மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள்,
பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 1,380பேர் ராஜினாமா செய்துள்ளனர்; மீதமுள்ள, 15 ஆயிரத்து, 169 பேருக்கு, ஐந்து ஆண்டுகளாக, மாதம், 7,000ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆறுமுதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள், ஓவியம், இசை, கம்ப்யூட்டர் சயின்ஸ், தோட்டக்கலை என, பல்வேறு பாடப்பிரிவுகளில், வகுப்புகள் நடத்துகின்றனர். இவர்களில் பலர், முதுநிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளை முடித்து, பேராசிரியர் பணிக்கும் தகுதியாக உள்ளனர். பலர், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித் தேர்வும் முடித்துள்ளனர். இந்நிலையில், தங்களின் கல்வி தகுதிக்கேற்ப, ஆசிரியர் பணியில் நிரந்தரமாக நியமிக்குமாறு, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அவர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ஆனால், தற்போது பணி நிரந்தரம் கேட்கும் ஆசிரியர்களை, உடனடியாக இட மாற்றம் செய்யுமாறு, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், 101 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், முதற்கட்டமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக