இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரி வித்து விண்ணப்பித்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே தெரிவித்தார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில்சார்பில், ‘மின் னணு வழி கற்றல்: சவால்களும், வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத் தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த அனில் டி.சஹஸ்ர புத்தே செய்தியாளர்களிடம் கூறிய தாவது:சில கல்வி நிலையங்களில் 10 முதல் 15 ஆண்டுகளுக்குக்கூடபாடத்திட்டத்தை மாற்றாமல் வைத் துள்ளனர். தற்போதுள்ள சூழ லுக்கு ஏற்ற தரமான பாடத் திட்டங் களைக் கற்பிக்காததால், அந்த நிறுவனங்களில் படித்த மாணவர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்ப தில் சிரமம் ஏற்படுகிறது.எனவே, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரி வித்து விண்ணப்பித்துள்ளன. மாணவர்கள் சேர்க்கை குறை வாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.மின்னணு வழி கற்றல் முறைக் காக மத்திய அரசு உருவாக்கி யுள்ள ‘ஸ்வயம்’ என்ற ஆன்லைன் கல்வி முறையில் தற்போது 280பாடங்கள் உள்ளன. மேலும் 350 பாடங்கள் அதில் இணைக்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் பாடங்கள் ஆன்லைனில் இருக்கும்.
பொறியியல் கல்விக் கான பாடங்கள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பாடங்களையும் ஆன்லைனில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.சில கல்வி நிறுவனங்களில் உரிய அனுமதி இல்லாத பாடங் களை நடத்துவது குறித்த புகார் கள் வந்துள்ளன. அந்தப் பாடப் பிரிவுகளை நடத்த தடை விதிக் குமாறு, அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.சென்னை அல்லது கோவை யில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாடங்களைக் கற்பிக்க பிரத் தியேக மையம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.இந்த பயிற்சி முகாமில் ஏஐசிடிஇ இயக்குநர் மன்பரீத் சிங்மன்னா, கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, பிரிட்டிஷ் கவுன்சில்தலைமை நிர்வாகி பருல் குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.