விபத்தில் சிக்கியவர்களை வேடிக்கை பார்க்காமல் காப்பாற்றினால்
ரூ.2000 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
சாலை விபத்துகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பதைக் காட்டிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முன் வராததால் ஏற்படும் கால தாமதம் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.இதனால் மனித நேய அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற டெல்லி அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், “ டெல்லியில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கையைக் குறைக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மாநில அரசு புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.
அதன்படி சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு டெல்லி அரசு சார்பில் ரூ. 2 ஆயிரம் பணம் பரிசாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை தயங்காமல் காப்பாற்றுவார்கள். அதன்மூலம் பலி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக