தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவர
கடந்த 1972ம் ஆண்டு சிறப்பாசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டது. இதில், ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பாடம் கற்பிக்கப்படுகிறது.
1972ம் ஆண்டு முதல் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியின்படியே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பு பாடங்கள் கற்பித்துவருகின்றனர்.இந்நிலையில், கடந்த 1987ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தபாடத்திட்டம் 2006ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. பின்னர், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு சென்ைனயில் பணிமனை அமைக்கப்பட்டது. 2வது கட்ட பணிக்குபின், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது.
இந்த பாடதிட்டத்தில், 6ம் வகுப்புக்குபுள்ளி, கோடு, வடிவம் குறித்த பாடத்திட்டம், 7 மற்றும் 8ம் வகுப்புக்கு கற்பனை ஓவியங்கள் வரையும் பயிற்சி பாடத்திட்டம், 9ம் வகுப்புக்கு காகிதம் கொண்டு வெட்டி ஒட்டுதல் (கொலேஜ் வர்க்), சோப்பு கட்டிங் தயாரித்தல் பாடத்திட்டம், 10ம் வகுப்புக்கு வரலாற்று சின்னங்கள், குகை ஓவியங்கள், நாகரிக உடைகள் என்ற முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.ஒரு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 30 பாடங்களில், 20 பாடங்கள் வகுப்பு வேளைகளிலும், 10 பாடங்கள் வீட்டு பாடங்களாகவும் வரைந்து முடிக்கும் வகையில் இப்புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டது.
இப்புதிய பாடத்திட்டங்களுக்கு மதிப்பெண் வழங்கவும் கல்வித்துறை முடிவு செய்தது. ஆனால், இப்பாடத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. 2006ம் ஆண்டு முதல் இதுவரை கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். நீண்ட இழுபறிக்கு பிறகு சிறப்பாக தயாரிக்கப்பட்ட இப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து சிறப்பாசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக