யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/3/17

FLASH NEWS:TET ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் ஒரு குறிப்பிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது இன்று (7-3-2017) TRB அறிவிப்பு TET இரண்டாவது பட்டியல் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

Click here-TRB LETTER-Teachers Recruitment Board - TNTET PAPER II – Data verification and updation















தற்போது பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் TET எழுதுவோர் கவனத்திற்கு துறை அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும். மாதிரி விண்ணப்பம்..

அனுப்புநர்:
...............................
ஊ.ஒ.தொ/நடுநிலை பள்ளி,
..............................,
உங்கள் ஒன்றியம்

பெறுநர்:
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள்,

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
உங்கள் மாவட்டம்



வழி:
1)உ.தொ.க.அலுவலர் அவர்கள்,

2)தலைமை ஆசிரியர்
...,.,.......................

ஐயா,

பொருள் (தகுதி தேர்வு எழுத துறை அனுமதி வேண்டுதல் சார்பு)

நான்மேற்கண்ட பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நான் ஏப்ரல் 2017ல் நடைபெறும் பட்டதாரிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வெழுத (தாள்-2) விண்ணப்பித்து உள்ளேன்.அதனால் எனக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுத துறை அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
......................

இடம்:
நாள்:


இணைப்பு.

1)ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நகல்-2
2)உயர்கல்வி Convocation சான்றிதழ் நகல்-2.
3)பணிநியமன ஆணை நகல்
(DEEO, AEEO, பள்ளி சேர்க்கை அறிக்கை
மூன்றும் இணைக்க வேண்டும்.
உயர்கல்வி பயில முன்னனுமதி வாங்கியிருந்தால் அதன் நகலையும் இணைக்க வேண்டும்)
*முக்கிய குறிப்பு*

Covering letter இரண்டு எழுத வேண்டும்

ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதி மாற்றம் : டிஎன்பிஎஸ்சி

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது விடுதி
கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பணிக்கான தேர்வு மே 20ம் தேதிக்கு மாற்றியும், செயல் அலுவலர் நிலை - 3 தேர்வு ஜூன் 10ம் தேதிக்கும்,

செயல் அலுவலர் நிலை - 8க்கான தேர்வு ஜூன் 11ம் தேதிக்கும் மாற்றி டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.

2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல்
10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்... ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவுப் பணியிடங்கள் 623 மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் & (IEDSS) பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இந்நிலையில் (i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் (ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் (iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் (vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள். எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் (தாள்- II ல்) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப்பட்டியல் (Merit List) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in.) 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. நாடுநர்கள் மேற்கண்ட விவரங்களை இணையதள வழிமூலம் (online)சரிபார்த்துக் கொள்ளலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. நாடுநர்கள் (Candidates) தங்களின் ஒருசில விவரங்களை திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் online -லேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும். மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017 இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்று வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்படமாட்டாது. மேற்கண்டவாறு சரிபார்க்கப்பட்ட விவரங்களைக்கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்படும். மேற்கண்ட இறுதி தகுதிப்பட்டியல் கொண்டுதான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது. தகவல் : தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6

லஞ்சத்தில் இந்தியா முதல் இடம்.. ஆய்வில் ஷாக் தகவல் !

டெல்லி: ஆசிய பசுபிக் மண்டலத்தில் 69 சதவீத இந்தியர்கள் பொது சேவைகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியபசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளின் ஊழல், லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்தது. 16 நாடுகளில் சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்திய அந்த ஆய்வின் முடிவில் லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து வியட்நாம் நாட்டினர் 65 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும், சீனாவில் 26 சதவீதம் பேரும், தென்கொரியாவில் 3 சதவீதம் பேரும் லஞ்சம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஜப்பானில் 0.2% பேர்மட்டுமே லஞ்சம் பெறுகின்றனர். இந்தியாவில் 10 பேரில் 7 பேர் அரசின் சேவையைப் பெற லஞ்சம் கொடுக்கிறார்களாம். முறைகேடுகளுக்கு லஞ்சம் வழிவகுப்பதால் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலிறுத்தி உள்ளது.

பழைய 500,1000 நோட்டுகள் மாற்றும் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் ??மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு !!

ரிசர்வ் வங்கிக் கிளைகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம்: மத்திய அரசிடம் விளக்கம் கோரியது உச்ச நீதிமன்றம்


ரிசர்வ் வங்கிக் கிளைகளில் வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்குப் பின் அந்த நோட்டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளைகளில் 2017-ஆம் ஆண்டு, மார்ச் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி சார்பில் அப்போது அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் அல்லாது வெளிநாடுகளில் வாழ்பவர்கள் மட்டுமே செல்லாத ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ஆம் தேதி வரை குறிப்பிட்ட கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது தொடர்பாக பிரதமர் மோடியும், ரிசர்வ் வங்கியும் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சரத் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது, மனுதாரரின் கருத்துகளை கவனத்தில் கொள்வதாகக் கூறிய நீதிபதிகள் இதுகுறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மார்ச் 10) ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தனர்.

சிறுவர்களின் அறிவுத் திறனை அதிகரிக்கும் முட்டை!

முட்டையின் மஞ்சள்கருவில் கோலின் காணப்படுகிறது. இது, அசிடைல் கோலின் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்கத் தேவைப்படுகிறது. அசிடைல் கோலின் மூளைத் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டுவரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் பற்றாக்குறை கவனக்குறைவையும்,

ஞாபகமறதியையும் ஏற்படுத்துகிறது.

கொலஸ்ட்ரால் நல்லதா? கெட்டதா? இது அனைவரின் மனதிலும் இருக்கும் கேள்வி. சந்தேகமில்லாமல் மூளை ஆரோக்கியத்துக்கு கொலஸ்ட்ரால் (Saturated Fat) தேவைப்படுகிறது. நரம்பு செல்களைச் சுற்றியுள்ள அடுக்குகளுக்கு கொலஸ்ட்ரால் மிக இன்றியமையாதது. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஹார்மோன்களுக்கு கொலஸ்ட்ரால் தேவையானதே. இத்தகைய கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது.

இதுதவிர, முட்டையில் காணப்படும் DHA என்னும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், அது நரம்பு செல்களின் இணைப்புகளுக்கு உதவுகிறது. தினமும் சிறுவர்களுக்கு ஒரு முட்டை கொடுப்பது சாலச் சிறந்தது. நல்ல ஆரோக்கியமும், வளர்வதற்கான சத்துகளும் கிடைப்பதாக மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு !!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:

நேரடி எழுத்துத் தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது.
சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
..பகிா்வு..எம்.விஜயன்..

TNTET - Paper 1 & 2 - NEW WEIGHTAGE கணக்கிடும் முறை !!

TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை
New weightage கணக்கிடும் முறை

Paper 2 Calculation


முதலில் உங்களின் +2 மதிப்பெண் உதாரணமாக 1050,

Plus 2

1050/1200*100=87.5 87.5/100*10=8.75

Degree
52% so 52/100*15=7.8


BEd
86% 86/100*15=12.9

TET 102 102/150*100=68 68/100*60=40.80

TOTAL Weightage: 70.25.

Paper 1 - க்கான வழிமுறை

+2 - மதிப்பெண் 1050

1050/1200*100=87.5 87.5/100*15=13.25

DTEd

86% 86/100*25=21.5

TET 91 91/150*60=36.4

TOTAL 71.15

CPS NEWS:அரசாணை வெளியிட்டும் ஓராண்டாக CPS தொகை பெறமுடியாமல் தவிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் !!

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த 22.02.2016 அன்று  வெளியிடப்பட்ட அரசாணை எண்: 59, ன்படி CPS திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்ற, மரணம் அடைந்தவர்களுக்கு ஒரு மாதத்தில்
பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


*ஆனால், ஓராண்டாக பல்வேறு காரணங்களினால் விண்ணப்பித்த 4192 பேரில் 40% பேருக்கு மட்டும்  ஊழியர் பங்குத்தொகை, அரசின் பங்குத்தொகை      வழங்கப்பட்டுள்ளது.*

*மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஏதுமில்லை.*

*தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.*

*திண்டுக்கல் எங்கெல்ஸ்.*

வாகனங்களில் அதிகமான மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு !!

வாகனங்களில் அளவுக்கு அதிக மாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல 
வேண்டும் என்பதற்காக, பள்ளி வாகனங்களை இயக்க பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறை யில் உள்ளன.

வாகனங்களில் வேக கட்டுப் பாட்டுக் கருவி பொருத்த வேண் டும். அனுபவம் வாய்ந்த டிரைவர் கள் பணியமர்த்தப்பட வேண்டும். பாலம், நீர் நிலைகள் போன்ற இடங்களில் பிற வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட் டுள்ளது.

பள்ளிக்கு செல்லும் வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும். இதன்படி ஆட்டோக்களில் 6 மாணவ, மாணவிகள் மட்டுமே ஏற்றிச்செல்ல அனுமதி உண்டு.

இதுதவிர, மாதக் கட்டணத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார்கள், ஆம்னி வேன்கள், மேக்ஸிகேப் போன்ற சுற்றுலா வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லக் கூடாது. இது போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பானது.

இதனையெல்லாம் மீறி அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்கள் ஏற்றி செல்லப்படுகின்றனர். மாணவ மாணவியர் நலன் கருதி, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சியில் பெண்களுக்கு சமவாய்ப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும்வகையில் ஐ.நா. அமைப்புடன், இந்தியா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிப்பதற்கும், தேர்தலில் வெற்றிபெற்ற பெண்களின் திறனை மேம்படுத்துவதற்கும் வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ.நா. மகளிர் சபையுடன் மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் வகையிலான சட்ட விதிகளையும், கொள்கைகளையும் வகுத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல்வேறு நடவடிக்கைகளை ஐ.நா. அமைப்பும், இந்தியாவும் இணைந்து நடவடிக்கை எடுக்கும். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் நடவடிக்கை மற்றும் பொதுஇடங்களில் சமஉரிமை மறுப்பு போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கலந்தாலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆந்திரம், கர்நாடகம், ஒடிஸா, தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் முதல்கட்டமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை!'- மறுப்பு தெரிவிக்கும் இலங்கை !!

பொய்யான செய்தியை இந்திய ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன'.*

_கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் பகுதியைச் 
சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச்சென்றிருந்தனர். நேற்றிரவில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்ததுடன் மிருகத்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர்._

_இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற கெம்பலோத் என்பவரது மகன் பிரிட்ஜோ (வயது 21) என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து இருந்தது. இதே போல் கிளிண்டன் என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார்._

*இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசையல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.*

_இது குறித்து இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் சமிந்த வலகுலகே கூறுகையில், 'ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை.  மீனவர்களை கைது  செய்வதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர்களை சுட அதிகாரம் இல்லை.;   இந்திய ஊடகங்கள் கூறுவது உண்மை தன்மை இல்லாத செய்தி. பொய்யான செய்தியை இந்திய ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன' என்று தெரிவித்துள்ளார்._

ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு பணி தீவிரம் : புதிய ரேஷன் கார்டு வழங்க தடை !!

ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு பணி தீவிரமாக நடப்பதால், புதிய ரேஷன் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல் ரேஷன் கார்டுக்கு பதிலாக 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கார்டுடன் குடும்ப உறுப்பினர் ஆதார், அலைபேசி எண்கள் இணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆதார் எண் 
இணைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது.
விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு : ஆதார் இணைக்காத ரேஷன் கார்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 20,000 முதல் 50,000 கார்டுகளுக்கு பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. அக்கார்டுதாரர்களில் சிலர் தற்போது மனுச்செய்து தங்கள் கார்டுகளுடன் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்துகின்றனர்.'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் மாவட்ட உணவு வழங்கல் அலுவலரின் 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி விடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.
புதிய கார்டு நிறுத்தம் : 'ஸ்மார்ட் கார்டு' பணி தீவிரமாக நடப்பதால், கடந்த மாதத்துடன் புதிய ரேஷன் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் புதிய ரேஷன் கார்டு பிரின்ட் செய்யும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது புதிய கார்டு கோரி 'ஆன்-லைனில்' மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி நிறைவடைந்த பின் பரிசீலனைக்குட்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கும் புதிய கார்டு வழங்கப்படும், என, வழங்கல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பி.எஃப். ஓய்வூதியர்கள் உயிர் சான்றிதழ் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) திட்ட ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 31 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை முகப்பேர் பி.எஃப். மண்டல ஆணையர் வி.எஸ்.எஸ்.கேசவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர் வாழ்நாள் சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வரும் 31 -ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.எனவே, அம்பத்தூர் மண்டலத்தின்கீழ் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள், ஆதார் சார்ந்தஉயிர்வாழ் சான்றிதழை கால நீட்டிப்பு செய்யப்பட்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவில் சமர்ப்பிக்கப்பட்ட உயிர்வாழ் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை ’மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர், ஆர்- 40ஏ1, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகம், முகப்பேர், சென்னை-37'என்ற முகவரியிலும், 044 -2635 0080, 2635 0110, 2635 0120 என்ற தொலைபேசி எண்களிலும் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆங்கிலத்தில் பேசினால் தமிழில் கேட்கலாம்: விரைவில் அறிமுகமாகிறது ‘பேச்சுணரி தொழில்நுட்பம்’

ஆங்கிலத்தில் பேசினால் தமிழில் கேட்கும் ‘பேச்சுணரி தொழில்நுட் பத்தை’ (Speach recognition real-time translation technology) விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக இந்திய மொழித் தரவுகள் ஒருங் கிணைப்பு, சேகரிப்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் எல்.ராமமூர்த்தி தெரிவித்தார்.
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் வந் திருந்த அவர், ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இந்திய மொழித் தரவுகள் சேகரிப்பு ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை மொழிகளுக்குள் கொண்டு வரு வதுதான் இந்த மையத்தின் நோக்கம்.

22 இந்திய மொழிகளில்

அதற்காக மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளின் தரவுகளைக் கணினி மயமாக்குவதும், அதனை இயந்திர மொழிபெயர்ப்பு வாயி லாக ஒரு மொழியில் உள்ள இலக்கண, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை மற்றொரு மொழியைப் பேசுவோரிடம் கொண்டு சேர்ப்பதையும் முக்கிய பணியாக இந்த அமைப்பு செய்து வருகின்றது.

அந்தவகையில் கணினியில் தட்டச்சு செய்யப்படும் வார்த்தைகளை, வேண்டிய மொழிகளில் மொழிபெயர்த்து தட்டச்சாகச் செய்வது போன்ற எழுத்துணரி தொழில்நுட்பத்தையும், பேசுகின்ற மொழியை தேவையான மொழி களில் மொழிபெயர்த்துக் கேட்பது (ஆங்கிலத்தில் பேசுவதை தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் கேட்பது) போன்ற பேச்சுணரி தொழில்நுட்பத்தையும் உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.80 சதவீத தரவுகள் கணினிமயம்இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் 80 சதவீதம் தரவுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக தமிழ் மொழியில் பெரும்பான்மையான தரவுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்றாண்டுகளில் இந்த மூன்று மொழிகளிலும் பேச்சுணரி தொழில்நுட்பம் அறிமுகமாக வாய்ப்புள்ளது.இந்த தொழில்நுட்பம் முழுமை யாக நடைமுறைக்கு வந்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் எந்த மொழி தெரிந்தவர்களாக இருந்தாலும் பேச்சுணரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தனது தாய் மொழியிலேயே பேசி விளக் கங்களைப் பெறமுடியும். உதார ணத்துக்கு, ரயில் நிலையத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத் தும்போது ரயில் எத்தனை மணிக்கு வரும், ரயில் எங்கு செல்கிறது போன்ற தகவல்களைத் தனது வட்டார மொழியிலேயே பேசி, கணினி வாயிலாக புரியவைத்து, தேவையான மொழியில் பதிலைப் பெறமுடியும்.300 பேருக்கு மேல் பயிற்சிஇந்தப் பணியை விரைவாக மேற்கொள்வதற்குத் தேவைப்படும் மொழியியலாளர்கள் குறைவாக உள்ளனர். தமிழ் மொழியில் மொழி யியலாளரை அதிகப்படுத்த தற் போது பயிற்சிகள் வழங்கப்படு கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர் களுக்கு இந்த பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு பயிற்சி பெற்றவர் களில் ஆர்வமிக்கவர்களுக்கு கூடுதலாகப் பயிற்சியளித்து, சிறந்த மாணவர்களை ஆராய்ச்சிமையத்தில் மொழித்தரவுகள் உருவாக்குதல் மற்றும் மொழி யியல் தொழில் நுட்பத்தை புகுத் தும் பணியில் பயன்படுத்தவுள்ளோம்’’ என்றார்.

விவசாயம் சுற்றுலாத் துறையில் விரைவில் அறிமுகம்

“இந்த பேச்சுணரியின் முன்னோட்டமாக ஓரிரு மாதங்களில் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளோம். விவசாயத் துறையில் உற்பத்திப் பொருட்களின் விலையை தொலைபேசியில் தினமும் அறிந்துகொள்ள விவசாயிகளுக்கு ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்படும். அதில், தனது தாய்மொழியில் பேசினால் அதைப் புரிந்துகொண்டு, பொருளின் விலையைச் சொல்லும் பேச்சுணரியாக அது செயல்படும். எனவே, தமிழ் மொழியைத் தேர்வுசெய்து படிப்போர் எதிர்காலத்தில் நல்ல மொழியியலாளராக வருவார்களேயானால் நல்ல எதிர்காலம் உள்ளது” என்றார் ராமமூர்த்தி.

கணினி ஆசிரியர்களின் பொதுக்கூட்ட அழைப்பு.

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திண்டுக்கல் பொதுக்கூட்டம் (19.3.2017)...

அன்பார்ந்த!..

பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பி.எட் பயிலும் இருபால் மாணவர்களுக்கும் ஓர் அன்பான அழைப்பிதல், வருகின்ற

நாள்:19.3.2017
காலை :9மணி.
இடம் :VGS மஹால்
(திண்டுக்கல் பேருந்து நிலையம்   அருகில்)
பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
[மதிய உணவு வழங்கப்படும்]

குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர்களின் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவச உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
1.இரண்டு புகைப்படம்,
2.பி.எட் சான்றிதழ் நகல்,
3.வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்).

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
(தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.)

முக்கிய குறிப்பு:
[விடியல் பயணம் திண்டுக்கல் மாவட்டத்தோடு
இனிதே நிறைவுபெற உ்ளளது].

உறுப்பினர்கள் சேர்க்கை இலவசமாக பெற :
கீழ்கண்ட மாவட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும்  பொதுக் கூட்டத்தில்(திண்டுக்கல் கரூர் நாமக்கல் திருப்பூர் கோவை மதுரை தேனி இராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தஞ்சை திரூவாரூர்  திருச்சி புதுக்கோட்டை)
மாவட்ட கனிணி ஆசிரியர்கள்

திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில்  தங்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,9789180422,9894372125.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள். பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடை பெறும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர். மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர். இவர்கள் தவிர தனித்தேர்வர்களாக 39 ஆயிரத்து 741 பேர் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். மேலும் சிறைக் கைதிகள் 224 பேர் தேர்வெழுத உள்ளனர். எஸ்எஸ்எல்சி தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து371 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

தேர்வுக் கூடங்களில் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தலைமைஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கல்வித்துறை அதிகாரிகள் மட்டு மின்றி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினரின் பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.

எஸ்எஸ்எல்சிதேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதுவோரில் 6 லட்சத்து 19 ஆயி ரத்து 710 பேர் தமிழ்வழி மாணவ- மாணவிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது முதல் நாளில் விற்பனை மந்தம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்கள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி தகுதித் தேர்வு விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. 
முதல் நாளில் விண்ணப்பம் வாங்க வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இதே நிலைதான் காணப்பட்டது. ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கும் (தாள்-1), பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் (தாள்-2) அனைத்து மையங் களிலும் தனித்தனி விற்பனை கவுன்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) அறிவித் துள்ள இடங்களில் வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கென குறிப்பிட்ட மையங்கள் இயங்குகின்றன. விண்ணப்ப தாரர்கள்விண்ணப்பம் வாங்கிய மாவட்டத்தில் உள்ள மையங்களில் வருகிற 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடைபெற உள்ளன. இரு தகுதித் தேர்வுகளுக்கும் சேர்த்து ஏறத் தாழ 11 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று ஆசிரியர் தேர்வுவாரியம் எதிர் பார்க்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு ஹால்டிக்கெட் தபாலில்அனுப்பப்படாது.

தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள்தான் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நேற்று விநியோகிக்கப்பட்டன.

TNTET - 2017 ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம் வாங்கிவிட்டீர்களா? பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்!

நீண்ட நாளாக எதிர்பார்த்த ஆசிரியர் தகுதித்தேர்வு மூன்று வருடத்திற்குப் பிறகு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.இன்று முதல் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்க ஆரம்பித்து இருக்கிறது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம். 
தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 6-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். முதல் தாளுக்கான தேர்வு ஏப்ரல் 29 -ம் தேதியும், இரண்டாவது தாளுக்கான தேர்வு ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. எந்தெந்தப் பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்ற தகவலை ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் trb.tn.nic.in பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.50 ரூபாய் கொடுத்து விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்புவதற்குப் பதிலாக, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் அல்லது குறிப்பிட்ட பள்ளியில் வழங்க வேண்டும்.விண்ணப்பத்தில் எந்தக் கல்வி மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக்கட்டணமாக 250 ரூபாயும், பிற பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு விண்ணப்பத்தில் இணைப்புத்தாள் (சலான்) இருக்கும். தேர்வுக்கான கட்டணத்தை அருகில் உள்ள இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அல்லதுகனரா வங்கியில் செலுத்தி சலான் சீட்டினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். சரியான கட்டத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தை மடிக்கக்கூடாது. தபால் வழியாக அனுப்பாமல் நேரடியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் சேரும் வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் போன்றவற்றை நினைவில் கொள்ளவும்.ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1-ல் பட்டயப்படிப்பு படித்தவர்கள் எழுதலாம். இந்த ஆண்டு பட்டயப்படிப்பிற்கான தேர்வினை முடிக்க உள்ளவர்களும்இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பார்வைத் திறன்குறைந்தோர் முதல் தாள் விண்ணப்பிக்க முடியாது.

இரண்டாவது தாளை ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து அதன் பின்பு பி.எட் படித்து முடித்தவர்கள் எழுதலாம். தற்போது பி.எட் முடிக்கும் தருவாயில் உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டு தாளுக்கான தேர்வினையும் எழுத இருப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தாள் 1 குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சுழல் அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாவதுதாளில் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.

 மூன்று மணி நேரத் தேர்வாகவும், 150 கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் இருக்கும்.மூன்று வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கவில்லை என்பதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இன்னும் எவ்வளவு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன என்ற தகவலும் உறுதியாகத் தெரியவில்லை.

ஆரம்பத்தில் 4000த்துக்கு மேற்பட்ட காலி இடங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் தற்போது ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 3000 பணியிடங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், ஒரு முறை தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்றால் ஏழு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால்அதனடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படும் என்பதால் 90 மதிப்பெண்ணைப் பெற வேண்டும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு நாளுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் மிகுந்த திட்டமிட்டுப் படிப்பது அவசியம்.

வாழ்த்துகள் ஆசிரியர்களே!
- ஞா. சக்திவேல் முருகன்