யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/17

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

சென்னை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பணி மூப்பு, அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படும். அனுபவம் பெற்ற, தகுதியான தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவு அறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.

'நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது.

நெட்' தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள்,பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது. 

தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது. 

பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமை யான பேராசிரியர்களை

தேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை, யு.ஜி.சி., மாற்ற உள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.- நமது நிருபர் -

வரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் திடீர் சிக்கல்

நாமக்கல்: வரலாறு காணாத விலை உயர்வால், தமிழகம் முழுவதும் சத்துணவுக்கு முட்டை வினியோகிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சத்துணவுக்கு முட்டை வழங்க பண்ணையாளர்கள் மறுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வாரம் 5 முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு வாரம்தோறும் 2.50 கோடி முட்டைகளை கொள்முதல் செய்கிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம், பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக, இந்த நிறுவனம் நாமக்கல்லில் உள்ள பெரிய கோழிப்பண்ணையாளர்களுக்கு, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை பிரித்து கொடுத்து, முட்டை சப்ளை செய்தது.

கோழிப்பண்ணையாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் வாகனங்களை ஏற்பாடு செய்து, பள்ளிகளுக்கு நேரடியாக முட்டை சப்ளை செய்து வந்தனர்.
சத்துணவு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வதில் பண்ணையாளர்களுக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. இந்த ஆண்டு தனியார் நிறுவனம், நேரடியாக பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்ய முடிவு செய்து, பண்ணையாளர்கள் குறிப்பிட்ட குடோன்களில் மட்டும் முட்டையை இறக்கி வைத்தால் போதும் என கூறியது. இது தொடர்பாக தனியார் நிறுவனத்தினருக்கும், பெரிய கோழிப்பண்ணையாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கு பெரிய பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தனியார் நிறுவனம் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. 

சிறிய பண்ணையாளர்கள் சிலரை வைத்துக்கொண்டு, சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்து வந்தது. கடந்த இரு மாதமாக பெரிய பண்ணையாளர்கள் யாரும் சத்துணவு முட்டையை தனியார் நிறுவனத்துக்கு சப்ளை செய்யவில்லை. இந்நிலையில், தற்போது முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், சத்துணவு முட்டை வினியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு வெளி மாநிலங்களில் அதிகளவில் டிமாண்ட் உள்ளதால், அங்கு அனுப்பவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 516 காசுகளாக உள்ளதால், அந்த விலையில் இருந்து 5 காசு அதிகமாக தான் வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் இருந்து முட்டையை வாங்கிச் செல்கின்றனர். கை மேல் உடனடி காசு கிடைப்பதால், பெரும்பாலான பண்ணையாளர்கள் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய மறுத்து வருகின்றனர். 

இது குறித்து சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய மறுத்துவிட்ட நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், ''எங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் முட்டைக்கு அடுத்த வாரம் வரை இப்போதே புக்கிங் செய்துள்ளனர். எனவே, சத்துணவுக்கு முட்டை சப்ளையை நிறுத்தி விட்டோம்'' என்றனர். இதன் காரணமாக, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்ய முடியாமல் தனியார் நிறுவனம் திணறி வருகிறது. வாரம் 5 முட்டை பள்ளிகளில் வழங்கப்படுவதால், அந்தந்த பி.டி.ஓ.க்களின் கண்காணிப்புபடி வாரத்துக்கு 2 முறை பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்யப்படும். தற்போது போதுமான முட்டை கிடைக்காததால், ஒவ்வொரு பள்ளிக்கும் குறைவாக தான், முட்டை சப்ளை செய்யப்படுகிறது. 

வழக்கமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களுக்கு தேவையான முட்டைகள், வெள்ளிக்கிழமை சத்துணவு மையங்களுக்கு சென்று விடும். இந்த வாரம், கோழிப்பண்ணையாளர்கள் அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கூட, வரும் திங்கட்கிழமைக்கு தேவையான முட்டைகள் நேற்று மாலை வரை சப்ளை செய்யப்படவில்லை.

குளறுபடி ஏன்?: முட்டை விலை, கடந்த 1ம் தேதி முதல் நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 1ம் தேதி 420 காசுகளாக இருந்த முட்டை விலை, 6ம் தேதி 441 காசுகளாக உயர்ந்தது. தற்போது, 516 காசுகளாக உள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்யும் டெண்டரை, தனியார் நிறுவனம் ஒரு முட்டைக்கு 443 காசுகளுக்கு எடுத்துள்ளது. இந்த விலையை விட தற்போது மார்க்கெட் விலை உயர்ந்துள்ளதால், தனியார் நிறுவனத்தால் குறைந்த விலைக்கு முட்டை வாங்க முடியவில்லை. மேலும், கடந்த காலங்களில் முட்டை சப்ளை செய்த பண்ணையாளர்களுக்கு பணம் பாக்கி உள்ளதால், அவர்களும் முட்டை கொடுக்க மறுத்து, விலை அதிகம் கிடைக்கும் இடத்தில் விற்பனை செய்கின்றனர். இதனால், சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டை வினியோகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை போல விலை உச்சவரம்பு வருமா?: மேற்கு வங்கத்திலும் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அங்கு கொள்முதல் விலை ரூ.5.52ஐ எட்டி விட்டது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் கால்நடை மேம்பாட்டு துறை, முட்டை விற்பனைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. அதில், இந்த மாநிலத்தில் தினசரி 2 கோடி முட்டைகள் தேவைப்படுகின்றன. ஆனால் சந்தைக்கு 1.75 கோடி முட்டைதான் சப்ளை செய்யப்படுகிறது. கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி முட்டை விலையை உயர்த்தக்கூடாது. ஒரு முட்டையின் விலை 6 ரூபாய்க்கு மேல் உயர்த்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்ணையாளர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. இதுபோல் தமிழகத்திலும் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நுகர்வோர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம்: ஆசிரியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாடு அதன் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயர்கல்விக்கு இந்த இரு வகுப்புகள் அடித்தளமாக இருக்கும். எனவே மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தவும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தவும் மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தனி இயக்குநரகம் அமைக்கப்பட வேண்டும். கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 
மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 நலத்திட்டங்களை செம்மைப்படுத்தவும், கற்றல்- கற்பித்தல் பணிகளை திறம்படச் செய்யவும் நலத்திட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
எட்டாவது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பொருளியல், வணிகவியல் காலிப்பணியிடங்கள் 100 சதவீதம் நேரடி நியமனம் மூலம் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கட்சியின் மாவட்ட 9ஆவது மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று, செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:
கட்சியின் மாநில மாநாடு வரும் பிப். 17, 18 ஆகிய 2 நாள்கள் தூத்துக்குடியிலும், அகில இந்திய 22ஆவது மாநாடு ஹைதராபாதில் ஏப்ரலிலும் நடைபெறவுள்ளன.
தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெüனம் காப்பது ஏன்? அது சட்ட விரோத மணல் என்றால் உரிய விசாரணை நடத்த வேண்டும். 
தமிழகத்தில் தரமான கல்வி இல்லை. அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுநரின் ஆய்வு என்பது இந்திய அரசியல் சட்டத்தை அத்துமீறும் செயல். சட்டம் என்ன உரிமை அளித்துள்ளதோ, அதை முறையாகப் பின்பற்ற வேண்டும். சட்ட உரிமை மீறலைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
தமிழகம், புதுச்சேரியில் ஆளுநரை வைத்து ஆய்வு செய்யும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்தில் ஏன் செய்யவில்லை?
சிறந்த முதல்வர்கள் இருந்த மாநிலம் தமிழகம். இப்போது அதன் பெருமை தாழ்ந்து வருகிறது என்றார் அவர்.

*SABL & ALM TIME TABLE*✍

SABL TIME TABLE🗣

8.50-9.10 CLEANING🗣

9.10-9 .30 PRAYER🗣


9.30-9.35 MEDITATION🗣

9.35-12.10 SUBJECT 1🗣
12.10-12.40 VALUE
 EDUCATION, YOGA ETC🗣

12.40-1.15 LUNCH
1.15-1.45 DICTATION, TV PROGRAMMES, ACTIVITIES etc.🗣

1.45-3.50 SUBJECT
 2🗣

3.50-4.10 COMPUTER, GAMES etc.🗣

4.10 CLASSROOM PRAYER.
(FRIDAY 3.10-4.10 CULTURALS
20MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15MIN PRAYER)🗣

ALM  Time table

8.50-9.10  CLEANING🗣

9.10-9 .25 PRAYER🗣

9.25-9.30 MEDITATION🗣

9.30-11.00 SUBJECT1🗣

11.00-12.30 PERIOD  2🗣

12.30-12.40 YOGA🗣

12.40-1.15 LUNCH🗣

1.15-1.45 ACTIVITIES🗣

1.45-3.15 PERIOD 3🗣

3.15-4.00  PERIOD 4

4.00-4.10 EVENING ACTIVITIES.
(FRIDAY 3.10-4.10 CULTURALS
 20MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15MIN PRAYER)

School prayer GO NO 335 .....

தமிழகத்தில் 1-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத் திட்ட வரைவு: முதல்வர் வெளியிட்டார்....!*

பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்*

*பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று ஜூலை 4 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது*


*புதிய பாடத்திட்ட வரைவு பள்ளிக்கல்வித்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது*

*www.tnscert.org என்ற இணையதளத்தில் புதிய பாடத்திட்ட வரைவை முதலமைச்சர் வெளிட்டார்*

*இணையதளத்தில் வரைவு பாடத்திட்டங்கள் பற்றி 15 நாளில் பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது*

*முதல் கட்டமாக இந்த ஆண்டு 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பாடதிட்டம் மாற்றம் செய்யப்படுகிறது*

*அதைத்தொடர்ந்து அடுத்தாண்டு 2,7,10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது*

DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு!!

SABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் - RTI பதில்கள்

                                               

இணையதள மின் கட்டண சேவை ரத்து!!!

சென்னை:மின் நுகர்வோர், மின் கட்டணத்தை, மின் வாரிய கட்டண மையங்கள், 
தபால் நிலையம், அரசு 'இ - சேவை' மையங்கள், குறிப்பிட்ட சில வங்கிகளில் ரொக்க பணம், காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம்.மின் வாரிய இணையதளம் மற்றும் மொபைல், 'ஆப்' எனப்படும், மொபைல் அப்ளிகேஷனிலும் கட்டணத்தை செலுத்த முடியும்.

இந்நிலையில், நேற்று இரவு, 10:00 முதல், இன்று மதியம், 3:00 மணி வரை, இணையதள மின் கட்டண சேவையை, பராமரிப்பு பணிக்காக, மின் வாரியம் நிறுத்தியுள்ளது. இந்த சமயத்தில், இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாது.

சுகாதாரமற்ற கழிப்பிட பயன்பாட்டில் இந்தியா... முதலிடம்!!!

                                        
கொச்சி:நாடு முழுவதும், 73 கோடி பேர், சுகாதாரமற்ற
இடங்களில், இயற்கை உபாதைகள் கழிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால், 35 கோடி பெண்கள், பாதுகாப்பற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வாட்டர் எய்டு' எனப்படும், சர்வதேச தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தனிநபர் சுகாதாரம் மற்றும் கழிப்பறை பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பல தகவல்கள் கிடைத்துள்ளன.உலக மக்கள் தொகையில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர்.

சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்போர் எண்ணிக்கையில், உலக அளவில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில், 73 கோடி பேர், சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். 35 கோடி பெண்கள், திறந்தவெளியில், சுகாதாரமற்ற முறையில், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இந்தியர்களில் பெரும்பாலானோர், முறையான கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை.

உலக மக்கள் தொகையில், முதலிடம் வகிக்கும் சீனா, சுகாதாரமற்ற கழிப்பறை பயன்பாட்டில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நாட்டில், 34 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா, இந்த பட்டியலில், மூன்றாம் இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும், 110 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். நீர் பற்றாக்குறை, குறைவான இட வசதி, மக்கள் நெருக்கடி போன்ற பல காரணங்களால் இந்த அவலம் நீடிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து கோடி கழிப்பறை

உலக அளவில், சுகாதாரமற்ற கழிப்பறைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், இந்தியா முதலிடம் வகிக்கும் நிலையில், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளின் பட்டியலிலும், இந்தியா முன்னிலை வகிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அக்., 2014 முதல், நவ., 2017 வரை, 5.2 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பல கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன. மிக விரைவில், நாடு முழுவதும் இந்த நிலையை ஏற்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சசி கும்பலின் தில்லாலங்கடிகளை போட்டுக் கொடுத்தது...'ஸ்லீப்பர் செல் '!

சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள்,
'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது' என்ற, பகீர் தகவலை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் குவித்த சொத்துகளின், அசல் ஆவணங்கள் அங்கு இருந்ததால், சோதனை என்ற தகவல் பரவியதும், பின்னங்கால் பிடரியில் பட, இளவரசியின் மகன் விவேக், அங்கு ஓடி வந்துள்ளார். ஜெயலலிதாவின் அறை உட்பட, சில அறைகளில் சோதனை நடத்தக் கூடாது என, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வருமான வரித்துறையினர் அடுத்து எங்கு, சோதனை நடத்தப் போகின்றனரோ என்ற கலக்கத்தில், சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் உள்ளன.
சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என, 215 இடங்களில் நவம்பர், 9ல், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஐந்து நாட்கள் தொடர்ந்த சோதனையின் முடிவில், முதற்கட்டமாக, 1,430 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடந்தது கண்டறியப்பட்டது.

ஆதாரங்கள் சிக்கின

மேலும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பினாமி சொத்துகள்
மற்றும் போலி நிறுவன பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களும் சிக்கின.தொடர்ந்து, ஜெ.,
உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்ட பலரிடம், வரித்துறை விசாரணை நடத்தியது.

ஜெ., மறைவுக்குப்பின், அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி ஆகியோர், வரித்துறை சோதனையில் சிக்கியதை பார்த்து பீதியடைந்த சசிகலா கும்பல், 25 ஆண்டுகளாக குவித்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்து ஆவணங்களை, நம்பிக்கையான இடங்களில் பதுக்கி, 'அப்பாடா...' என, நிம்மதி
பெருமூச்சு விட்டிருந்தது.ஆனால், வரி துறையோ, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவத்தின், துல்லிய தாக்குதல் போல் குறி வைத்து, 215 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், தங்கள் கும்பலின், 'ஜாதகமே' அவர்களிடம் சிக்கியதை அறிந்து, மன்னார்குடி கும்பல் ஆடிப்போனது.இதைத் தொடர்ந்து, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், போயஸ் கார்டனில், நேற்று முன் தினம் இரவு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சசிகலா மற்றும் விவேக் ஆகியோரின் அறைகளில், இந்த சோதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு துவங்கிய சோதனை,நள்ளிரவு, 1:30 மணிக்கு முடிந்தது. அதில், சசிகலா கும்பல்
வாங்கிக் குவித்த பல சொத்துகளின் அசல் ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனங்களில் செய்யப்பட்ட, பல கோடி ரூபாய் முதலீடுகள் குறித்த விபரங்கள் சிக்கியுள்ளன.

கடத்த திட்டம்

போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கு, வரித்துறையினர் பல மாதங்களாக சேகரித்த தகவல்கள் ஆதாரமாக இருந்தாலும், சசிகலா கும்பலைச் சேர்ந்த சிலர், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்பட்டு, பல விஷயங்களை, 'போட்டு'க் கொடுத்ததும், முக்கிய காரணமாகும்.அந்த, 'ஸ்லீப்பர் செல்'கள் வாயிலாகத்தான், போயஸ் கார்டனில் பதுக்கியுள்ள ஆவணங்களை, வேறு இடங்களுக்கு, சசி சொந்தங்கள் கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதனால் தான், வருமான வரித்துறையினர், அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதை வருமான வரித்துறை வட்டாரங்கள் சிலவும், உறுதி செய்துள்ளன.வழக்கமாக, சசி கும்பலைச் சேர்ந்த தினகரன் பேட்டி அளிக்கும் போது, 'பழனிசாமி அணியில்,எங்களின், 'ஸ்லீப்பர் செல்'கள் பதுங்கி உள்ளனர். தகுந்த சமயத்தில், அவர்கள் செயல்படுவர்' என, கூறி வந்தார்.
ஆனால், அவரது கும்பலிலேயே, 'ஸ்லீப்பர் செல்'கள் இருப்பதை கண்டு பிடிக்க தவறி விட்டார்.போயஸ் கார்டன் இல்லத்தில், சோதனை நடந்தபோது, பின்னங்கால் பிடரியில் பட, விவேக் அங்கு ஓடி வந்தார். அதற்கு காரணம், 'மிக பாதுகாப்பான இடம்' என, அங்கு பல முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததே காரணம்.

215 இடங்கள்:

அதனால் தான், ஒப்பாரி
வைக்காத குறையாக, 'அது ஜெ., வாழ்ந்த கோவில்' எனக்கூறி, தினகரன் ஆதரவாளர்கள், திசை திருப்ப பார்த்தனர். ஆனால், முக்கிய ஆவணங்கள், இச்சோதனையில் வசமாக சிக்கிவிட்டன. வருமான வரித்துறையினர், ஒரே நாளில், 215 இடங்களில் சோதனை நடத்தி யதைத் தொடர்ந்து, ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டனிலும் சோதனை நடந்துள்ளது. அதனால், அடுத்த சோதனை எங்கு நடக்குமோ என, மன்னார்குடி உறவுகள் கலக்கம் அடைந்து உள்ளன.

சொத்து ஆவணங்கள் பறிமுதல்

வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

போயஸ் கார்டனில், சசிகலா கும்பல், ஏராள மான சொத்துகளின், அசல் ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது. அதன் வாயிலாக, சொத்துகள் தொடர்பாக தெளிவான புரிதல் கிடைத்துள்ளது. அதேபோல, போலி கம்பெனி களின், பல முக்கிய பரிவர்த்தனைகள் தொடர் பான ஆவணங்கள், மின்னணு சாதனங்களில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

அத்துடன், சில கடிதங்களும் சிக்கி
உள்ளன. மேலும், சோதனையில் சிக்கிய, 'டேப்லெட், லேப்-டாப்' மற்றும் நான்கு, 'பென் - டிரைவ்'களில், குவிந்துள்ள தகவல்களை, அலசி, ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐகோர்ட் அனுமதியா?

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நிர்வகிப்பது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வீட்டை அரசுடைமை யாக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் அங்கு சோதனை நடத்தியது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுடன் தான், அங்கு நுழைந்ததாக தகவல் வெளியானது.

ஆனால், வரித்துறையினர் கூறுகையில், 'இது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த
சோதனையின் தொடர்ச்சி என்பதால், யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. அதுதவிர, தேவைப்படும் இடத்தில், சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது' என்றனர்.

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

                                                   
கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ்
நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

பணியின் தன்மை: மேலாளர், முதுநிலை மேலாளர் - 20

சம்பளம்: மேலாளர் பணிக்கு மாதம் ரூ.28,000 - 43,450/- முதுநிலை மேலாளர் பணிக்கு ரூ.33,300 - 47,700/-

வயது வரம்பு: 28 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

கடைசித் தேதி: 23.11.2017

மேலும் விவரங்களுக்கு www.canfinhomes.com என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

இடைநிலை ஆசிரியகளின் ஊதிய முரண்பாடு மனுவுக்கு பதிலளிக்க ஊத்தரவு!!



ஏழாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் ஆசிரியர் பேரவை!!!

கறம்பக்குடி ஒன்றியத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் 7வது ஊதியக்குழு ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற உதவி தொ.க.அலுவலகத்தில் மனு!!!

அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்

விபத்தில் உயிரை காப்பாற்றுபவர்களுக்கு பரிசு!!!

                                       
விபத்தில் சிக்கியவர்களை வேடிக்கை பார்க்காமல் காப்பாற்றினால்
ரூ.2000 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பதைக் காட்டிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முன் வராததால் ஏற்படும் கால தாமதம் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.இதனால் மனித நேய அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற டெல்லி அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், “ டெல்லியில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கையைக் குறைக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மாநில அரசு புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.

அதன்படி சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு டெல்லி அரசு சார்பில் ரூ. 2 ஆயிரம் பணம் பரிசாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை தயங்காமல் காப்பாற்றுவார்கள். அதன்மூலம் பலி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.