யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/10/17

பதவியும் ஊதியக்குழுக்களின் ஊதிய நிர்ணயமும்!!!

45 நிமிடங்களில் ரத்தம் கிடைக்கும்!

சாலை விபத்துக்களில் விபத்துக்குள்ளானவர்களுக்கு 
உடனடியாக ரத்தம் கிடைக்காத காரணத்தால் பலர் உயிரிழக்கின்ற நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், அவசர சிகிச்சைக்கு உடனடியாக ரத்தம் கிடைக்கும் வகையில் புதிய ரத்தக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய ரத்தக் கொள்கையின்படி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களுக்கு 45 நிமிடங்களில் ரத்தம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 295 ரத்த வங்கிகளும், 519 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. இங்கிருந்து, உடனடியாக ரத்தம் தேவைப்படும் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை கொண்டு செல்வதற்கான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால், விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இது பயனளிக்கும்.

இந்த திட்டம் ஏழை கர்ப்பிணி பெண்களின் சிகிச்சைக்காக ரத்தம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அங்கீகாரம் பெற்ற ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள ரத்தத்தில் நோய் உள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்யவும் இது வழிவகுக்குகிறது.

மேலும், ரத்தம் தானம் செய்வோரின் முகவரி உள்ளிட்ட விவரங்களை ரத்த சேமிப்பு வங்கிகள் சேமித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிலையன்ஸ் 2ஜி சேவை நிறுத்தம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது
2ஜி சேவையை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கி வருகிறது. அனில் அம்பானியின் சகோதரரும் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையைத் தொடங்கிய பிறகு அனில் அம்பானிக்கு நஷ்டம் ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில், ஏர்செல் நிறுவனத்துடன் இணைய முடிவு செய்தது.

எனினும் சில சட்ட சிக்கல்களால் ஏர்செல் நிறுவனத்துடனான இணைவு தோல்வியைச் சந்தித்தது. இதனால் ரிலையன்ஸுக்கு உள்ள ரூ.44,000 கோடி கடன் பிரச்னைக்குத் தீர்வு காண இயலாமல் போனது. எனவே கடனில் சிக்கித் தவிப்பதை விட வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்து, 2ஜி மொபைல் சேவையை நவம்பர் 30ஆம் தேதிக்குள் நிறுத்திக் கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், லாபம் கிடைக்கும் வரையில் 3ஜி சேவை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் அதன் பணியாளர்கள் சுமார் 2,000 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

+2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றும் பணி

அனைத்துப்பள்ளிகளிலும் 31.10.2017 அன்று காலை 11 மணிக்கு மேற்கண்ட உறுதி எடுக்கப்படல் வேண்டும்.!!!

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை!!

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், 
ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது.


கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப்பின் பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை நிர்ணயிக்க புதிய குழு ஒன்றை தமிழக அரசு நிர்ணயித்தது. அந்தக் குழு ‘பே மேட்ரிக்ஸ்’ முறைப்படி 2 விதமாக சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறையை பரிந்துரை செய்துள்ளது.


ஒன்று பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பளம் உயர்வு. மற்றொன்று முதலில் வகித்த பதவியில் சம்பள உயர்வு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம். இந்த இரண்டில் எந்த முறை என்பதை அரசு ஊழியர்களே தேர்வு செய்து கொள்ளலாம். (அ) பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடும் முறை:


ரூ.31, 300 அடிப்படை சம்பளம் பெறும் ஜூனியர் அசிஸ்டெண்ட் 8ம் நிலையில் இருந்து, அசிஸ்டெண்ட்டாக 10ம் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டால், முதலில் 8ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ.32,200 ஆக கருதப்பட்டு, பின் அவரது சம்பளம் பதவி உயர்வு அடிப்படையில் ரூ.33,100 நிர்ணயம் செய்யப்படும்.


 அதேபோல் ரூ.85,800 அடிப்படை சம்பளம் பெறும் அதிகாரி 26ம் நிலையில் இருந்து 29ம் நிலைக்கு பதவி உயர்வு பெறும் போது, அவருக்கு 26ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ,88,400 ஆக கருதப்படும். பின் பதவி உயர்வு அடிப்படையில் அவரது சம்பளம் ரூ.1,23,400 ஆக நிர்ணயம் செய்யப்படும். (ஆ) சம்பள உயர்வு தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம்: ரூ.31,300 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர் 8ம் நிலையில் இருந்து 10ம் நிலைக்கு பதவி உயர்வு செய்யப்படும்போது, பதவி உயர்வு நாளில் இருந்து அடுத்த சம்பள உயர்வு தேதி வரை அவரது சம்பளம் ரூ.33,200 ஆக கருதப்பட்டு பின் 34,100 ஆக நிர்ணயிக்கப்படும். இது குறித்து விரிவான பட்டியலை அரசுத்துறையின் அனைத்து செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது

10,+1,+2 வகுப்புகளின் இரண்டாம் இடைபபருவத்தேர்வு அட்டவணை

பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா

அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்சார்பில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறப்பாக படிக்கும், மீத்திறன் கொண்ட மாணவர்களை, ஊக்குவிக்கும் வகையில், கல்வி சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு, 100 பேர் வீதம், 3,200 பேர், வெளிமாநிலங்களுக்கு, இரண்டு நாட்கள் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர். இவர்களின் பயணச்செலவை, ரயில்வே துறை பொறுப்பேற்கிறது. தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவினங்களுக்கு, தலா 2,000 ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் கண்ணன் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே, கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் பள்ளிக்கு, தலா ஒரு மாணவர் வீதம், 100 பள்ளிகளில் இருந்து, 100 மாணவர்கள் செல்கின்றனர். '20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம்,ஐந்து பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக உடன் செல்கின்றனர். ''இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சுற்றுலா அழைத்து செல்ல, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைப்பதோடு, அறிவுசார் தேடல் விரிவடையும்,'' என்றார்.

வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை, சில தினங்களில் தீவிரம் அடையும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
அதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில், பருவ மழையால் எந்த விபத்தும், பள்ளி வளாகங்களில் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

அதன் விபரம்: அனைத்து பள்ளிகளிலும், கட்டடத்தின் உறுதியை சோதித்து கொள்ள வேண்டும். மழைநீர் ஒழுகும் கட்டடங்களை தவிர்க்க வேண்டும். பாழடைந்த கட்டடங்களை, அனுமதி பெற்று இடிக்க வேண்டும். மின் உபகரணங்களை ஆய்வு செய்து, மின் கசிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும். கீழே விழும் நிலையில், மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். பள்ளியில், அவசர தேவைக்கு, முதலுதவி மருந்துகள் வைத்திருப்பது அவசியம்.

பள்ளி அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் தொலைபேசி எண்களை, பள்ளி வளாகத்தில் எழுதி வைக்க வேண்டும்.

நீர்நிலைகளின் அருகில் செல்லவோ, அவற்றில் குளிக்கவோ கூடாது என, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம்

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ளஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,) ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் அக்.,1ல் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படும். இதன் அடிப்படையில் மாணவர் எண்ணிக்கைக்கு அதிகமான உபரி ஆசிரியர்கள், தேவை உள்ள வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவர். இதற்காக மாநில அளவில் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை என எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தற்போது கணக்கெடுக்கப்படும் உபரி ஆசிரியர்களை எந்த அடிப்படையில் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும்என தெளிவான வழிகாட்டுதல் இல்லை. மேலும் அந்தந்த சி.இ.ஓ.,க்களே ஆசிரியர் தேவை உள்ள மற்றொரு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுக முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை செயலாளர் முருகன் கூறியதாவது: அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாநில அளவில் 500க்கும் மேற்பட்டஆசிரியர்கள் உபரி என கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் வாரியாகஅதாவது அறிவியல், கலை, மொழி பாடங்கள் என்ற வரிசையில் முன்னுரிமை அடிப்படையில் உபரி ஆசிரியர் விவரம் தயாரிக்கப்பட்டு மாநில கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்யப்படுவர். ஆனால் உதவிபெறும் பள்ளிகளில் அவ்வாறு தெளிவான வழிகாட்டுதல் உத்தரவு இல்லை. பள்ளி நிர்வாகம் மற்றும் சி.இ.ஓ.,க்கள் பார்த்து அவர்களை ஆசிரியர் தேவை உள்ள எந்த பள்ளிக்கும் மாற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதனால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகள் போல் உதவிபெறும் பள்ளிக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும், என்றார்.

மாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி : தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, தமிழக அரசு மற்றும், 'ஸ்பீடு' நிறுவனத்திற்கிடையே, நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் முன்னிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், 'ஸ்பீடு' நிறுவனம் மேலாண் இயக்குனர், விநாயக் செந்தில் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கொள்கை முடிவு : பின், செங்கோட்டையன் கூறியதாவது: 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது, அரசின் கொள்கை முடிவு. எனினும், தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, போட்டித் தேர்வுகளை சந்திக்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். 'ஸ்பீடு' நிறுவன நிர்வாகிகள், இலவசமாக பயிற்சி அளிக்க முன்வந்தனர்.இந்நிறுவனத்தினர், ஆங்கிலம் மற்றும் தமிழில், பயிற்சி வகுப்பு நடத்த உள்ளனர். முதலில், 100 மையங்களில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும்.

 ஜனவரியில், 412 மையங்களில் பயிற்சி அளிக்கப் படும். ஒரு மையத்தில் இருந்து, அதை சுற்றி உள்ள பள்ளி மாணவர்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். அதேபோல், சிறந்த ஆசிரியர்களை, பாடவாரியாக தேர்வு செய்து, அவர்களுக்கு,போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி என, பயிற்சி அளிக்க உள்ளோம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மையங்களில், அவர்களுக்கு நான்கைந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.முதல்வருடன் கலந்தாலோசித்து, பயிற்சி வகுப்பு துவங்கும் தேதி அறிவிக்கப்படும். இது தவிர, 3,000 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்க உள்ளோம். பயிற்சி வகுப்பில் சேர, இதுவரை, 13 ஆயிரத்து 740 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவகாசம் : இந்த மாதம் இறுதி வரை, அவகாசம் வழங்கப்படும். குறைந்தபட்சம், 20 ஆயிரம் மாணவர்கள் இடம் பெறுவர். பயிற்சி நேரம் பற்றிய அட்டவணை, விரைவில் ெவளியிடப்படும்.ஸ்பீடு நிறுவனத்துடன், மூன்று ஆண்டு பயிற்சி அளிக்க, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரே மையத்தில் இருந்து, செயற்கைக்கோள் வழியே, அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, தனி அடையாள அட்டை வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

கையேடு வெளியீடு : அரசுப் பள்ளி மாணவ - மாணவியரை, போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய, 'ஸ்பீடு' நிறுவனம், வினா - விடை அடங்கிய புத்தகத்தை தயார் செய்துள்ளது. மொத்தம், 30 புத்தகங்கள், தயார் செய்யப்பட உள்ளன. முதல் புத்தகத்தை, அமைச்சர், செங்கோட்டையன் ெவளியிட்டார். மாணவ - மாணவியருக்கு, இலவசமாக வழங்கப் படும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் தெரிவித்தார்.

மனை வரன்முறை விதிமுறைகள் வெளியீடு :

தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனை வரன்முறை திட்டத்திற்கான, ஒருங்கிணைந்த விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 2016 அக்., 20 முன் உருவான அங்கீகாரமில்லா மனைகள், மனைப்பிரிவுகளை, வரன்முறை செய்வதற்கான அரசாணை, மே, 4ல் பிறப்பிக்கப்பட்டது.
இதை அமல்படுத்துவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. வரன்முறை திட்டத்தை முறையாக செயல்படுத்த, சில விதிமுறைகளை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, விதிமுறைகளை தளர்த்தவும், கட்டணங்களை குறைக்கவும், அக்., 12ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, அக்., 13ல் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், மே, 4 மற்றும் அக்., 13 அரசாணைகளை ஒருங்கிணைத்து, வரன்முறை அதிகாரிகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இதற்கிடையில், அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறை திட்டம், 2018 மே, 3 வரை நீட்டிக்கப்பட்டுளளது. இதற்கான அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஆனால், வரன்முறை திட்டத்துக்காக துவங்கப்பட்ட, tnlayoutreg.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் இல்லை. நவ., 3 கடைசி நாள் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ளது. அக்., 13ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையும் இல்லை.

ஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்

மொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நாடு முழுவதும், 100 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன.

இணைப்புகளை பெற்றுள்ளவர்கள் குறித்த தகவல்களைசேகரிக்கும் வகையில், ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதுவரை, 50 கோடி பேர், தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கு எளிமையான புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.ஆன் - லைனில் முன்பதிவு செய்தால், வீட்டுக்கே சென்று, ஆதார் எண்ணை இணைக்கும் வசதி செய்யப்பட உள்ளது. தங்களுடைய மொபைலில் இருந்தே, ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை ரகசிய குறியீட்டைப் பெற்று பதிவு செய்யும் வசதி போன்ற வசதிகள், செயல்படுத்தப்பட உள்ளன.

26/10/17

நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?



3000 ஆசிரியர்கள் ’நீட்’ தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ’நீட்’ நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,000 ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

 வழிகாட்டுதல்கள் பின், தமிழக மாணவர்களுக்கு, ’நீட்’ மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவு செய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார்.

 இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும். பதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும்.
வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம்.

பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், அறிவுறுத்தியுள்ளார். அனைத்து அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களின் ஊதியம், அடிப்படை கட்டமைப்பு செலவுகள், தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துதல் போன்ற வற்றுக்கு, மத்திய அரசின் சார்பில், நிதி உதவி வழங்கப்படுகிறது.

இதில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் செலவுகளுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியையும், அதற்கான திட்டங்களையும், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககம் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில், பள்ளியின் நிர்வாக பணிகள், அதற்காக பெற்ற நிதி, செலவு செய்த விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி செலவுக்கு, அரசிடமும், மற்ற அமைப்புகளிடமும் பெறப்பட்ட நிதியில், எந்த முறைகேடும் இல்லாமல், பள்ளி மேலாண்மை குழு கண்காணிக்க வேண்டும்.

பள்ளியை சுற்றிய குடியிருப்புகளில், பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை, பெற்றோருடன் பேசி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்"JACTO - GEO" வழக்கை விசாரிக்க மறுப்பு!!மதுரை கிளையில் அடுத்த வாரம் விசாரணை.


தமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல் :

தமிழகத்தில் பாட்திட்டம் மாறுவதால், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்று   பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து கொடையாக பெறும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை தேவநேயப்பாவாணர் மைய நூலகத்தில் நேற்று நடந்தது.
முன்னதாக இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து ரூ.1 லட்சம் மதிப்பு புத்தகங்களை வழங்கினார். சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கும் நூல்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது: 
பதிப்பகங்கள் மூலமாகவும், சிறந்த கல்வியாளர்கள், சிறந்த நூல்களை சேகரித்து கல்வி கற்றுத் தரும் பல்வேறு நிறுவனங்கள், அரிய நூல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் இருந்து நூல்கள், ஆவணங்களை பெற்று, உலகத் தமிழர்களுக்கு வழங்கும்  திட்டம் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. 
தமிழகத்தில் உள்ள பதிப்பாளர்கள் கல்வியாளர்களிடம் இருந்து  பெற்று டிஜிட்டல் முறையில் சரி செய்து நூல்களை வழங்கும் திட்டத்தின் தொடக்கமாக முதல்வரிடம் சிறந்த நூல்களை பெற்றுள்ளேன். அதற்கு பிறகு இந்த தொடக்க விழா நடக்கிறது. தமிழகத்தில் அரிய நூல்கள் சுமார் 3 லட்சம் அளவில் பெற உள்ளோம். அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதால் ஆசிரியர்கள் அவற்றை எளிதாக கையாளும் வகையில்  எதிர்காலத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். 
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ப்பதற்கான  இலக்கு என்று பார்த்தால் தமிழகத்தில் 6 ஆயிரம் பேர் முதல் 7 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லா மாநிலத்திலும் 15 சதவீதம் இடம் உள்ளது. எதிர் காலத்தில் அதை இந்த அரசு உருவாக்கும்.  இவ்வாறு அவர்  தெரிவித்தார். 
வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழாசிரியர்கள்: விழாவில் அமைச்சர் பேசும்போது, மலேசியாவின் கல்வி அமைச்சர் இங்கு  வந்தபோது சிறந்த தமிழாசிரியர்கள் தேவையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.  அதேபோல பல நாடுகளில்இருந்தும் தமிழாசிரியர்கள் வேண்டும் என்று  கேட்டுள்ளனர். அதற்காக தமிழாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்ப ஏற்பாடு  செய்யப்படும் என்றார்.
ஆந்திராவில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், பயிற்சி மையங்களில் சேர விரும்பும்  மாணவர்களின் பட்டியல் பெறச் சொல்லியுள்ளோம். போட்டித் தேர்வு பயிற்சி மையம்,  தொடர்பாக தகவல்கள் தாமதமானால், மாணவர் சேர்க்கைக்கு எவ்வளவு நாள்  வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். 
அடுத்த வாரம் வரையும் காலம்  நீட்டிக்கப்படும். அவர்களுக்கு  அடுத்த வாரம்  அடையாள அட்டை வழங்கப்படும். நவம்பர்  இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி பணிகள் தொடங்கும். இதற்காக ஆந்திரா  சென்று 54 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். அவர்கள் நாளை  மறுதினம் முதல் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று கூறினார்.

அரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க அறிவுறுத்தல்

'அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களின் ஊதியம், அடிப்படை கட்டமைப்பு செலவுகள், தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துதல் போன்ற வற்றுக்கு, மத்திய அரசின் சார்பில், நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் செலவுகளுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியையும், அதற்கான திட்டங்களையும், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில், பள்ளியின் நிர்வாக பணிகள், அதற்காக பெற்ற நிதி, செலவு செய்த விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி செலவுக்கு, அரசிடமும், மற்ற அமைப்புகளிடமும் பெறப்பட்ட நிதியில், எந்த முறைகேடும் இல்லாமல், பள்ளி மேலாண்மை குழு கண்காணிக்க வேண்டும். 
பள்ளியை சுற்றிய குடியிருப்புகளில், பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை, பெற்றோருடன் பேசி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது. 

ஆரம்பத்தில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம் செய்தன. அதன்படி கடந்த 15-11-2011 அன்று அரசாணை 181 உருவாக்கம் பெற்றது. ஆனால் அதை தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த பல மாதங்கள் ஆனது.

இந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET நிபந்தனைகள் அப்போது இல்லை.

ஆனால் அதன் பின்னர் அதே ஆசிரியர்கள் அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல் கட்டாயத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்று வரை ஊதியம் மட்டுமே தரவும், மற்ற பணிப்பயன்கள் மறுக்கப்பட்ட நிலையிலும் இந்த நிபந்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக இருந்த இந்த வகை TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பல்வேறு வகைகளில் TETலிருந்து முழுவதும் விலக்கு கிடைத்தது.

தற்போது அரசாணை 181 & 90  போன்றவற்றைத் தாண்டி, சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு தரப்பட்ட சூழலில் 15-11-2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TET எழுத கட்டாயம் என்பதற்கு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை கொடுத்து உத்தரவிட்டது.

ஆயினும் கடந்த மாதம் வெளிவந்த பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் அடிப்படையில் பார்க்கையில் 23-08-2010 பின்னர் பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் TET கட்டாயம் என்பது மீண்டும் வலியுறுத்தி உள்ளது தெளிவாகிறது.

இதனிடையே சுமார் 500 க்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு மற்றும் பணிப்பாதுகாப்பு வேண்டி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடந்து உள்ளனர்.

24-10-17ல் வந்த இந்த வழக்குகளின் அடுத்த கட்ட வாதம் வரும் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குழப்பங்கள் நிகழும் இந்த வகை TNTET நிபந்தனை ஆசிரியர்களின் நீதிமன்ற வழக்குகளுக்கான தீர்வு அல்லது வாபஸ் சார்ந்த நெறிகள் விரைவில் வர வேண்டுமாகில் தமிழக அரசின் கல்வித் துறையின் கருணைப் பார்வைபட்டால் மட்டுமே  யாருக்கும் பாதிப்பு இல்லாத நல்ல தீர்வு ஏற்படும் என்பதே உண்மை.

23-08-2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு TNTET லிருந்து முழு விலக்கு கொடுத்து பணிப் பாதுகாப்பு தந்து  விரைந்து அரசாணை வெளிவிட்டு  இந்த வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் இன்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது. 
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப்பின் பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை நிர்ணயிக்க புதிய குழு ஒன்றை தமிழக அரசு நிர்ணயித்தது. அந்தக் குழு ‘பே மேட்ரிக்ஸ்’ முறைப்படி 2 விதமாக சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறையை பரிந்துரை செய்துள்ளது.

ஒன்று பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பளம் உயர்வு. மற்றொன்று முதலில் வகித்த பதவியில் சம்பள உயர்வு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம். இந்த இரண்டில் எந்த முறை என்பதை அரசு ஊழியர்களே தேர்வு செய்து கொள்ளலாம். (அ) பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடும் முறை:

ரூ.31, 300 அடிப்படை சம்பளம் பெறும் ஜூனியர் அசிஸ்டெண்ட் 8ம் நிலையில் இருந்து, அசிஸ்டெண்ட்டாக 10ம் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டால், முதலில் 8ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ.32,200 ஆக கருதப்பட்டு, பின் அவரது சம்பளம் பதவி உயர்வு அடிப்படையில் ரூ.33,100 நிர்ணயம் செய்யப்படும்.

 அதேபோல் ரூ.85,800 அடிப்படை சம்பளம் பெறும் அதிகாரி 26ம் நிலையில் இருந்து 29ம் நிலைக்கு பதவி உயர்வு பெறும் போது, அவருக்கு 26ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ,88,400 ஆக கருதப்படும். பின் பதவி உயர்வு அடிப்படையில் அவரது சம்பளம் ரூ.1,23,400 ஆக நிர்ணயம் செய்யப்படும். (ஆ) சம்பள உயர்வு தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம்: ரூ.31,300 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர் 8ம் நிலையில் இருந்து 10ம் நிலைக்கு பதவி உயர்வு செய்யப்படும்போது, பதவி உயர்வு நாளில் இருந்து அடுத்த சம்பள உயர்வு தேதி வரை அவரது சம்பளம் ரூ.33,200 ஆக கருதப்பட்டு பின் 34,100 ஆக நிர்ணயிக்கப்படும். இது குறித்து விரிவான பட்டியலை அரசுத்துறையின் அனைத்து செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.