அட்டர்னி ஜெனரல் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை*
*இறுதி முடிவெடுக்க மத்திய அரசு ஆலோசனை*
புதுடெல்லி : தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளன.
நீட் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வினாத்தாள்களில் குளறுபடி ஏற்பட்டதாக நாடு முழுவதும் புகார் எழுந்தது. அதிலும், குறிப்பாக தமிழ் மொழி வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் என்ற உள்ஒதுக்கீட்டை கடந்த மாதம் 22ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்த அவசர அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, “ நீட் என்பது என்பது நாடு முழுவதும் நடத்தப்படும் ஒரே மாதிரியான தேர்வு முறையாகும். அதனால் இதில் ஒரே நிலையில்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
தமிழகத்திற்கு என தனி ஒதுக்கீடு எதுவும் செய்ய முடியாது’ எனக்கூறி மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வை ஆகஸ்ட் மாத 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதியன்று
*மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் அளித்த பேட்டியில்*
‘ நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒராண்டிற்கு மட்டும் விலக்கு கேட்டு சட்டம் இயற்றினால் மத்திய அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்’ என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு வேண்டும் என்ற அவசர சட்ட வரைவை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.
இது மத்திய உள்துறை ,சட்டத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர பரிசீலனையில் உள்ளது. இதை ஏற்பது குறித்து கருத்து தெரிவிக்கும்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் சட்ட அமைச்சகம் கேட்டுள்ளது.
அதற்கு கே.கே.வேணுகோபால் நேற்று அனுப்பிய பதிலில், ‘தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை.
மேலும், அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.
1956ன் பிரிவின் கீழ் மருத்துவ கவுன்சிலிங்கின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வரைவு இயற்றப்பட்டுள்ளது.
அதனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கலாம். இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்கும் பட்சத்தில் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமையாது’ என கூறியுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அதை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம், மனிதவளமேம்பாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்தன.
இதையடுத்து அவசர சட்டம் இறுதியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின் தமிழக கவர்னர் அல்லது ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் வெளியிடப்படும். இதன் மூலம் 2017-18 கல்வியாண்டில் தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிகிறது.
விரைவில் நல்ல செய்தி அமைச்சர் நம்பிக்கை
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவு திடீர் என்று ெடல்லி புறப்பட்டு சென்றார். இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.
தொடர்ந்து, நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சட்டத்துறையின் இணை அமைச்சர் பி.பி. சவுத்ரியை சந்தித்து அவசர சட்ட வரைவு விலக்கு கோரி வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உடனிருந்தார்.
*நேற்று மாலை டெல்லியில் நிருபர்களை சந்தித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி*
நீட் தேர்வின் அவசர சட்ட முன்வடிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், ஒப்புதல் கிடைப்பது பற்றி எங்களால் தற்போது எதுவும் கூற முடியாது. துறைகளின் பரிசீலனைக்கு பிறகு தான் தெரியவரும்.
மத்திய தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று எங்களிடம் நேரடியாக எதுவும் குறிப்பிட்டு கூறவில்லை. ஊடகங்கள் வாயிலாக தான் எங்களுக்கு தகவல் கிடைத்தது.
நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் முடிவு எடுக்க முடியும். அது குறித்து நாங்கள் கருத்து5 எதுவும் கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
*உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு*
நீட் தேர்வு குறித்து மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘நீட் தேர்வு முறையில் தமிழகத்தின் 85 சதவீத அரசாணையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்து, மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இது குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கால தாமதம் செய்து வருகிறது. இதனால் தமிழக மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
அதனால் நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் விரைவில் மருத்துவ கலந்தாய்வை நடத்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்வதாகவும், இதன் விசாரணையை இன்று நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் சிபிஎஸ்இ மற்றும் மருத்துவ கவுன்சில் ஆகிய நிர்வாகங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுவார்கள் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.