கேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்படி?
கேஸ் இணைப்பில் பெயர் மாற்றுவது மிகவும் எளிது.
கேஸ் யாருடைய பெயரில் உள்ளதோ அவர் ஆணாக இருப்பின் அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேபனை இல்லாத சான்று ஒன்றும், இதே அவர் திருமணமான பெண்ணாக இருந்தால், அந்த மகளிடமும், அவரது கணவரிடம் என இருவரிடமிருந்தும் உங்கள் பெயருக்கு மாற்ற ஆட்சேபனை இல்லாத சான்று தனித் தனியாக பெறவேண்டும்.
வாங்கிய இந்த சான்றினை, உங்கள் குடும்ப அட்டையின் நகலுடன் சேர்த்து உங்கள் கேஸ் இணைப்பு உள்ள அலுவலகத்தில் தரவேண்டும்.
அதன்பிறகு விநியோகஸ்தர் அலுவலகத்தில் உள்ளவர், உங்களுடைய பெயர் அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர் பெயரில் வேறு ஏதாவது கேஸ் இணைப்பு உள் ளதா என்பதை நேரில் ஆய்வு செய்வார்கள்.
இதில் எந்தப் பிரச்னையும் இல்லை யென்றால் கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றித்தருவார் கள். இக்காலகட்டத்தில் உங்களுக்கு கேஸ் விநியோகம் செய்யப்பட மாட்டார்கள்.
ஒரு வேளை இணைப்பு யாருடைய பெயரில் வாங்கினீர்களோ அவர் இறந்து விட்டால், அவரது இறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் வாரிசுச் சான்றிதழின் நகல் ஆகிய இரண்டையும் கேஸ் இணைப்பு தரும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இது இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து அளிக்கப்பட்ட பதில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக