சி பெற்றும் வாழ்வு இல்லை!

முதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா? 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்!

உங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம். இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.

இப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.


தவனைக் காலம் அதிகரிப்பு
இந்தப் புதிய திட்டங்களினால் ஏற்கனவே வீட்டுக் கடன் தவனைச் செலுத்துவதற்கான வரம்பாக இருந்த 15 வருடத்தை 20 வருடம் வரை உயர்த்தியும் அறிவித்துள்ளனர்.

புதிய திட்டங்கள்
2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால் அப்போது அதில் முழுமையான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்தத் திட்டத்திற்கான நன்மைகள் வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
வீடு வாங்க நினைப்பவர்கள் அவர்கள் பெறும் வருமானத்தைப் பொருத்து வெவ்வேறு விதமான அளவீடுகளில் மானியம் பெற இயலும்.


6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்
ஆண்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் மானியமாக 6.5 சதவீதம் வரை மானியம் பெற இயலும். அதாவது நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 10 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 6 லட்சம் ரூபாய்க்கு 2.5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 4 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள்
ஆண்டு வருமான 12 லட்சம் ரூபாயாக உள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 4 சதவீதம் வரை மானியம் பெற முடியும். நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 15 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 9 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

18 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள்
18 லட்சம் ரூபாய் வரை மாத வருமான உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி செலுத்தினால் போதும். இதுவே 12 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெறும் போது மீதத் தொகைக்கு எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்குகின்றீர்களோ அதைச் செலுத்த வேண்டும்.

மொத்த நன்மை
மேலே கூறிய மூன்று திட்டங்களிலும் 20 வருட தவணையாகக் கடன் செலுத்தும் போது 9 சதவீதம் வட்டி விகிதம் என்றால் 2.4 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் திடீர் வழக்கு

24 மணி நேரத்திற்குள் சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எம்.எல்.சர்மா என்பவர் இந்த வழக்கைப் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள வழக்கில், சசிகலாவுக்கு போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இதுதொடர்பான பட்டியலையும் அவர் ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டார். ஆனாலும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் மெளனம் காத்து வருகிறார்.

பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கும் சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் காலம் தாழ்த்தக் கூடாது. 24 மணி நேரத்திற்குள் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே சுப்பிரமணியம் சாமி, இன்றைக்குள் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் வழக்குத் தொடர வாய்ப்புண்டு என்று டிவீட் போட்டிருந்தார். இந்த நிலையில் சர்மா என்பவர் வழக்குப் போட்டுள்ளார்.

TET விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும்?

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் இழுபறி நடந்துவருகிறது.
அதாவது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டால் எவ்வாறு அதனை சரியான முறையில் கையாள்வது என்று பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது 14 லட்சம் விண்ணப்பங்கள் அனைத்தும் விற்பனை செய்யும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்ய தயார் நிலையில் இருக்கின்றன.

இருந்தபோதும் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான முறையான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.நாளைக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டால் உடனடியாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

சொத்து குவிப்பு வழக்கில் 10:30க்கு தீர்ப்பு.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சசிகலாவின் முதல்வர் கனவும் சற்றே ஆட்டம் கண்டுள்ளது.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இறுதி விசாரணையை முடித்த நீதிபதி குன்ஹா ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அப்போது தந்தார். அந்த தீர்ப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் தள்ளப்பட்டனர். ஆனால், இந்த நால்வரும் வழக்கை மேல்முறையீடு செய்தனர். அதில் கர்நாடக உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து முடித்துவிட்டது. ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் ஒத்தி வைத்துள்ளது.

சசிகலா முதல்வராக பொறுப்பேற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார். தற்போது நாளை தீர்ப்பு வெளிவரும் எனக் கூறப்படுவதால் சசிகலாவின் முதல்வர் கனவு பலிக்குமா அல்லது நிராசையாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

IGNOU : B.Ed - December 2016 Exam - Result Published

13/2/17

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்

கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

சாரதா சதன் - பண்டித ராமாபாய்

சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

சாரணர் படை - பேடன் பவுல்

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

சுதந்திர கட்சி - ராஜாஜி

இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

 பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

 ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்

BRITISH ENGLISH TRAINING-TENTATIVE DATES...


கோப்பில் தூசிைய படிய விட்டால் 'சஸ்பெண்ட்'கல்வி துறையினருக்கு இயக்குனர் எச்சரிக்கை

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

தமிழக பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கலாக உள்ளது. அதனால், கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும், முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல், 

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்புதல், தேர்வு பணிகள் உள்ளிட்டவற்றில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுக்கு, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகளான, 
டி.இ.ஓ.,க்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களும், பல கோப்புகளை, மாதக் கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது தெரிய 
வந்தது. அதுபற்றி, சி.இ.ஓ.,க்களிடம், பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டு, நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தினால், 
சம்பந்தப்பட்ட ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதே போல, டி.இ.ஓ., மற்றும் சி.இ.ஓ.,க்கள் புகார்களுக்கு இடமின்றி செயல்படவும், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

ஆளுங்கட்சி அதிகார போட்டியால் 'நீட்' தேர்வு மசோதாவுக்கு சிக்கல்

தமிழகத்தில், ஆளுங்கட்சியின் அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஒப்புதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய பொது நுழைவுத் தேர்வில், அனைத்து மாநில மாணவர்களும், தேர்ச்சி பெற 
வேண்டும் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின், சில மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், 'நீட்' தேர்ச்சியில் இருந்து, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு, இதுவரை எந்த மாநிலத்துக்கும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால், அனைத்து அரசு, தனியார் கல்லுாரிகளில், மத்திய, மாநில இடங்களில் சேர, 'நீட்' தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு, மே, 7ல், நடத்தப்படுகிறது. ஜன., 31 முதல், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கி, மார்ச், 1ல் முடிகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் விலக்கு அளித்து, ஜன., 31ல், தமிழக சட்டசபையில், மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் எப்படியும் அனுமதி பெற்று 
விடுவார் என்ற, மாணவர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம், திடீரென ராஜினாமா செய்ததால், அவரது தலைமையிலான அரசு, காபந்து அரசாக செயல்பட்டு வருகிறது. 
அ.தி.மு.க,வில் உள்ள அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பெற்றோர் 
கூறுகையில், 'நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, 20 நாட்களே அவகாசம் உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால், தமிழக மாணவர்கள், இந்த தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படும். அரசு ஒதுக்கீட்டில், 2,500 மருத்துவ இடங்களில், சேர முடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளது' என்றனர்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் சுற்ற்றிக்கை

பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் அமெரிக்க இளைஞர்கள்

தமிழகப் பள்ளிகளில் அமெரிக்க உச்சரிப்புடன்கூடிய ஆங்கிலத்தை அந்நாட்டு இளைஞர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.ஃபுல்பிரைட் -நேரு கூட்டுறவு திட்டத்தின் கீழ், இந்தியாவில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் முயற்சி 2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இதன்படி தில்லி, கொல்கத்தாவைத் தொடர்ந்து 2013 -ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம், புதுச்சேரியிலும் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது.அமெரிக்காவில் இளநிலைக் கல்வியை முடித்த 19 இளைஞர்கள் இந்தியாவில் ஆங்கிலம் பயிற்றுவித்து வருகின்றனர். அதில் 6 இளைஞர்கள் தமிழகத்தில் பணியாற்றுகின்றனர்.இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 9 மாதங்களுக்கு இவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

ஆங்கில உச்சரிப்புடன்கூடிய பேச்சுப் பயிற்சி, ஆங்கில உரையாடல் மற்றும் ஆங்கில இலக்கணம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.தமிழகத்தில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் கிரேஸ், சாரா, கேத்ரின், கானர், ஸ்டீபன் ஆகியோர் தங்களின் அனுபவங்கள்குறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதகரத்தில்செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:இந்திய மாணவர்கள் பிரிட்டிஷார் பேசும் ஆங்கில உச்சரிப்புக்கே பழக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலத்தை பயிற்றுவிப்பதில் ஆரம்பத்தில் சற்று சிரமம் ஏற்பட்டது.அதன்பின்பு பல்வேறு செயல்முறைகள், குறுந்தகடுகளின் மூலம் பயிற்சி போன்றவற்றின் மூலம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினோம். அதனை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர்.

அனைத்திலும் முக்கியமாக தமிழர்களின் கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை அமெரிக்கர்களாகிய நாங்கள் கற்றுக்கொள்வதற்கும் இது வாய்ப்பாக அமைந்துள்ளது.தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களை அதிகம் கவர்ந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? ஆய்வு அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகைபள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்துமேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து ஆய்வு அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநரகம்சார்பில் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித் துறை இயக்குனரகம் வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பள்ளிகல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும்பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போதுஆய்வு அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கைகள்அனுப்பப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

இருப்பினும் சமீப காலங்களில் சில பள்ளிகளில் அசாதாரண நிகழ்வுகளினால் மாணவர்கள் உயிர் இழக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. இதனை முற்றிலும் தவிர்க்கஆய்வு அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.

1.பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா? என்று உறுதி செய்வதுடன் மாணவர்கள் அதன் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

2.மாணவர்கள் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்த்திட அறிவுரைகள் வழங்கிட வேண்டும். நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

3.பள்ளியை விட்டு செல்லும் போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்

பாதுகாப்பு உறுதி

4.பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா, சுவிட்சுகள் சரியாக உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அதன்பின்பு மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்பு கொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.

5.பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.6.மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்கக்கூடாது.

7.பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களின், மேற்கூரைகள்உறுதியாக உள்ளனவா? என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.மருத்துவ சிகிச்சை

8.பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்கவும், பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

9.காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுதாரநிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.

10.பள்ளி வளாகத்திற்குள்ளும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளி தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்திலும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை ஓய்வூதியதாரர் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணம் தர வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு.

காப்பீட்டு திட்ட அங்கீகார பட்டியலில் இடம்பெறாத தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓய்வூதியரின் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ஏ.முனியாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றினேன். 31.5.1996ல் ஓய்வு பெற்றேன். எனது பென்ஷன் பணத்திலிருந்து மாதம் ₹150 புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்படுகிறது. நடந்து சென்றபோது திடீெரன மயங்கி விழுந்தேன். நினைவிழந்து சிவகங்கை ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ₹92,535க்கு மருத்துவ செலவு ஏற்பட்டது. இதை வழங்கக்கோரி விண்ணப்பித்தேன்.நான், சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில், அங்கீகார பட்டியலில் இல்லையெனக்கூறி என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாநில அளவிலான குழுவிடம் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை கடந்த26.10.2016ல் நிராகரித்து நிதித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்து, பணத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்தஉத்தரவு:காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரப்படுகிறது.

ஆனால், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவதில்லை. காப்பீட்டு திட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் காட்சி பொருளாக இருக்கக்கூடாது. எனவே, மனுதாரரின் மருத்துவ செலவை வழங்க மறுத்த நிதித்துறை (பென்ஷன்) செயலர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கோரும் மருத்துவ செலவுக்கான பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

CPS பிடித்தம் செய்யும் ஆசிரியர்கள் கவணத்திற்கு. CPS ONLINE MISSING CREDIT, ALLOTMENTS LETTER, STATEMENTS

தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட(Computer Digital)உள்ளதால் அனைவரும் தங்களுடைய SR ல் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியினை ஆசிரியர்கள் செய்துகொள்ள வேண்டும்,
 அவ்வாறு செய்யும் பொழுது CPS பற்றிய தகவலுக்கு வருவோம் CPSபிடித்தம் செய்ய நமக்கு Allotment Letter ஒன்று உள்ளது அதனை தங்களுடைய SR ல் பதிவுசெய்யப்பட வேண்டும்.அந்த Allotment Letter எங்கு கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் எழும் அதனை தேடி எங்கும்அலைய தேவையில்லை, கீழ்காணும் link ஐ Google ல் type செய்யவும்,

CLICK HERE TO DOWNLOAD - CPS ALLOTMENT LETTER...


என்று type செய்தால் தங்களுடைய CPS எண் மற்றும் Date of Birth கேட்கும் அதனைப் பதிவு செய்து  Login என்பதை கிளிக் செய்தால் உங்கள்cps accountpage க்குள் செல்லும், அந்த பக்கத்தில் இடது புறம் பார்த்தால் Allotment Letter என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் தங்களுடைய Allotment Letter கிடைத்துவிடும் அதனை download செய்து print எடுத்து அதனை பார்த்து SR ல் பதிவு செய்துகொள்ளுங்கள், மேலும் இப்பக்கத்தில் CPS statementஐ யும் பார்த்துக்கொள்ளலாம், நன்றி!!!

12th Maths - Mobile Application - [Tamil Medium / English Medium ]


பணிரெண்டாம் வகுப்பில் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிளஸ்2 கணிதபுத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் தொகுத்து கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பணிரெண்டாம் வகுப்பில் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில்பிளஸ்2 கணிதபுத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் தொகுத்துகூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருநேரத்தில் புத்தக பின்புற வினாக்களில் பொதுத் தெர்வில் கேட்கப்படுவது போன்றுஒவ்வொரு பாடத்திலிருந்து மூன்று வினாக்கள் வீதம் 30 வினாக்கள் கேட்கப்படும்அவற்றிற்கு விடையளித்து தங்கள் பெறும் மதிப்பெண்ணை சரிபார்த்துக் கொள்ளலாம்.மேலும் தவறாக விடையளிக்கப்பட்டுள்ள வினாக்ளை அடையாளம் கண்டு அடுத்த முறைசரிசெய்து கொண்டு பயிற்சி பெறலாம்.மேலும் இந்த ஆப்பில் பாடவாரியாக பயிற்சி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் கூ ட விடையளித்து பயிற்சி பெறஇயலும்.பொதுத்தேர்வு நெருங்கும் இவ்வேளையில் பிளஸ்2 கணிதப் பிரிவில் பயிலும்மாணவர்களுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும்.தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி ஆகிய இருபிரிவு மாணவர்களுக்கும்“ தனித்தனியாகஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்து.இந்த ஆப்பினை இலவசமாக டவுன்லோடு செய்து பயன் பெறலாம்.அதற்கான லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

தமிழ்வழி
Click here - 12th Maths - Mobile Application [Tamil Medium ]


ஆங்கிலவழி

Click here - 12th Maths - Mobile Application [English Medium ]


12/2/17

அறிவோம் அரசாணைகள் அரசாணைகள் விபரம்.*


1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.


-----------------------

2. ஆசிரியர் வருங்கால  வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?


அரசாணை நிலை  எண்.381 நிதித்துறை   நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும்  தற்காலிக  முன்பணமாக ரூபாய் 2,50,000,  மட்டுமே பெற முடியும்.

-----------------------

 3. அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது?

அரசாணை நிலை  எண்.157,  பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை  நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.

-------------------

4. உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்துவிட்டு அரசு பணியில் சேரும்போது அவருக்கு பழைய ஊதியம் கிடைகுமா?

அரசாணை நிலை எண்.536 கல்வித்துறை நாள்.13.04.1966 ன்படி உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்து விட்டு அரசு பள்ளியில் பணியில் சேரும்போது பணியேற்கும் பதவிக்குரிய ஊதிய விகிதத்தில்  ஊதியம் வழங்கப்படும்.

-----------------------

5. தகுதிகாண் பருவத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கலாமா?

அடிப்படை விதிகள் 36(0) மற்றும் அரசாணை எண்.21, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 23.1.96ன் படியும் தகுதிகாண் பருவத்தினருக்கு கண்டிப்பாக பதவி உயர்வு வழங்கக்கூடாது. என்று மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------

6. வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா?

அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்

-----------------------

7.அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா?

அரசாணை நிலை  எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.

-------------------------

8. முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்?

அரசாணை நிலை எண்.496, நிதித்துறை நாள்.1.8.2006ன்படி முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும். இந்த அரசாணை வெளி வருவதற்கு முன்பு 33 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என இருந்தது.

குறிப்பு; 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது.

------------------

9. குழந்தை பிறந்த நாளிலிருந்து தான் மகப்பேறு விடுப்பு தொடங்குகிறதா??

அரசாணை நிலை எண்.237, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 29.6.93ன்படியும் மற்றும் அடிப்படை விதி101(a)ன்படியும்  மகப்பேறுக்கு முன்னரோ. (அ) மகப்பேறுக்கு பின்னரோ  விடுப்பு அளிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு தான் விடுப்பு அளிக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பு; அ.நி.எண்.61.பணி.நிர்.சீர் .துறை நாள்.16.6.2011ன்படி180 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.

-------------------------

10. மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்?

அரசாணை நிலை  எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

---------------------------

11. தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் !

தற்செயல் விடுப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
                                                                  தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85)