யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/3/17

வாட்ஸ் ஆப்' -ஐ கண்காணிக்கும் சிஐஏ: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!!!

வாட்ஸ் ஆப்‛ மூலம் அனுப்பப்படும் செய்திகள் ரகசியமானது என பலரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில், அந்த செய்தியை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., படிக்க முடியும் என விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட 8.761 பக்க அறிக்கை: ‛வாட்ஸ் ஆப்'பை ஹாக் செய்து செய்தியை படிக்கும் வசதி சி.ஐ.ஏ.,விடம் உள்ளது. தன்னிடம் உள்ள தொழில்நுட்பங்கள் மூலம், ‛வாட்ஸ் ஆப்', ‛டெலிகிராம்' உள்ளிட்ட செயலிகளை ஸ்மார்ட் போனை ஹாக் செய்து, அதில் உள்ள செய்திகள், ஆடியோ செய்திகள் 'என்கிரிப்சன்' செய்வதற்கு முன்னர் அவற்றை சி.ஐ.ஏ.,வால் பார்க்க முடியும். 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பப்படும் செய்திகளை உளவாளிகள் பார்க்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

13வது ஊதிய ஒப்பந்த பேச்சு; 30 நிமிடங்களில் முடிந்தது!!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதற்கட்ட பேச்சு, 30 நிமிடங்களில் முடிந்தது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களின் ஊதியத்திற்காக, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதிய 
ஒப்பந்தம் செய்யப்படுகிறது. 2016 ஆகஸ்டுடன், 12வது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்தது. முன்னாள் முதல்வர், ஜெ., உடல்நலமின்மை, இறப்பு உள்ளிட்ட காரணங்களால், 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு உரிய நேரத்தில் துவக்கப்படவில்லை. பேச்சை உடனே துவக்கக் கோரி, தொழிற்சங்கங்கத்தினர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், ஜன., 13ல், பேச்சுக்கான அதிகாரபூர்வ குழுவை, அரசு அமைத்தது.
அரசு நிதித் துறை துணை செயலர், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், அனைத்து கோட்ட நிர்வாக இயக்குனர்கள் உள்ளிட்ட, 15 பேர், அக்குழுவில் இடம் பெற்றனர்.இந்நிலையில், நேற்று காலை, 11:50 மணிக்கு, குரோம்பேட்டையில் உள்ள, அரசு போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், பேச்சு குழுவினர் முன்னிலையில், தொழிற்சங்கத்தினருடன் பேச்சு துவங்கியது. 48 தொழிற்சங்கங்களில் இருந்து, தலா, இருவர் வீதம், பேச்சுக்கு அனுமதிக்கப்பட்டனர். பகல், 12:20 மணிக்கு, பேச்சு முடிவுற்றது.
இது குறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை, பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கான நிலுவை தொகையை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவற்றை செயல்படுத்தாமல், ஊதிய ஒப்பந்த பேச்சை தொடர்ந்தால், நிர்வாக செயல்பாடுகளில் சிக்கல் எழலாம் என, அனைத்து தொழிற்சங்கத்தினரும் வலியுறுத்தினர். 'பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்' என, அமைச்சர் உறுதி அளித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

2,000 புதிய பேருந்துகள்

ஓய்வு பெற்றோருக்கான நிலுவை தொகை, 1,200 கோடி ரூபாய் உள்ளது. இது, 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்கு, வரவுக்கும், செலவுக்கும் உள்ள பற்றாக்குறையே காரணம். இது தொடர்பாக, முதல்வரிடம் ஆலோசித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், 2,000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்.-விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர்.

பிளஸ் 2 ஆங்கில தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குழப்பம்!

பிளஸ் 2 ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களிலும், ஏழு மதிப்பெண்களுக்கு, வினாத்தாள் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதை சரிசெய்யும் வகையில், போனஸ் மதிப்பெண் தர, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில்
, நேற்று முன்தினம் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், ’பி’ பிரிவில், மூன்று மதிப்பெண்களுக்கான வினாக்கள், மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தின.



அதாவது, 61 முதல், 63 வரை, ஒரு மதிப்பெண் வினாக்கள் இருந்தன. ஒரு மூல வரியை கொடுத்து, அதன் உவமை மற்றும் உருவக வார்த்தையை சுட்டிக் காட்டும்படி கேட்கப்பட்டிருந்தது. இதில், 61 மற்றும், 62 ஆகிய இரு வினாக்களுக்கு இடையே, பெரிய இடைவெளி இருந்தது.



மேலும், 62வது வினாவை ஒட்டி, 63வது வினாவுக்கான மூல வரி இடம்பெற்றது. அதனால், எந்த மூல வரிகளுக்கு, எந்த பதில் எழுத வேண்டும் என, மாணவர்கள் குழப்பம் அடைந்து, விடைகளை மாற்றி எழுதி விட்டனர்.



இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது:



வினாத்தாளில், இரண்டு வினாக்களுக்கு இடையில், தேவையற்ற இடைவெளி இருந்தது. அதனால், பல மாணவர்கள் குழம்பியதால், சரியான பதிலை எழுத முடியவில்லை. சிலர், 62வது வினாவுக்கு, 63வது வினாவுக்கான மூல வரியை பயன்படுத்தி, பதில் எழுதியுள்ளனர்.



இதுகுறித்து, ஆங்கில ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும், 61வது கேள்வியில், உருவகம் என்பதற்கான, ’மெட்டபோர், பெர்சானிபிகேஷன்’ ஆகிய இரண்டு பதிலும் வர வாய்ப்புள்ளது.


இதில், மாணவர்கள் எதை எழுதியிருந்தாலும், பதில் அளிக்கலாம் என, ஆங்கில ஆசிரியர்கள் தெரிவித்தனர்.ஆங்கிலம் இரண்டாம் தாளில், ’சி’ பிரிவில், ஐந்து மதிப்பெண்களுக்கு, 100 வார்த்தைகளில் சுருக்கி, ஒரு கட்டுரை எழுதும் கேள்வி இடம் பெற்றுள்ளது.


அது, முந்தைய தேர்வுகளில், ’மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுது’ என, கேட்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் பலர், வினாத்தாளில் இருந்த கட்டுரையை, மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதியுள்ளனர். அவர்களுக்கும் முழுமையான மதிப்பெண் வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதிக மதிப்பெண் பெற பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடா?

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதி மெட்ரிக் பள்ளிகள் சிலவற்றில் முறைகேடாக உதவுவதாக புகார் உள்ளது.

இப்பகுதி மாணவர் ஒருவரின் தாய் ’தினமலர்’ அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசுகையில், ”கம்பத்தில் சில மெட்ரிக் பள்ளிகளில், நன்றாக படிக்கும் சில பிளஸ் 2 மாணவர்கள் மீது, நிர்வாகத்தினர் அதீத கவனம் செலுத்துகின்றனர்.

தமிழ், ஆங்கில தேர்வுகள் எழுதி வெளியே வந்த மாணவரின் வினாத்தாளை பெற்று, தவறான விடை ஏதும் எழுதியுள்ளாரா என விசாரிக்கின்றனர். ஒரு மார்க் வினா தவறு என மாணவர் குறிப்பிட்டால், மிக ரகசியமாக தேர்வு அறைக்கு உடனே சென்று விடைகள் திருத்தப்படுகிறது.

இதுபோன்ற முறைகேடால் எங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படுவர். கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வதில்லை,” என்றார்.

காரணம் என்ன

தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், “மெட்ரிக் பள்ளிகளிடையே தொழில் போட்டி யால், இதுபோன்ற புகார்களை திட்டமிட்டு பரப்புகின்றனர். ஆனாலும் அவற்றின் தேர்வு அறை கண்காணிப்பாளரை தினமும் மாற்றுகிறோம்.

கலெக்டர், டி.எஸ்.பி., தலைமை யில் பறக்கும் படையினர் ஆய்வு செய்கின்றனர். மருத்துவ படிப்பிற்கான ’கட் ஆப்’ பெறும் தேர்வுகளின் போது, கம்பம் பகுதி பள்ளி தேர்வு அறை கண்காணிப்பாளர்களை மாவட்டத்தில் பிற பகுதியில் இருந்து அனுப்ப உள்ளோம்.

விடைத்தாளில் விடைகளை திருத்துவது உள்ளிட்ட தவறு நடக்க வாய்ப்பே இல்லை. எனினும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்றார்.

நடுவானில் விமானப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இந்திய டாக்டர்!

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அன்சிதா மற்றும் அவரது கணவர் ஆக்லாந்தில் இருந்து மலேசியாவுக்கு, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது,

விமானத்தில் இருந்த பணிப்பெண் ஒருவர் மயக்கம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவ உதவி தேவை என்று விமானத்தில் அறிவிக்கப்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த அன்சிதா, உடனடியாக அந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்து, அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அவருக்கு விமான ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

சந்தையை கலக்க களமிறங்கியது ஐபோன் 6 32 GB..!!

பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் என்றாலே தனி சிறப்பு உண்டு. ஐ போன் வைத்திருந்தாலே வசதி படைத்தவர்கள் தான் என கருத கூடும். அந்த அளவிற்கு அதிக விலையும் தரமும் மிக்கதாக இருக்கும்.

ஐ போன் மொபைல்


ஐபோன் 6 ஸ்மார்ட்போன் 16 gb, 64gb , 128 gb உள்ளிட்ட ஜிபி அளவை கொண்டு ,மூன்று விதங்களில் வெளிவந்தது .இந்நிலையில் தற்போது 32 ஜிபி அளவு கொண்ட, ஐபோன் 6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

ரூ.28,999 விலைக்கு விற்பனை

நிறம் : கிரே நிறம் கொண்டது

சிறப்பு சலுகை

ஐபோன் 6 ஸ்மார்ட்போன், தற்போதுதான் வெளிவர உள்ளதால், அறிமுக சலுகையாக ரூ.8550 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது என்பது கூடுதல் சலுகை. இச்சலுகையானது எக்சேஞ்ச் செய்யும் போது மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

4.7 இன்ச், 750x1334 பிக்சல் டிஸ்ப்ளே

ஐஓஎஸ் 10

ஏ8 பிராசஸர்

1 ஜிபி ரேம்

கேமரா :

பின்பக்க கேமரா : 8 எம்பி பிரைமரி கேமரா

முன்பக்க கேமரா : 1.2 எம்பி செல்ஃபி கேமரா

3௦ ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் ஐ போன் இது என்பதால் , விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.

மத்திய அமைச்சரவையிடம் ஜி.எஸ்.டி. மசோதா வரும் 22-ல் தாக்கல் !

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், வரும் 22-ந்தேதி ஜி.எஸ்.டி. மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.

கவுன்சில்

இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில்அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 11-வது கூட்டங்களில் 4 வகையான 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், மற்றும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஒப்புதல்

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுவரை நடந்த 11 ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில், முக்கிய வரைவு சட்டங்களான மத்திய ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

16-ந்தேதி கூட்டம்

வரும் 16-ந்தேதி தொடங்கும் 12-வது கூட்டத்தில் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. சட்டத்துக்கும் ஒப்புதல் பெறப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை

இந்நிலையில்,ஜி.எஸ்.டி. துணைச் சட்டங்களான மாநில ஜி.எஸ்.டி. மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. ஆகியவை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வரும் 22-ந்தேதி நிதி அமைச்சகம் தாக்கல் ெசய்யும் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், மாநிலங்களுக்கான இழப்பீட்டுச் சட்டம், மத்திய ஜி.எஸ்.டி. சட்டம், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் ஆகியவை வரும் 27-ந்தேதி தாக்கல் ஆகும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள் ஜி.எஸ்.டி. மசோதாக்களை நிறைவேற்றி, ஜூலை 1-ந்தேதி நடைமுறைக்கு கொண்டு வருவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC: தமிழக அரசில் 333 உதவி வேளாண் அதிகாரி காலி பணியிடம் !!

தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள 326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் இன்று புதன்கிழமை (மார்ச்.8) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அறிக்கை எண்: 08/2017
விளம்பர எண்: 463

பணி: Assistant Agricultural Officer

காலியிடங்கள்: 326+7
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பதிவுக் கட்டணம்: ரூ.150
தேர்வுக் கட்டணம்: ரூ.150

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொது பிரிவினர் 18 - 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.

தகுதி: +2 தேர்ச்சி பெற்று வேளாண் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை, சேலம், திருநெல்வேலி

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in/www.tnpscexams.net/ www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி விவரம்:
தாள்-I  02.07.2017 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை
தாள்-II 02.07.2017 அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 04.03 மணி வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.04.2017

மேலும்  கூடுதல்  விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_8_not_eng_asst_agrl_officer.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu

நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் உறுதி ??

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.



தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த மசோதா மனிதவள மேம்பாடு, மருத்துவ நலம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகள் சம்பந்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இன்று தமிழக முதல்வர் அனுமதியுடன் நானும், உயர் கல்வித்துறை அமைச்சரும் அரசு செயலாளர்களுடன் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அவரிடம் தமிழகத்திற்கு விலக்கு வேண்டி எடுத்துரைத்து வலியுறுத்தினோம். இதைப் பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விஜயபாஸ்கர் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சட்டரீதியான எங்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் நாங்கள் மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

மருத்துவத்தைப்போல், பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்கும் தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், "ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக நுழைவுத்தேர்வை நடத்தி தமிழகத்தின் பொறியியல் கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதை அமைச்சரிடம் எடுத்துக் கூறி எங்களுக்கு மற்றொரு நுழைவுத்தேர்வு தேவை இல்லை என வலியுறுத்தி உள்ளோம். இதையும் அவர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்" எனத் தெரிவித்தார்.

சென்னை குடிநீரில் கழிவுநீர் - பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை!

கொரட்டூர் ஏரியின் எல்லையை வரையறுக்கவும், ஏரியில் கழிவுநீரை திறந்துவிட்ட லாரிகளை சிறை வைக்கவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகரையொட்டி 850 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கொரட்டூர் ஏரி. 1970ஆம் ஆண்டுகளில் இந்த 
ஏரியை அப்பகுதியை சுற்றியுள்ள அக்ரகாரம், எல்லை அம்மன் நகர், சாரதா நகர், கண்டிகை, சீனிவாசபுரம், காந்தி நகர் உள்பட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சமீபகாலமாக ஏரியில் கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி குடியிருப்பு நல விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாகி சேகரன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இதுகுறித்து சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 21 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பதிலளிக்கவும், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும் மேலும் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆவின் நிறுவனம் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இப்படி தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையிலும், சில நாள்களுக்கு முன்பு டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட கழிவுநீர் ஏரியில் திறந்துவிடப்பட்டது.

இதற்கிடையில், இது தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய அமர்வுமுன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் நிறுவனம் சார்பில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க புதிய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் திறந்துவிட்ட டேங்கர் லாரியைப் பிடிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முறையிடப்பட்டது.

கொரட்டூர் ஏரியின் பரப்பளவை கணக்கிட்டு, தமிழக பொதுப்பணித் துறை அறிக்கையளிக்க வேண்டும். அத்துடன், கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் திறந்துவிட்ட தனியார் லாரிகளை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சிறைப் பிடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குடிநீரில் கழிவுநீரை கலந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தின்கீழ் கொரட்டூர், ரெட்டேரி, அம்பத்தூர் ஆகிய 3 ஏரிகளும் படகுசவாரி, நடைபயிற்சி வளாகத்துடன் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்படும் என்று, கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஏரிகளிலும் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின. ஆனால் அந்த ஆண்டு ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்பால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ்., தாக்குதல்: 5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை !!

இந்தியாவில் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

குறிப்பாக, *உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரளா* ஆகிய 5 மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

8/3/17

ஜி-ஸ்வீட் ஜிமெயிலின் "வரும்.. ஆனா போகாது" சலுகை!

சமீபத்தில் கூகிள் நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

அதாவது ஜிமெயிலில் உள்வரும் மின்னஞ்சல்களில் இணைப்பு கோப்புகள் இருந்தால் {அட்டாச்மென்ட் ஃபைல்ஸ்} அந்த இணைப்பின்/இணைப்புகளின் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவு {ஒரு மின்னஞ்சலுக்கு} முன்பு இருந்த 25 எம்.பியிலிருந்து 50 எம்.பியாக அதிகரிக்கப்படுவதாக சொல்லியிருந்தது.

இதில் உள்ள நுணுக்கத்தை கவனித்தே ஆகவேண்டும். {சாதாரணமாக} 50 எம்.பி வரை கோப்புகளை இணைத்து ஜிமெயில் பயனி ஒரு மின்னஞ்சலை பிறருக்கு அனுப்ப முடியாது {பெறுபவர் இன்னொரு ஜிமெயில் பயனியாக இருந்தால்கூட!}. ஏனென்றால் வெளியே போகும் ஜிமெயில் மின்னஞ்சலின் இணைப்பு கோப்புகளின் அதிகபட்ச அளவு பழையபடி இன்னும் 25 எம்.பியாக மட்டுமே இருக்கிறது.

வேறு யாராவது அப்படி அனுப்பினால் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வளவே.

25 எம்.பிக்கு மேல் அளவுள்ள கோப்புகளை இணைப்பாக அனுப்ப வேண்டும் என்றால் ஜிட்ரைவின் {drive.google.com} உதவியுடன் {லிங்க்காக} அனுப்ப வழிமுறை இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் இந்த கூகிளின் அறிவிப்பு எல்லா ஜிமெயில் பயனிகளுக்கும் பொருந்தும் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனென்றால்  கூகுளின் "ஜி-ஸ்வீட்"டுக்கு காசு கொடுத்து ஜிமெயிலை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் {Gmail users under Gsuite paid service https://gsuite.google.com/} .

இலவச ஜிமெயில் பயனிகளுக்கும் இது பொருந்தும் என்று கூகிள் எங்கேயும் சொல்லவில்லை. கூகுளுக்கு விருப்பம் இருந்தால் ஒருவேளை இந்த சலுகையை இலவச ஜிமெயிலுக்கும் நீட்டிக்கலாம். ஆனால் உறுதியில்லை.

இலவச ஜிமெயிலிலும் இந்த சலுகை அறிமுகம் ஆகிவிட்டதா?  என்பதை பார்க்க நமக்கு நாமே 25 எம்.பிக்கு மேல் அளவுள்ள இணைப்பை அனுப்பி பரிசோதித்துக்கொள்ளலாம்.

அருஞ்சொற்பொருள்:
Passenger = பயணி {பயணம் செய்பவர் பயணி}
User = பயனி {பயன்படுத்துபவர் பயனி}

கால நீட்டிப்பிலேயே காலம் தள்ளும் CPS வல்லுநர் குழு....CPS-Expert Committee be extended further by three months from 26.12.2016,

*CPS NEWS:*

*அரசாணை வெளியிட்டும் ஓராண்டாக CPS தொகை பெறமுடியாமல்
தவிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்.*

அரசுஊழியர், ஆசிரியர் சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த 22.02.2016 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்: 59, ன்படி CPS திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்ற, மரணம் அடைந்தவர்களுக்கு ஒரு மாதத்தில் பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

*ஆனால், ஓராண்டாக பல்வேறு காரணங்களினால் விண்ணப்பித்த 4192 பேரில் 40% பேருக்கு மட்டும் ஊழியர் பங்குத்தொகை, அரசின் பங்குத்தொகை வழங்கப்பட்டுள்ளது.*

*மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஏதுமில்லை.*

*தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.*

*திண்டுக்கல் எங்கெல்ஸ்.*

FLASH NEWS:TET ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் ஒரு குறிப்பிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது இன்று (7-3-2017) TRB அறிவிப்பு TET இரண்டாவது பட்டியல் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

Click here-TRB LETTER-Teachers Recruitment Board - TNTET PAPER II – Data verification and updation















தற்போது பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் TET எழுதுவோர் கவனத்திற்கு துறை அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும். மாதிரி விண்ணப்பம்..

அனுப்புநர்:
...............................
ஊ.ஒ.தொ/நடுநிலை பள்ளி,
..............................,
உங்கள் ஒன்றியம்

பெறுநர்:
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள்,

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
உங்கள் மாவட்டம்



வழி:
1)உ.தொ.க.அலுவலர் அவர்கள்,

2)தலைமை ஆசிரியர்
...,.,.......................

ஐயா,

பொருள் (தகுதி தேர்வு எழுத துறை அனுமதி வேண்டுதல் சார்பு)

நான்மேற்கண்ட பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நான் ஏப்ரல் 2017ல் நடைபெறும் பட்டதாரிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வெழுத (தாள்-2) விண்ணப்பித்து உள்ளேன்.அதனால் எனக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுத துறை அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
......................

இடம்:
நாள்:


இணைப்பு.

1)ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நகல்-2
2)உயர்கல்வி Convocation சான்றிதழ் நகல்-2.
3)பணிநியமன ஆணை நகல்
(DEEO, AEEO, பள்ளி சேர்க்கை அறிக்கை
மூன்றும் இணைக்க வேண்டும்.
உயர்கல்வி பயில முன்னனுமதி வாங்கியிருந்தால் அதன் நகலையும் இணைக்க வேண்டும்)
*முக்கிய குறிப்பு*

Covering letter இரண்டு எழுத வேண்டும்

ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதி மாற்றம் : டிஎன்பிஎஸ்சி

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது விடுதி
கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பணிக்கான தேர்வு மே 20ம் தேதிக்கு மாற்றியும், செயல் அலுவலர் நிலை - 3 தேர்வு ஜூன் 10ம் தேதிக்கும்,

செயல் அலுவலர் நிலை - 8க்கான தேர்வு ஜூன் 11ம் தேதிக்கும் மாற்றி டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.

2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல்
10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்... ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவுப் பணியிடங்கள் 623 மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் & (IEDSS) பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இந்நிலையில் (i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் (ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் (iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் (vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள். எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் (தாள்- II ல்) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப்பட்டியல் (Merit List) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in.) 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. நாடுநர்கள் மேற்கண்ட விவரங்களை இணையதள வழிமூலம் (online)சரிபார்த்துக் கொள்ளலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. நாடுநர்கள் (Candidates) தங்களின் ஒருசில விவரங்களை திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் online -லேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும். மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017 இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்று வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்படமாட்டாது. மேற்கண்டவாறு சரிபார்க்கப்பட்ட விவரங்களைக்கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்படும். மேற்கண்ட இறுதி தகுதிப்பட்டியல் கொண்டுதான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது. தகவல் : தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6

லஞ்சத்தில் இந்தியா முதல் இடம்.. ஆய்வில் ஷாக் தகவல் !

டெல்லி: ஆசிய பசுபிக் மண்டலத்தில் 69 சதவீத இந்தியர்கள் பொது சேவைகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியபசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளின் ஊழல், லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்தது. 16 நாடுகளில் சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்திய அந்த ஆய்வின் முடிவில் லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து வியட்நாம் நாட்டினர் 65 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும், சீனாவில் 26 சதவீதம் பேரும், தென்கொரியாவில் 3 சதவீதம் பேரும் லஞ்சம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஜப்பானில் 0.2% பேர்மட்டுமே லஞ்சம் பெறுகின்றனர். இந்தியாவில் 10 பேரில் 7 பேர் அரசின் சேவையைப் பெற லஞ்சம் கொடுக்கிறார்களாம். முறைகேடுகளுக்கு லஞ்சம் வழிவகுப்பதால் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலிறுத்தி உள்ளது.

பழைய 500,1000 நோட்டுகள் மாற்றும் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் ??மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு !!

ரிசர்வ் வங்கிக் கிளைகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம்: மத்திய அரசிடம் விளக்கம் கோரியது உச்ச நீதிமன்றம்


ரிசர்வ் வங்கிக் கிளைகளில் வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்குப் பின் அந்த நோட்டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளைகளில் 2017-ஆம் ஆண்டு, மார்ச் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி சார்பில் அப்போது அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் அல்லாது வெளிநாடுகளில் வாழ்பவர்கள் மட்டுமே செல்லாத ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ஆம் தேதி வரை குறிப்பிட்ட கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது தொடர்பாக பிரதமர் மோடியும், ரிசர்வ் வங்கியும் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சரத் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது, மனுதாரரின் கருத்துகளை கவனத்தில் கொள்வதாகக் கூறிய நீதிபதிகள் இதுகுறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மார்ச் 10) ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தனர்.