ரேஷன் கடைகள் முதல் பேருந்து பயணங்களின் போது உணவருந்தும் மோட்டல்கள் வரை, ஒவ்வோர் இடங்களிலும் நுகர்வோர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இதுதான் எடை, இவ்வளவுதான் விலை என அனைத்துப் பொருள்களுக்கும் சட்டப்படி அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு பொருள்களின்
மீது
அச்சடிக்கப்பட்டிருந்தாலும், தரம், விலை, அளவு என ஏதாவதொரு விதத்தில் நுகர்வோர்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டே வருகின்றனர். இவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழக அரசின் TN-LMCTS மொபைல் ஆப். இதனை மொபைலில் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். எந்தப் புகார்களையும் சில நிமிடங்களில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல முடியும். தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவு பிரிவுதான் இந்த மொபைல் ஆப்-ஐ நிர்வகிக்கிறது.
TN-LMCTS நுகர்வோர் ஆப்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உங்கள் போனில் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அவற்றைக் கொடுத்த பின்னர் உங்களுடைய அலைபேசி எண் OTP மூலம் சோதிக்கப்படும். சோதனை முடிந்துவிட்டால், புகார்களுக்கு உங்கள் ஆப் தயார். உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து எப்போது வேண்டுமானாலும் லாக்-இன் செய்ய முடியும். ஆப் முழுவதுமே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அதேசமயம் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது.
நீங்கள் செய்த புகார்களின் பட்டியல், புதிய புகார்களுக்கான ஆப்ஷன், விரைவான புகார்கள் என மூன்று மெனுக்கள் இருக்கின்றன. விரைவான புகார்களுக்கு என்ன புகார், எந்த இடம் என்பதை மட்டும் தெளிவாகக் குறிப்பிட்டு அதற்கான சாட்சிகளாகப் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை உடன் இணைக்க வேண்டும். புதிய புகார்கள் என்ற மெனுவில், புகார் பற்றிய குறிப்பு, புகைப்படங்கள் / வீடியோ/ ஆடியோ இணைப்பு, எது தொடர்பான புகார் என்ற விவரம், கடையின் முழு முகவரி போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் புகாரினைப் பதிவு செய்துவிட்டால், அதற்கு புகார் எண் கொடுக்கப்பட்டு உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். நீங்கள் கொடுத்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களும் ஆப்-ல் காட்டப்படுகின்றன.
TN-LMCTS ஆப்
பொருள் வாங்கியதற்கான ரசீது, கடையின் போட்டோ, பொருள் வாங்கிய வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் போன்ற ஆதாரங்களை அனுப்புவது எளிதாக இருக்கிறது. தாமதமின்றி உடனே புகார்களைப் பதிவு செய்துவிடவும் முடிகிறது. ஆனால் புதிய புகார்களைப் பதிவு செய்யும் போது, கடைகளின் தன்மை, முகவரி போன்றவற்றைக் குறிப்பிடும் போது நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க தமிழ் மொழியையும் இதில் இணைக்கலாம். ஆப் மட்டுமின்றி, இணையம் மூலமாகவும் உங்களுடைய புகார்களைப் பதிவு செய்யமுடியும். http://tnlegalmetrology.in/ என்ற முகவரியில் உங்கள் ஆப்பில் கொடுத்த மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கொடுத்து லாக்-இன் செய்யலாம். எனவே மக்கள் தங்கள் புகார்களை இணையம் மற்றும் மொபைல் மூலமாகப் பதிவு செய்யவும், நிர்வகிக்கவும் முடியும்.
ஆப் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக