யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/8/17

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 
பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. இத்தேர்விற்கு 'ஆன்லைன்' மூலமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு இருவர் வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் வல்லுனர்கள் மூலம், வாரத்தில் 2 நாட்கள் (சனி,ஞாயிறு) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி ஆக.19 முதல் செப்.23 வரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கும்.மாவட்டத்திற்கு குறைந்தது 100 மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதில்,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க இயலாது. மாணவர்களுக்கு பயணப்படியும், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப
பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவை மையங்களாக தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாவட்டத்திலும் பயிற்சி மையங்கள் செயல்படும்.
''இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'', என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜா பயஸ் தெரிவித்தனர்.

குரூப்–1 முதன்மை தேர்வின் விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி. தாக்கல் செய்ய வேண்டும் !!

தங்கள் வசம் உள்ள குரூப்–1 முதன்மை தேர்வு விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 
குரூப்–1 தேர்வை கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. இதில் நான் தேர்ச்சி பெற்றேன். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப்–1 முதன்மை தேர்வு நடந்தது. இந்த தேர்வை நன்றாக எழுதியிருந்தேன். ஆனால், நான் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரத்துடன் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, குரூப்–1 தேர்வை ரத்து செய்யவேண்டும். மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிட்டு, குரூப்–1 தேர்வை நடத்த டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சென்னை போலீஸ் கமி‌ஷனரையும், தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி, ‘டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த 7–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுவிட்டது. குரூப்–1 தேர்வில் பங்கேற்றவர்களின் உண்மையான விடைத்தாள் என்று கூறி, அதை காட்டி தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விடைத்தாள் போலியானவை. அதுகுறித்து சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த 1–ந் தேதி புகார் செய்யப்பட்டுள்ளது’என்றார்.

இதற்கு நீதிபதி, ‘நேர்முக தேர்வின் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், தேர்வில் வெற்றி பெற்றவர்களை எல்லாம் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டியது வரும். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், குரூப்–1 தேர்வு எழுதியவர்களின் உண்மையான விடைத்தாள் தங்களிடம் உள்ளது என்று தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு தேர்வு என்றால், ஒரு விடைத்தாள் தானே இருக்க முடியும்?. அது எப்படி இரண்டு விதமான விடைத்தாள்கள் இருக்க முடியும்?.

எனவே, இது தீவிரமான குற்றச்சாட்டாக உள்ளது. போலீசாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் தான் உண்மை வெளி கொண்டுவர முடியும். அதனால், இந்த வழக்கை வருகிற 18–ந் தேதிக்கு (நாளைக்கு) தள்ளிவைக்கிறேன். அன்று தங்களிடம் உள்ள உண்மையான விடைத்தாள்களை இந்த ஐகோர்ட்டில், டி.என்.பி.எஸ்.சி. தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர் வக்கீல் எம்.புருஷோத்தமன், ‘அதுவரை நேர்முகத் தேர்வு முடிவின் அடிப்படையில் பணி நியமனம் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று தடைவிதிக்க வேண்டும்’ என்றார். அதற்கு நீதிபதி, ‘ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விவரங்கள், அரசுக்கு தெரியும். அதனால் அவர்களே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். தடை ஏதாவது விதித்தால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். 2 நாட்களில் எதுவும் நடந்து விடாது’ என்று கருத்து தெரிவித்தார்.

தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க 3 அமைச்சகங்கள் ஒப்புதல் !!

அட்டர்னி ஜெனரல் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை*

*இறுதி முடிவெடுக்க மத்திய அரசு ஆலோசனை*


புதுடெல்லி : தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளன.



 நீட் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வினாத்தாள்களில் குளறுபடி ஏற்பட்டதாக நாடு முழுவதும் புகார் எழுந்தது. அதிலும், குறிப்பாக தமிழ் மொழி வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.


இந்நிலையில், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் என்ற உள்ஒதுக்கீட்டை கடந்த மாதம் 22ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது.


இந்த அவசர அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.


மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, “ நீட் என்பது என்பது நாடு முழுவதும் நடத்தப்படும் ஒரே மாதிரியான தேர்வு முறையாகும். அதனால் இதில் ஒரே நிலையில்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

 தமிழகத்திற்கு என தனி ஒதுக்கீடு எதுவும் செய்ய முடியாது’ எனக்கூறி மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வை ஆகஸ்ட் மாத 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதியன்று

*மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் அளித்த பேட்டியில்*

 ‘ நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒராண்டிற்கு மட்டும் விலக்கு கேட்டு சட்டம் இயற்றினால் மத்திய அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்’ என தெரிவித்தார்.


இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு வேண்டும் என்ற அவசர சட்ட வரைவை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.

 இது மத்திய உள்துறை ,சட்டத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர பரிசீலனையில் உள்ளது. இதை ஏற்பது குறித்து கருத்து தெரிவிக்கும்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் சட்ட அமைச்சகம் கேட்டுள்ளது.

 அதற்கு கே.கே.வேணுகோபால் நேற்று அனுப்பிய பதிலில், ‘தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை.


 மேலும், அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.
1956ன் பிரிவின் கீழ் மருத்துவ கவுன்சிலிங்கின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வரைவு இயற்றப்பட்டுள்ளது.


அதனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கலாம். இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்கும் பட்சத்தில் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமையாது’ என கூறியுள்ளார்.


 இதை ஏற்றுக் கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அதை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம், மனிதவளமேம்பாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்தன.


இதையடுத்து அவசர சட்டம் இறுதியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 அதன்பின் தமிழக கவர்னர் அல்லது ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் வெளியிடப்படும். இதன் மூலம் 2017-18 கல்வியாண்டில் தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிகிறது.



விரைவில் நல்ல செய்தி அமைச்சர் நம்பிக்கை
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவு திடீர் என்று ெடல்லி புறப்பட்டு சென்றார். இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.


தொடர்ந்து, நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சட்டத்துறையின் இணை அமைச்சர் பி.பி. சவுத்ரியை சந்தித்து அவசர சட்ட வரைவு விலக்கு கோரி வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உடனிருந்தார்.

 *நேற்று மாலை டெல்லியில் நிருபர்களை சந்தித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி*


நீட் தேர்வின் அவசர சட்ட முன்வடிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

 துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், ஒப்புதல் கிடைப்பது பற்றி எங்களால் தற்போது எதுவும் கூற முடியாது. துறைகளின் பரிசீலனைக்கு பிறகு தான் தெரியவரும்.



மத்திய தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று எங்களிடம் நேரடியாக எதுவும் குறிப்பிட்டு கூறவில்லை. ஊடகங்கள் வாயிலாக தான் எங்களுக்கு தகவல் கிடைத்தது.


 நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் முடிவு எடுக்க முடியும். அது குறித்து நாங்கள் கருத்து5 எதுவும் கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


*உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு*


நீட் தேர்வு குறித்து மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


அதில், ‘நீட் தேர்வு முறையில் தமிழகத்தின் 85 சதவீத அரசாணையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்து, மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இது குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கால தாமதம் செய்து வருகிறது. இதனால் தமிழக மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.


அதனால் நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் விரைவில் மருத்துவ கலந்தாய்வை நடத்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்வதாகவும், இதன் விசாரணையை இன்று நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.


 மேலும், இந்த வழக்கில் சிபிஎஸ்இ மற்றும் மருத்துவ கவுன்சில் ஆகிய நிர்வாகங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுவார்கள் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தில் பணி!

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில்
காலியாக உள்ள தள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: தள பொறியாளர்

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினீயரிங்

தேர்வு முறை: நேர்காணல்

கடைசித் தேதி: 04.09.2017

மேலும் விவரங்களுக்கு http://www.nhai.org/Doc/14aug17/Instructions%20to%20applicant.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பத்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு !!

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாலயன் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு 2027ஆம் ஆண்டு வரை தொடரும்’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் (15.08.2017) பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பேசும்போது, “ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்டது. 
வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாலயன் பகுதிகள், ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு பத்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி-யில் இதற்கு வரிவிலக்கு சட்டம் இல்லை. ஆனால், இதன் ஒரு பிரிவு திரும்பச் செலுத்தும் முறைக்கு அனுமதி அளிக்கிறது. இதன்மூலம் இந்தப் பகுதிகளில் உள்ள 4,284 நிறுவனங்கள் பயன்பெறும். இதற்கு மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.27,413 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மத்திய அரசு 2027ஆம் ஆண்டு வரை இப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ள நிலையில் மத்திய பாஜக அரசின் தீவிர ஆதரவாளரும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான யோக குரு பாபா ராம்தேவ் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தனது சில்லறை வர்த்தகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை !!

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கடலூர் வந்த அமைச்சர் செங்கோட்டையன் 
செய்தியாளர்களிடம்கூறியதாவது:நீட் தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமரை நான்கு முறை சந்தித்திருக்கிறோம்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.இதற்காக 54 ஆயிரம் கேள்விகளுக்கான விடைகள்தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ளோம்.பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆய்வின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் வரையறைப்படி, உயர்மட்டக்குழு பரிந்துரையின் பேரில் புதிய பாடத்திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கும் என்று கூறினார்.

ஆசிரியர் பற்றாக்குறை இல்லை

தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இருக்கிறோம்.கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள தனியார் பள்ளிகளில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை’’என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமஸ்கிருத பாடம்: மத்திய அரசு உத்தரவு'

சமஸ்கிருத பாடம் குறித்த விபரங்களை, அனைத்து பள்ளிகளும் சமர்ப்பிக்க வேண்டும்' 
என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.மத்திய அரசு, பள்ளிகளில் சமஸ்கிருத பாடம் கற்பிப்பதை ஊக்குவிக்க திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சமஸ்கிருத பாடம் நடத்தும் பள்ளிகள், பாடத்திட்ட விபரங்களை சேகரிக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும்,25க்குள், மேற்கண்ட விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நீட்‛ அவசர சட்டம்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

                                                    
                                       

*தமிழக ஜெனரல் பிற்பகல் 2 மணிக்கு நேரில்
ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அரசு கொண்டுவந்துள்ள ‛நீட்‛ அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி 
மாணவர்கள் சார்பாக நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு, நீட் குறித்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் கவுன்சிலிங் நடத்த கூடுதல் அவகாசம் வழங்கக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் 3 அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது

தினகரன் குறிவைக்கும் 3 அமைச்சர்கள்: ஊழலை திரட்ட திடீர் உத்தரவு!!

                                                              
               அ.தி.மு.க.,வில் சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரனுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள்
திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் மீது, சசிகலா குடும்பத்தினர் கோபம் அடைந்துள்ளனர்.
இருவரும் துரோகிகள்; இருவரையும் அரசியலில் இருந்து ஒழித்தே தீர வேண்டும். அதற்காக என்னன்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்யுங்கள் என, ஆதரவாளர்களுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க.,வின் சசிகலா ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:

கோபம்:

அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் பொறுப்பில் இருக்கும் தன்னை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதிப்பதில்லை என்று, தினகரனுக்கு வருத்தம் இருக்கிறது.
ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஆர்.பி.உதயக்குமார் ஆகிய இருவரும், தங்களுடைய தீவிர விசுவாசிகளாக இருப்பர் என்று நம்பினார். அதனால்தான், கட்சியின் பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம் தனி அணியாக சென்றதும், அவரது பொறுப்பில், திண்டுக்கல் சீனிவாசனை, தினகரன் நியமித்தார். அதேபோல, அமைச்சர் உதயக்குமாரும் தங்கள் குடும்பத்துக்கு கடைசி வரை விசுவாசமாக இருப்பார் என்று நினைத்தார் தினகரன்.
அவர்கள் இருவரும், திடுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சேர்ந்து கொண்டு, சசிகலா குடும்பத்தினரை மறைமுகமாக விமர்சிக்கத் துவங்கி இருப்பது, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
அதனால், அவர்கள் இருவரையும் அரசியலில் இருந்து ஒழித்தாக வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார். இப்படி உத்தரவிட்ட கையோடுதான், திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா காலில் விழுந்த படத்தை வெளியிட வேண்டியிருக்கும் என, தினகரன் ஆத்திரமாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்து பேசிய சீனிவாசன், துணைப் பொதுச் செயலர் ஆனதும், என் காலிலும், செங்கோட்டையன் காலிலும் விழுந்தவர் தினகரன். என் படத்தை வெளியிடும்போது, இந்தப் படங்களையும் சேர்த்து வெளியிடலாம் என சவால் விடுவது போல கூறினார்.
இதனால், தினகரனின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது. உதயக்குமார் மற்றும் சீனிவாசன் ஆகியோர் துறைகளில் நடக்கும் முறைகேடுகளைதோண்டி எடுத்து வெளியிடுமாறு, ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளார். அந்தப் பணியை, தினகரன் ஆதரவாளர்கள் துவக்கி உள்ளனர்.

ஜெயக்குமார் அடுத்த இலக்கு:

இதற்கிடையில், சசிகலா குடும்பத்தினரை விமர்சித்து வரும் அமைச்சர் ஜெயக்குமாரை நோக்கியும் இலக்கு வைத்து வீழ்த்துமாறு, ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் தினகரன். ஆனால், இது குறித்தெல்லாம், மூன்று அமைச்சர்களும் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பது, தினகரன் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை

மருத்துவ கவுன்சிலிங்கை விரைவாக நடத்தக் கோரி, மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் வழக்கு
தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ‛நீட்' அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் ஆஜராகவில்லை. மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.

முடியாது:

‛நீட்' அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் வாதாடின.
சட்டச் சிக்கல்ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

தடை:

இந்நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர உத்தரவிட்டு ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் எங்கே என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய கோர்ட், அவசர சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு என்ன செய்ய போகிறது. எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் அவசர சட்டம் இருக்க வேண்டும் எனவும் கூறினர்

BIG BREAKING NEWS-ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை: முதலமைச்சர் பழனிசாமி !!


ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

*ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் - முதலமைச்சர்.


*மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பை அடுத்து வெளிநபர்கள் தேவையில்லாமல் உள்ளே நுழையத் தடை வித்தக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை : திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடு.. 1 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !!

வட மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அசாம், மேற்குவங்கம், பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை கிழக்கு அசாமின் ஆளுநர் பன்வாரிலால் புரேஹித் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாமில் தற்போது மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளால் நிலைமை மோசமாக உள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களை நேரில் பார்வையிட்டேன் என்றார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வடமாநிலங்களில் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை  250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து ரயில்களும் வரும் 20-ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

முதல்வர் அறிக்கை : வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும்! !

வாழத்தகுந்த நகரங்கள்: இந்தியா எங்கே?

மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் 
யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், வருத்தமளிக்கக் கூடிய விஷயம், என்னவெனில், அந்தப் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்று கூட இடம்பிடிக்கவில்லை என்பதுதான்.

லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தின் துணை அமைப்பான எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் அச்சமின்றி வாழத்தகுந்த 140 நகரங்களை கருத்துக் கணிப்பு மூலம் பட்டியலிட்டுள்ளது. நகரங்களின் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் உலக அளவில் மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரம் முதலிடத்தையும், ஆஸ்திரியாவின் வியன்னா மற்றும் கனடாவின் வேன்கூவர் ஆகிய நகரங்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தானின் கராச்சி 134வது இடத்திலும், வங்கதேசத்தின் டாக்கா 137வது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக, அந்நாடுகளில் உள்ள நகரங்கள் மக்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல.

மேலும், ஈராக், லிபியா, சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்டவை மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழவே முடியாத நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளில் ஆண்டு முழுவதும் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கின்றன.

உலகளவில் தீவிரவாதம் அதிகரித்து வருவதை இந்த கணக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது. உலகில் அமைதியாக மக்கள் வாழும் இடங்கள், கடந்த 5 ஆண்டுகளில் 0.8 சதவிகிதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*JACTO GEO - வேலைநிறுத்தம் சூடு பிடிக்கிறது ,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து முதன்மை செயலாளர்களுக்கும் கடிதம் !!



11/8/17

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கை... டல்! தனியார் கல்வி நிறுவனங்கள் தவிப்பு

நடப்பாண்டில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர தயக்கம் காட்டி வருவதால்


ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவை காலியாக உள்ளன. கடலுார் மாவட்டத்தில் 20 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், ஒரு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், கடலுார், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர கடலுார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் எஸ்.சி., - எஸ்.டி., க்கென தனியாக ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பொறியியல் படித்தவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் மாணவர்கள் பொறியியல் படிப்பைத் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேப்போல ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தாலும் மீண்டும் 'டெட்' தேர்வு எழுத வேண்டும் என்பதால் பல மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி முடித்த பின்பும் வேலை கிடைப்பதில்லை. இதனால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை.ஒரு காலத்தில் தனியார் பயிற்சி பள்ளிகளில் லட்சக் கணக்கில் ரூபாய் நன்கொடை கொடுத்தாலும் சீட் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் இன்று மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 'டல்' அடித்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வடலுாரில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இப்பள்ளியின் மூலம் 50 ஆசிரியர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கான கவுன்சிலிங் கடந்த 7ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் உள்ள 50 மாணவர்களுக்கு 21 மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங் மூலம் வடலுார் ஆசிரியர் பள்ளியில் சேர தேர்வாகியுள்ளனர். இதனால் மீண்டும் விண்ணப்பம் பெற்று சேர்க்கை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.கட்டணம் குறைவாக உள்ள பயிற்சி பள்ளிகளிலேயே இந்த பிரச்னை என்றால் தனியார் ஆசிரியர் பள்ளிகளுக்கு கேட்கவே வேண்டாம். பல பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை பூஜ்ஜியமாக இருப்பதால் பயிற்சி பள்ளியை மூடிவிட தயாராகி வருகின்றனர்

கல்லூரி அருகே 'டாஸ்மாக்' மாணவியர் சாலை மறியல்

மாதவரம்: தனியார் கல்லுாரிக்கு
அருகே திறக்கப்பட்டுள்ள, 'டாஸ்மாக்' கடைகளை அகற்றக் கோரி, கல்லுாரி மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை, மாதவரம் பால்பண்ணை அடுத்த, மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலையில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது.இரு மாதங்களுக்கு முன், கல்லுாரி அருகே, இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், அங்கு குவியும், 'குடி'மகன்களால், கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு, டாஸ்மாக் கடை முன் திரண்ட கல்லுாரி மாணவ, மாணவியர், கடையை அகற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதவரம் தாசில்தார் முருகானந்தம் மற்றும் போலீசார் விரைந்து வந்து, 'மாவட்ட ஆட்சியரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர்; இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.சாலை மறியலால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? ( பகுதி -3 )

தமிழ் நாட்டின் ஓய்வூதிய வரலாறு*
தமிழகத்தைப் பொருத்தவரை, ஆரம்ப காலங்களில் அரசு ஊழியருக்கு மட்டும் மிக சொற்பமான அளவில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

1960-ஆம் ஆண்டு மாவட்டக் கழகப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக்கப்பட்டன. அதுநாள் வரையில் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்பது வழங்கப்படவில்லை.


1956-ஆம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்காக, அரசு மற்றும் ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய வைப்புநிதித் திட்டமாக ஓய்வூதியத் திட்டத்தினை முதன் முதலில் கொண்டு வந்தது. 01.04.1956 முதல் 13.06.1966 வரை நடைமுறையில் இருந்த இத்திட்டத்தின்கீழ், ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.8-ம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10ம் வழங்கப்பட்டது.

 05.12.1964 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஒன்றுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் அன்றைய முதல்வர் திரு.பக்தவச்சலம் கலந்து கொண்டார். இம்மாநாட்டில், கூட்டணியின் தலைவர் இராமையாதேவர், *“தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அனாதைகளை விட குறைவான ஓய்வூதியம் பெறுகின்றனர். எனவே, அனாதைகளுக்கு வழங்கப்படுகின்ற ரூ.20-ஐயாவது ஆசிரியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்”* என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் மாநாட்டில் கூறியதாவது *“கூட்டணியின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்களுக்கு ரூ.20 ஓய்வூதியம் வழங்கப்படும்”* என்றார். பிறகு 14.06.1966 முதல் 17.11.1968 வரை ரூ.20 ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.

18.11.1968 முதல் 30.09.1978 வரை ரூ.50-ம், அதன் பின்னர் ஊதியத்தில் 30/80, 33/80 என்ற விகிதங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

        அரசாணை எண்: 57, நாள்: 02.02.1980-ன் படி 01.10.1980 முதல் படி-முறை (SLAB SYSTEM) அடிப்படையில் சராசரி மாத ஊதியம்,

ரூ.1000 எனில் 50%

ரூ.1000 - 1500 எனில் 45%

ரூ.1500-க்கு மேல் எனில் 40%

என ஊதியத்தின் படி ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

 அதன்பின் அரசாணை எண்: 1030, நாள்: 14.12.87-ன் படி கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சராசரி 50% 14.12.1987 முதல் வழங்கப்பட்டது.

அரசாணை எண்: 639, நாள்: 03.07.1972-ன் படி 01.04.1972 முதல் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்துடன் அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்பட்டது

பதிவுகள் தொடரும்.  . . . .

நன்றி : cpstamilnadu.blogspot.com

திண்டுக்கல் எங்கெல்ஸ்

நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என சுப்ரீம் 
கோர்ட் கூறியுள்ளது.நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன்? சி.பி.எஸ்.இ.,யின் இந்த செயல் ஏற்று கொள்ள முடியாது. இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டியவை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது

JACTO-GEO Breaking News*

திட்டமிட்டப்படி 22ம் தேதி அடையாள வேலைநிறுத்தம்* -

திருச்சியில் இன்று நடந்த ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு.

ஜாக்டோ_ ஜியோ ஆகஸ்ட் 22 வேலைநிறுத்தம் நடைபெறும் அன்று காலை 10.00 மணிக்கு வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டும்.