யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/3/17

நிதி பற்றாக்குறையால் தள்ளாடுது -SSA-திட்டம்

SBI - Bank ல உங்க அக்கவுன்டல மினிமம் 5000 இருக்கனுங்கோ....

இனிவங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்

புதுடில்லி : வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.
மினிமம் பேலன்ஸ் ரூ.5000 :

பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
குறைந்தால் அபராதம் :

இந்தஅபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதுன் அடிப்படையில் வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் ரூ.75 மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 உடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன. இந்நிலையில் ஏடிஎம்.,களில் பணம் எடுக்க மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

TNTET - 2017 - தற்போது இரண்டாவது ஆண்டில் D. T. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 1 தேர்வை எழுதலாம்.

TNTET - 2017 Paper - 1

 தற்போது இரண்டாவது ஆண்டில் D. T. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 1 தேர்வை
எழுதலாம்.

 ஆனால் இக்கல்வி ஆண்டிலேயே D. T. Ed., பட்டயபடிப்பை தேர்ச்சி பெற்றால் மட்டுமே TNTET - 2017 தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை D. T. Ed., பட்டய தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே TNTET - 2017 தேர்ச்சி காரணமாக பணிவாய்ப்புக்கு அழைக்கப்பட்டால்  (இவர்களுக்கு பணி வழங்க இயலாது) இவர்கள் பணியை கோர இயலாது.

 கண் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி (Visually Impaired Candidates) TNTET தாள் 1 தேர்வை எழுத இயலாது. 🚨


TNTET - 2017 தாள் 1 - தகவல் ஏடு [Prospectus Book].

TNTET - 2017 - தற்போது இரண்டாவது ஆண்டில் B. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தேர்வை எழுதலாம்.

TNTET - 2017   Paper 2

 தற்போது இரண்டாவது ஆண்டில் B. Ed., (கல்வியாண்டு 2016-
2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 2 தேர்வை எழுதலாம்.

 ஆனால் இக்கல்வி ஆண்டிலேயே (2016-2017)  B. Ed., பட்டபடிப்பை தேர்ச்சி பெற்றால் மட்டுமே TNTET - 2017 தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை B. Ed., பட்ட தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே TNTET - 2017 தேர்ச்சி காரணமாக பணிவாய்ப்புக்கு அழைக்கப்பட்டால்  (இவர்களுக்கு பணி வழங்க இயலாது) இவர்கள் பணியை கோர இயலாது.


 TNTET - 2017 தாள் 2 - தகவல் ஏடு [Prospectus Book]. 
நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? 

தேச தாய் - பாரதமாதா 
தேசதந்தை - மகாத்மா காந்தி, 
தேச மாமா - ஜவஹர்லால் நேரு, 
தேச சேவகி - அன்னை தெரசா, 
தேச சட்டமேதை - அம்பேத்கார், 
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி, 
நாட்காட்டி - 1957 சக ஆண்டு, 
நகரம் - சண்டிகார், 
உலோகம் - செம்பு, 
உடை - குர்தா புடவை, 
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத், 
தேச நிறம் - வெண்மை, 
தேச சின்னம் - நான்குமுக சிங்கம், 
தேச பாடல் - வந்தே மாதரம், 
தேசிய கீதம் - ஜனகனமன, 
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை, 
சிகரம் - கஞ்சன் ஜங்கா, 
பீடபூமி - தக்கானம், 
பாலைவனம் - தார், 
கோயில் - சூரியனார், 
தேர் - பூரி ஜெகநாதர், 
எழுது பொருள் - பென்சில், 
வாகனம் - மிதிவண்டி, 
கொடி - மூவர்ணக் கொடி, 
விலங்கு - புலி, 

மலர் - தாமரை, 
விளையாட்டு - ஹாக்கி, 
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி, 
பறவை - மயில், 
இசைக் கருவி - வீணை, 
இசை - இந்துஸ்தானி, 
ஓவியம் - எல்லோரா, 
குகை - அஜந்தா, 
மரம் - ஆலமரம், 
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம், 
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை, 
நீர் உயிரி - டால்பின், 
அச்சகம் - நாசிக், 
வங்கி - ரிசர்வ் வங்கி, 
அரசியலமைப்பு சட்டபுத்தகம், 
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

ஏன் ஊதியக் குழு?

ஆண்டுதோறும் நம்மிடையே வந்து, நம்மை அமைதிப்படுத்தி, அலங்கரித்து, அழகு பார்க்கும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளைப் போல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அரசு ஊழியர்களை அடுத்த தளத்துக்கு இட்டுச்செல்ல அமைக்கப்படும் வைபவம் தான் ஊதியக்குழு!

'ஆறு மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வும், ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு வரும்போது, ஊழியக்குழு அமைத்து வேறு ஊதியத்தை உயர்த்த வேண்டியது அவசியமா?' என்றொரு கேள்வி எழக்கூடும்! அதற்கான பதில்:

மாதம் முழுதும் செய்யும் பணிக்கு ஊதியம், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள அகவிலைப்படி. ஊழியர்களின் பணிக்கால நீளத்தை (Length of service) கௌரவிக்க ஆண்டு தோறும் ஊதிய உயர்வு!
இவை போல, கால மாற்றத்தை சமன் செய்ய ஊதியக்குழு!

காலம் என்ன செய்கிறது?

50 ஆண்டுகளுக்கு முன் நாம் தொலைக்காட்சி பார்த்ததுண்டா? 40 வருடங்களுக்கு முன் செல்போன் தொடர்பு உண்டா? 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 'சொந்த வீடு' நம்மில் எத்தனை பேரிடம் இருந்தது? 20 வருடங்களுக்கு முன்பு இருந்தனவா இத்தனை இருசக்கர வாகனங்கள்? 10 ஆண்டுகளுக்கு முன் 'கார் வாங்க வேண்டும்' என்ற சிந்தனை கடுகளவேனும் இருந்ததா சராசரி மனிதரிடம்? -இதுதான் காலமாற்றம்! இதற்காகத்தான் ஊதியக்குழு!


ஊதியக்குழுவின் பணப்பயன் அரசு ஊழியர்களோடு முடிந்துபோய்விடுவது கிடையாது. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதனடிப்படையில்தான் ஊதிய மாற்றம், ஏற்றம், எல்லாம்! நிதி நிர்வாகத்தின் அடிப்படை அளவுகோல் ஊதியமே!

ப்ளஸ் 1...எதிர்பார்க்கப்படுவதும், 01.01.2016 தொடங்கி அமலாக்கம் செய்யப்பட இருப்பதும் ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு. இதே தேதி முதல், இதே அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்பட இருப்பது எட்டாவது ஊதியக்குழு. காரணம், தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு கூடுதலாக ஓர் ஊதியக்குழு அமைத்து கௌரவித்திருப்பதுதான்.

கால அலகு (Periodicity)

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுக்களின் அமலாக்க தேதி பின் கண்டபடி இருந்தது.

ஊதியக்குழு                         அமலாக்க தேதி

முதலாவது ஊதியக்குழு     - 01.06.1960 முதல்
இரண்டாவது ஊதியக்குழு - 02.10.1970 முதல்
மூன்றாவது ஊதியக்குழு    - 01.04.1978 முதல்
நான்காவது ஊதியக்குழு    - 01.10.1984 முதல்
ஐந்தாவது ஊதியக்குழு    - 01.06.1988 முதல்
ஆறாவது ஊதியக்குழு    - 01.01.2006 முதல்
ஏழாவது ஊதியக்குழு             - 01.01.2016 முதல்

எதிர்பார்ப்பது

மேற்கண்ட அட்டவணையை கவனித்தால், ஓர் ஊதியக்குழுவுக்கும் அதற்கடுத்த ஊதியக்குழுவுக்குமான கால இடைவெளி ஒரே சீராக இல்லாமல் முன்னும், பின்னுமாய் அமைந்திருக்கும். 01.01.1996 முதல் இது சீரமைக்கப்பட்டு இரண்டு ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலம் 10 ஆண்டுகள் என நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரசுப்பணியில் சேரும் ஓர் ஊதியர் அதிகபட்சமாக ஐந்து ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளால் பயன் பெற்று ஓய்வு பெற முடியும்.

குறைந்த பட்சம்: அதிக பட்சம்

01.06.1960 அன்று அமலாக்கம் செய்யப்பட்ட முதலாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி -
*தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (ஊதியம் + அகவிலைப்படி) = 50+10 = 60

*பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 1800/-
முதலாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து சுமார் 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது அமுலில் உள்ள 7வது ஊதியக் குழுவின் கடைசி நாளான 31.12.2015 அன்று நிலவரப்படி -

* தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (அடிப்படை ஊதியம் + தர ஊதியம் + அகவிலைப்படி 119%) = 4800+1300+7259 = 13,359

* பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 67000+10000+91630 = ரூ.168630/-
அதாவது, குறைந்தபட்ச ஊதியம் 222 மடங்குக்கு சற்று அதிகமாகவும், அதிக பட்ச ஊதியம் 93 மடங்குக்கு சிறிது அதிகமாகவும் உயர்ந்து விட்டிருக்கிறது.

பணப்பலன் (Monetary Benefit)!

ஊதியக்குழு ஒவ்வொன்றும் தனது பரிந்துரையில் குறைந்தபட்ச பலனை அறிவிப்பது வழக்கம். இந்த பணப்பலன் 5 ரூபாய், 10ரூபாய் என இருந்தது மாறி மூன்றாவது ஊதியக்குழு வில் பணப்பலன் சதவீத கணக்கில் குறைந்தபட்சம் 5% ஆக தரப்பட்டது. இப்பணப்பலன் 4-வது ஊதியக்குழுவில் 7% ஆகவும், 5-வது ஊதியக்குழுவில் 10% ஆகவும் உயர்ந்து கொண்டே வந்து - ஆனந்த அதிச்சியாக 40% பணப்பலனை அறிவித்தது 6வது ஊதியக்குழு பரிந்துரை. அதாவது, அடிப்படை ஊதியத்தில் 40% ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.

நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு!

01.01.2006 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட அலுவல் குழு (ஊதியக்குழு) பரிந்துரைக்கான அரசாணை 01.06.2009 அன்றுதான் வெளியிடப்பட்டது. அதாவது அமலாக்க தேதியிலிருந்து 41 மாதங்கள் கழித்து, என்றாலும் -

'தாமதமாய் வந்தாலும் தரமாக வருவேன்' என்பது போல், இதுவரை அறியப்படாத 'தர ஊதியம்' எனும் ஒரு புதிய ஊதிய அலகை அறிமுகம் செய்தது இந்த ஊதியக்குழு.

முந்தைய ஊதியகுழு பரிந்துரைகள் 10% 40% என சதவீத கணக்கில் பணப்பலன் தந்தது போல் அல்லாமல், 'தர ஊதியம்' தான் இந்த ஊதியக்குழுவின் பணப்பலனாக அமைந்தது.

குறைந்தபட்ச தர ஊதியம் ரூ.1300/- அதிக பட்ச தர ஊதியம் ரூ.10,000/- அறிமுகம் செய்யப்பட்ட தர ஊதியங்களின் எண்ணிக்கை 29.

01.01.2006 அன்று ஓர் ஊழியர் பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தனி ஊதியம் + அகவிலை ஊதியம் + அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகை 186%. அதாவது, ஊதியம் + தர ஊதியம் = 100% அகவிலை (Dearness Pay) ஊதியம் 50%. இவைகள் மீதான அகவிலைப்படி 24+12% = 36%. ஆக 186%. எனவே, அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 1.86 என்ற காரணியால் பெருக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் ஊதியக்குழுவின் பணப்பலனாக தர ஊதியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு சேர்க்கப்பட்ட தர ஊதியம் தந்த அதிக பட்ச பணப்பலன், அடிப்படை ஊதியத்தில் 86% ஆக இருந்தது. பணப்பலன் சதவீத ரீதியில் சொல்லப்படாததால் இது வியப்பாக இருக்கலாம். அதற்கான கணக்கீடு பின் வருமாறு:

* ஓர் ஊழியர் 31.12.2005 அன்று பெற்றிருந்த ஊதியம் ரூ.5000/-
* இவரது ஊதிய ஏற்றமுறை (Pre Revised Scale of Pay) ரூ.5000 - 150 - 8000
* 01.01.2006 முதல் இவருக்கு தரப்பட்ட தர ஊதியம் ரூ.4300/-
* சதவீத ரீதியில் பணப்பலன் 4300/5000X௴100=86%

(இந்த ஊதிய வீதத்துக்கான தர ஊதியம் ரூ.4200/- என அறிவிக்கப்பட்டு, பின்னர் 4300/- ஆக உயர்த்தப்பட்டது)
எல்லாருக்கும் 86% பணப்பலன், தர ஊதியத்தின் மூலம், கிடைத்து விடவில்லை. ஆனால், சராசரியாக, பணப்பலன் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது. முந்தைய ஊதியக் குழுவின் பணப்பலனை மிகைத்ததாகவே அமைந்தது.

ஊதிய உயர்வு (increment) ஊதிய உயர்வு தரப்படாத வேலை என்று எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை
இந்த ஊதிய உயர்வானது (Annual Increment) 01.06.1960 முதல் 31.12.2015 வரையான 56 ஆண்டுகளில் - அதாவது முதலாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அடைந்துள்ள மாற்றத்தை பார்ப்போம்.

01.06.1960-ன்போது தரப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொகை (ஊதியம் + அகவிலைப்படி 50-1-60 என்ற ஊதிய ஏற்ற முறையில்) 1+0=1
பெறத்தக்க அதிகபட்ச ஊதிய உயர்வு தொகை 37400-67000+GP10000 என்ற ஊதிய ஏற்ற முறையில் 2010+2392 = 4402

ஊதிய உயர்வு தொகை கணக்கிடுவதில் இந்த 7-வது ஊதியக்குழு ஒரு சமச்சீர் முறையையும் கொண்டு வந்தது. அதாவது, ஒன்றுமுதல் ஆறுவரையான ஊதியக்குழுவின்படி பரிந்துரைக்கப்பட்ட ஊதிய ஏற்ற (Scale of Pay) முறைப்படி ஆண்டு ஊதிய உயர்வு (Annual Increment) தொகையானது அனைவருக்கும் ஒரே சதவீத அளவாக இல்லாமல், பதவிக்கு பதவி, ஊதியக்குழுவுக்கு ஊதியக்குழு வேறுபட்ட சதவீத அளவில் இருந்தது. ஊதிய உயர்வு தொகை 1.6% ஆகவும் இருந்தது. 6.1% ஆகவும் தரப்பட்டது.


இந்த முரண்பாடுகளை களைந்து அரசுப்பணியில் உள்ள அனைவருக்கும் 3% ஊதிய உயர்வாக தந்து சமச்சீர் நிலையை எட்டியது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை.
நிலுவை (Arrears)!

ஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதிய வீதங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் வரை உள்ள காலத்துக்கு நிலுவைத் தொகை கணக்கிட்டு வழங்கப்படுகிறது.
இந்த நிலுவையானது முதல் நான்கு ஊதியக்குழு வரை ரொக்கமாகவும், 5வது ஊதியக்குழு நிலுவையின் ஒரு பகுதி பொது வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டும் வழங்கப்பட்டது. ஆறாவது, ஏழாவது குழுக்களின் நிலுவை தவணை முறையில் ரொக்கமாக தரப்பட்டன.


முதன்முறையாக...!

பொதுவாக, ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியமானது ஏறுமுகமாகத் (Upward) தான் இருக்கும். முதன் முறையாக அது இறங்குமுகத்தை (Downward) சந்தித்தது. அதாவது, ஊதியக்குழு பரிந்துரையின்படி முறையாக உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வுக்கு எந்த பங்கமுமில்லை; எவருக்கும் குறைக்கப்படவில்லை.

ஆனால் - 'ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பள வீதம் போதுமானதாக இல்லை' என்ற முறையீட்டின் பேரில் 'ஒரு நபர் குழு' அமைத்து அறிக்கை பெறப்பட்டது. அந்த ஒரு நபர் குழு அறிக்கைக்குப் பின் பெரும்பான்மை பதவிகளுக்கு 'மீண்டும்' ஒரு உயர்வு வழங்கப்பட்டது. ஊதிய வீதம் / தர ஊதியத்தில்.
அவ்வாறு மீண்டும் தரப்பட்ட உயர்வு சீராய்வு (Review) செய்யப்பட்டது. சீராய்வின்படி, மீண்டும் உயர்த்தப்பட்டு 'சில பதவிகளுக்கு' வழங்கப்பட்ட ஊதியமானது இதே பதவிக்கு மத்திய அரசு போன்றவற்றில் தரப்படும் ஊதியத்தை விட அதிகம் எனவும், இதே சம்பளம் தரப்படும் தமிழக அரசின் பிற பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகம் என்றும் அறிவித்து 'ஒரு சில பதவிகளுக்கு' மட்டும் 'மீண்டும்' உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் குறைப்பு செய்யப்பட்டது.

எதிர்பார்ப்பு!

எந்த ஒரு மாநில அரசும் தராத எத்தனையோ சலுகைகளை வழங்கியுள்ளது, தமிழக அரசு. இன்னும் சொல்லப் போனால், அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கை போன்றவற்றை மற்ற மாநிலங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கையில், பட்டுவாடா செய்து முடித்திருக்கிறது, தமிழக அரசு எனினும், நினைவு கூறத்தக்க சில விடுபாடுகளும் உண்டு; அவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அவற்றுள் சில:

* உயர்த்தப்படாத ஓய்வு பெறும் வயது
* மத்திய அரசுக்கு இணையாக வீட்டு வாடகைப்படி...

ஓ.என்.ஜி.சி. மறுப்பும் நெடுவாசல் பொறியாளரின் பதிலும்!

நெடுவாசல் திட்டத்திற்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஓஎன்ஜிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, “தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. திட்டத்தில் ஷேல் வாயுவோ, மீத்தேன் எரிவாயுவோ எடுக்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி. கடந்த 50 ஆண்டாக காவிரி டெல்டாவில் செயல்பட்ட போதிலும் விவசாயம் பாதிக்கபடவில்லை. .எங்கள் நிறுவனம் செயல்படும் இடங்களில் வாழும்

மக்களிடம் சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. மேலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயுவால் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தினமும் 840 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் நமது மின்னம்பலம் இதழ் சார்பில், ‘நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்நிறுவனம் கூறுகிறதே?’ என்ற கேள்வியை நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் சுரேஷ் ராமநாதனை தொடர்பு கொண்டு கேட்டோம். நாம் கேட்ட உடன் அவர் வாய்விட்டு சிரித்துவிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “ஓ.என்.ஜி.சி.க்குத் தெரியாமல் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் எதுவும் நடக்கவில்லை. எங்கள் கிராமங்களைத் தேர்ந்தெடுத்தது, அங்கே ஆய்வு நடத்தியது, விவசாய நிலங்களை விவசாயிகளிடம் குத்தகைக்குப் பெற்றது என அனைத்தையும் மேற்கொண்டது ஓ.என்.ஜி.சி. நிறுவனம்தான்.

இதை விட முக்கியமாக, நெடுவாசல், வானக்கண் கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆழ்துளைக் கிணறு அமைத்து அதில் குழாய்களை பதித்தது, வெளிக்குழாய்களை அமைத்தது, எக்ஸ்மஸ் ட்ரீ வால்வு என்று சொல்லக் கூடிய நீங்கள் காணும் எண்ணெய் கிணறின் வெளி அமைப்பை நிறுவியது, அதை சீலிங் செய்தது என அனைத்துமே ஓ.என்.ஜி.சி.தான். இது மட்டுமல்லாமல் இந்த திட்டம் தொடங்குவதற்கு முன் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்ததும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்தான். நெடுவாசல் கிராமத்தில் தொடங்கப்பட இருந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த முழு விவரமும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது” என்று தெளிவாக விளக்கம் அளித்தார்.

திருமணமான பெண்கள் படிக்க முடியாது!!

குடும்ப சூழ்நிலை,பொருளாதார சிக்கல் போன்ற காரணங்களால் ஒரு சில பெண்கள் திருமணத்துக்கு பிறகு படிக்கின்றனர்.

இந்நிலையில்,தெலங்கானாவில் சமூகநலத் துறை சார்பாக பெண்கள் இலவசமாகத் தங்கி படிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் திருமணமாகாத பெண்கள் மட்டுமே படிக்க முடியும் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.


இந்தக் கல்லூரிகளில் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்கள் படிப்பதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அந்த கல்லூரிகளில் திருமண ஆன பெண்கள் படிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில்,சமூக நலத்துறை சார்பாக 23 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஆண்டுதோறும் சுமார் 280 மாணவிகள் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.

இதில், எஸ்.சி பிரிவினருக்கு 75 சதவிகிதமும், எஸ்.டி மற்றும் பி.சி பிரிவினருக்கு 25 சதவிகிதமும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

தெலங்கானா சமூகநலத் துறை கல்லூரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-2018 கல்வியாண்டில் இலவசமாக தங்கி படிக்கும் கல்லூரிகள் பி.எ.,பி.காம்.,பி.எஸ்.சி போன்ற இளங்கலை படிப்புகளுக்கு திருமணமாகாத பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கல்லூரி மேலாளர் பி வெங்கட் ராஜு கூறுகையில், திருமண ஆன பெண்களின் கணவர்கள் மனைவியை பார்ப்பதற்காக விடுதிகளுக்கு வருகின்றனர். அவர்களை பார்க்கும்போது,திருமணமாகாத பெண்களின் மனநிலை திசை திருப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. மாணவிகள் மத்தியில் எந்தவித கவனசிதறலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக செயலாளர், ஆர் .எஸ் .பிரவீண் குமார் கூறுகையில், குழந்தை திருமணங்களை தடுப்பதற்காகதான் பெண்கள் தங்கி படிக்கும் கல்லூரிகள் அரசாங்கத்தால் தொடங்கப்படுகிறது. ஆனால், தற்போது தெலங்கானா அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவு வருத்தமளிக்கிறது. அதற்காக,நாங்கள் திருமணமான பெண்களை ஊக்குவிக்கவில்லை.இருப்பினும் யாரையும் புறகணிக்கவும்,கஷ்டப்படுத்தவும் கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கமாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் கிராம மற்றும் நகர புறங்களில் குழந்தை திருமணம் பெருத்துள்ள நிலையில், எப்படி அரசாங்கம் திருமணமான பெண்களுக்கு கல்வி அளிக்க முடியாது என அறிவிக்கலாம்? என பெண்கள் முற்போக்கு அமைப்பின் சந்தியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா அரசு அறிவித்துள்ள இந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என பெண் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தை திருமணத்தில் முதலிடம் வகிக்கும் சென்னை!

சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வியாசர்பாடியைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் நேற்று திருமணம் நடக்கவிருந்தது.


சென்னையில் நடைபெறவிருந்த குழந்தை திருமணம் குறித்து சமூக ஆர்வலர் எமி என்பவருக்கு தகவல் கிடைத்தது. இவரது தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் பெசண்ட் நகர் தேவலாயத்துக்கு சென்றனர். அங்கு, மணமகள்கோலத்தில் நின்றிருந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

திருமண வீட்டாரிடம் மணப்பெண்ணின் வயது சான்றிதழைக் கேட்டபோது, அதை தருவதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில் இருவீட்டாரும் சமூக ஆர்வலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, திருவான்மியூர் போலீஸுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இது குறித்து திருமண வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு ,அவர்கள் இணங்கவில்லை.

பின்னர், மணமக்களின் பெற்றோர்களுக்கு தனிதனியாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து,இருவீட்டாரும் மாணவி திருமண வயதை அடைந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர்.

தற்போது மாணவி கெல்லீசில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுயுள்ளார். இது குறித்து குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படிப்பறிவு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத கிராமபுறங்களில்தான் அதிகளவில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது என நினைத்தாலும், சிட்டி சென்னையிலும் இதுபோன்று திருமணங்கள் நடந்து வருவது கண்கூடாகக் தெரிகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5480 பெண் குழந்தைத் திருமணங்கள் சென்னையில் நடந்துள்ளன. குழந்தைத் திருமணம் செய்து கொண்டவர்களில் 16,855 பேர் குறைந்த வயதில் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 5 பெண்களில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக யூனிசெஃப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சசிகலா நியமனம்: தினகரன் கடிதத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!!!

அதிமுக.,வில் சசிகலா நியமனம் தொடர்பாக, தினகரன் அனுப்பிய கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின் படி, தினகரன் அ.தி.மு.க.,வில் எவ்வித பொறுப்பிலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தினகரன் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் பொதுச்செயலர் நியமனம் தொடர்பாக, சசிகலா மார்ச் 10 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமனம்

தமிழக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமனம்

*தமிழக உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா சுற்றுலாதுறைக்கு மாற்றம்*

*தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குநராக உமாநாத் நியமனம்*


புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்!!!

சென்னை: தமிழக அரசின் உள்துறை செயலாளர் மாற்றப்பட்டார். இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழக அரசின் தற்போதைய உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா சுற்றுலா துறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குனராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேம்பாட்டு கழக இயக்குனராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்

TPF TO GPF ACCOUNT SLIP

TPF TO GPF ACCOUNT SLIP
*TPF TO GPF*
ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின்
சேமநலநிதி கணக்கானது( TPF ) பொது வருங்கால வைப்புநிதிக்கு (GPF) மாற்றப்பட்டதால் 2014-2015 ஆம் வருட கணக்கீட்டு தாள் சரிசெய்யும் பணி மாநில கணக்காயர் அலுவலகத்தில் நிறைவு பெற்று
( AG's OFFICE )

 பதிவேற்றம் செய்யும் பணி NATIONAL INFORMATION CENTER ( NIC ) மூலம் நடைபெற்று வருகிறது.

 விரைவில் 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்யலாம்.               
 *ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு*

 *கணக்கீட்டுத் தாளை சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்*

3/3/17

ஜியோ பிரைம் VS ஜியோ - எது பெஸ்ட்

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள்
என்ன ? சாதரன வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் சலுகைகள் மற்றும் பிளான் விபரங்களுடன் ஒப்பீட்டு முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

ஜியோ பிரைம் VS ஜியோ
ஜியோ4ஜி சேவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிரைம் உறுப்பினர் திட்டத்தின் கீழ் ரூ.99 ரீசார்ஜ் செய்யும் பிளான் இன்று முதல் ஜியோ இணையதளம் ,மைஜியோ ஆப் மற்றும் ரீசார்ஜ் மையங்களில் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் ரூ. 99 கொண்டு ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்ன நடக்கும் ? உங்கள் ஜியோ கட்டணம் எவ்வளவாக இருக்கும் என அறிந்து கொள்ளலாம்.
முன்பு ஜியோ அறிமுகப்படுத்தி திட்டத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல்அடிப்படை ஜியோ வாடிக்கையாளர்கள் பெறலாம். அதுவே நீங்கள் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் எனில் இரு மடங்கு கூடுதல் சலுகையை பெறலாம்.

நீங்கள் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் எனில் உங்களுக்கு ரூ. 499 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2 GB அதிவேக டேட்டா அதன் பிறகு 128 Kbps  வேகத்தில் பொதிகளை பெறலாம் . நீங்கள் ஜியோ வாடிக்கையாளர் மட்டும் என்றால் 28 நாட்களுக்கு வெறும் 5 ஜிபி டேட்டா மட்டுமே பெறலாம். மற்ற விபரங்களை படங்களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கான தகுதி காண் (weitage mark) முறையை ரத்து செய்யக் கோரிக்கை:

தமிழகஅரசு நீட் (NEET) தேர்வினால் ஏழைகள் & கிராமத்தினர்
பாதிக்கபடுகிறார்கள் என்று ரத்து செய்தது.

அதேபோல் TET தேர்விலும்
தகுதிகாண் முறையினால்
பெருமளவில் தமிழக மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களின் நிலை:


 * அன்று அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியரின் பற்றாகுறை.    
*அப்பொழுது  சாப்பாட்டிற்கு கூட வழிஇல்லை, ட்யூசன் சென்றும் படிக்க முடியாதநிலை.
*செய்முறை மதிப்பெண்கள் மிக குறைவு.
*அன்று காலை மாலை வகுப்புகளும் இல்லை.
*90% அரசு பள்ளிகளில் 10,12ம் வகுப்பு, மாணவர்களின் முதல் மதிப்பெண்கள்  350, 750 மட்டுமே. இம்மதிப்பெணணுக்கும் கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணிபாருங்கள்.
*அன்று தேர்வு எழுதும் போதும் வினாத்தாள் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை.
*நகரங்களில் சென்று படிக்கவும் போதிய வசதி இல்லை.
*பெருமளவு பெற்றோர் படிக்கவில்லை வீட்டுப்பாடம் செய்ய இயலாதநிலை.
* நோட்டுப்புத்தகம் கூட வாங்க முடியாத நிலை.
*கிராமப்புற மாணவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்று சிறுகசேமித்த அப்பணத்தின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி், கல்வி பயின்றுள்ளனர்.
*முக்கியமாக ஒன்று  'இன்று பள்ளிக்கு படிக்க செல்கிறார்கள், ஆனால் அன்று நாங்கள் பட்டினி என்னும் பசிப்பிணியை போக்க' பள்ளிக்கு சென்றோம்.

*இன்று இருக்கும் சமச்சீர் கல்வியும் அன்று இல்லை.

*இன்னும் கொடுமை என்னவெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பாடங்கள் இப்போது இல்லை. நாங்கள் TET தேர்விற்கு எல்லாமே புதியதாக படிக்க வேண்டிய கட்டாயநிலை.

*ஆனால் தற்போது சமச்சீர் படித்திருப்பவர்களுக்கு இதுவும் சாதகமாகவே அமைந்துள்ளது.
*இப்போது படிப்பவர்களுக்கு TET ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ! ஆனால் அப்போது .......?

*இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் மட்டுமே பெரும்பாதிப்படைவர்.
பள்ளித்தேர்வில் முறைகேடுகள் நடக்கின்றன, என்று  TET தேர்வை கொண்டு வந்த அரசு, மீண்டும் பள்ளி மதிப்பெண்களை கணக்கில் கொள்வது எந்த விதத்தில் ஞாயம் ஆகும்.

*மாவட்ட தேர்ச்சி விகிதத்திற்காக,   தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைகள் சொல்லி கொடுப்பதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக மாணவர்களே கூறுவது அதிர்ச்சியல்ல அனைவருக்கும் தெரிந்த அவளநிலை.
இப்படிபட்ட நிலை அன்று இல்லை.

தகுதிகாண் நடத்துவதன் மூலம் நாங்கள் TET தேர்வில் 150 க்கு 100மதிப்பெண் எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை,
 *ஆனால் தற்போது படிக்கும் மாணவர்கள் தகுதிகாண் மூலம் TET தேர்வில் 90 விட குறைவான மதிப்பெண்கள் மட்டும் எடுத்து, சுலபமாக தகுதி பெற்று விடுகிறார்கள்.

*அன்று பல கடினமான சூழ்நிலைகளில் கல்வி கற்றனர்.

*தற்போது எல்லாேமே மாறிவிட்டன.
 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, தமிழகஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது.
தமிழகஅரசின் பல திட்டங்கள் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.


*பனிரெண்டாம் வகுப்பில்  மதிப்பெண்கள்
90% :
அன்று 650/1200  கீழ், முதல் மதிப்பெண் 750.
இன்று 1000/1200 , முதல் மதிப்பெண்1199.

*தகுதி காண் மதிப்பெண்களை கொண்டுவந்த கல்வியாளர்களை தயவாய் கேட்டுக்கொள்வது, இதன் மூலம்  பல ஆயிரகணக்கான குடும்பங்கள் மற்றும் சந்ததிகள் சமூகத்தில் மேலே எழமுடியாமல் பாதிக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

*ஏழைகளை நினைத்துப்பாருங்கள்.

மேற்கூரிய அனைத்தையும்
கருத்தில் கொண்டு  தமிழகஅரசு தகுதிகாண் முறையை ரத்து செய்ய வேண்டும்.

*தகுதிகாண் முறை குறித்து ஆலோசனை  நடைபெறுகிறது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

*எங்கள் வாழ்வு தமிழக அரசு கையில்


*ஏழைகள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உடனடிநடவடிக்கை எடுக்குமாறு  மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

IGNOU - GENUINENESS CERTIFICATE FEE HIKE Rs.100/- to 200/-

இக்னோ உண்மைத்தன்மை சான்று கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வால் ரூபெல்லா தடுப்பூசிக்கு சிக்கல்

திண்டுக்கல்: தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு துவங்கியுள்ள நிலையில், பள்ளிகளில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி ஒன்று முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு பல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுத்தனர்.இது குறித்து அரசு விளக்கம் தந்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.கிராம புற பள்ளிகளில் இன்னும் பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததால், மார்ச் 14ம் தேதி வரை நீட்டித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் விடுபட்ட பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் தேர்வால் சிக்கல் : தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நேற்று துவங்கியுள்ளது. மார்ச் 8ல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால் தேர்வு மையம் உள்ள பள்ளிகளில் காலையில் மாணவர்கள் நுழைய முடியாது. பகல் 2 மணிக்குத்தான் மாணவர்கள் வருவார்கள். தேர்வு நடக்கும் பள்ளிகளில் சுகாதாரத்துறையினரும் நுழைந்து தடுப்பூசி வழங்க முடியாது. இந்த சிக்கலால் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளால் பள்ளிகளில் முழு ஒத்துழைப்பு கிடைக்காது. இந்நிலையில் மார்ச் 14 வரை இந்த திட்டத்தை நீட்டித்தும் பயனில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம், என்றார்

பள்ளி குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, கல்வி நிறுவனங்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில், குழந்தைகள் கடத்தல், பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, பள்ளிகளில், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நர்சரி பள்ளிகளில் படிக்கும், 10 வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும், அவர்களை தனியாக விடக்கூடாது என்றும், பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும் பெற்றோரை அழைத்து, ஆலோசனைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளை, பெற்றோரே வந்து அழைத்து செல்ல வேண்டும்; தினமும் ஒரு உறவினர், நண்பர் என, யாரையாவது பள்ளிக்கு அனுப்பி, குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது; ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் குழந்தைகள் என்றால், அதன் டிரைவர் பற்றிய முழு தகவலையும், பெற்றோர்
உறுதி செய்ய வேண்டும் என, பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

பிளஸ் 2 தேர்வு துவங்கியது : அரசு பள்ளி தேர்ச்சி அதிகரிக்குமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு துவங்கியது. 'இந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.பிளஸ் 2 தேர்வில், ஒன்பது லட்சத்து, 33 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சென்னையில், 407 உட்பட மொத்தம், 2,434 மையங்களில் தேர்வு நடந்தது. அனைத்து மையங்களிலும்,
மாணவ, மாணவியர், காலை, 9:00 மணிக்கே வரவழைக்கப்பட்டனர்; முதலில், பிரார்த்தனை நடந்தது. பின், தேர்வு நடைமுறைகள் குறித்து, மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்வு துவங்கியதும், மாணவர்கள் முன்னிலையில், வினாத்தாள் கட்டு, 'சீல்' உடைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. நேற்று, மொழி பாடத்திற்கான முதல் தாள் தேர்வு நடந்தது. அதாவது, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்ச், மலையாளம், ஹிந்தி, உருது, அரபிக், சமஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் ஆகிய, 10 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பணிகளை, அமைச்சர் செங்கோட்டையன், செயலர் சபிதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்,'' என்றார்.

'நீட்' தேர்வு விலக்கு கிடைக்குமா? : அமைச்சர்களுக்கே குழப்பம்

நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதால், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது. வரும் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்க்க, மே, 7ல், 'நீட்' தேர்வு நடக்கிறது.


இதற்கான விண்ணப்ப பதிவு, ஜன., 31ல் துவங்கி, மார்ச், 1ல் முடிந்தது. ஆனால், தமிழகத்தில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, ''நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகவே உள்ளனர்,'' என்றார். 'தேர்வு உண்டா' என, தெரியாததால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பதில் அளிக்காமல் மவுனமாக உள்ளார். எனவே, தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு, விலக்கு கிடைக்காதோ என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இதில், தெளிவான நிலை தெரிந்தால் தான், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும் என்றும், பெற்றோர் தெரிவித்துஉள்ளனர்.

சாம்சங் உடன் இணைந்து 5ஜி சேவை. ஜியோவின் அடுத்த அதிரடி..

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி இலவச சேவையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் ஏர்டெல் உள்பட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வரவில்லை.
இந்நிலையில் ஜியோவின் அடுத்த அதிரடியாக அதிவிரைவில் 5ஜி சேவை தொடங்கவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கதிகலங்கி உள்ளன.
ஜியோவின் 4ஜி இலவச சேவையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புதுப்புது வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் ஜியோ நிறுவனம், உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உடன் இணைந்து, 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.

இந்த முடிவின்படி 5ஜி சேவைக்குத் தேவையான ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் தயாரித்து வழங்கவுள்ளதாகவும், மற்ற சேவைப் பணிகளை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை ஜியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்