யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/17

செல்போனில் சாதி பெயரைச் சொன்னாலும் சிறை!!!

பொது இடங்களில் செல்பேசியில் தாழ்த்தப்பட்டவர்க
ளை சாதி ரீதியில் திட்டினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி,அலகாபாத் உயர் நீதிமன்றம் முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அந்த நபர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே செலமேஸ்வர் மற்றும் எஸ் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான விவேக் விஷ்னோய் என்ற வழக்கறிஞர், சம்பவ நடந்தபோது புகார் அளித்த பெண்ணும், தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், செல்பேசி மூலமே பேசிக்கொண்டதாகவும் அதனால், அவர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதாடினார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். மேலும், சாதிரீதியாக மோசமான கருத்துகளை செல்பேசி மூலம் தெரிவித்தாலும் குற்றம் என்றும் என்று உத்தரவிட்டனர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து, சாதி ரீதியாக விமர்சிப்பதும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆட்சேபமான கருத்துகளை பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக