யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/3/17

நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் உறுதி ??

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.



தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த மசோதா மனிதவள மேம்பாடு, மருத்துவ நலம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகள் சம்பந்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இன்று தமிழக முதல்வர் அனுமதியுடன் நானும், உயர் கல்வித்துறை அமைச்சரும் அரசு செயலாளர்களுடன் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அவரிடம் தமிழகத்திற்கு விலக்கு வேண்டி எடுத்துரைத்து வலியுறுத்தினோம். இதைப் பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விஜயபாஸ்கர் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சட்டரீதியான எங்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் நாங்கள் மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

மருத்துவத்தைப்போல், பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்கும் தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், "ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக நுழைவுத்தேர்வை நடத்தி தமிழகத்தின் பொறியியல் கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதை அமைச்சரிடம் எடுத்துக் கூறி எங்களுக்கு மற்றொரு நுழைவுத்தேர்வு தேவை இல்லை என வலியுறுத்தி உள்ளோம். இதையும் அவர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்" எனத் தெரிவித்தார்.

சென்னை குடிநீரில் கழிவுநீர் - பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை!

கொரட்டூர் ஏரியின் எல்லையை வரையறுக்கவும், ஏரியில் கழிவுநீரை திறந்துவிட்ட லாரிகளை சிறை வைக்கவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகரையொட்டி 850 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கொரட்டூர் ஏரி. 1970ஆம் ஆண்டுகளில் இந்த 
ஏரியை அப்பகுதியை சுற்றியுள்ள அக்ரகாரம், எல்லை அம்மன் நகர், சாரதா நகர், கண்டிகை, சீனிவாசபுரம், காந்தி நகர் உள்பட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சமீபகாலமாக ஏரியில் கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி குடியிருப்பு நல விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாகி சேகரன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இதுகுறித்து சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 21 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பதிலளிக்கவும், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும் மேலும் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆவின் நிறுவனம் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இப்படி தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையிலும், சில நாள்களுக்கு முன்பு டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட கழிவுநீர் ஏரியில் திறந்துவிடப்பட்டது.

இதற்கிடையில், இது தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய அமர்வுமுன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் நிறுவனம் சார்பில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க புதிய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் திறந்துவிட்ட டேங்கர் லாரியைப் பிடிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முறையிடப்பட்டது.

கொரட்டூர் ஏரியின் பரப்பளவை கணக்கிட்டு, தமிழக பொதுப்பணித் துறை அறிக்கையளிக்க வேண்டும். அத்துடன், கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் திறந்துவிட்ட தனியார் லாரிகளை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சிறைப் பிடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குடிநீரில் கழிவுநீரை கலந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தின்கீழ் கொரட்டூர், ரெட்டேரி, அம்பத்தூர் ஆகிய 3 ஏரிகளும் படகுசவாரி, நடைபயிற்சி வளாகத்துடன் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்படும் என்று, கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஏரிகளிலும் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின. ஆனால் அந்த ஆண்டு ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்பால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ்., தாக்குதல்: 5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை !!

இந்தியாவில் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

குறிப்பாக, *உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரளா* ஆகிய 5 மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

8/3/17

ஜி-ஸ்வீட் ஜிமெயிலின் "வரும்.. ஆனா போகாது" சலுகை!

சமீபத்தில் கூகிள் நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

அதாவது ஜிமெயிலில் உள்வரும் மின்னஞ்சல்களில் இணைப்பு கோப்புகள் இருந்தால் {அட்டாச்மென்ட் ஃபைல்ஸ்} அந்த இணைப்பின்/இணைப்புகளின் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவு {ஒரு மின்னஞ்சலுக்கு} முன்பு இருந்த 25 எம்.பியிலிருந்து 50 எம்.பியாக அதிகரிக்கப்படுவதாக சொல்லியிருந்தது.

இதில் உள்ள நுணுக்கத்தை கவனித்தே ஆகவேண்டும். {சாதாரணமாக} 50 எம்.பி வரை கோப்புகளை இணைத்து ஜிமெயில் பயனி ஒரு மின்னஞ்சலை பிறருக்கு அனுப்ப முடியாது {பெறுபவர் இன்னொரு ஜிமெயில் பயனியாக இருந்தால்கூட!}. ஏனென்றால் வெளியே போகும் ஜிமெயில் மின்னஞ்சலின் இணைப்பு கோப்புகளின் அதிகபட்ச அளவு பழையபடி இன்னும் 25 எம்.பியாக மட்டுமே இருக்கிறது.

வேறு யாராவது அப்படி அனுப்பினால் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வளவே.

25 எம்.பிக்கு மேல் அளவுள்ள கோப்புகளை இணைப்பாக அனுப்ப வேண்டும் என்றால் ஜிட்ரைவின் {drive.google.com} உதவியுடன் {லிங்க்காக} அனுப்ப வழிமுறை இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் இந்த கூகிளின் அறிவிப்பு எல்லா ஜிமெயில் பயனிகளுக்கும் பொருந்தும் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனென்றால்  கூகுளின் "ஜி-ஸ்வீட்"டுக்கு காசு கொடுத்து ஜிமெயிலை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் {Gmail users under Gsuite paid service https://gsuite.google.com/} .

இலவச ஜிமெயில் பயனிகளுக்கும் இது பொருந்தும் என்று கூகிள் எங்கேயும் சொல்லவில்லை. கூகுளுக்கு விருப்பம் இருந்தால் ஒருவேளை இந்த சலுகையை இலவச ஜிமெயிலுக்கும் நீட்டிக்கலாம். ஆனால் உறுதியில்லை.

இலவச ஜிமெயிலிலும் இந்த சலுகை அறிமுகம் ஆகிவிட்டதா?  என்பதை பார்க்க நமக்கு நாமே 25 எம்.பிக்கு மேல் அளவுள்ள இணைப்பை அனுப்பி பரிசோதித்துக்கொள்ளலாம்.

அருஞ்சொற்பொருள்:
Passenger = பயணி {பயணம் செய்பவர் பயணி}
User = பயனி {பயன்படுத்துபவர் பயனி}

கால நீட்டிப்பிலேயே காலம் தள்ளும் CPS வல்லுநர் குழு....CPS-Expert Committee be extended further by three months from 26.12.2016,

*CPS NEWS:*

*அரசாணை வெளியிட்டும் ஓராண்டாக CPS தொகை பெறமுடியாமல்
தவிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்.*

அரசுஊழியர், ஆசிரியர் சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த 22.02.2016 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்: 59, ன்படி CPS திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்ற, மரணம் அடைந்தவர்களுக்கு ஒரு மாதத்தில் பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

*ஆனால், ஓராண்டாக பல்வேறு காரணங்களினால் விண்ணப்பித்த 4192 பேரில் 40% பேருக்கு மட்டும் ஊழியர் பங்குத்தொகை, அரசின் பங்குத்தொகை வழங்கப்பட்டுள்ளது.*

*மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஏதுமில்லை.*

*தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.*

*திண்டுக்கல் எங்கெல்ஸ்.*

FLASH NEWS:TET ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் ஒரு குறிப்பிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது இன்று (7-3-2017) TRB அறிவிப்பு TET இரண்டாவது பட்டியல் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

Click here-TRB LETTER-Teachers Recruitment Board - TNTET PAPER II – Data verification and updation















தற்போது பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் TET எழுதுவோர் கவனத்திற்கு துறை அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும். மாதிரி விண்ணப்பம்..

அனுப்புநர்:
...............................
ஊ.ஒ.தொ/நடுநிலை பள்ளி,
..............................,
உங்கள் ஒன்றியம்

பெறுநர்:
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள்,

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
உங்கள் மாவட்டம்



வழி:
1)உ.தொ.க.அலுவலர் அவர்கள்,

2)தலைமை ஆசிரியர்
...,.,.......................

ஐயா,

பொருள் (தகுதி தேர்வு எழுத துறை அனுமதி வேண்டுதல் சார்பு)

நான்மேற்கண்ட பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நான் ஏப்ரல் 2017ல் நடைபெறும் பட்டதாரிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வெழுத (தாள்-2) விண்ணப்பித்து உள்ளேன்.அதனால் எனக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுத துறை அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
......................

இடம்:
நாள்:


இணைப்பு.

1)ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நகல்-2
2)உயர்கல்வி Convocation சான்றிதழ் நகல்-2.
3)பணிநியமன ஆணை நகல்
(DEEO, AEEO, பள்ளி சேர்க்கை அறிக்கை
மூன்றும் இணைக்க வேண்டும்.
உயர்கல்வி பயில முன்னனுமதி வாங்கியிருந்தால் அதன் நகலையும் இணைக்க வேண்டும்)
*முக்கிய குறிப்பு*

Covering letter இரண்டு எழுத வேண்டும்

ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதி மாற்றம் : டிஎன்பிஎஸ்சி

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது விடுதி
கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பணிக்கான தேர்வு மே 20ம் தேதிக்கு மாற்றியும், செயல் அலுவலர் நிலை - 3 தேர்வு ஜூன் 10ம் தேதிக்கும்,

செயல் அலுவலர் நிலை - 8க்கான தேர்வு ஜூன் 11ம் தேதிக்கும் மாற்றி டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.

2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல்
10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்... ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவுப் பணியிடங்கள் 623 மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் & (IEDSS) பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இந்நிலையில் (i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் (ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் (iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் (vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள். எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் (தாள்- II ல்) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப்பட்டியல் (Merit List) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in.) 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. நாடுநர்கள் மேற்கண்ட விவரங்களை இணையதள வழிமூலம் (online)சரிபார்த்துக் கொள்ளலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. நாடுநர்கள் (Candidates) தங்களின் ஒருசில விவரங்களை திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் online -லேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும். மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017 இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்று வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்படமாட்டாது. மேற்கண்டவாறு சரிபார்க்கப்பட்ட விவரங்களைக்கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்படும். மேற்கண்ட இறுதி தகுதிப்பட்டியல் கொண்டுதான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது. தகவல் : தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6

லஞ்சத்தில் இந்தியா முதல் இடம்.. ஆய்வில் ஷாக் தகவல் !

டெல்லி: ஆசிய பசுபிக் மண்டலத்தில் 69 சதவீத இந்தியர்கள் பொது சேவைகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியபசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளின் ஊழல், லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்தது. 16 நாடுகளில் சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்திய அந்த ஆய்வின் முடிவில் லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து வியட்நாம் நாட்டினர் 65 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும், சீனாவில் 26 சதவீதம் பேரும், தென்கொரியாவில் 3 சதவீதம் பேரும் லஞ்சம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஜப்பானில் 0.2% பேர்மட்டுமே லஞ்சம் பெறுகின்றனர். இந்தியாவில் 10 பேரில் 7 பேர் அரசின் சேவையைப் பெற லஞ்சம் கொடுக்கிறார்களாம். முறைகேடுகளுக்கு லஞ்சம் வழிவகுப்பதால் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலிறுத்தி உள்ளது.

பழைய 500,1000 நோட்டுகள் மாற்றும் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் ??மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு !!

ரிசர்வ் வங்கிக் கிளைகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம்: மத்திய அரசிடம் விளக்கம் கோரியது உச்ச நீதிமன்றம்


ரிசர்வ் வங்கிக் கிளைகளில் வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்குப் பின் அந்த நோட்டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளைகளில் 2017-ஆம் ஆண்டு, மார்ச் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி சார்பில் அப்போது அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் அல்லாது வெளிநாடுகளில் வாழ்பவர்கள் மட்டுமே செல்லாத ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ஆம் தேதி வரை குறிப்பிட்ட கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது தொடர்பாக பிரதமர் மோடியும், ரிசர்வ் வங்கியும் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சரத் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது, மனுதாரரின் கருத்துகளை கவனத்தில் கொள்வதாகக் கூறிய நீதிபதிகள் இதுகுறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மார்ச் 10) ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தனர்.

சிறுவர்களின் அறிவுத் திறனை அதிகரிக்கும் முட்டை!

முட்டையின் மஞ்சள்கருவில் கோலின் காணப்படுகிறது. இது, அசிடைல் கோலின் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்கத் தேவைப்படுகிறது. அசிடைல் கோலின் மூளைத் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டுவரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் பற்றாக்குறை கவனக்குறைவையும்,

ஞாபகமறதியையும் ஏற்படுத்துகிறது.

கொலஸ்ட்ரால் நல்லதா? கெட்டதா? இது அனைவரின் மனதிலும் இருக்கும் கேள்வி. சந்தேகமில்லாமல் மூளை ஆரோக்கியத்துக்கு கொலஸ்ட்ரால் (Saturated Fat) தேவைப்படுகிறது. நரம்பு செல்களைச் சுற்றியுள்ள அடுக்குகளுக்கு கொலஸ்ட்ரால் மிக இன்றியமையாதது. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஹார்மோன்களுக்கு கொலஸ்ட்ரால் தேவையானதே. இத்தகைய கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது.

இதுதவிர, முட்டையில் காணப்படும் DHA என்னும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், அது நரம்பு செல்களின் இணைப்புகளுக்கு உதவுகிறது. தினமும் சிறுவர்களுக்கு ஒரு முட்டை கொடுப்பது சாலச் சிறந்தது. நல்ல ஆரோக்கியமும், வளர்வதற்கான சத்துகளும் கிடைப்பதாக மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு !!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:

நேரடி எழுத்துத் தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது.
சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
..பகிா்வு..எம்.விஜயன்..

TNTET - Paper 1 & 2 - NEW WEIGHTAGE கணக்கிடும் முறை !!

TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை
New weightage கணக்கிடும் முறை

Paper 2 Calculation


முதலில் உங்களின் +2 மதிப்பெண் உதாரணமாக 1050,

Plus 2

1050/1200*100=87.5 87.5/100*10=8.75

Degree
52% so 52/100*15=7.8


BEd
86% 86/100*15=12.9

TET 102 102/150*100=68 68/100*60=40.80

TOTAL Weightage: 70.25.

Paper 1 - க்கான வழிமுறை

+2 - மதிப்பெண் 1050

1050/1200*100=87.5 87.5/100*15=13.25

DTEd

86% 86/100*25=21.5

TET 91 91/150*60=36.4

TOTAL 71.15

CPS NEWS:அரசாணை வெளியிட்டும் ஓராண்டாக CPS தொகை பெறமுடியாமல் தவிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் !!

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த 22.02.2016 அன்று  வெளியிடப்பட்ட அரசாணை எண்: 59, ன்படி CPS திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்ற, மரணம் அடைந்தவர்களுக்கு ஒரு மாதத்தில்
பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


*ஆனால், ஓராண்டாக பல்வேறு காரணங்களினால் விண்ணப்பித்த 4192 பேரில் 40% பேருக்கு மட்டும்  ஊழியர் பங்குத்தொகை, அரசின் பங்குத்தொகை      வழங்கப்பட்டுள்ளது.*

*மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஏதுமில்லை.*

*தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.*

*திண்டுக்கல் எங்கெல்ஸ்.*

வாகனங்களில் அதிகமான மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு !!

வாகனங்களில் அளவுக்கு அதிக மாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல 
வேண்டும் என்பதற்காக, பள்ளி வாகனங்களை இயக்க பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறை யில் உள்ளன.

வாகனங்களில் வேக கட்டுப் பாட்டுக் கருவி பொருத்த வேண் டும். அனுபவம் வாய்ந்த டிரைவர் கள் பணியமர்த்தப்பட வேண்டும். பாலம், நீர் நிலைகள் போன்ற இடங்களில் பிற வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட் டுள்ளது.

பள்ளிக்கு செல்லும் வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும். இதன்படி ஆட்டோக்களில் 6 மாணவ, மாணவிகள் மட்டுமே ஏற்றிச்செல்ல அனுமதி உண்டு.

இதுதவிர, மாதக் கட்டணத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார்கள், ஆம்னி வேன்கள், மேக்ஸிகேப் போன்ற சுற்றுலா வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லக் கூடாது. இது போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பானது.

இதனையெல்லாம் மீறி அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்கள் ஏற்றி செல்லப்படுகின்றனர். மாணவ மாணவியர் நலன் கருதி, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சியில் பெண்களுக்கு சமவாய்ப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும்வகையில் ஐ.நா. அமைப்புடன், இந்தியா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிப்பதற்கும், தேர்தலில் வெற்றிபெற்ற பெண்களின் திறனை மேம்படுத்துவதற்கும் வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ.நா. மகளிர் சபையுடன் மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் வகையிலான சட்ட விதிகளையும், கொள்கைகளையும் வகுத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல்வேறு நடவடிக்கைகளை ஐ.நா. அமைப்பும், இந்தியாவும் இணைந்து நடவடிக்கை எடுக்கும். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் நடவடிக்கை மற்றும் பொதுஇடங்களில் சமஉரிமை மறுப்பு போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கலந்தாலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆந்திரம், கர்நாடகம், ஒடிஸா, தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் முதல்கட்டமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை!'- மறுப்பு தெரிவிக்கும் இலங்கை !!

பொய்யான செய்தியை இந்திய ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன'.*

_கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் பகுதியைச் 
சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச்சென்றிருந்தனர். நேற்றிரவில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்ததுடன் மிருகத்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர்._

_இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற கெம்பலோத் என்பவரது மகன் பிரிட்ஜோ (வயது 21) என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து இருந்தது. இதே போல் கிளிண்டன் என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார்._

*இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசையல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.*

_இது குறித்து இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் சமிந்த வலகுலகே கூறுகையில், 'ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை.  மீனவர்களை கைது  செய்வதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர்களை சுட அதிகாரம் இல்லை.;   இந்திய ஊடகங்கள் கூறுவது உண்மை தன்மை இல்லாத செய்தி. பொய்யான செய்தியை இந்திய ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன' என்று தெரிவித்துள்ளார்._

ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு பணி தீவிரம் : புதிய ரேஷன் கார்டு வழங்க தடை !!

ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு பணி தீவிரமாக நடப்பதால், புதிய ரேஷன் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல் ரேஷன் கார்டுக்கு பதிலாக 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கார்டுடன் குடும்ப உறுப்பினர் ஆதார், அலைபேசி எண்கள் இணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆதார் எண் 
இணைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது.
விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு : ஆதார் இணைக்காத ரேஷன் கார்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 20,000 முதல் 50,000 கார்டுகளுக்கு பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. அக்கார்டுதாரர்களில் சிலர் தற்போது மனுச்செய்து தங்கள் கார்டுகளுடன் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்துகின்றனர்.'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் மாவட்ட உணவு வழங்கல் அலுவலரின் 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி விடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.
புதிய கார்டு நிறுத்தம் : 'ஸ்மார்ட் கார்டு' பணி தீவிரமாக நடப்பதால், கடந்த மாதத்துடன் புதிய ரேஷன் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் புதிய ரேஷன் கார்டு பிரின்ட் செய்யும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது புதிய கார்டு கோரி 'ஆன்-லைனில்' மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி நிறைவடைந்த பின் பரிசீலனைக்குட்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கும் புதிய கார்டு வழங்கப்படும், என, வழங்கல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.