யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/17

பொறுமையே பெருமை

மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்

மனித உடம்பின் 99 இரகசியங்கள்

மரத்தின் பயன்

மாபெரும் விஞ்ஞானி கலிலியோ

முன்பொரு காலத்தில்

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!

யாருடனும் ஒப்பிட வேண்டாம்

யாரும் ஏழை இல்லை

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது

வாழைப்பழத் தோலின் பயன்கள்

வாழ்வே ஒரு போராட்டம் தான்

வீட்டுக்கு ஒரு பப்பாளி

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை

ஹீமோகுளோபினை

13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

கடலோரத்தில் உள்ள, 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.வட கிழக்கு பருவமழை குறித்து, நேற்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் அளித்த பேட்டி:

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டி, இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. அதனால், மாநிலம் முழுவதும் மழை தொடரும். வரும், 24 மணிநேரத்தில், அதாவது, சனிக்கிழமை காலை, 8:3௦ மணி வரை, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில், சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில், மிக கனமழைபெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், கடலோர பகுதிகளில், சில இடங்களில் கன மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

PP 750ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்யபடாது - விளக்கம்

ஊதிய குழு அரசாணை 303, பக்கம் 4 ல் S.No. 14 - இல் PP 750 ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்ய படாது என குறிப்பிடப்பட்டுள்ளது .
வ.எ.14 ல் Junior Assistants/Accountants க்கு PP 60 shall be absorbed while fixing the pay in the revised pay structure என உள்ளது.

எனவே அவர்களுக்கு PP 60 அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
அதற்காகவே IF PP IS eligible for Revision add with Basic pay என உள்ளது.
இந்த PP 60 ஐ குறிப்பிட்டு வ.எ.14 ல் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பொதுவாக PP ஐ பக்கம் 9 ல் 3(i) existing basic pay means என குறிப்பிடும்போது மற்றும் 3(viii) ல் basic pay in the revised pay structure means என குறிப்பிட்டு விளக்கியுள்ளதிலும் கணக்கில் கொள்ளப்படாததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது PP 750 ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைக்க குறிப்பிட்டு ஆணை வந்தால்தான் இணைத்திட முடியும்.
Epay roll ல் குறிப்பிடப்பட்ட்டுள்ளது இந்த PP 60 என்பதே ஆகும்.

 அதனையே if possible என குறிப்பிட்டுள்ளது
( பக்கம் 4 ல் PP 60 possible என்பதற்கான விளக்கம் உள்ளது )

4/11/17

கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடம் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிக்கல்....

வி.ஏ.ஓ., தனி தேர்வு இல்லை முடிவுக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு

காரைக்குடி: வி.ஏ.ஓ., பதவிக்கு தனித்தேர்வு இல்லை என்ற டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்புக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அச்சங்க சங்க மாநில பொது செயலாளர் 
செல்வம் கூறியது: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வி.ஏ.ஓ., பதவிக்கு தனியாக தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் வி.ஏ.ஓ., பதவியில் பராமரிக்கப்படும் கிராம கணக்குகளும் நடைமுறைகளும் என்ற தலைப்பில் 25 கேள்விகள் கேட்கப்படும். தற்போதைய அறிவிப்பில் இந்த கேள்விகள் இடம்பெறாது.
10-ம் வகுப்பையே கல்வி தகுதியாக கொண்டு இரண்டு தேர்வையும் இணைத்து நடத்துவது வி.ஏ.ஓ.,க்களை மேன்மைபடுத்துவதற்கு பதில் குறைக்கும் செயல். குரூப் 4 தேர்வுக்கு 18 வயது நிரம்பினால் போதும். ஆனால், வி.ஏ.ஓ.,வுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். மண்ணையும் மனிதனையும் அடையாளம் காட்டும் அடிப்படை அலுவலராக வி.ஏ.ஓ., உள்ளார். பொதுமக்களிடம் நேரடி தொடர்புள்ள பதவிக்கு 21 வயது என்பது தான் சரியாக இருக்கும். அதை விடுத்து 18 வயது என அரசு நிர்ணயம் செய்திருப்பது, வயதுக்கு மீறிய பதவியில் அமர்த்தும் செயலாகும்.
வி.ஏ.ஓ.,வுக்கு தனி தேர்வு நடத்தினால் 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஒவ்வொரு நபரும் விண்ணப்ப 
கட்டணம் தனியாக செலுத்துகின்றனர். அதன் மூலமே தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இத்தேர்வினால் அரசுக்கு ரூ.15 கோடி செலவாகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது. இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலருக்கும் 10-ம் வகுப்பு தான் கல்வி தகுதி. எனவே அதையும் சேர்த்து நடத்தலாம். இப்படி அனைத்தையும் சேர்த்து தேர்வு வைத்தால் செலவு மிச்சமாகி கொண்டே போகும், தரம் தாழ்ந்து விடும்.
அரசுக்கு 15 கோடி செலவு தான் பிரச்னை என்றால், இதற்கான கல்வி தகுதியை பட்டப்படிப்பாக்கி சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கு நடத்தப்படும் சி.எஸ்.எஸ்.இ.,-2 தொகுதி 2-ல் நேர்முகத்தேர்வு அல்லாத தேர்வாக நடத்தலாம். வி.ஏ.ஓ.,வாக இருப்பவர்கள் 98 சதவீதம் பேர் பட்டதாரிகள் தான்.
எனவே, டி.என்.பி.எஸ்.சி., எடுத்துள்ள வி.ஏ.ஓ., மற்றும் குரூப் 4 ஆகியவற்றை இணைத்து தேர்வு நடத்தும் முறையை கைவிட வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்

சென்னை: இன்று நடக்கவிருந்த, தேசிய திறனாய்வு தேர்வு, நவ., ௧௮க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதற்கட்ட தேசிய திறனாய்வு தேர்வு, தமிழகம் முழுவதும், இன்று நடப்பதாக இருந்தது. மழை வெள்ளத்தால், பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று நடக்கவிருந்த தேசிய திறனாய்வு தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு, நவ., ௧௮ல் நடத்தப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.