யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/11/17

ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கு வரும் ?எப்போது வரும்?

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.

இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகளான மதிப்புமிகு சசிதரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளார். ( உயர் நீதிமன்ற விதிப்படி மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிபதிகள் இடமாறுதல்) மற்றும் நீதியரசர் திரு. சுவாமிநாதன் அவர்கள் தற்போதும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கினை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. நீதியரசர் திரு.ஜி.ஆர்.சவாமி நாதன் சென்னை நீதிமன்றத்திற்கு வரும் தேதி தெரிந்தவுடன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் அநேகமாக இந்த வார இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள ஜாக்டோ ஜியோவின் மூத்த வழக்கறிஞர் அவர்கள் வழக்கை விரைந்து கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக