யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/11/17

அரசு அலுவலர்களுக்கு தமிழில் எழுத பயிற்சி நவ.9ல் துவக்கம்!!!

திண்டுக்கல், நவ. 2: அரசு அலுவலர்கள் ஆவணங்களை தமிழில்
கையாள்வதற்கான பயிற்சி திண்டுக்கல்லில் வரும் 9ம் தேதி துவங்க உள்ளது.
அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், ஆவணங்களை தமிழிலேயே கையாளும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கான பயிலரங்கம் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் இந்த பயிலரங்கம் நடைபெறும். இதில் தமிழ் வளர்ச்சித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

தமிழில் பதிவேடுகளை கையாளும் விதம், ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைக்கான சரியான தமிழ் வார்த்தைகள், தமிழுக்கான அரசாணை, அலுவல் விதிமுறை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இதில் விளக்கப்படும். இதற்காக ஒவ்வொரு துறை அலுவலகத்தில் இருந்தும் அலுவலர் அல்லது கண்காணிப்பாளர் நிலையில் ஒருவரும், உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் நிலையில் ஒருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி உதவிஇயக்குநர் சந்திரா கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக