பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர். புதிய சலுகை: பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வைப் போன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் நிகழாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை (மே 17) அறிவித்தார்.
எனினும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்கூட, பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம் என்ற முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக கல்வி சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் மேலும் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 1 தேர்வை எழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்களில், 50,000 முதல் 55,000 மாணவர்கள் வரையில் தேர்ச்சி பெறாத நிலை உள்ளது.
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். கல்லூரியைப் போன்று... பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அனுமதிக்கப்பட்டாலும்கூட, கல்லூரிகளைப் போன்று தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுதுவது அவசியமாகும்.
அக மதிப்பீட்டு மதிப்பெண்: தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வில் வேதியியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பிரதான பாடங்களுக்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன. இந்த மதிப்பெண்கள் செய்முறைப் பயிற்சி உள்ள பாடங்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் மாணவர்கள் பாடங்கள் குறித்த கூடுதல் திறனறிவைப் பெறுவதுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறையும்.
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள... ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எழுதும் நிலையில், பிளஸ் 1 பாடத் திட்டங்களின் அடிப்படையில்தான் அவற்றில் பெரும்பாலான கேள்விகள் அமைவதை கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்களைத் தயார்படுத்தவும், பி.இ. படிப்புகளில் சேரும் நிலையில் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பதைத் தவிர்க்கவுமே பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.