யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/11/17

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு!!!

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் 
கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.

அரசு அலுவலர்களுக்கு தமிழில் எழுத பயிற்சி நவ.9ல் துவக்கம்!!!

திண்டுக்கல், நவ. 2: அரசு அலுவலர்கள் ஆவணங்களை தமிழில்
கையாள்வதற்கான பயிற்சி திண்டுக்கல்லில் வரும் 9ம் தேதி துவங்க உள்ளது.
அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், ஆவணங்களை தமிழிலேயே கையாளும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கான பயிலரங்கம் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் இந்த பயிலரங்கம் நடைபெறும். இதில் தமிழ் வளர்ச்சித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

தமிழில் பதிவேடுகளை கையாளும் விதம், ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைக்கான சரியான தமிழ் வார்த்தைகள், தமிழுக்கான அரசாணை, அலுவல் விதிமுறை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இதில் விளக்கப்படும். இதற்காக ஒவ்வொரு துறை அலுவலகத்தில் இருந்தும் அலுவலர் அல்லது கண்காணிப்பாளர் நிலையில் ஒருவரும், உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் நிலையில் ஒருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி உதவிஇயக்குநர் சந்திரா கேட்டுக் கொண்டுள்ளார்.

கனமழை காரணமாக அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் 
ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை இடிமின்னலுடன் விடியவிடிய பெய்தது. இதனால் சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் பஸ், கார், ஆட்டோ போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு: முதலிடத்தில் இந்தியா!!!

                                                  
புதுடில்லி: உலகளவில், ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில், இந்தியா 
முதலிடத்தில் உள்ளதாக, தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

'அசோசெம்'

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப் பான, 'அசோசெம்' மற்றும் லண்டனைச் சேர்ந்த,
தனியார் அமைப்பு இணைந்து, உலகம் முழுவதும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டன.

அதன் விபரம்:கடந்த, 2005 - 15 வரை, பச்சிளம் குழந்தைகள்மற்றும், 5 வயதுக்குட்பட்ட குழந்தை களிடம் நடத்திய ஆய்வில், இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து உள்ளது.

50 சதவீதம்

உலகளவில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை கள் எண்ணிக்கையில், 50 சதவீதம் இந்தியாவில் உள்ளது. 2015ல், இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. நகரங்களில் வசிக்கும் குழந்தைகளை விட, கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தான், ஊட்டச்சத்து விஷயத்தில் பின்தங்கி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியவர்களை பொறுத்தவரை, நீரிழிவு எனும் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில், உலகின் தலைநகர் எனக் கூறும் வகையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.'நாடு முழுவதும், 6.92 கோடி பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்' என, கூறபட்டுள்ளது.

அலட்சிய ஊழியர்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்தால்...'டிஸ்மிஸ்'

                                               
மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை,
மின் வாரியம், 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்துள்ளது.புதிய மின் இணைப்புக்கு லஞ்சம், பணியில் அலட்சியம் உள்ளிட்ட, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, மின் வாரியம், இடமாறுதல், 'சஸ்பெண்ட்' ஆகிய நடவடிக்கைகளை எடுக்கிறது. சஸ்பெண்ட் செய்யும் நபர், அரசியல் சிபாரிசுடன், சில தினங்களில், மீண்டும் பணியில் சேர்ந்து விடுகிறார். இதனால், நடவடிக்கை என்பது, கண்துடைப்பு நாடகமாக இருப்பதாக, மக்கள் கருதுகின்றனர்.

சென்னை, கொடுங்கையூரில், நேற்று முன்தினம் நடந்த மின் விபத்தில் சிக்கி,


இரு சிறுமியர் உயிரிழந்தது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.அதற்கு காரணமான, மூன்று பொறியாளர்கள், ஐந்து ஊழியர்களை, மின் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. இதற்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து, 'டிஸ்மிஸ்' செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சென்னை, தலைமை செயலகத்தில், கொடுங்கையூர் மின் விபத்து தொடர்பாக, மின் துறை அமைச்சர், தங்கமணி மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன், நேற்று, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை, 'டிஸ்மிஸ்' செய்ய, மின் வாரியத்திற்கு, அரசு தரப்பில் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான், தவறுகள் குறையும். ஆனால், மின் வாரியத் தில், சஸ்பெண்ட் செய்யும் நபர், ஆட்சியாளர் களின் உதவியுடன், இரு தினங்களில்
வேலைக்கு வந்து விடுகிறார். அந்த விபரம், பலருக்கு தெரியாது.இதனால், வழக்கம்போல் பலர் அலட்சியமாக உள்ளனர். இதனால், வாரியத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட காரணமாகும் பொறியாளர், ஊழியர்கள் மீது, உச்சபட்ச தண்டனையாக, 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்:

சென்னை, கொடுங்கையூரில், மழைநீரில் மின் வினியோக பெட்டி மூழ்கி இருந்தது. அதில் ஏற்பட்ட மின் கசிவால், மழைநீரில் மின்சாரம் பாய்ந்தது. இது தெரியாமல், மழைநீரில் நடந்து சென்ற, பாவனா மற்றும் யுவஸ்ரீ என்ற சிறுமியர், மின்சாரம் தாக்கி, பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்த சம்பவம் குறித்து, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர், ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார்.

இதையடுத்து, 'அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. அதற்கு, சிறப்பு பிளீடர், ராஜகோபாலன், ''மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என, 8 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். பலியான சிறுமியரின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்படுகிறது,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது உட்பட, சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணை, இன்றும் தொடர்கிறது.

எஸ்.பி.ஐ., கடன் – டிபாசிட் வட்டி குறைப்பு!!!

புதுடில்லி : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப்
இந்­தியா, வீடு மற்­றும் வாகன கடன்­க­ளுக்­கான வட்­டியை, 0.5 சத­வீ­தம் குறைத்­துள்­ளது. அதே சம­யம், பல்­வேறு, ‘டிபா­சிட்’களுக்­கான வட்டி, 0.25 சத­வீ­தம் குறைக்­கப்­பட்டு உள்­ளது.

கட­னுக்­கான வட்டி:
இவ்­வங்­கி­யின் வீட்­டு­வ­சதி கட­னுக்­கான வட்டி, 8.30 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. வாகன கட­னுக்­கான வட்டி, 8.70 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. இவ்­வங்­கி­யில் தான், வீட்­டு­வ­சதி கட­னுக்­கான வட்டி, மிகக் குறை­வாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. மாத ஊதி­யம் பெறு­வோ­ருக்கு, 30 லட்­சம் ரூபாய் வரை­யி­லான வீட்­டு­வ­சதி கடன், 8.30 சத­வீத வட்­டி­யில் கிடைக்­கும். கார் கட­னுக்­கான வட்டி, 8.75 – 9.25 சத­வீ­த­மாக இருந்­தது. இது, தற்­போது, 8.70 – 9.20 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது.
‘வாடிக்­கை­யா­ள­ரின் கடன் தகுதி, கடன் வரம்பு உள்­ளிட்ட அம்­சங்­களை பொறுத்து, வட்டி விகி­தம் இருக்­கும்’ என, எஸ்.பி.ஐ., வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

‘டிபாசிட்’
குறைக்­கப்­பட்ட புதிய வட்டி விகி­தம், நவ., 1 முதல் அம­லுக்கு வந்­துள்­ள­தாக, இவ்­வங்கி தெரி­வித்­துள்­ளது. எஸ்.பி.ஐ., பல்­வேறு, ‘டிபா­சிட்’களுக்­கான வட்­டியை, 0.25 சத­வீ­தம் குறைத்­துள்­ளது. இதன்­படி, ஓராண்டு, ‘டிபா­சிட்’டிற்கு வழங்­கப்­பட்டு வந்த, 6.50 சத­வீத வட்டி, தற்­போது, 6.25 சத­வீ­த­மாக குறைத்து நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. அது போல, மூத்த குடி­ம­கன்­களின், ‘டிபா­சிட்’களுக்கு வழங்­கப்­பட்டு வந்த வட்டி, 7 சத­வீ­தத்­தில் இருந்து, 6.75 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. ‘டிபா­சிட்’களுக்­கான வட்டி குறைப்பு, நவ., 1 முதல், அம­லுக்கு வந்­துள்­ளது.

சென்னையில் மழை வெளுத்து வாங்கும் - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை

                                                    

                                    
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் 
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.  
சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேர், கோவிளம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமம்பட்டனர்.  
இந்நிலையில், நேற்று போல் இன்றும் மாலை நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை நீடிக்கும் எனவும்,பகல் நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் எனவும் அந்த வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு!!!

                              

காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!!

                                           
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை
உருவாகியுள்ளதால், தமிழகத்தில் அடுத்த இரு நாள்களுக்கு மழை நீடிக்கும்.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதையொட்டி வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
மழை நீடிக்கும்: அடுத்துவரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை இருக்கும். புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை இருக்கும். தற்போதைய நிலையில், இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும். சென்னையைப் பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மீனவர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே பகுதியில் இரு நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், செங்கல்பட்டு, பூந்தமல்லி பகுதிகளில் 40 மி.மீ. மழை பெய்துள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 130 மி.மீ. பதிவாகியுள்ளது. பிற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீல்): திருச்செந்தூர்- 90, சிதம்பரம், சேரன் மகாதேவி, வேதாரண்யம்- 70, தரங்கம்பாடி, ஒட்டப்பிடாரம், காரைக்கால்- 60, பரங்கிப்பேட்டை, மகாலிங்கபுரம், சீர்காழி, ராதாபுரம்- 50. .

NTSE EXam to be held on 4-11-2017 has been postpond to 18-11-2017 due to heavy rain.

Epayroll ready for fixation for New Pay Revision

புதிய ஊதியம் சார்ந்து E pay roll பெறப்பட்டு
விட்டது. Employe code  (gpf )or (cps) கொடுத்தால் எல்லாம் வரும் அதில்
நீங்கள் தயாராக உள்ள grade pay கொடுத்து option date கொடுத்தால் பதிய ஊதியம் வரும்
                                     
                                       

2/11/17

வீட்டு சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிரடி உயர்வு!!!

                                            
வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் 
புதன்கிழமை (நவ.1) முதல் ரூ.93.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்போது இதன் விலை ரூ.750-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு புதன்கிழமை (நவ.1) முதல் பதிவு செய்வோருக்கு ரூ.750-க்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.479.11-லிருந்து ரூ.483.69-ஆக, அதாவது ரூ.4.58 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



வங்கிக் கணக்கில் எவ்வளவு?
வீட்டு உபயோகத்துக்கு மானியம் அல்லாத சிலிண்டரை புதன்கிழமை (நவ.1) முதல் பதிவு செய்து ரூ.750-க்கு வாங்கும் நுகர்வோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.266.31 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவ.,5 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!!

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: மன்னார் வளைகுடா அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 5 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழை:

இதனிடையே சென்னையில் கொளத்தூர், சவுகார்ப்பேட்டை, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, சேத்துப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.

கணினி ஆசிரியர் நியமனம் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - CM CELL REPLY

                                            

பழுதடைந்த பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!




ஆதார் இல்லாமல் ஐ.டி. ரிட்டன் செலுத்தலாம்!

வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம் 139AA-இன் படி, வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைக் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்படாமல் அல்லது விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் தெரிவிக்கப்படாமல் இருந்தால் அது செல்லாததாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு ஆதாரைக் கட்டாயமாக்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 31) சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல என்று மனுதாரர் ஒருவருக்கு அனுமதியளித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பிரீத்தி மோகன் என்ற பெண் தனது வழக்கறிஞர் சுரித் பார்த்தசாரதி உதவியுடன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ஆதார் எண் இல்லாதவர்கள் வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யும்போது ஆதாரை எண்ணை இணைக்க இயலாது; எனவே அந்தக் கட்டுப்பாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அவர் வருமான வரி ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கு ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல என்று செவ்வாய்க்கிழமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தீர்ப்பளித்துள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் 4ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தில் பிரசாந்த் சுகதன் என்பவர் தொடுத்த வழக்கில் அவர் வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயமல்ல என்று உத்தரவிடப்பட்டது. அதற்கு முன்னர் ஜூன் 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் பினாய் விஸ்வான் என்பவர் தொடுத்த வழக்கில் அவரது வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

100நாள் தொழிலாளரின் வருகை கம்ப்யூட்டரில் பதிவு!!!

                                    

விபத்து இழப்பீடு : புதிய விதிமுறைகள்!!!

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு
இழப்பீடு வழங்கப் பின்பற்றுவதற்கான புதிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் நேற்று(அக்டோபர் 31) வகுத்துள்ளது.

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதில், சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படும்போது, அதற்கான இழப்பீடுகளை வழங்கும்போது,உயிரிழந்தவரின் எதிர்கால வருமானம் கணக்கிடுவது தொடர்பாக 27 பேர் தொடுத்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

இழப்பீடு வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்து வழங்கியுள்ளது. அதில், இறந்தவர் தனியார் அல்லது அமைப்பு சாரா நிறுவனங்களில், நிரந்தரப் பணியாளராக இருந்து , 40 வயதுக்குள் இறந்தால், அவருடைய சம்பளத்துடன், 50 சதவிகிதம் கூடுதல் தொகையை, எதிர்கால வருவாயாகக் கணக்கிட வேண்டும்.

அதுபோன்று, 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு, 30 சதவிகிதமாகவும், 50 முதல் 60 வயதுள்ளவர்களுக்கு 15 சதவிகிதமாகவும், எதிர்கால வருவாயைக் கணக்கிட வேண்டும். இறந்தவர், சுய தொழில் அல்லது தொகுப்பூதியம் பெறுபவராக இருந்தால், 40 வயதுள்ளவர்களுக்கு 40 சதவிகிதம் எதிர்கால வருவாயாகக் கணக்கிட வேண்டும். இது 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு 25 சதவிகிதமாகவும், 50 முதல் 60 வயதுள்ளவர்களுக்கு , 10 சதவிகிதமாகவும் கணக்கிட வேண்டும்.

இழப்பீடு மற்றும் இறுதி சடங்குகளுக்கான தொகையை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, 10 சதவிகிதம் உயர்த்திக் கணக்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கந்து வட்டி: தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!!!

கந்து வட்டிக்கு எதிரான வழக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர்
பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு தீக்குளித்து உயிரிழந்தது. இதையடுத்து கந்து வட்டிக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் கந்து வட்டி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கனகவேல் என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “அரசிடம் அனுமதி பெறாமல் வட்டிக்குக் கடன் வழங்குவதைத் தடுக்க வேண்டும். கடனுக்கு எத்தனை சதவிகிதம் வட்டி வசூலிக்கலாம் என்பதையும் அரசே நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். கந்து வட்டி புகாரை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (நவம்பர் 1) நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “கந்து வட்டி வசூலிப்பது தொடர்பான புகார்களை விசாரிக்கத் தனிக் குழு அமைப்பது குறித்துத் தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

முன்னதாக கந்து வட்டிக் கொடுமையால் நான்கு பேர் தீக்குளித்தது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலை., தேர்வுகள் (நவ.,2) நடைபெறும்!!!

                                                  
அண்ணா பல்கலை., தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை
(நவ.,2)நடைபெறும் என பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.