யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/7/17

11.07.2017 அன்று ஜாக்டோ - ஜியோ கூட்டம் - அனைத்து சங்கத்திற்கும் அழைப்பு கடிதம்



TNTET 2017 : தவறான பதில் , உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வந்தே மாதரம் வங்க மொழியில் முதலில் எழுதப்பட்டதா அல்லது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதா என்று அட்வகேட் ஜெனரல்
தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியரான கே.வீரமணி தாக்கல் ெசய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டேன். அதில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி இருந்தது. கேள்விக்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என்ற 4 பதில்கள் இருந்தன. கேள்விக்கு சரியான பதிலாக வங்கமொழி என்று எழுதினேன். ஆனால், எனது பதில் தவறு என்று கூறி எனக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் நான் 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வில் வெற்றி பெற 90 மதிப்பெண்கள் பெறவேண்டும். வந்தே மாதரம் எந்த மொழி என்ற கேள்விக்கு நான் சரியான பதில் எழுதியுள்ளதால் அதற்கு ஒரு மதிப்பெண் தந்தால் நான் தகுதித் தேர்வில் தேர்ச்சி ெபற்றிருப்பேன். பிஎட் படிப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் வங்கமொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது என்று உள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீ ஆன்சரில் மட்டும் சமஸ்கிருதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வந்தே மாதரம் வங்கமொழியில் எழுதப்பட்டுள்ளது என்ற எனது பதிலுக்கு ஒரு மதிப்பெண் தருமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்தமனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பக்கிம் சந்திர சட்டர்ஜி வந்தே மாதரத்தை வங்க மொழியில்தான் முதலில் எழுதினார் என்று வாதிட்டார். கூடுதல் அரசு பிளீடர், சமஸ்கிருதத்தில்தான் முதலில் வந்தே மாதரம் எழுதப்பட்டது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வந்தே மாதரம் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது, வங்க மொழியிலா அல்லது சமஸ்கிருதத்திலா என்று அட்வகேட் ஜெனரல் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தவறுகளை சுட்டிக்காட்டினால் போராட்டம் அறிவிப்பதா? ஆசிரியர் சங்கங்களுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தராத ஆசிரியர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் நடத்த திட்டமிடுவதா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அப்படி போராட்டம் நடத்த அறிவித்தவர்களை நீதிமன்றத்தில்
ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து, அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பள்ளி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரைணக்கு வந்தபோது, மாணவர்களின் கல்வித் தரம் உயர அரசிடம் இந்த நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது.

நீதிபதி அளித்த உத்தரவில், “ கடந்த 2012 ஜூலை 17ம் தேதி அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில் எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அரசு ஏன் கட்டாய உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளுக்கு ஜூலை 14ம் ேததிக்குள் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.  இந்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் படித்த 9ம் வகுப்பு மாணவர்கள் 42 பேர் தோல்வி அடைந்ததை எதிர்த்தும், அந்த மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

  இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கே ஒழுங்காக செல்வதில்லை. இதுகுறித்து எனக்கு 1500க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன.  பள்ளி நாட்களான 165 நாட்களில் 65 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் பள்ளிக்குச் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படி பள்ளிக்குச் சென்றால் அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியுமா?  சம்பளம் மட்டும் அதிகம் வாங்குகிறார்கள். கடமையை செய்யாமல் அவர்கள் சாப்பிடுவது எப்படி ஜீரணிக்கும். ஒரு சில பள்ளிகளில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே படிக்கிறான்.  அதற்கு அந்த பள்ளியில் 2 ஆசிரியர்கள், 2 பணியாட்கள். இவர்களால் எப்படி கல்வி தரத்தை உயர்த்த முடியும்.

 மாணவர்கள் நலன் கருதி நீதிமன்றம் கேள்விகளை எழுப்பினால் அதற்கு எதிராக போராட்டத்தை அறிவிப்பதா? பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கற்று தருவதை விட்டுவிட்டு சிறு வயதிலேயே குழந்தைகள் செல்போன், இன்டர்நெட்டில் விளையாடுவதை ரசிக்கிறார்கள்.  மாணவர்களை 8ம் வகுப்பு வரை பெயிலாக்க கூடாது என்ற சட்டம் உள்ளதால் அதுவரை அந்த குழந்தைகளை பற்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலைப்படுவதில்லை. 9ம் வகுப்புக்கு அந்த மாணவர் வரும்போது, அவர்கள் மீது எல்லா கல்வி சுமையையும் சுமத்துகிறார்கள். இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதை நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதற்கு எதிராக போராட்டத்தை அறிவிப்பதா?


அந்தஆசிரியர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட  வேண்டி வரும்” என்று நீதிபதி கூறினார்.  மேலும், ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் 42 பேரின் தேர்ச்சி தொடர்பான வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கிறேன். அப்போது, ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

வரும், 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்,
மறைந்த காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

காமராஜரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காமராஜரின் ஆட்சி, அவரது எளிய வாழ்க்கை, அவரது கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல, மாணவர்கள் மத்தியில் போட்டி நடத்தி, பரிசு வழங்கவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், வரும்,  தேதி சனிக்கிழமை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

30/6/17

How to link your Aadhaar with PAN by sending an sms in Tamil?

ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக
எப்படி இணைப்பது?


ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் விதமாக வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

அதற்கு முக்கியமாகப் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கையில் வைத்து இருக்க வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க ‘UIDPAN space 12 digit Aadhaar Space 10 digit PAN' வடிவத்தில் தகவலை உருவாக்கி 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்புவதன் மூலமாக எளிதாக இணைத்துவிடலாம்.

முக்கியக் குறிப்பு:
எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் போது ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர்கள் இரண்டும் சரியாகப் பொருந்த வேண்டும். இல்லை என்றால் இணைப்புச் செய்ய முடியாது.

 இணையதளம்:
இணையதளம் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கப் புதிய இரண்டு இணைப்புகளை வருமான வரி இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருத்தம்:
ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தித் திருத்தவும் செய்யலாம்.

 சரிபார்ப்பு:
இணைப்பிற்கான படிகளைச் செய்த பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் குறுந்தகவலுக்கு Y என்று பதில் அளிப்பதன் மூலம் எளிதாக இணைப்பைச் சரிபார்க்க முடியும்.

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதி, கீழிருப்பு ஊராட்சியில், நுாலகம் அமைக்கும் திட்டம் உள்ளதா?

அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது இல்லை.

சபா.ராஜேந்திரன்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட, நுாலக கட்டடம் உள்ளது. எனவே, அங்கு நுாலகம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

தி.மு.க., - ஆடலரசன்: திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நுாலகம் திறக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டடத்தில், வவ்வால்கள் உள்ளன.

அவற்றை வெளியேற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல நுால்களை, நுாலகங்களுக்கு வழங்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - ரங்கநாதன்: வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலை மாற, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் நுாலகம் அமைக்க வேண்டும். நல்ல புதிய நுால்களை வழங்க
வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தேவையான நுால்களை வாங்கி வைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., - தென்னரசு: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நுாலகங்களுக்கு கட்டடம் கட்ட, நிதி ஒதுக்க அனுமதி வழங்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: நிதி ஒதுக்கலாம்.

அ.தி.மு.க., - கதிர்காமு: கல்வித் துறையில், அமைச்சர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தேனி நகரில், ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மாணவர் நலன் கருதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, தனித்தனி பள்ளி அமைக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

INSPIRE AWRD - பதிவு செய்யும் முறை!

இனி வாட்ஸ்அப் மூலமே மெயில் அனுப்பலாம்: இது லேட்டஸ்ட் அப்டேட்!

இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது. உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக
உருவெடுக்கும் வாட்ஸ்அப் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள எமோஜி, பயனாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.


இதன்காரணமாக பயனாளர்களை மேலும் கவர வாட்ஸ்அப் பல்வேறு எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை முதற்கட்டமாக பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இமெயில் உள்ளிட்ட பல கோப்புகளை வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பும் வசதியையும் இதனுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.


வாட்ஸ்அப்-இல் எந்த மாதிரியான எமோஜி வேண்டுமோ அதனை டைப் செய்தால் அந்த எமோஜி தோன்றும். அதாவது, ஃபோன் என்ற எமோஜி வேண்டுமேனில், ஃபோன் (Phone) என்று டைப் செய்தால் நமக்கு போன் வகைகள் தோன்றும், அதில் நமக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதி பீட்டா (beta) 2.17.238 வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அனைத்து வெர்ஷன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.



முன்னதாக, வாட்ஸ்அப்-இல் எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.



கம்ப்யூட்டரை பார்க்காமலேயே வெளியேறும் பள்ளி மாணவர்கள்

சிவகங்கை: மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் காலாவதியானதால் செய்முறை கல்வி பயிலாமலேயே பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு
மாணவர்கள் வெளியேறி
வருகின்றனர்.

தமிழகத்தில் 3,560 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 2,600 பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. செய்முறை கல்வி கற்பிக்க, ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப யூ.பி.எஸ். வசதியுடன் 8 முதல் 12 கம்ப்யூட்டர்கள் வரை வழங்கப்பட்டன.ஏற்கனவே 1,400 பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. அதேபோல் பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர்களும் செயல்படாமல் உள்ளன. இதனால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை கல்வி பயிற்றுவிப்பதில்லை. 'தியரி' மட்டும் கற்பிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் கம்ப்யூட்டர் ஆய்வகம் பார்க்காமலேயே வெளியேறி வருகின்றனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் கூறியதாவது: 'எல்காட்' மூலம் 10 ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர்கள் வழங்கப்
பட்டன. வழங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே யு.பி.எஸ்.,கள் பழுதடைந்தன. அடுத்த சில ஆண்டுகளிலேயே கம்ப்யூட்டர்களும் பழுதடைந்துவிட்டன. இதனால் மாணவர்களுக்கு செய்முறை கல்வி பயிற்றுவிக்க முடியவில்லை. இதுகுறித்து கல்வித்துறை யிடம் பலமுறை தெரிவித்துவிட்டோம். இந்தபட்ஜெட்டிலும் அதற்கான அறிவிப்பு இல்லை, என்றார்

20 ஆண்டிற்குப் பின் விடியலை நோக்கி காத்திருக்கும் 5000 ஆசிரியர்கள்*

1997 ல் பின்னடைவு காலிப் பணியிடத்தில் பணியேற்ற SC/ST ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அவர்களின் மீதான நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்து பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக ஏற்று ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி காத்திருக்கும் 5000ஆசிரியர்களுக்கு தற்போது கல்வித்துறையில் புரட்சி செய்து வரும் 
பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அவர்களை 5/06/2017 அன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கனிவுடன் கோரிக்கையை கேட்ட செயலர் அவர்கள் இது குறித்து நல்லதொரு அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார். இக்கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வில் பிற ஆசிரியர்களுடன் உள்ள ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவம் நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்...இவண் *ஆசிரியர்களில் கடைக் கோடியில் தனித்து விடப்பட்ட 1997 முதல் 2002 வரை பணியேற்ற ஆசிரியன்*..

ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Image may contain: text

ரேஷன் கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை... நுகர்வோர்கள் புகார் அளிக்க தமிழக அரசின் ஆப்!

ரேஷன் கடைகள் முதல் பேருந்து பயணங்களின் போது உணவருந்தும் மோட்டல்கள் வரை, ஒவ்வோர் இடங்களிலும் நுகர்வோர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இதுதான் எடை, இவ்வளவுதான் விலை என அனைத்துப் பொருள்களுக்கும் சட்டப்படி அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு பொருள்களின்
மீது
அச்சடிக்கப்பட்டிருந்தாலும், தரம், விலை, அளவு என ஏதாவதொரு விதத்தில் நுகர்வோர்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டே வருகின்றனர். இவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழக அரசின் TN-LMCTS மொபைல் ஆப். இதனை மொபைலில் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். எந்தப் புகார்களையும் சில நிமிடங்களில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல முடியும். தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவு பிரிவுதான் இந்த மொபைல் ஆப்-ஐ நிர்வகிக்கிறது.
TN-LMCTS நுகர்வோர் ஆப்
TN-LMCTS நுகர்வோர் ஆப்
எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் போனில் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அவற்றைக் கொடுத்த பின்னர் உங்களுடைய அலைபேசி எண் OTP மூலம் சோதிக்கப்படும். சோதனை முடிந்துவிட்டால், புகார்களுக்கு உங்கள் ஆப் தயார். உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து எப்போது வேண்டுமானாலும் லாக்-இன் செய்ய முடியும். ஆப் முழுவதுமே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அதேசமயம் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது.

நீங்கள் செய்த புகார்களின் பட்டியல், புதிய புகார்களுக்கான ஆப்ஷன், விரைவான புகார்கள் என மூன்று மெனுக்கள் இருக்கின்றன. விரைவான புகார்களுக்கு என்ன புகார், எந்த இடம் என்பதை மட்டும் தெளிவாகக் குறிப்பிட்டு அதற்கான சாட்சிகளாகப் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை உடன் இணைக்க வேண்டும். புதிய புகார்கள் என்ற மெனுவில், புகார் பற்றிய குறிப்பு, புகைப்படங்கள் / வீடியோ/ ஆடியோ இணைப்பு, எது தொடர்பான புகார் என்ற விவரம், கடையின் முழு முகவரி போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் புகாரினைப் பதிவு செய்துவிட்டால், அதற்கு புகார் எண் கொடுக்கப்பட்டு உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். நீங்கள் கொடுத்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களும் ஆப்-ல் காட்டப்படுகின்றன.
TN-LMCTS ஆப்
TN-LMCTS ஆப்


பொருள் வாங்கியதற்கான ரசீது, கடையின் போட்டோ, பொருள் வாங்கிய வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் போன்ற ஆதாரங்களை அனுப்புவது எளிதாக இருக்கிறது. தாமதமின்றி உடனே புகார்களைப் பதிவு செய்துவிடவும் முடிகிறது. ஆனால் புதிய புகார்களைப் பதிவு செய்யும் போது, கடைகளின் தன்மை, முகவரி போன்றவற்றைக் குறிப்பிடும் போது நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க தமிழ் மொழியையும் இதில் இணைக்கலாம்.  ஆப் மட்டுமின்றி, இணையம் மூலமாகவும் உங்களுடைய புகார்களைப் பதிவு செய்யமுடியும்.  http://tnlegalmetrology.in/ என்ற முகவரியில் உங்கள் ஆப்பில் கொடுத்த மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கொடுத்து லாக்-இன் செய்யலாம். எனவே மக்கள் தங்கள் புகார்களை இணையம் மற்றும் மொபைல் மூலமாகப் பதிவு செய்யவும், நிர்வகிக்கவும் முடியும்.
ஆப் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்: 

https://play.google.com/store/apps/details?id=com.mslabs.lmctspublic&hl=en

இந்த ஆப்- உருவாக்கிசெயல்படுத்திவரும் தமிழகதொழிலாளர்துறையின் செயலாளர் அமுதா ..எஸ்இதுபற்றிக் கூறும்போது,"மார்ச் மாதம் இந்த ஆப் அறிமுகம்செய்யப்பட்டதுஇணையம் மற்றும் ஆப் இரண்டின்மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத்தெரிவிப்பதற்காகத்தான் இந்தச் சேவை அறிமுகம்செய்யப்பட்டுள்ளதுஇதில் புகார் தெரிவித்தால்அடுத்த 48 மணிநேரத்திற்குள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்எடை அளவுசட்டம் மற்றும் பொட்டலப் பொருள்களுக்கான விதிகள் எனஇரண்டு சட்டங்கள் இருக்கின்றனஅவற்றின் கீழ் வரும்புகார்கள் இதன் மூலம் பதிவு செய்யப்படும்
கடைகளில் நீங்கள் வாங்கும் பொருள்களின் எடைஅளவுபோன்றவற்றில் தவறு இருந்தாலோ அல்லது MRP விலையைவிடவும் அதிகமாக விற்றாலோ இதில் புகார் செய்யலாம்.பொட்டலப் பொருள்களுக்கான விதிகளைப் பொறுத்தவரை,ஒரு பொருள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டால் அந்தப் பாக்கெட்டின் மீதுயார்அதைப் பாக்கெட்டில் அடைத்தார்யார் அதைத் தயாரித்தார்,யார் அதை இறக்குமதி செய்தார்எப்போது பேக் செய்யப்பட்டது,அதன் எடை எவ்வளவுஅதன் அதிகபட்ச விலைநுகர்வோர்புகார் செய்வதற்கான எண்கள் என விவரங்கள் அனைத்தும்இருக்க வேண்டும்ஒரு நுகர்வோர் பாக்கெட்டில்அடைக்கப்பட்ட பொருள் ஒன்றை வாங்கும்போதுஅதனைப்பிரித்துப்பார்த்து வாங்குவது இல்லைஎனவே அந்தப்பாக்கெட்டிற்குள் என்ன இருக்கிறது என்பது குறித்த தெளிவானவிளக்கங்கள் பாக்கெட்டில் இருக்க வேண்டும்இதில் ஏதேனும்ஒரு விஷயம் இல்லை என்றாலோ அல்லது அதில்குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு மாற்றாக விற்பனைசெய்யப்பட்டாலோ அது சட்டப்படி குற்றம்அதுமாதிரியானசமயங்களில் நுகர்வோர்கள் புகார் செய்ய வேண்டும். 
அப்படி மக்கள் பாதிக்கப்படும் போது ஆடியோவீடியோ,எழுத்துரசீதுகள் என ஏதாவதொரு வகையில் இந்த ஆப் மூலம்புகார் செய்யலாம்தகுந்த ஆதாரங்களையும் உடன்இணைக்கலாம்ஒருவேளை ஆதாரங்கள் எதுவும் இல்லைஎன்றால் கூட பிரச்னை இல்லைநுகர்வோர் தங்கள்குறைகளைத் தெளிவாகப் பதிவு செய்தால் கூட போதும்;நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்இந்த ஆப் மூலம் பதிவுசெய்யப்படும் அனைத்து புகார்களும் அந்தந்த ஏரியாவின் எடை,அளவு சட்ட அதிகாரிகளுக்குச் சென்று சேர்ந்துவிடும்.தமிழகத்தில் மொத்தம் 433 எடைஅளவு சட்ட அதிகாரிகள்இருக்கிறார்கள்அவர்கள் உடனே அடுத்த 48 மணிநேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுப்பார்கள்அதேபோல புகார்கொடுத்தவரின் விவரங்கள் எதுவுமேஅதிகாரிகளுக்குத் தெரியாதுஎனவே புகார் கொடுப்பவர்களின்விவரங்கள் எதுவும் வெளியே தெரியாதுஅதே சமயம் புகார்அளித்தவர்களுக்குபுகார் பதிவான எண்எப்போதுநடவடிக்கை எடுப்பார்கள்அதன் மீது எடுக்கப்பட்டநடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும்எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்இதுவரை இந்த ஆப் மூலம்வந்த அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதுதற்போது இதுபற்றிய விழிப்புஉணர்வுகுறைவாக உள்ளதால்குறைவான புகார்களே வருகிறது.எனவே வருகின்ற ஒவ்வொரு புகார்களையும் தீவிரமாகக்கவனித்து வருகிறோம்உதாரணமாக ஒரு மார்க்கெட்டில்இருக்கும் ஒரு கடையில் விலை அதிகமாக வைக்கப்பட்டுபொருள்கள் விற்கப்படுகிறது எனப் புகார் வந்தால்அந்த ஒருகடை மட்டுமின்றி அந்த மார்க்கெட்டில் இருக்கும் மற்றகடைகளையும் சோதனை செய்கிறோம்நேரடியாக சென்றுசோதனை செய்வதால்குற்றங்கள் குறைகின்றனசிலநாள்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும்மோட்டல்கள் குறித்து புகார்கள் வந்தனஉடனே தமிழகம்முழுவதும் இருக்கும் அனைத்து மோட்டல்களும் சோதனைசெய்யப்பட்டுகுற்றம் செய்தவர்களுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டதுஒரு கடையில் முதலில் தவறுகண்டுபிடிக்கப்பட்டால் உடனே சட்டப்படி அபராதம்விதிக்கப்படும்அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் அதேகடையில் தவறு நடப்பது கண்டறியப்பட்டால்குற்றம்செய்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்குஅனுப்பப்படுவார்.
TN-LMCTS நுகர்வோர் புகார் அளிப்பதற்கான ஆப்
இந்தஆப்பின் இன்னொரு சிறப்பம்சம், இதன் மூலம் ஆன்லைனில் பொருள் வாங்கினாலும் கூட புகார் செய்யலாம். எடை அளவு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம். எனவே வெளிமாநிலங்களில் பொருள்கள் வாங்கியிருந்தாலும் கூட, அந்தந்த மாநிலங்களைத் தொடர்பு கொண்டு, விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்திற்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்" என்றார்.

ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.

தி.மு.க., - ரகுபதி: தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில், இடம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணத்தை மட்டும், அரசு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், இலவச பொருட்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை; அதை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் செங்கோட்டையன்: அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு இன்னமும் நிதி வழங்கவில்லை. எனினும், மாநில அரசு, 176 கோடி ரூபாய் ஒதுக்கி, கல்விக் கட்டணம் வழங்கி உள்ளது. இலவசப் பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை.

தி.மு.க., - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. ஒரு மாணவனுக்கு, இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலை உள்ளது. இப்பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் கூறியது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாது. இந்தியாவே திரும்பி பார்க்கும் விதமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்

திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப்
பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

திருக்கழுக்குன்றம் அடுத்த, மாம்பாக்கம் ஊராட்சி, முடையூர் கிராமத்தில், அரசு உதவி பெறும், ஜார்ஜ் வேணுகோபால் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி, 1950ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஏற்படுத்தப்பட்டு, 1954ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

எண்ணிக்கை குறைவு

இப்பள்ளியில் வழுவதுார், காட்டூர், கிளாப்பாக்கம், தத்தளூர், நரப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தற்போது அந்த கிராமங்களில், புதிய தொடக்கப்பள்ளிகள் வந்துள்ளதால், இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

வரவேற்பு
இப்பள்ளியின் மாணவர்களை தக்க வைக்கும் விதத்தில், தலைமையாசிரியர் தலைமையில், ஆசிரியர்கள் அனைவரும், வீடு வீடாக சென்று, பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, துண்டு பிரசுரம் கொடுத்தனர்.ஒரு வழியாக, 45 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களை தங்கள் பள்ளியில் தக்க வைக்க, பள்ளி வந்து செல்ல, வாகன வசதியை ஏற்படுத்த முடிவு செய்தனர்.

இதற்காக ஆசிரியர்கள் தங்கள் வருமானத்தில், 10 சதவீதத்தை ஒதுக்கி, மாருதி வேன் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்; பாதுகாப்பாக திரும்ப வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.மாணவர்களை பள்ளியில் தக்க வைக்க, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பு உள்ளது.பழைய விலைக்கு, மாருதி வேனை, விலை கொடுத்து வாங்கியுள்ள தலைமையாசிரியர், அதற்கான, டீசல் மற்றும் பராமரிப்பு செலவை, ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு

கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள்
பரிதவிக்கின்றனர். அரசின் மானியமும் குறைக்கப்பட்டதால் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனர்.

 மாநிலத்தில் சர்வ சிக் ஷா அபியான்' திட்டத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள், மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. இதில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர் தவிர்த்து, வட்டார கணக்காளர், பள்ளி கணக்காளர், கணினி 'புரோகிராமர்', கணிணி பயிற்றுனர், கட்டட பொறியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 1,500 பேர் பணிபுரிகின்றனர்.

இவர்கள் தங்களின் ஊதிய தொகையை, திட்டப் பணிகளுக்கான 100 சதவீத மானியத்தில் இருந்து பெற்று வந்தனர். ஆனால் சமீபகாலமாக திட்டத்திற்காக மத்திய அரசு, மாநில அரசு பங்களிப்பு தொகை மானியம் குறைத்து வழங்கப்படுவதால், இவர்களுக்கான ஊதியமும் சொற்பமாகவே கிடைக்கிறது. இதனால், அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தங்களை பணி அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அனைவருக்கும் கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர் கூட்டமைப்பு சார்பில் அரசு, பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

சங்கத்தின் மதுரை மண்டல நிர்வாகி ராஜா கூறியதாவது:மாநிலத்தில் 1,500 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இழந்து நிரந்தரமின்றி பணிபுரிந்து வருகிறோம். ஏற்கனவே நடக்கும் திட்டப்

பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. எனவே அரசு அனைவருக்கும் கல்வித்திட்ட பணியாளர்களை நிரந்தரமாக்க முன் வர வேண்டும்,' என்றார்.

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட
விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


 'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.

சிலபகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், ஓ.எம்.ஆர்., படிவம் மற்றும் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற விபரங்கள் கொண்ட புத்தகம் கடந்தாண்டுக்கு உரியவை.வயது தகுதியாக, 'டிச.,31, 2017ன்படி 17 வயது பூர்த்தியானவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் மாணவர் பிறந்த தேதியை குறிப்பிட கட்டங்களை கறுப்பு நிறத்தில் நிரப்பும்போதும் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 2000 மற்றும் அதற்கு மேல் பிறந்தவர் ஆண்டை குறிப்பிட முடியவில்லை. 1999 வரை பிறந்தவர் மட்டுமே குறிப்பிடும் வகையில் கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. '2', '0' ஆகிய எண்களை குறிப்பிட வழி இல்லை.
அதேபோல், விண்ணப்பத்தில் 10 இலக்கம் கொண்ட பதிவு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், படிவத்தில் 'ரெஜிஸ்டர்/ரோல் நம்பர்' என குறிப்பிட்டு எட்டு இலக்கம் எழுதுவதற்கு மட்டும் இடம் உள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு மருத்துவ படிப்பு, மாணவர்களுக்கு கடும் சோதனையாக மாறிவிட்டது. 'நீட்' தேர்வு குறித்த தமிழக அரசு நிலைப்பாட்டால் கடைசி வரை குழப்பம் தான் ஏற்பட்டது. கணினி நடைமுறை மூலம் தான் விண்ணப்பம் ஏற்கப்படும்.

அப்போது ஓ.எம்.ஆர்., படிவத்தில் சிறு பிழை இருந்தாலும் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பிரச்னை குறித்து சுகாதாரத்துறை செயலர் கவனிக்க வேண்டும். சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களும், தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


 பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, அவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறை பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களது மதிப்பெண் பிழைகளை சரி செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

இதில், பிளஸ் 2வுக்கு, 5,000 பேரும், 10ம் வகுப்பில், 2,000 பேரும், பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு சென்னையில் நடந்தது. இதன் முடிவில், பிளஸ் 2வில், 2,070 பேருக்கும், 10ம் வகுப்பில், 821 பேருக்கும், பிழைகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின், அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, திருத்திய விடைத்தாள் வழங்கப்பட்டது.


இந்நிலையில், விடை திருத்தத்தில் குளறுபடி செய்த விடை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையிடுவோர், மதிப்பெண் கண்காணிப்பாளர் என, 3,000பேரின் பட்டியல் தயாராகி உள்ளது. இவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பள்ளிக்கல்வி செயலக உத்தரவின் பேரில், ஆசிரியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அசத்தும் அறிவிப்புகள் - குவியும் கோரிக்கைகள்

இந்தவார நக்கீரன் இதழில் ஜீன் 28-30 பக்கம் 27ல் பகுதிநேர ஆசிரியர்கள் செய்தி வந்துள்ளது.

பி.எட் விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்

தமிழகம் முழுவதும் இரண்டு ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 1777 இடங்களுக்கான ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
2017-18 நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப விற்பனை ஜூன் 21ம் தேதி தொடங்கியது. அதில் 5737 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விண்ணப்ப விற்பனை இன்று நிறைவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கைக்காக சமர்பிக்க வேண்டும். இதுதொடர்பான செயல் வழிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.