யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/6/17

சிவில் சர்வீஸ் தேர்வில் ஜி.எஸ்.டி., பற்றி கேள்வி

சிவில் சர்வீஸ் முதல் கட்ட தேர்வில், ஜி.எஸ்.டி., பற்றியும், மோடி அரசின் திட்டங்கள் பற்றியும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, ஆண்டுதோறும் மூன்று பிரிவாக நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கட்ட தேர்வு, நேற்று நடந்தது. இந்த தேர்வை எத்தனை பேர் எழுதினர் என்ற விபரத்தை யு.பி.எஸ்.சி., தெரிவிக்கவில்லை. இந்த தேர்வில், ஜூலை முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி., குறித்தும், மத்திய மோடி அரசின் திட்டங்கள் குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதால் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

மேலும், மோடி அரசின் பினாமி சட்டம், வித்யாஞ்சலி யோஜனா உட்பட பல திட்டங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

நவ.19-ல் 'நெட்' தகுதித்தேர்வு: ஜூலை 24-ல் விரிவான அறிவிப்பு வெளியாகும்:

இலக்கியம் மற்றும் கலைப்பிரிவு பாடங்களுக்கான 'நெட்' தகுதித்தேர்வை யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் என 2 தடவை நெட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட வேண்டிய 'நெட்' தேர்வு நடைபெறவில்லை.இந்த நிலையில் 'நெட்' மற்றும் ஜெஆர்எப் தகுதித்தேர்வு நவம்பர் 19-ந் தேதி நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 'நெட்' தேர்வு தொடர்பான விரிவான அறிவிப்பு ஜூலை மாதம் 24-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் ஆகஸ்டு 1 முதல் 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

CBSC 12TH EXAM RELATED NEWS:

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வில் 'பெரும் குளறுபடி' - மாணவ மாணவிகள் 'கடும் அதிர்ச்சி'!!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.-யின் 12-ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் மதிப்பெண் கூட்டலில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்துள்ளன. இதனால், தேர்வு எழுதி மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
12-ம் வகுப்பு
 சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28-ந் தேதி நாடுமுழுவதும் வௌியாகின. தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு முடிவுகள்வந்துவுடன் மறுகூட்டல் மற்றும் மறு மதிபீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், சி.பி.எஸ்.இ. தேர்வு முறையில் மறுகூட்டல் மட்டுமே செய்ய முடியும், மறுமதிப்பீடு என்பது நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றபின் செய்யலாம்..

18/6/17

மத்திய அரசு துறைகளில் 5134 கிளார்க் வேலை: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அரசுதுறைகளில் 5134 கிளார்க் வேலை: விண்ணப்பிக்க 28 கடைசி
மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை மே 27 ஆம் தேதி அறிவித்தது எஸ்எஸ்சி. இதற்கு தகுதியானவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து
பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்: Staff Selection Commission CHSL (SSC CHSL)
காலியிடங்கள்: 5,134
பணி: Stenographer, Clerk
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Regional Director (NR),
Staff Selection Commission,
Block No. 12, CGO Complex, Lodhi Road, New Delhi-10003

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2017

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 30.07.2017


ஜூன் 21-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 கலந்தாய்வு : தேர்வாணையம் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணியாளர் தேர்வுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஜூன்
21-ல் நடக்கிறது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது . அழைப்பாணை கிடைக்காதவர்கள்

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றுதெரிவித்துள்ளது.

21-ந்தேதி பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் வினியோகம்

தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777
இடங்கள் உள்ளன.
இந்தபடிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் பி.எட். கல்லூரி, சைதாப்பேட்டை பி.எட். கல்லூரி உள்பட 13 பி.எட். கல்லூரிகளில் 21-ந்தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகின்றன. 30-ந்தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும், விலை ரூ.500. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும். இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

(B.Ed) பி.எட். மாணவர் சேர்க்கை: 21 -இல் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில்2017-18 -ஆம் கல்வியாண்டில் பி.எட்.,
இரண்டாண்டு படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 21 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட 13 இடங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2017-18 -ஆம் கல்வியாண்டில், இரு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 21 -ஆம் தேதி முதல் ஜூன்30 -ஆம் தேதி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்கண்ட 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டும் விற்பனை செய்யப்படும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்: கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை -சென்னை, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி -சென்னை, அரசு கல்வியியல் கல்லூரி - குமாரபாளையம், அரசு கல்வியியல் கல்லூரி -ஒரத்தநாடு, அரசு கல்வியியல் கல்லூரி -புதுக்கோட்டை, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி -கோவை, அரசு கல்வியியல் கல்லூரி, காந்திநகர் -வேலூர், லட்சுமி கல்வியியல் கல்லூரி, காந்திகிராம் -திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, பேர்லாண்ட்ஸ் -சேலம், தியாகராசர் பர்செப்டார் கல்லூரி -மதுரை, வ.உ.சிதம்பரனார் கல்லூரி -தூத்துக்குடி, செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி -பாளையங்கோட்டை, என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி -ஆத்தூர், திருவட்டாறு ஆகிய கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள், சுய சான்றொப்பமிட்ட ஜாதிச்சான்றிதழின் நகலை அளித்து ரூ.250 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத் தொகையை பணமாக அல்லதுThe Secretary, Tamil Nadu B.Ed. Admission, Chennai  600005 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கேட்பு வரைவோலையாக (Demand Draft Payable At Chennai)  நேரில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம்விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செயலர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பி.எட். சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com   என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

PGTRB : தமிழ் வழியில் ஆங்கிலம் குழப்புது TRB.,

தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை' என்ற
மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதில், 'தமிழ் வழியில் எம்.ஏ., (முதுகலை) ஆங்கில இலக்கியம் படித்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' எனபட்டியலில் தெரிவித்துள்ளனர்.இதன்படி 88 பணியிடங்களில் 21 பணியிடங்களுக்கு இவ்வகையில் நியமனம் செய்ய உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கவனமின்மைக்கு இது ஒரு சான்று. தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படிக்க முடியாது என எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த அறிவிப்பில் தமிழ் வழியில் இளங்கலை படித்தோருக்கு முன்னுரிமை என வழிகாட்டியின் 2வது பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில பாடத்தை எப்படி தமிழில் படிக்க இயலும். இதேபோல கடந்தாண்டில் முதுகலை தமிழ் ஆசிரியருக்கு எம்.ஏ., தமிழ் தகுதி எனக்கூறி, பின் பி.எட்., படிப்பும் தேவை என திருத்தம் வெளியிட்டனர், என்றார்.

இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் - அமைச்சர் செங்கோட்டையன்.

இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தியானப் பயிற்சி விழாவில், செங்கோட்டையன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர், தற்காலிக ஆசிரியர்களுக்கு, மற்ற ஆசிரியர்களைப் போல, மாதம் தோறும் ஊதியம் வழங்கப்படும் என்றார். அங்கன்வாடிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை!

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆறுஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்திட வேண்டி பல்வேறு வடிவில் கோரிக்கைகளை முன்வைத்து காத்துவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, இந்த சட்டசபை கூட்டத்தொடரின் கல்விமாணிய
கோரிக்கை தினத்தில் கல்வி அமைச்சரின் அறிவிப்புகள் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது, வேதனைஅளிக்கிறது.
தற்போதைய முதல்வரிடம் பணிநிரந்தரம் கேட்டு நேரில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மே 2-ல் நடந்த கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி இயக்குநர், அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்டஇயக்குநர் மற்றும் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர் சங்கங்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டத்திலும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டது. அன்றைய தின கலந்துரையாடல் கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும், அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரிய ஏதுவாக பணிமாறுதலும் மட்டுமே அரசால் தற்போது வழங்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். கல்விஅமைச்சர் சொன்னபடி எதுவும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. பணிநிரந்தரம் செய்யக்கேட்டால் நிதி இல்லை என்று அரசும், அமைச்சரும் சொல்லி நீதி இல்லாமல் நடந்து வருவது படித்துவிட்டு நிரந்தரஅரசு வேலைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
நிதிநிலைக்கேற்ப பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என கல்வி அமைச்சரின் பேட்டியாக ஒருநாள் செய்தி வெளியாகிறது. பிறகு ஒருநாள் ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படும் என கல்வி அமைச்சரின் பேட்டியாக செய்தி வெளியாகிறது. பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சரின் பேட்டியாக ஒருநாள் செய்தி வெளியாகிறது. ஏழாவது ஊதியக் கமிஷன் கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜீன் 15-ல் சட்டசபையில் புவனகிரி சட்டமன்ற (திமுக) உறுப்பினர் சரவணன் கல்வி மானிய கோரிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரியபோது கூட கல்வி அமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாக பத்திரிகை செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், எதுவும் நடந்தபாடில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிமித்தமாக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும்.
அமரர் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட 16,549 பகுதிநேர ஆசிரியர்களை இன்றுவரை தொகுப்பூதிய நிலையில் இருந்து மாற்றாமல் அரசு மவுனம் காத்துவருவது பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.
ஏப்ரல் 2014-ல் ஒருமுறை ரூ.2000 ஊதிய உயர்வைத் தவிர ஆண்டு வாரியாக இப்போதுவரை ஊதியம் உயர்த்தி வழங்கவில்லை. ஆறு ஆண்டுகளாக மே மாதங்களின் ஊதியமான ரூ.62 கோடியே 88 இலட்சத்து 62 ஆயிரத்தை வழங்காமல் 16,549 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. மே மாதம் ஊதியம் இல்லாமல் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்ப வாழ்க்கையை எப்படி சமாளிப்பது என அரசு கவனம் செலுத்தி, இனியாவது ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியருக்கும் சேர வேண்டிய மே-மாத நிலுவைத்தொகையான ரூ.38ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசுப்பணி என நம்பிபணியில் சேர்ந்தவர்களில் இறந்தவர்களுக்கு இந்த அரசு இதுவரை எதுவும் வழங்கவில்லை. 58 வயதை பூர்த்திசெய்து பணி ஓய்வுபெற்றவர்களுக்கும் இந்தஅரசு இதுவரை எதுவும் வழங்கவில்லை. எனவே, அரசு முதலமைச்சர் நிவாரணநிதியில் இருந்து அவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சநிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
ஜாக்டோ போராட்டங்களின்போது அரசுப்பள்ளிகளை இயக்கமுழுமையாக பயன்படுத்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும்.
இந்தஆறு ஆண்டுகளில் பகுதிநேரமாக பணிபுரிந்த உடற்கல்வி, ஓவிய, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி பாட ஆசிரியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டிருந்தால் இந்நேரம் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் முறையை அரசு ஒழித்திருக்கலாம். ஆனால், அரசு நிரந்தரப் பணியிடங்களையும் நிரப்பாமல், பகுதிநேர ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்யாமலும் காலம்கடத்துவது சரியான நடைமுறையல்ல.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

'நீட்' தேர்வு 'ரிசல்ட்:' 26ல் வெளியீடு

நீட்' தேர்வு முடிவு, வரும், 26ல், வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. தேர்வு தொடர்பாக பல
சர்ச்சைகள் எழுந்தன.

உச்சநீதி மன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கலானதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், 'நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம்' என, உயர்நீதிமன்றங்களுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது; அத்துடன், தேர்வு முடிவை வெளியிடவும், சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தியது.

இதனால், 'நீட்' தேர்வுக்கான, 29 வகை வினாத்தாளின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, கருத்து கோரப்பட்டுள்ளது. விடைகளை இறுதி செய்யும் பணி, நேற்று முன்தினம்

துவங்கியது. அடுத்து, மதிப்பெண் கள் பட்டியலிடப்பட்டு, ஜூன், 26ல், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'நீட்' தேர்வு 'ரிசல்ட்:' 26ல் வெளியீடு

நீட்' தேர்வு முடிவு, வரும், 26ல், வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. தேர்வு தொடர்பாக பல
சர்ச்சைகள் எழுந்தன.

உச்சநீதி மன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கலானதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், 'நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம்' என, உயர்நீதிமன்றங்களுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது; அத்துடன், தேர்வு முடிவை வெளியிடவும், சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தியது.

இதனால், 'நீட்' தேர்வுக்கான, 29 வகை வினாத்தாளின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, கருத்து கோரப்பட்டுள்ளது. விடைகளை இறுதி செய்யும் பணி, நேற்று முன்தினம்

துவங்கியது. அடுத்து, மதிப்பெண் கள் பட்டியலிடப்பட்டு, ஜூன், 26ல், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

210 நாட்கள் பள்ளிகள் இயங்கும் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியீடு

பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் நடப்பு
கல்வி ஆண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான நடப்பு ஆண்டு செயல் திட்டத்தை (2017-2018) தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 7-ந் தேதி பள்ளிகள் திறந்தது முதல் கல்வி ஆண்டு முடியும் வரை எத்தனை நாட்கள் பள்ளிகள் இயங்கும்? என்னென்ன நாட்களில் விடுமுறை?, தேர்வு எப்போது?, அந்தந்த மாதங்களில் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன? ஆகியவை குறித்து அதில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த தேதியில் தேர்வுகள் நடைபெறும்? என்பது அடங்கிய தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

ஆதார் இணைக்காத 1 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம் : பிஎப் அதிகாரிகள் தகவல்

தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றுடன் ஆதார் எண் இணைக்காத 1
லட்சம் பேருக்கு மே மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

காஸ்மானியம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான தொகையை வங்கி கணக்கு மூலம் நேரடியாக வழங்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு அனைவருக்கும் வங்கிக்கணக்கை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டது. இதுதவிர மத்திய அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 நூறு நாள் வேலை உறுதி திட்டம், உணவு மானியம், பள்ளிகளில் இலவச மதிய உணவு, விவசாயிகள் பயிர்க்காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் காஸ் பெறுதல், அரசின் மானிய உதவிகளை பெறுதல், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான மத்திய அரசின் பீம் ஆப்பில் வங்கிக் கணக்கை இணைத்து பணம் அனுப்புதல் போன்றவை ஆதார் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 இதுதவிர வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், அடையாளச்சான்று, முகவரிச்சான்று என எண்ணற்ற வகையில் ஆதார் பயன்பாடு உள்ளது. ஜூலை 1க்கு பிறகு புதிய பான் கார்டு விண்ணப்பிக்கவும், ஆதார் வைத்திருப்பவர்கள் பான் அட்டையுடன் இணைத்து ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திட்ட பயன்கள் உரியவருக்கு சென்று சேர வேண்டும், போலி பயனாளிகளை ஒழிக்க வேண்டும், மானியச்சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஆதாரை கட்டாயப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

 இதே வரிசையில், ஓய்வூதியர்கள் ஆதார் மூலம் உயிர்ச்சான்று சமர்ப்பிக்கலாம். ஜீவன் பிரமாண் இணையதளம் மூலம் அல்லது பொது சேவை மையங்களில் சம்பந்தப்பட்ட வங்கி, கருவூலத்துக்கு செல்லாமலேயே இருந்த இடத்தில் இருந்தே எளிதாக உயிர்ச்சான்று சமர்ப்பிக்க ஜீவன் பிரமாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் அரசு ஓய்வூதிய தாரர்கள் மட்டுமின்றி, பிஎப் ஓய்வூதியம் பெறுவோரும் ஆதாரை இணைக்க வேண்டும். பி.எப் திட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெறும் தகுதி படைத்தவர்கள். இதில், ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண் மற்றும் தங்களது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழினை (டிஜிட்டல் ஜீவன் பிரமாண் பத்திரம்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுவரை உயிர்வாழ் சான்றிதழை அதற்குரிய படிவத்தில் வங்கியில் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்களும் இந்த ஆதார் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். அங்கு ஆதார் எண் மற்றும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறலாம்.

ஏப்ரல் 17ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டபோது அந்தந்த பி.எப் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் ஆதார் எண் இணைக்க தவறியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேருக்கு ேம மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக அருகில் உள்ள பிஎப் அலுவலகத்துக்கு சென்று உயிர்வாழ் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு  முதல் வங்கி கணக்கு வரை ஆதார் முக்கியமாகி விட்டது.

ஆதார் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு ரத்தாகும்

காஸ்மானியம் உட்பட பல்வேறு மானியங்கள் பெற ஆதார் வேண்டும்.

பிஎப் பென்ஷனுக்கு ஆதார் எண் இணைக்க அவகாசம் முடிந்து விட்டது.


ஆதார் இணைக்காவிட்டால் பென்ஷன் நின்று விடும் ஆபத்து உள்ளது.

மாணவனை வெளியே தள்ளிய விவகாரம் - நடுநிலைப் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் இடமாற்றம்: கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை பூந்தமல்லி அடுத்த அகரம்மேல் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 200 பேர் படித்து வருகின்றனர்.  மேலும் மேப்பூர்தாங்கல் உள்பட
பல்வேறு கிராமங்களில் இருந்து பல்வேறு தரப்பினர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி  வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அன்பு (5) என்ற 1ம் வகுப்பு மாணவனை எக்காரணமும் கூறாமல் வகுப்பு ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையை  விட்டு வெளியேற்றி, வராண்டாவில் உட்கார வைத்துள்ளார்.

தலைமை ஆசிரியை மீதான முன்விரோதம் காரணமாக, 1ம் வகுப்பு மாணவனை வராண்டாவில் தள்ளியதாக உமா மகேஸ்வரி உள்பட 4 ஆசிரியைகள்  மீது புகார் கூறப்பட்டது. மேலும், பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து,  தலைமை ஆசிரியை சாந்தி சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை கூப்பிட்டு கண்டித்துள்ளார். இதனால் தலைமையாசிரியை மீதான முன்விரோதத்தில் பள்ளி  மாணவர்களிடம் ஆசிரியைகள் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையே 1ம் வகுப்பு மாணவனை வெளியேற்றி வராண்டாவில் அமர வைத்த தகவல் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த  ஆசிரியையை கண்டித்து, பள்ளி முன் பெற்றோரும் பொதுமக்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர்  மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விசாரிக்க வந்தனர். பிரச்னைக்கு காரணமான  ஆசிரியைகள்,  தலைமையாசிரியை மற்றும் மாணவர்களிடம் விசாரித்தனர்.

விசாரணைக்கு பிறகு பிரச்னையில் ஈடுபட்டதாக 3 ஆசிரியைகளை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். அதன்படி உமா 

மகேஸ்வரியை குத்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கும், மகாலட்சுமியை நசரத்பேட்டையிலுள்ள பள்ளிக்கும், ராஜேஸ்வரியை  கம்மார்பாளையத்தில் உள்ள பள்ளிக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். இதற்கிடையே ஆசிரியை சபீதா மீதும் நடவடிக்கை எடுக்க  பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வகுப்பறைகள் இல்லாத பள்ளி மாணவ, மாணவியர் பரிதாபம்

நெல்லை அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அடிப்படை வசதியின்றி, போதுமான
வகுப்பறைகள் இன்றி செயல்பட்டு வருகிறது.திருநெல்வேலியில் உள்ள அனைத்து கிராமங்களிலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இருப்பினும், அரசு அவற்றிற்கு போதிய கவனம் செலுத்தாததால் மாணவ, மாணவியர் அவதியுறுகின்றனர். நெல்லை, தருவையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந்த ஆண்டு, 250 மாணவ, மாணவியர் பயின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் இரு வகுப்புகளுடன், தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகள் செயல்படுகின்றன.

இந்தஆண்டில் கூடுதலாக, 66 மாணவர்கள் சேர்க்கைக்கு பின், மாணவர்களின் எண்ணிக்கை, 316 ஆக உயர்ந்துள்ளது. இரு வகுப்புகள் கட்டடம் இல்லாமல் மரத்தடியிலும், 1964ல், பள்ளி துவக்கப்பட்ட போது கட்டப்பட்ட உடைந்த ஓட்டுக் கட்டடத்திலும் செயல்படுகிறது. அதே வளாகத்தில் செயல்படும் உயர்நிலைப் பள்ளிக்கு சொந்தமான, இரு வகுப்பு அறைகள் தற்போது பயன்படாமல் உள்ளன.


அவற்றை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தர மறுப்பதால், துவக்கப் பள்ளி மாணவ, மாணவியர் அவதியுறுகின்றனர். எனவே, கல்வித் துறை அதிகாரிகள், இது குறித்து நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

prithika Vijay TV junior super singer - பிரித்திகாவின் வெற்றிக்கு பின்னால் இருந்து பாடுபட்ட அரசு பள்ளி ஆசிரியைகள்

Image may contain: 1 person, smiling
Image may contain: 5 people, people smiling, people standingபிரித்திகாவின் வெற்றிக்கு பின்னால் இருந்து பாடுபட்ட பிரித்திகா பள்ளி ஆசிரியை 
 AxciJohn மற்றும் சமூக வலைதளங்களில் ஓட்டுக்களை பெற உழைத்த ஆசிரியை   Yogapriya Vembaiyan க்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்....

SMS-ல் பறக்குது வீட்டுப்பாடம் -சாதனை படைக்கிறது அரசு பள்ளிக்கூடம்

Image may contain: 2 people

பாடம் நடத்துவதில் புதிய புதிய உத்திகள்: அசத்துகிறது சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி - நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ‘அப்டேட்’ செய்யும் ஆசிரியர்கள்

எட்டாம் வகுப்பில் நுழைந்தால் அறிவியல் பாடம் கற்பிக்க மாணவனே உருவாக்கிய பவர் பாய்ண்ட் பிரசண்டேசன்; மூன்றாம் வகுப்புக்கு சென்றால் கூட்டல், கழித்தல் கணக்குகளை புரிந்து கொள்ள கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்; ஆறாம் வகுப்பில் ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்க வழிகாட்டும் கரடிபாத் நிறுவனத்தின்
வீடியோ படங்கள்; ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு சென்றால் எங்கோ இருக்கும் காவனூர் புதுச்சேரி நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடல். இவ்வாறு எந்த வகுப்புக்குச் சென்றாலும் நவீன தொழில்நுட்பங்களை சாதாரணமாக கையாளும் ஆசிரியர்கள்; மாணவர்கள்.பல வண்ண உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கு பாடத்தை விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை. | படங்கள்: க.ஸ்ரீபரத்

பல வண்ண உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கு பாடத்தை விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை. | படங்கள்: க.ஸ்ரீபரத் 
 பல வண்ண உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கு பாடத்தை விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை. | படங்கள்: க.ஸ்ரீபரத்

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றால் இத்தனை காட்சிகளையும் காணலாம். தமிழ் தவிர ஆங்கில மீடிய வகுப்புகளும் உள்ளன. திரும்பிய பக்கமெல்லாம் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த சோழிங்கநல்லூரில், மிகப் பெரும் தனியார் பள்ளிகள் ஏராளம். எனினும் எத்தனைப் பள்ளிகள் இருந்தாலும் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை 596 மாணவர்கள்; 17 ஆசிரியர்கள்; 3 சிறப்பாசிரியர்கள் உள்ளனர். வேறு பள்ளிகளிலிருந்து வரும் புதிய மாணவர்களின் சேர்க்கை நடந்து கொண்டேயிருக்கிறது. விரை வில் மாணவர்களின் எண்ணிக்கை 700-ஐ எட்டக் கூடும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


பாடம் போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சோழிங்கநல்லூரில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

பாடம் போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சோழிங்கநல்லூரில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

“எப்ப பார்த்தாலும் என் பையன் செல்போனி லேயே விளையாடிட்டு இருக்கான்…” எல்லா ஊரிலும் கேட்கும் பெற்றோர்களின் புலம்பல் இது.

“பரவாயில்லை. பசங்கள விளையாட விடுங்க”. இப்படிச் சொல்கிறார்கள் சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

“செல்போன் என்பது இன்று பெரியவர் கள், குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோராலும் சகஜமாகப் பயன்படுத்தப்படு கிறது. சிறுவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதை தடுக்க முடியாது. ஆனால் பயனுள்ள வழிகளில் அவர்கள் பயன்படுத்துவதை நம்மால் உறுதிப்படுத்த முடியும்” என்கிறார் இந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் சு.பத்மாவதி.

பாடப்புத்தகங்களில் அன்றாடம் மாணவர்கள் படிக்கும் அத்தனை பாடங்களையும் விளையாட்டுகளாக விளையாட முடியும். இதற்கான ஆயிரக்கணக்கான செயலிகள் (App) கிடைக்கின்றன. அத்தகைய செயலிகளை நாங்கள் டவுன்லோடு செய்து வைத்திருக்கிறோம். எங்கள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளில் மாணவர்கள் உற்சாகமாக பாடம் கற்க இந்த செயலிகள் பெரிதும் பயன்படுகின்றன. மாணவர்கள் மெமரி கார்டு கொண்டு வந்தால், இந்த செயலிகளை பதிவு செய்து கொடுக்கிறோம். தங்கள் வீட்டில் உள்ள செல்போனில் அந்த கார்டை செருகி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். வகுப்பில் நடத்தும் பாடங்களை மீண்டும் வீடுகளில் கேட்க வசதியாக எனது வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் ஐ பேட் வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்கிறார் பத்மாவதி.

அனிமேஷன் படங்கள்

அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக ஏராளமான அனி மேஷன் படங்களை ஆசிரியர் சு.சக்திவேல் முருகன் உருவாக்கியுள்ளார். இந்த அனி மேஷன் படங்களை தனது பள்ளியில் மட்டும் இவர் பயன்படுத்தவில்லை. மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் சமூக ஊடகங்கள் மூலம் சக ஆசிரியர்களுக்கு அனுப்பி வருகிறார். இவர்கள் இருவரும் உதாரணங்கள் மட்டுமே. இவர்களைப் போலவே இந்தப் பள்ளியின் அத்தனை ஆசிரியர்களும் பலவித திறன்களைக் கொண்டிருக்கிறார்கள்.

காவனூர் புதுச்சேரியில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடும் சோழிங்கநல்லூர் பள்ளி மாணவர்கள்.

காவனூர்புதுச்சேரியில் உள்ள நடுநிலைப் பள்ளிமாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம்உரையாடும் சோழிங்கநல்லூர் பள்ளி மாணவர்கள்.

பிரிட்டிஷ் கவுன்சில் விருது

இந்தப் பள்ளிக்கு இன்னும் பல பெருமிதங்கள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி. சார்பில் இந்தப் பள்ளியின் 4 மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர். கற்றல், கற்பித் தல் உத்திகள் பற்றி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அளித்த பயிலரங்கில் அவர்கள் பங்கேற்றனர். “பள் ளிக்கு திரும்பிய அந்த மாணவர்கள், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக வகுப் பெடுத்தனர்” என ஆசிரியர் சரஸ்வதி கூறுகிறார்.

சர்வதேச அளவில் சிறந்த பள்ளிகளுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் வழங்கப்படும் விருதை 2013-ம் ஆண்டு இந்த அரசுப் பள்ளியும் பெற்றுள்ளது. தரமான கல்வி, மிகச் சிறந்த ஆசிரியர்கள், அறிவார்ந்த மாணவர்களைக் கண்டு அருகேயுள்ள பல தொழில் நிறுவனங்கள் இந்தப் பள்ளிக்கு ஆர்வமாக பல உதவிகளை செய்து வருகின்றன. ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் சார்பில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்நிறுவனத்தின் ஊதியத்தில் ஒரு ஊழியரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னொரு நிறு வனம் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசி ரியரை நியமித்துள்ளது. மற்றொரு நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப் பில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கற்பித்தல் உபகரணங்களை வேறு சில நிறுவனங்கள் வழங்கியுள்ளன. அனை வருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

எதிர்கால இலக்கு

“இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப் பள்ளியில் பணியாற்றுவதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்” என்கிறார் தலைமையாசிரியர் அ.கா.ஹமிதா பானு. அவர் மேலும் கூறும் போது, “இந்தப் பள்ளியை மேலும் மேம் படுத்த எங்களுக்கு இன்னும் பல கனவு கள் உள்ளன. பள்ளிக்கென ஒரு ஆடிட் டோரியம், நூலகத்துக்கென தனிக் கட்டிடம், ஆடியோ, விசுவல் வசதிகள் கொண்ட கம்ப்யூட்டர் லேப் போன்ற வசதிகளை உருவாக்க வேண்டும். இன் னொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தேவைப்படுகிறது. இந்த வசதிகளை உருவாக்க நன்கொடையாளர்களின் ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாவற்றையும்விட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை 1000-ஆக உயர்த்துவதே எங்கள் பிரதான இலக்கு” என்றார்.


இவர்களது இலக்கு பெரியதுதான். எனினும் இந்த இலக்கை விரைவிலேயே இவர்களால் எட்டி விட முடியும். அதற்கான எல்லா தகுதிகளும் இந்தப் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளன.


தங்கள் பள்ளியை எப்படியெல்லாமோ மேம்படுத்த வேண்டும் என்ற கனவுகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் சுமந்து திரிகிறார்கள். ஆனால் அந்த கனவுப் பள்ளியை எவ்வாறு உருவாக்குவது என்ற வழிமுறையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இன்னொரு பக்கம், ‘அரசுப் பள்ளியில் இவ்வளவுதான் முடியும்; இதுக்கு மேலே எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லும் ஆசிரியர்களும் பலர் உள்ளனர். இத்தகைய ஆசிரியர்கள் அனைவரும் சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஒருமுறையேனும் அவசியம் சென்று வர வேண்டும்.

17/6/17

எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி: ஜூன் 23-க்குள்விண்ணப்பிக்கலாம்:

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஜூன் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு பயிற்சிகளை மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு இயக்குநரகம்வழங்கி வருகிறது. இந்தப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதுடன் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.அந்த வகையில் பொது ஆங்கிலம், பொது அறிவு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய பயிற்சிகள் 11 மாத காலப் பயிற்சியாகவும், கம்ப்யூட்டர் மென்பொருள் பயிற்சி ஒரு ஆண்டு கால பயிற்சியாகவும் வழங்கப்பட உள்ளன.

 இவற்றுக்கானபயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.பயிற்சி பெறுவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.500 பயிற்சிக்காலம் முழுவதும் வழங்கப்படும். பொது ஆங்கிலம்,பொது அறிவு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிக்கு வயது வரம்பு 27. அத்துடன் 10-ம் வகுப்பு அல்லது 12 – ம் வகுப்பு அதற்குச் சமமான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.ஒரு ஆண்டு கால கம்ப்யூட்டர் 'ஓ லெவல்' மென்பொருள் பயிற்சிக்கு வயது வரம்பு 18 முதல் 30 வரை ஆகும். அத்துடன், 10-ம் வகுப்பு அல்லது 12 – ம் வகுப்பு அதற்குச் சமமான கல்வித் தகுதி அல்லது தொழில்கல்வி (ஐடிஐ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூன் 23 -ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள தேசிய வேலைவாய்ப்பு மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலரை அணுகலாம் அல்லது 044-24615112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.