யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/4/17

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)


நன்றி:
திரு.ரகுபதி,ஆசிரியர்

TNTET - 2017 தேர்வில் சிந்தித்து எழுதும் வினாக்கள் : மனப்பாட கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், சிந்தித்து பதில் எழுதும் வினாக்களே இடம் பெற உள்ளன. விடைத்தாள் திருத்தத்திலும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இதற்கான, முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'டெட்' தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஏப்., 29ல் நடக்கும் தேர்வுக்கு, 598 பள்ளிகளிலும், ஏப்., 30ல், 1,263 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வு மையங்களுக்கு, அலைபேசி போன்ற, மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.தேர்வுக்கான வினாத்தாளை, டி.ஆர்.பி., அதிகாரிகள் இறுதி செய்து, அச்சுக்கு அனுப்பியுள்ளனர். வினாத்தாள், லீக் ஆகாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வில், வினாத்தாள் மிக கடினமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், 20 ஆண்டுகளாவது பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 20 ஆண்டுகளில்
ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய படிப்புகளின் தேவை போன்றவற்றுக்கு ஏற்ப, பாடத்
திட்டங்கள் மாறும்; பொது தேர்விலும் கட்டுப்பாடுகள் வரும்.

இந்த மாற்றத்தை சமாளித்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதியை, தற்போது, 'டெட்' தேர்வு எழுதும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அதனால், அவர்கள் சிந்தித்து எழுதும் வகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுஉள்ளன.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பாட புத்தகங்களின் உள்பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும். மனப்பாட பகுதி கேள்விகள் குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

TNTET - 2017 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு - TET 2017 Exam Hall Ticket Published


TNTET 2017 - Paper I - Hall Ticket - Click here

TNTET 2017 - Paper II - Hall Ticket - Click here

 புகைபடம் இல்லாமல் இருப்பின் கீழே தரப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வின் போது மையத்தில் ஒப்படைக்கவும்..


If there is no photograph on your hall ticket- Please click here to download the form

10/4/17

நான் ஸ்கூலுக்கு போகக் கூடாதா..?' ஆசிரியர்களிடையே வைரலாகும் குறும்படம்

ஒரு மனிதரை கல்வி உயர்த்ததைப் போல வேறு விஷயம் ஏதேனும் 

இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், நமது சமூகத்தில் பொருளாதாரம், சாதி என எவ்வளவு விஷயங்கள் ஒருவர் கல்வியை அடைந்துவிடாமல் தடுக்கின்றன. இவையெல்லாம் தகர்ந்து அனைவருக்கும் 
கல்வி கிடைப்பதற்கான நடத்தப்பட்ட போராட்டம் நீண்ட நெடியது. போராட்டம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. இன்றைக்கும் அது தொடர வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் மட்டுமே இதற்கான முயற்சிகளை எடுத்தால் போதாது. சமூகம் பழமை வாதத்தன்மையிலிருந்து மாற வேண்டும்.

சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தவறான கருத்துகளை மாற்றினால் மட்டுமே கல்வி எல்லோருக்குமானதாக மாறும். கற்பதற்காக ஒருவர் எடுக்கும் முயற்சிகளை மனதார வரவேற்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'காழ்' எனும் குறும்படம் ஆசிரியர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 'காழ்' எனும் சொல்லுக்கு உறுதி எனும் பொருள். ஒரு சிறுவனின் 
உறுதியைக் கூறும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது 'காழி' இந்தக் 
குறும்படம்.

குப்பைகளைப் பொறுக்கி, அதை விற்று வரும் பணத்தைக் கொண்டு வாழும் ஒரு ஏழைச் சிறுவன் பற்றியக் கதை. அந்த ஏழ்மையிலும் அவனின் நேர்மையும் கல்விக்கான விருப்பமும் அதற்காக அவன் எடுக்கும் முயற்சியைப் பற்றியுமே இந்தப் படம் பேசுகிறது. இதில் அந்தச் சிறுவனாக நடித்திருக்கும் நவீன் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறான். கதையை முழுமையாகச் சொல்லிவிட்டால், படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடலாம்.
குறும்படம்


காழ்' குறும்படம் உருவானதற்கு முதன்மையான காரணமானவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மோ.ஜான் ராஜா. காட்டுமன்னார்குடியின் அருகே உள்ள வெங்கடேசபுரம் எனும் சிறிய கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர்.
குறும்படம்
"புகைப்படங்கள் எடுப்பதில் எனக்கு ரொம்ப ஆர்வம். அதனால் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கேமராவைக் கொண்டு எப்படி புகைப்படங்கள் எடுப்பது எனச் சொல்லிகொடுப்பது வழக்கம். எப்படி கோணங்கள் வைப்பது, வெளிச்சம் எந்தப் பக்கத்திலிருந்து இருப்பதுபோல பார்த்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் சொல்லும்போது மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்பார்கள். அதிலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நவீன் கற்பூரம்போல, சொல்வதை அப்படியே பட்டென்று பற்றிக்கொள்வான். நவீன் கூச்சமின்றி பேசவும் நடிக்கவும் செய்தான். அவனைப் 
பார்த்ததும்தான் எனக்குள் ரொம்ப நாட்களாக இருந்த குறும்பட ஆசை துளிர் விட்டது.

நண்பர் சுரேஷிடம் என் விருப்பதைச் சொன்னபோது, அவரும் என்னுடன் இணைந்துகொண்டார். இருவரும் சேர்ந்து படத்திற்கான வேலைகளைச் செய்தோம். கல்விப் பற்றிய படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். எளிமையான கதைத்தான் என்றாலும் இதை திரும்ப திரும்ப நமது சமூகத்தில் சொல்ல வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தோம். அதனால் நவீனை வைத்து துணிவோடு 'காழ்' படத்தைத் தொடங்கினோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நவீன் சிறப்பாக நடித்தான். நாங்களே வசனத்தை மாற்றிக்கூறி விட்டாலும் அவன் சரி செய்யும் அளவுக்கு படத்தோடு ஒன்றி விட்டான். 7 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். காலை ஆறரை மணியிலிருந்து எட்டரை மணி வரை மட்டுமே நடிக்க வைத்தோம். அதனால் நவீன் 
மட்டுமல்ல எங்களின் வழக்கமான வேலைகள் ஏதும் பாதிக்க வில்லை. படம் பார்த்தவர்கள் எல்லோரும் நவீனின் தாயாக நடித்திருப்பவர் நிஜமாகவே கண் தெரியாதவரா எனக் கேட்கிறார்கள். கண் பார்வையுள்ளவர்தான் அவர். ஆனால், பார்வையாளர்கள் இப்படிக் கேட்கும்விதத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.ஆசிரியர்

எங்கள் ஊரில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறோம். சின்னஞ்சிறு குறைகள் இருக்கலாம். ஆனால், படம் சொல்லும் விஷயம் தெளிவாக சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். எந்தக் காரணத்தினாலும் ஒருவருக்கு கல்விக் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதுதான் என் விருப்பம். இந்தச் செய்தியை மக்களிடையே கொண்டுச் செல்லும் விதத்தில் இந்தப் படத்தை நண்பர் சுரேஷ் இயக்க, நான் ஒளிப்பதிவு செய்தேன்.  இப்போது ஆசிரியர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் பாராட்டுகள் எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது." என்கிறார் ஆசிரியர் ஜான் ராஜா.

கல்விக்காக முன்னெடுக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் தொடர வேண்டும்.

TDS செலுத்தியோருக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ். ஆசிரியர்கள் அதிர்ச்சி !!

750 PP - தணிக்கை தடை காரணமாக கூடுதலாக பெற்ற ஊதியத்தை ஒரே தவணையில் திரும்ப செலுத்த ஆணை!!

750PP- ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தில் 750 தனி ஊதியம் 
பட்டதாரி பணியிடத்தில் அடிப்படை ஊதியத்தோடு சேர்த்து வழங்கப்பட்டதை தணிக்கை தடை காரணமாக கூடுதலாக பெற்ற ஊதியத்தை

ஒரே தவணையில் திரும்ப செலுத்த போடப்பட்ட ஆணை!!


TNTET - 2017 தேர்வில் சிந்தித்து எழுதும் வினாக்கள் : மனப்பாட கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில்,
சிந்தித்து பதில் எழுதும் வினாக்களே இடம் பெற உள்ளன. விடைத்தாள் திருத்தத்திலும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட
உள்ளன.
தமிழகம் முழுவதும், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இதற்கான, முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'டெட்' தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஏப்., 29ல் நடக்கும் தேர்வுக்கு, 598 பள்ளிகளிலும், ஏப்., 30ல், 1,263 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வு மையங்களுக்கு, அலைபேசி போன்ற, மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.தேர்வுக்கான வினாத்தாளை, டி.ஆர்.பி., அதிகாரிகள் இறுதி செய்து, அச்சுக்கு அனுப்பியுள்ளனர். வினாத்தாள், லீக் ஆகாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வில், வினாத்தாள் மிக கடினமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், 20 ஆண்டுகளாவது பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 20 ஆண்டுகளில்
ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய படிப்புகளின் தேவை போன்றவற்றுக்கு ஏற்ப, பாடத்
திட்டங்கள் மாறும்; பொது தேர்விலும் கட்டுப்பாடுகள் வரும்.
இந்தமாற்றத்தை சமாளித்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதியை, தற்போது, 'டெட்' தேர்வு எழுதும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அதனால், அவர்கள் சிந்தித்து எழுதும் வகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுஉள்ளன.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பாட புத்தகங்களின் உள்பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும். மனப்பாட பகுதி கேள்விகள் குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

கோட்டை நோக்கி ஆசிரியர்கள் பேரணி

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் தாஸ் கூறியதாவது;
அருகமை பள்ளி திட்டத்தை அமல்படுத்தி, வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும்.தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு
உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 40 சதவீதமாக உயர்த்தி  வழங்க வேண்டும்.

இதுபோல 16 கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசு இவற்றின் மீது செவிசாய்க்கவில்லை. இதையடுத்து இன்று சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டை நோக்கி பெரும் பேரணியாக செல்ல இருக்கிறோம். இவ்வாறு செயலாளர் தாஸ் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் ஏப்.25ல் வேலைநிறுத்தம் - 3 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏப். 25 முதல் நடக்கும்
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்
3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சிவகங்கையில் நடந்தது. இதில் பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: 2003க்கு பின் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் என பிடித்தம் செய்த ரூ.15 ஆயிரம் கோடி எங்கே போனதென தெரியவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் 2003க்குபின் பணியில் சேர்ந்து இறந்துள்ள ஊழியர்களின் குடும்பங்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிப்படைந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான அரசுத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளோம். இதில் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நோட்டு புத்தக விலை உயர்வு ஒரு குயர் ரூ.3 வரை அதிகரிப்பு

கடும் வறட்சியினால் காகிதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு நோட்டு
புத்தகத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு சாதாரண நோட்டு ரூ.3 வரை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பேப்பர் மற்றும் ஸ்டேசனரி வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வகுமார் கூறியதாவது:
காகித ஆலை மூலப்பொருட்களின் விலையேற்றம், வறட்சியினால் சவுக்கு மரங்களின் வளர்ச்சி சரிவு காரணமாக காகிதம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் ஒரு டன் காகிதம் ரூ.7 ஆயிரம் வரை விலை உயர்ந்து விட்டது. இதனால் இந்தாண்டு மூன்று முறை விலை உயர்ந்தது; சாதா நோட்டு புத்தகம் கூட ஒரு குயருக்கு ரூ.3 வரை அதிகமாக விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2 குயர் லாங் சைஸ் நோட்டு ரூ.38க்கு விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.43க்கு விற்கப்படுகிறது. ரூ.30க்கு விற்ற பைண்டிங் இல்லாத நோட்டு இந்த ஆண்டு ரூ.35க்கும், கடந்த ஆண்டு ரூ.14 முதல் 15க்கு விற்ற ஒரு குயர் நோட்டு ரூ.18க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.

நோட்டு புத்தக விலை உயர்வு ஒரு குயர் ரூ.3 வரை அதிகரிப்பு

கடும் வறட்சியினால் காகிதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு நோட்டு
புத்தகத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு சாதாரண நோட்டு ரூ.3 வரை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பேப்பர் மற்றும் ஸ்டேசனரி வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வகுமார் கூறியதாவது:
காகித ஆலை மூலப்பொருட்களின் விலையேற்றம், வறட்சியினால் சவுக்கு மரங்களின் வளர்ச்சி சரிவு காரணமாக காகிதம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் ஒரு டன் காகிதம் ரூ.7 ஆயிரம் வரை விலை உயர்ந்து விட்டது. இதனால் இந்தாண்டு மூன்று முறை விலை உயர்ந்தது; சாதா நோட்டு புத்தகம் கூட ஒரு குயருக்கு ரூ.3 வரை அதிகமாக விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2 குயர் லாங் சைஸ் நோட்டு ரூ.38க்கு விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.43க்கு விற்கப்படுகிறது. ரூ.30க்கு விற்ற பைண்டிங் இல்லாத நோட்டு இந்த ஆண்டு ரூ.35க்கும், கடந்த ஆண்டு ரூ.14 முதல் 15க்கு விற்ற ஒரு குயர் நோட்டு ரூ.18க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.

தேன்கூடு TET

9/4/17

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தொடர்பான ஆவணமா? - ஆளும் தரப்பினருக்குச் சிக்கல்



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதுக்குத்திட்டமிட்டதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆவணத்தின் படி 89 கோடி ரூபாய் வரை பணம் செலவிட திட்டமிட்டப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள், அவரது உதவியாளர் வீடு, நடிகரும் சமக தலைவருமானசரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனைசுமார் 35-க்கும் மேற்பட்ட இடங்களில்நடத்தப்பட்டது. அந்த சோதனையின்முடிவில் விஜய பாஸ்கரின் வீடுகள், அலுவலங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளனஎன்று வருமான வரித்துறையினர்தெரிவித்தனர். தற்போது, வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்கள் என்று சொல்லப்படுபவைவெளியாகியுள்ளன. அந்த ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் மூலமாக ஒரு ஓட்டுக்கு 4,000 ரூபாய் வரை வழங்க திட்டமிட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர்த்தொகுதியைப் பாகம் பாகமாகப் பிரித்து 85 சதவீத வாக்களர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்,அதன்படி 89 கோடி ரூபாய் வரை செலவிட கணக்கிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் போலியானவை என ‘அதிமுக அம்மா’ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி  - ஆனந்த  விகடன்..

நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை: டிடிவி.தினகரன்


டிடிவி.தினகரன் கூறியதாவது:பணப்பட்டுவாடா தொடர்பாக வெளியான ஆவணங்கள் போலியானவை.யார் வேண்டுமானாலும் இது போன்ற பட்டியலை வெளியிடலாம்33 வயதிலேயே சிறைக்குப் போனவன் எதற்கும் அஞ்சப்போவதில்லை 

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?

                                              
தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சோப் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றுக்கொள்வது இல்லை.

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பை சோப் ஏற்படுத்திவிடும். ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது கிடையாது.

ஒவ்வொருவரின் சருமம், வெவ்வேறு வகையைச் சார்ந்ததாக இருக்கும். தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சோப்பைத் தேர்ந்தெடுக்கலாம். சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இவர்கள் சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதுவும் பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

கட்டுப்படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சருமத்துக்கு அதற்கேற்ற பிரத்யேக சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை: ஆர்.கே.நகரில் பிரச்சாரம் நாளை ஓய்கிறது - கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை

                                           
சத்தீஸ்கரில் ஐபிசி என்ற சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் சுப்ரித் கவுர் என்பவர் அவருடைய கணவர் இறந்த செய்தியை வாசித்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சுப்ரித் கவுர் என்பவர் ஐபிசி சேனலில் 9 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார். அவருக்கும் ஹர்சாத் கவடே என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இன்று காலையில் சுப்ரித் கவுர் நேரலையில் செய்தி வாசிக்கும்போது, நிருபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக நேரலையில் இணைந்தார். அவர், 'மகாசமுந்த் மாவட்டத்தில் ரெனால்ட் டஸ்டர் வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் 3 பேர் உயிரிழந்தனர்' என்று தகவலை தெரிவித்தார். இருப்பினும் இறந்தவர்கள் குறித்த தகவலை தெரிவிக்கவில்லை. ஆனாலும், நிருபர் தெரிவித்த தகவலைக் கொண்டு தனது கணவர் தான் இறந்தார் என்று கவுர் தெரிந்துகொண்டார். இருப்பினும் கவுர் அமைதியாக செய்தி முழுவதையும் வாசித்து முடித்தார். பிறகு வெளியே வந்துதான் அழுதிருக்கிறார்.
இதுகுறித்து தெரிவித்த சக ஊழியர்கள், 'அவர் மிகவும் தைரியமான பெண். கவுரின் கணவர் இறந்தது அவர் செய்தி வாசிக்கும்போதே எங்களுக்கு தெரியும். ஆனால், இதுகுறித்து அவரிடம் தெரிவிப்பதற்கு எங்களுக்கு தைரியம் இல்லை' என்றனர்.

இரவில் தவிர்க்க வேண்டிய முக்கியமான பத்து விஷயங்கள். பயனுள்ள தகவல்கள்...

இரவு அற்புதமானது. உடலையும், மனதையும் சாந்தப்படுத்தி ஓய்வுக்கு வழிவகுக்கும் வகையில் இயற்கை தந்த வரம் தான் இரவு. காலையில் எழுவதும், இரவில் உறங்குவதும் தான் எப்போதும் நல்லது, தற்போது பலர் இரவு நேரத்தில் சரியாக உறங்குவது கிடையாது. இதனால் உடல் மற்றும் மன நலன் இரண்டிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நம்மில் பலர் இரவு நேரத்தில் பல்வேறு லைஃப்ஸ்டெயில் தவறுகளைச் செய்கிறோம். இவற்றை கண்டுணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் எல்லா இரவும் இனிய இரவாக அமையும்.

1. லேட் நைட் சாப்பாடு தவிர் :

இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவானது இரைப்பையில் சராசரியாக 2-3 மணி நேரம் இருக்கும். சாப்பிட்டவுடன் படுக்கும்போது, இரைப்பையில் இருந்து சில நேரங்களில் சிலருக்கு உணவுக்குழாய்க்குள் உணவு மேலேறி வந்துவிடலாம். தொடர்ந்து நாட்கணக்கில் இப்படிச் சாப்பிட்டு வரும்போது எதுக்களித்தல் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. தவிர செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிலும் சுணக்கம் ஏற்படலாம்.

2. ஃபாஸ்ட்புட் வேண்டாம்:

இரவு நேரங்களில் தற்போது ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடில்ஸ் போன்ற ஃபாஸ்ட்புட் உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற இடங்களில் மிட்நைட் பிரியாணி ஃபேமஸாகி வருகிறது. இரவு நேரத்தில் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட, எண்ணெயில் பொறிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் செரிமானத்தை பாதிக்கும்போது, நமக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. இட்லி, இடியாப்பம் முதலான எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடுங்கள். அரிசி, கோதுமை, சிறுதானிய உணவுகளோடு, காய்கறிகள் அதிகம் சேர்க்கப்பட்ட கூட்டு, குருமா, தேங்காய் சட்னி, புதினா சட்னி ஆகியவற்றை சாப்பிடலாம். மைதாவால் செய்யப்பட்ட உணவுகள், கீரை வகைககள் தவிர்க்கவும். முட்டை, பால் முதலான அதிக புரதச் சத்து நிறைந்த உணவுகளை அளவாகச் சாப்பிடவும்.

3. சண்டை வேண்டாம் :

இரவு நேரத்தில் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை பற்றி அதிகம் பேச வேண்டாம். இரவு நேரத்தில் குடும்பத்தோடு அமர்ந்து ஒன்றாகச் சாப்பிடுங்கள். குழந்தைகள் மற்றும் இணையுடன் அன்போடு பேசுங்கள். காலை முதல் மாலை வரை பல டென்ஷன்களை சந்தித்துவிட்டு, இரவிலும் டென்ஷன் தரக்கூடிய வாக்குவாதங்கள் வேண்டாம். ரிலாக்ஸ்சாக தூங்கச் செல்லுங்கள்.

4. நைட் ஷோ தடா!

இரண்டு மூன்று மாதங்களுக்கு எப்போதோ ஓரிருமுறை நைட் ஷோ செல்வதில் தவறில்லை. ஆனால் அடிக்கடி நைட் ஷோ செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் வன்முறை தெறிக்கும் படங்கள், திகில் படங்கள், மனதை கடுமையாக பாதிக்கும் படங்கள் போன்றவற்றை தவிருங்கள். பாசிட்டிவ் மனநிலையை ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை பாருங்கள். பிடித்த இசையை கேட்பது, காமெடி சானல்கள் பார்ப்பது போன்றவற்றில் தவறில்லை.

5. டிஜிட்டல் சாதனங்களுக்கு லிமிட்:

இரவு எப்போது படுக்கைக்குச் செல்கிறீர்களா அதற்கு 1.5 -2 மணிநேரம் முன்பாக டிவி பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். தயவு செய்து மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நிறுத்தி விடவும். படுக்கையில் படுத்திருக்கும் போது அவசர அவசியமின்றி மொபைலை பயன்படுத்த வேண்டாம். வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றுக்கு சீக்கிரமே குட்பை சொல்லிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.

6. சுத்தம் வேண்டும்:

எங்கே படுத்து உறங்கப்போகீறீர்களோ அந்த இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். காற்றோட்டமான இடமாக அமையுங்கள். தலையணை, மெத்தை போன்றவை சுத்தமாக இருக்கட்டும். வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.ஏசி அறையாக இருந்தால் 23-26 வெப்பநிலையில் வைத்து தூங்குங்கள். போர்வையை நன்றாக துவைத்துச் சுத்தமாக பயன்படுத்துங்கள்.

7. இரவு உடைகளில் ஜாக்கிரதை:

முடிந்தவரை எவ்வளவு குறைவான உடை அணிய முடியுமோ அப்படி அணிந்து உறங்குங்கள். இறுக்கமான பேண்ட், ஷார்ட்ஸ், உள்ளாடைகள் அணிய வேண்டாம். தளர்வான ஆடைகள் நல்லது. குளிர்காலத்தில் பிரத்யேக ஆடைகளை பயன்படுத்துங்கள்.சரியாக துவைக்காத ஆடைகளை இரவு நேரத்தில் அணிதல் வேண்டாம்.

8. சும்மா உறக்கம் வேண்டாம்!

இரவில் படுக்கையில் தூக்கம் வரவில்லையெனில் கஷ்டப்பட்டு தூக்கம் வரவைக்க முயற்சி செய்து புரண்டு புரண்டு படுக்க வேண்டாம். படுக்கையறையை விட்டு வெளிவந்து இன்னொரு அறையில் உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்யுங்கள், தூக்கம் வருவதாய் உணர்ந்தால் மட்டும் உடனே படுக்கை அறைக்குச் சென்று விடுங்கள். பிடித்தமான வேலை என்றால் உடனே மொபைலை எடுத்து நோண்ட வேண்டாம். புத்தகம் படிப்பது, எழுதுவது முதலான லேசான வேலைகளை செய்யவும்.

9. படுக்கை அறையில் வெளிச்சம் வேண்டாம் :

இரவு கும்மிருட்டில் தூங்குவது தான் நல்லது. கும்மிருட்டில் தூங்கினால் தான் ஹார்மோன்கள் சீராக சுரக்கும். அவசியம் விளக்கு வெளிச்சம் வேண்டும் என்பவர்கள் மிகக்குறைவான வெளிச்சம் தரும் ஸ்பெஷல் விளக்குகளை பயன்படுத்துங்கள். கடினமான மெத்தைகளுக்கு பதிலாக மென்மையான மெத்தைகளை பயன்படுத்துங்கள்.

10. தண்ணீரை தவிர்க்காதீர்கள் :

இரவு உறங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். படுக்கைக்கு அருகில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். படுக்கை அறையில் எப்போதுமே ஒரு முதலுதவி பெட்டியும் இருக்கட்டும்.

இந்த இரவு இனிய இரவாக இருக்கட்டும்!

கோடை வெயிலின் தாக்கம்: பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னை மாநகரில் தற்போது அதிகரித்துவரும் கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட
வாய்ப்புள்ளது. அதனால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது.

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தினசரி அதிக 
அளவில் தண்ணீர் அருந்தவும். இளநீர், மோர் மற்றும் பழரசங்கள் அருந்துவதால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்.

கோடைக்காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா 
மற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், நேரடியாக 
உச்சி வெயிலில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும், தவிர்க்க 
இயலாத சமயங்களில் குடை அல்லது தலையை மறைக்கும் 
துணியினை பயன்படுத்தலாம்.

சர்க்கரை கரைசல்

அதிகநேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்கவும், கடுமையான
வெயிலில் செல்லும்போது வியர்வை அதிகம் வெளியேறுவதால் உப்பு சர்க்கரை கரைசல் கலந்த நீரை பருகவும், வெயிலில் செல்லும்போது தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக நிழலில்
ஓய்வெடுக்கவும். போதுமான தண்ணீர் அருந்தவும்.

அதன்பின்னரும் உடல்நலக்குறைவு ஏற்படின் அருகாமையில் உள்ள 
அரசுமற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும். அடிக்கடி 
நல்லதண்ணீரால் முகத்தினை கழுவ வேண்டும். மேலும், ஒரு 
நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் வியர்வை துவாரங்கள் திறக்கப்படுவதோடு தோலில் படியும் அழுக்குகளும் 
குறையும்.


கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளை அணிதல், இறுக்கமாக 
ஆடைஅணிவதை தவிர்த்தல், குழந்தைகள் வெயில் நேரத்தில் திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்த்தல், தெருக்களில் விற்பனைக்கு 
வரும் ஐஸ் போன்ற உணவு பொருட்களை உண்பதை தவிர்த்தல் 
வேண்டும்.

அவசரஉதவி

சின்னம்மை, தட்டம்மை நோய்களுக்கான அறிகுறி தென்பட்டால், 
அரசுமற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவும். நோய் பாதிக்கப்பட்டவரை, நோயிலிருந்து விடுபடும் 
வரையில் தனிமையில் இருக்க வைக்கவும். அனைவரும், வெளியில் செல்லும்போது காலணிகள் அணிந்து செல்லவும்.

கூடுதல் தகவல் மற்றும் புகார்களுக்கு ‘1913’ மற்றும் ‘104’ என்ற
 எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். 
அவசரஉதவி மற்றும் சிகிச்சைக்கு தண்டையார்பேட்டை 
தொற்றுநோய் மருத்துவமனை தொலைபேசி எண்கள். 044–25912686, 87 
மற்றும் ‘108’ ஆகியஎண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No automatic alt text available.

தமிழகத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்?

தமிழகத்தில், 20க்கும் குறைவாக, மாணவர்கள் படிக்கும், 1,200
தொடக்கப்பள்ளிகள் மூட திட்ட மிடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 36 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இதில், 19 ஆயிரம் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிய, தனியார் பள்ளிகளின் ஆதிக்கமே காரணம் என, கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒரு கி.மீ., இடைவெளிக்குள், தொடக்கப்பள்ளிகள், 3 கி.மீ., இடைவெளிக்குள் நடுநிலைப்பள்ளிகள் புதிதாக துவங்க கூடாது. ஆனால், புற்றீசல் போல, அருகருகே தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை சரிந்தது.இதை காரணம் காட்டி, அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண, தொடக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், பத்துக்கும் குறைவாகமாணவர்கள் படிக்கும், 1,200 பள்ளிகளின், பட்டியல் தயார் செய்யப்பட்டது. இப்பள்ளிகளுக்கு, அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, உத்தரவு பிறப்பிக்காததால், பள்ளிகளை மூட, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மோசஸ் கூறுகையில்,''நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரிப்பது தொடர்பாக, பள்ளிகளுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் பணிகளில், அதிகாரிகள் கவனம் செலுத்துவதால், கல்விப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை சரிந்தால், சத்தமின்றி 1,200 பள்ளி கள் மூடப்படலாம்,'' என்றார்.